அமெரிக்காவில் ஓங்கி ஒலித்த தமிழ் ஈழக் குரல்!--விகடன்
பத்தாம் நுற்றாண்டில் வாள் எடுத்துத் தன் வீரத்தைக் காட்டி, உலகை வென்றான் ராஜராஜ சோழன். 21-ம் நூற்றாண்டில் துப்பாக்கி எடுத்து தமிழனின் மானம் காத்தான் மாவீரன் பிரபாகரன். உலகத் தமிழர்களுக்கு முகவரி கொடுத்தவன் அவன்.
ஒருவேளை அவன் மறைந்திருந்தால், அது துரோகத்தால் பெற்ற வெற்றி! சாவே வந்து பிரபாகரனிடம் பிச்சை கேட்டிருக்கும். அஸ்தமனம் என்பது சூரியனின் மரணம் அல்ல, கிழக்கு மீண்டும் சிவக்கும்...
மறுபடியும் உதிக்கும்... அந்த விடியலே தமிழ் ஈழம். இங்கே ஒரு வெள்ளைக்காரப் பெண் ஈழத்தின் வலியைப் பற்றிப் பேசினார். அவரைப் போன்றவர்கள் இன்னும் நிறைய பேர் ஈழம் மலரத் தேவை!'' என்றார் வைரமுத்து.ஈழ மக்களி டையே தனி யாகப் பேசிக் கொண்டிருந்த போது தமிழருவி மணியன், ''தீக்குச் சியும், தீக்கிரையாக்கி விடும் சிகரெட்டும் ஒரே பெட்டியில் இருக்கலாம். ஆனால், தமிழனும் சிங்களவனும் ஒரே இடத்தில் இருக்கமுடியாது!'' என்றார். ''தமிழ் ஈழம் தவிர்க்க முடியாதது.
ஆனால், யுக்திகளை மாற்றவேண்டும். 20 ஆண்டுகள் முன்பிருந்த அரசியல் சூழல் வேறு. அப்போது அமெரிக்க-ரஷ்ய பனிப் போர். இப்போதோ, இந்தியா-சீனா பனிப்போர் ஆசியாவில் மையம் கொண்டுள்ளது. இந்த இரு நாடுகளுமே தமிழர்களை ஆதரிக் காததால்தான் போர் முடிவுக்கு வந்துவிட்டது. இலங்கையைவிட ராணுவ பலம் அதிகம் இருந்தால் போதுமே, தமிழ் ஈழம் பெற்றுவிடலாம் என்று முப்படை கண்ட மாவீரன் உலக நாடுகளின் ஆதரவை பெறத் தயங்கி நின்றான்.
அதுவே எதிராகிவிட்டது. ஆகவே, அநாதைகளாக விடப்பட்டோம். இப்போதுகூட தனிநாடு கேட்கவில்லை. இந்திய அரசில் உள்ள மாநிலங்களுக்கு உள்ள அதிகாரத்தைதான் கேட்கி றோம் ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டது. ஆனால், அதை சிங்கள அரசு குப்பையில் போட்டது. அதையாவது மத்திய அரசு தட்டிக் கேட்க வேண்டாமா?
இலங்கை இறையாண்மைக்கு இழுக்கில்லா தனி மாநிலம் பெற அனைத்து ஈழத்தலைவர்களும் கருணாநிதி, ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு கேட்க வேண்டும். 40 எம்.பி-க்கள் டெல்லியை அசைக்க முடியும். அதற்கு உங்களிடம் முதலில் ஒற்றுமை அவசியம்!'' என்றார்.
விழாவில் கலந்துகொண்டவர்களில் குறிப்பிடத் தக்க கவனத்தைப் பெற்றார் ம.நடராசன். ஜார் ஜியா மாநில ஆளுநர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் டேவிட் போய்த்ரிஸ், சுமார் 2 மணி நேரம் ம.நடராசனுடன் பேசி இந்திய அரசியல், தேர்தல் வியூகம் என்று அலசி னாராம். ஈழத் தமிழர்களும் ம.நடராசனை சந்தித்து ஆலோசனை செய்தார்கள்.
அவர்கள் மத்தியில் பேசிய நடராசன், ''இந்திரா உயிரோடு இருந்திருந்தால், பங்களா தேஷ் உருவாக்கியதைப் போல் தமிழ் ஈழம் அமைத்திருப்பார். அவர் ஒரு ராஜதந்திரி. ஆகவேதான், விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்தார். ராஜீவ் காந்தியும் மிக அழகாக ஈழப் பிரச்னையைக் கையிலெடுத்தார். அதற்குள் அவரை சுற்றி இருந்த தீயசக்திகள் இலங்கையிடம் காசு வாங்கிக்கொண்டு, அவர் புத்தியை மழுங்கடித்துவிட்டன. சோனியா தன் மாமியாரையும் மதிக்கவில்லை, கணவரையும் மதிக்கவில்லை..!
ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் வடக்கையும் கிழக்கையும்இணைத்து ஒரே தமிழ் நிலம் அமைக்க வழி வகுத்தது. இப்போது இலங்கை உச்ச நீதிமன்றம், அந்த ஒப்பந்தத்தின் 13-வது ஷரத்தை ரத்து செய்து, இந்தியாவின் முகத்தில் கரிபூசி உள்ளது. கணவர் போட்ட ஒப்பந்தத்தை மதிக்காத இலங் கையை தட்டிக்கேட்க சோனியாவுக்கு ஏன் தைரிய மில்லை? இந்தியா-பாகிஸ்தான் போரின்போது அமெரிக்க அதிபரான நிக்ஸன் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார் இந்திரா.
அவர் உடம்பில் இந்திய ரத்தம் ஓடியது. இந்தியாவின் புகழை உலக நாடுகளில் நிலைநிறுத்தினார். ஆனால், இப்போது அண்டை நாடுகளான குட்டி தேசங்கள் நம்மை மதிப்பதில்லை. இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை, சுதந்திரம் கிடைக்கும் வரை அங்கு அமைதி திரும்பாது; இலங்கையில் அமைதி இல்லாத வரை இந்தியாவில் அமைதி கிடையாது. இதை சோனியா உணர வேண்டும். கலைஞரையும் இனி நம்பிப் பயனில்லை. தமிழ் ஈழம், புலி என்றாலே கடுமையாக எதிர்த்துவந்த ஜெயலலிதா, அங்கே நடக்கும் கொடுமைகளைக் கண்டு தன் 20 வருட நிலைப் பாட்டை மாற்றிக்கொண்டார். இனி, அவரை நம்பலாம்...'' என்று பேசியிருக்கிறார்.
தமிழ் விஞ்ஞானியான 'சந்திராயன்' மயில் சாமி அண்ணாதுரை, வேலூர் ஜி.விஸ்வநாதன்... தமிழ் சினிமா நடிகர்களான பசுபதி, ஜீவா, நடிகை கனிகா ஆகியோர் பேசுகையில் ஈழப் பிரச்னையைத் தொடவில்லை.
அனுராதா ஸ்ரீராம் தமிழ் இசை திரைப்பாடல் நிகழ்ச்சியில் இடை இடையே ஆங்கிலத்தில் பேச, கடுப்பான தமிழ் சங்கத் தலைவர் ஒருவர் 'தமிழில் பேசுங்க' என்று சத்தம் போட்டார். உடனே, அனுராதா ஸ்ரீராம், ''நானும் தமிழச்சிதாங்க. தமிழ்த் திரைப்படத் துறையில் மலையாளிகளும், இந்திக்காரர்களும்தான் அதிகமாகப் பின்னணி பாடுகிறார்கள். உங்கள் கோபத்தை அங்கு சென்று காட்டுங்களேன்... பெருமைப்படுகிறேன்!'' என்றார் பட்டென்று!
பேச்சுகளுக்கிடையில், வன்னியில் நடை பெற்ற படுகொலைகளை, சித்ரவதைகளை புகைப்படங்களாகத் திரையில் காட்டினார்கள். பிணக்குவியல்கள், முடமான மனிதர்கள் என உலுக்கிப்போட்ட அந்தக் காட்சிகளைப் பார்த்து, அந்த அரங்கத்தில் இருந்த குழந்தைகள் பயப்பட, பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கண்களைப் பொத்த வேண்டி வந்தது.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com