இலங்கையை அச்சுறுத்தும் புதிய தீவிரவாத குழுக்கள்!
இலங்கையில் 'தமிழீழம்' பெறுவதற்காக ஆயுதம் ஏந்தி போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், மே மாதம் 19-ம் தேதி வீழ்த்தப்பட்டது. கால் நூற்றாண்டு காலம் சகல படைபலத்துடன் செயல்பட்ட விடுதலைப்-புலிகள் இயக்கம், சர்வதேச அளவில் பேசப்பட்டது.
தற்கொலைப் படை வீரர்களைக் கொண்ட புலிகள் இயக்கம், தனது சாதனைகளைப் பதிவுசெய்ய தவறினாலும் விமானங்களைக்கூட கட்டமைத்து கொழும்புவில் நடத்திய தாக்குதல், வரலாற்று
விடுதலைப்புலிகளை ஒழித்துவிட்டதாக இலங்கை அரசு விடுப்பு அளித்து விழா நடத்தி கொண்டாடியதை உலக மக்கள் இன்னும் மறக்கவில்லை. இந்நிலையில் விடுதலைப்புலிகளால் இலங்கையில் இனி செயல்படுவது கடினம் என்று இலங்கை ஊடகங்கள் சில எழுதியதை படித்துவிட்டு இலங்கை அதிபர் ராஜபக்ஷே மகிழ்ச்சி அடைந்தார். இந்த மகிழ்ச்சி நிலையானது அல்ல. அடுத்ததாக அங்கு தலைதூக்கியுள்ள பயங்கரவாத சக்திகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இலங்கை அரசுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் ஏற்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கம் போரில் வீழ்த்தப்பட்ட பிறகும், கிழக்கு மாகாணத்தில் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இலங்கை அரசின் செயல்பாடுகளை பாதிக்கச் செய்த இந்தச் சம்பவங்கள் குறித்து இலங்கை போலீஸ் உளவுத்துறை அதிகாரி ஒருவர், உளவுப்-படை-யுடன் இணைந்து கிராமம் கிராமமாகச் சென்று விசாரணை நடத்தினார். அப்போதுதான், இந்த வன்-முறைச் சம்பவங்களை நிகழ்த்தியது விடுதலைப் புலிகள் அமைப்பினர் அல்ல; கிழக்கு மாகாணத்தில் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களே இவற்றுக்-குக் காரணம் என்பது தெரியவந்தது. இந்தக் குழுக்-களின் ரகசிய செயல்பாடு குறித்து தெரிந்தவுடன் இலங்கை அரசு வட்டாரம் அதிர்ந்து போயிருக்கிறது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, திரிகோணமலை, மட்டக்களப்பு என மூன்று மாவட்டங்கள் உள்ளன. 9951 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட இந்த மாகாணத்தில், 2001-ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி சுமார் 13 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதில் மட்டக்களப்பு, அம்பாறை, காத்தான்குடி வட்டாரத்தில் ஆயுதம் தாங்கிய இஸ்லாமியத் தீவிரவாத குழுக்கள் ரகசியமாக இயங்குகின்றன என்று இலங்கையின் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் அரசிடம் தெரிவித்தார். இதையடுத்து சிங்கள ராணுவத்தின் உளவுப்படையினர் இந்த மாவட்டங்களில் முகாமிட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்தனர்.
வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற உளவுப்படை-யினர் நடத்திய ஆய்வில், ஆயுதம் தாங்கிய தீவிரவாத குழுக்கள் கிழக்கில் ரகசியமாகச் செயல்படுவது கண்டறியப்பட்டது. இதைவிட முக்கியமான தகவல் என்னவென்றால், இந்தக் குழுக்களில் உள்ள இளைஞர்களிடம் ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், லைட் மிஷன் துப்பாக்கிகள், 9 எம்எம் பிஸ்டல்கள், கையெறி குண்டுகள் ஆகியவை இருப்பது தெரியவந்துள்ளது. காத்தான் குடியில் ரகசியமாகச் செயல்படும் ஒரு குழு-விடம் மட்டும் நாநூறுக்கும் மேற்பட்ட டி-56 ரகத் துப்பாக்-கிகள், முந்நூறுக்கும் மேற்பட்ட உயர்ரக பிஸ்டல்களும் இருப்பது தெரியவந்துள்ளது. பாது-காப்பு அமைச்சகத்திடம் இந்தத் தகவல் தெரிவிக்கப்-பட்ட போது, அங்குள்ள அதிகாரிகள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றிருக்கிறார்கள்.
தீவிரவாதக்குழுக்களிடம் பெருமளவு ஆயுதங்கள் உள்ளன. இவற்றை காடுகளில் உள்ள மறைவிடங்-களில் பதுக்கி வைத்துள்ளனர். இவற்றை கைப்பற்று-வது எளிதான காரியம் அல்ல. இவர்களைக் கைவைத்-தால் அந்தந்தப் பகுதி மக்கள், தேர்தலின்போது தங்களது 'வாக்கு' பலத்தைக் காட்டுவார்கள் என்பதால் இவ்விஷயத்தில் இலங்கை அரசு இப்போது மென்மையான போக்கைக் கடைப்பிடித்துள்ளது. அதாவது கிழக்கு மாகாணத்தில் ஆயுதங்களை வைத்துள்ள குழுக்கள், அவற்றை இலங்கை போலீஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிகார அறிவிப்பு செய்துள்ளது இலங்கை அரசு.
கிழக்கு மாகாண போலீஸ் இயக்குநர் எடிசன் குணதிலக விடுத்துள்ள அறிவிப்பில், "தீவிரவாத அமைப்புகள் தங்களது ஆயுதங்களை அருகில் உள்ள காவல்- நிலையங்-களில் ஜூலை 2-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். ஆயுதங்களை ஒப்படைப்-போர் மீது வழக்கு பதிவு செய்ய மாட்டோம். ஆயுதங்கள் ஒப்படைத்-தவர்கள் தருகின்ற அறிக்-கையை மட்டும் பெற்றுக்-கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், ஜூன் 19-ம் தேதி காவல்துறை அறிவித்த அறிவிப்பை, எந்தத் தீவிரவாதக் குழுவும் சட்டை செய்யவில்லை. அதாவது ஆயுதங்களை உடனடியாக ஒப்படைக்க-வில்லை. சில இயக்கத்தினர் ஆயுதங்-களை ஒப்படைக்-கப் போவதில்லை என்று தொலை-பேசி மூலம் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டனர். காத்தான்குடி காவல் நிலையத்திற்குத் தினமும் இப்படிப்-பட்ட அனாமதேய தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.
இதனால் இந்தக் காவல்நிலைய அதிகாரி அனுராத சந்திரஸ்ரீ தலைமையில் பத்து அதிரடிப் படைகளை காவல் துறையினர் அமைத்துள்ளனர். இதற்கிடையில், கெடு தேதிக்கு முதல்நாள், காத்தான்குடி பள்ளி-வாசலில் சில மர்ம ஆசாமிகள் ஆயுதங்களை ஒப்படைத்தனர். ஏ.கே.- 47, டி- 56, கைத்துப்பாக்கிகள் உள்பட 2 லட்சரூபாய் மதிப்புள்ள இந்த ஆயுதங்களை பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஜூலை 6-ம் தேதி முதல் இலங்கை காவல்துறையிடம் நேரடியாக ஒப்படைத்-தனர். இதையடுத்து ஜூலை 5-ம் தேதி ராணுவ உதவி-யோடு, காவல்-துறையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருக்-கிறார்கள். பிரபாகரனைத் தேடி முள்ளி வாய்க்காலுக்கு மொத்த ராணுவமும் சென்றதுபோல, ஒட்டுமொத்த நடவடிக்கை எடுக்கலாம் என்ற திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த ராஜபக்ஷே இதுவரை அனுமதி தரவில்லை.
இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள பதினைந்-துக்கும் மேற்பட்ட இஸ்லாமியக் குழுக்களும் ஒன்றாக இணைந்து செயல்படவில்லை என்ற போதிலும், 'இஸ்லாமிய அமைப்புகள்' என்ற புரிதலுடன் இவை செயல்படுகின்றன. குறிப்பாக இந்தக் குழுக்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தாலிபான் தீவிர-வாதி-களிடம் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் என்ற கூடுதல் தகவல் கிட்டியபோது அதிபர் ராஜபக்ஷே உள்ளிட்ட அமைச்சர்கள் அடுத்தடுத்து என்ன செய்யலாம் என்கிற ஆலோசனையில் இறங்கியிருக்கிறார்கள். புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் திருப்பம் இலங்கை அரசி-யலில் அடுத்த விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
---தமிழக அரசியல்---
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com