கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி தமிழகத்தில் கடலூர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் கொடியை எரித்த சம்பவம் தொடர்பாக தமிழுணர்வாளர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் உள்ளது மாவட்ட காங்கிரஸ் அலுவலகம். இவ் அலுவலகத்தில் பறந்து கொண்டிருந்த கொடியையும், வளாகத்தில் இருந்த சோனியா காந்தியின் படத்தையும் யாரோ எரித்து விட்டனர்.
இச் சம்பவம் குறித்து மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.நெடுஞ்செழியன் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இது தொடர்பாக தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த பருதிவாணனை தமிழக பொலிசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த தமிழுணர்வாளர் பருதிவாணன், தமிழர் கழக கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.
http://www.meenagam.org/?p=8227
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com