இராணுவ வாகனங்கள் தாக்குதல்: மதிமுகவினர் மீதான குண்டர் சட்டம் - குடியரசுத் தலைவர் இரத்து
கோயம்புத்தூரில் இந்திய ராணுவ வாகனங்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் ம.தி.மு.கவினர் உட்பட 5 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கைகளை இரத்து செய்ய குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
கோயம்புத்தூர் வழியாக சிறீலங்காவுக்கு இந்திய அரசு ஆயுதங்களை கொண்டு செல்வதாக கிடைத்த தகவலை அடுத்து ம.தி.மு.க, பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் நீலாம்பூர் "பை-பாஸ்" வீதியில் சென்று கொண்டிருந்த இராணுவ வாகனங்களை மறித்தனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்கள் இராணுவ வாகனங்களை சேதப்படுத்தினர். இதையடுத்து அந்த சம்பவத்தில் ஈடுபட்ட 46 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பீளமேடு ம.தி.மு.க மாணவர் அணி அமைப்பாளர் சந்திரசேகன் உட்பட 5 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் இதை எதிர்த்து சந்திரசேகரன் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலுக்கு மனு செய்தார். அவரது மனுவை பரிசீலனை செய்த குடியரசுத் தலைவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.
http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=1080&cntnt01origid=53&cntnt01returnid=51
http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=1080&cntnt01origid=53&cntnt01returnid=51
ஈழப்பிரச்சனையில் உலக நாடுகள் ஆதரவு கிடைக்காததற்கு இந்திய அரசுதான் காரணம்: பழ.நெடுமாறன்
ஈழத்தமிழர் பிரச்சனையில் சர்வதேச நாடுகளின் ஆதரவு கிடைக்காமல் பின்னடைவு ஏற்பட்டதற்கு மத்திய அரசின் முட்டுக்கட்டைதான் காரணம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
சென்னையில் தினப்புலரி நாளிதழின் முதன்மை ஆசிரியர் ஜோசப் கென்னடி எழுதிய 'அநீதியின் காவலர்கள்' நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய பழ.நெடுமாறன், ஈழத்தமிழர் பிரச்சனையில் பின்னடைவு ஏற்பட்டதற்கு சர்வதேச அளவில் ஆதரவை திரட்ட முடியாததே காரணமாகும்.
இதற்கு மத்திய அரசின் முட்டுக்கட்டையும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான அதன் நிலைப்பாடும் தான் காரணம். ஐதராபாத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு தான் இந்த பிரச்சனை உலக அளவில் பேசப்பட்டது.
ஆனால், இதில் உலக நாடுகளின் ஆதரவை திரட்டுவதற்கு இந்திய அரசு தான் முட்டுக்கட்டை போட்டது. இந்தியாவின் பிராந்திய நலனுக்கு உட்பட்ட பிரச்சனையாக ஈழத்தமிழர் பிரச்சனையை உலக நாடுகள் கருதுகின்றன.
எனவே தான் இந்த பிரச்சனையில் உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக நிலை யெடுத்தன. எனவே ஈழத்தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்ட வேண்டும். அதன் மூலம் தான் இந்த பிரச்சனையில் சர்வதேச நாடுகளின் ஆதரவை திரட்ட முடியும் என்றார் நெடுமாறன்.
முன்னதாக பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், 'ஈழத்தமிழர் விடுதலைக்கு எதிராக சீனாவும், கியூபாவும் செயல்பட்டதற்கு நாம் உண்மை நிலைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லாததே முக்கிய காரணம் ஆகும். இதன் காரணமாக கொலையாளிக்கு ஆதரவு கிடைத்துள்ளது.
ஆனால் கொலை செய்யப்பட்டவர்கள் நிர்கதியாக விடப்பட்டு உள்ளார்கள். இந்த பிரச்சனையில் உலக நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை திரட்டுவதற்கு நாம் தொடர்ந்து பாடுபடுவோம். ஈழ விடுதலைப்போர் இன்னும் முடியவில்லை' என்றார்.
http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=1079&cntnt01origid=53&cntnt01returnid=51
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com