அவதூறுகளால் அணையாது விடுதலை நெருப்பு
"தங்கள் இளமையை, வாழ்க்கையை, உயிரைத் தன் மக்களின் விடுதலைக்காக அர்ப் பணித்த ஒவ்வொருவரும் போராளிகள் தாம்.
அவர்கள் எந்த அளவு தங்கள் மக்கள் மீது கொண்ட அன்பால் மக்களின் விடுதலைக்காய் தங்களை அர்ப்பணித்தவர்கள்...!"
ஆகஸ்ட் மாத 'காலச்சுவடு' இதழில், 'நலமா தமிழினி?' என்னும் தலைப்பில் ப்ரேமா ரேவதி என்பவர் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை - புலிகள் பெண்கள் அரசியல் பிரிவின் தலைவரான தமிழினியை நோக்கி ''அன்புள்ள தமிழினி, உங்களை அன்புள்ளவர் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இடத்திலிருந்து இம்மடலினை எழுதுகிறேன்'' எனத் தொடங்கி, தொடர்ந்து விடுதலைப்புலிகளையும், ஈழ ஆதரவாளர்களையும் கொச்சைப் படுத்துகிறது. ஈழ ஆதரவாளர்களைப் புண்படுத்திய இக்கட்டுரைக்கு எழுதப்பட்ட மறுப்பை 'காலச்சுவடு' வெளியிடாத நிலையில் அந்தக் கட்டுரை இங்கு வெளியிடப்படுகிறது.
என் அன்பு என்றும் உள்ள ப்ரேமா ரேவதிக்கு..
தமிழினிக்குத் தாங்கள் எழுதிய கடிதத்தை 25-08-2009 அன்று படிக்க நேர்ந்தது.
1998ஆம் ஆண்டு, இராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை என்று அறிவிக்கப் பட்ட போது கண்களில் நீர் துளிக்க நின்ற அந்த ரேவதியின் மனிதாபிமானம், இன்று வாழ்க்கையின் ஓட்டத்தில் பலவற்றை ருசித்து, கசந்ததன் காரண மாகவோ என்னவோ, வற்றிப் போய் நிற்பதைக் கண்டு உண்மையாகவே அதிர்ச்சியுற்றேன்.
அந்த நிலையில் நின்று, தமிழினி அன்பு உள்ளவரா இல்லையா என்ற உங் கள் கேள்வியில் உள்ள அறியாமை உங் கள் மீது பரிதாபத்தைத்தான் ஏற்படுத் தியது.
உங்களுக்குத் தெரியுமா ரேவதி? தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது உண்மையான அன்பு கொண்டவர்களால் மட்டுமே போராளியாக முடியும்.
தமிழினி மட்டுமல்ல.. தங்கள் இளமையை, வாழ்க்கையை, உயிரைத் தன் மக்களின் விடுதலைக்காக அர்ப் பணித்த ஒவ்வொருவரும் போராளிகள் தாம். அவர்கள் ஏதோ ஒரே நாளில் அல்லது ஒரே நிகழ்வில் உணர்ச்சி வசப்பட்டுத் துப்பாக்கி ஏந்தியவர்கள் அல்ல. அப்படி ஏந்தியிருந்தால் 'நீ அடித்தாயா.. நானும் பதிலுக்கு அடிக்கிறேன்' என்ற நொடி நேர எதிர்வினையோடு அந்த வேகம் முடிந்திருக்கும். அவர்கள் எந்த அளவு தங்கள் மக்கள் மீது கொண்ட அன்பால் மக்களின் விடுதலைக்காய் தங்களை அர்ப்பணித்தவர்கள் என்பதற்கு ஒரே ஒரு சான்று சொல்கிறேன்.
19 வயதில் முதுகுத் தண்டில் குண்டடி பட்டு இடுப்பிற்குக் கீழ் செயலிழந்து போனார் கவுதமி என்ற ஒரு பெண் போராளி. 1993ஆம் ஆண்டு சிகிச்சைக்காக அவர் இந்தியா கொண்டு வரப்பட்டார். அவருக்குத் துணை புரிய நிக்சி என்று மற்றொரு பெண் போராளி. சிகிச்சைக்காக வந்த அவர்களைப் 'பயங்கரவாதிகள்' என கைது செய்தது இந்தியத் தமிழக அரசு. ஓராண்டல்ல.. ஈராண்டல்ல.. 8 ஆண்டுகள் காவல் துறையின் பாதுகாப்பில் பல்வேறு மன உளைச்சல்களுக்கு ஆளாக்கப்பட்டு மருத்துவமனையிலேயே சிறை வைக்கப் பட்டார் கவுதமி. அவருக்கு உதவி புரிய என்று வந்த நிக்சியை கைது செய்து தனியே சிறையில் அடைத்தது அரசு. அதற்கென ஒரு வழக்குப் போட்டு வெளிக் கொணர்ந்து, அவரையும் உடல்நலம் குன்றிய கவுதமியுடனேயே தங்க அனுமதி பெறப்பட்டது.
இந்த 8 ஆண்டுகளில், ஒரு நாள் கூட அவர்களின் முகங்களில் நீங்கள் சோர்வைக் கண்டிருக்க முடியாது. இருவருமே எப்போதும் புன்னகையுடன் இருப்பது மட்டுமன்றி, உடல்நலக் குறைவுள்ளவர் போன்று கவுதமி ஒருநாளும் தோற்றமளித்ததும் இல்லை.
19 வயதிலேயே இடுப்புக்குக் கீழ் செயலிழந்த நிலையில், 8 ஆண்டுகள் காவல்துறையின் கெடுபிடிகள், மன உளைச்சல்களுக்கு நடுவே புன்னகை பூத்த முகத்துடன் இருந்த கவுதமியின் மன உறுதி பெரியதா? அல்லது எந்த செயலுக்கும் பிறரை எதிர்பார்த்திருக்கும் நிலையில் உள்ள ஒருவரை 8 ஆண்டு களாக எந்த முகச் சுளிப்போ
சலிப்போ இன்றி சுத்தமாகவும் நோய் வாய்ப்பட்ட தன்மையே இன்றித் தோற்ற மளிக்கும் அளவிற்கு பராமரிக்கவும் செய்த நிக்சியின் மன உறுதி பெரியதா? இவர்களுக்கு இத்தகைய மன உறுதி அளித்தது எது? சிங்களர் மீதான கோபமா? அல்லது தங்கள் மக்கள் மீதான பாசமா? நிச்சயமாக கோபமும் வெறுப்பும் தரும் மன உறுதி இந்த அள விற்கு நீடிக்காது என்று எந்த உளவியல் நிபுணரும் உறுதிப் படுத்துவார்கள்.
இதோடு நிற்கவில்லை ரேவதி. சமாதான காலத்தில் அரசின் அனுமதி யோடு இவர்கள் ஈழத்திற்கு மீண்டும் அனுப்பப்பட்டார்கள். அங்கே கவுத மிக்குக் கணினித் தொழில்நுட்பம் கற்றுக் கொடுக்கப்பட்டு அத்துறைக்குப் பொறுப் பாளராகவும் அவர் நியமிக்கப்பட்டார். உடல்நலன் சற்று பாதிக்கப்பட்ட நிலை யில் உள்ள ஒருவரை நம் சமூகம் என்ன வாக நடத்துகிறது என்பதை நீங்கள் அறியாதவர் அல்ல. ஆனால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒருவரை ஒரு துறையில் நிபுணராக்கி, தன்னம் பிக்கையோடு வாழ வைத்திருக்கிறது அந்த 'பயங்கரவாத' இயக்கம். இதற்குப் பெயர் அன்பில்லாவிட்டால் வேறு எதற்கு நீங்கள் அன்பென்று பெயர் சூட்டுவீர்கள்?
சமாதான காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்திற்குச் சென்ற நண்பர் ஒருவர், செஞ்சோலை குழந்தைகள் இல் லத்தைக் கண்டு நெகிழ்ந்த நிலையில், அங்கிருந்த 8 மாத குழந்தை ஒன்றை தான் தத்தெடுக்க விரும்புவதாகக் கூறினார். அதற்கு, செஞ்சோலை இல்லப் பொறுப்பாளரான போராளி கூறிய பதில் என்ன தெரியுமா? - 'உங்கள் குழந் தையை நீங்கள் தத்துக் கொடுப்பீர்களா?' என்பது. இதற்கும் உங்கள் அகராதியில் அன்பு என்று பொருள் கிடையாதோ?
இன்று இவ்வளவு பெரிய இழப்பைப் போராளிகளால் தடுக்க இயலாமல் போனது உண்மைதான். உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் ஒரு பக்கம் கை கோர்த்து நிற்க, தங்கள் மக்களைக் காக்க இயலாமல் போராளிகள் தோற்றது உண்மைதான். ஆனால் அந்த ஒரு உண்மை கடந்த காலத்தின் பல உண்மைகளை மறைத்து விடாது. எத்தனையோ ஆண்டு காலமாகத் தங்கள் மக்கள் மீது கொண்ட நேசத்தால் அவர்கள் செய்த தியாகங்கள் பொய்யாகி விடாது. அந்தத் தியாகத்தின் பலனாய் அந்த மக்களுக்கு ஒரு கெளரவமான வாழ்வை அவர்கள் அளித்தது பொய் யாகி விடாது. அந்தக் காலத்தில்தான் உங்களைப் போன்றவர்கள் அம் மண்ணிற்குள் சென்று வர முடிந்தது. இன்று அதையே சாக்கிட்டு வதை முகாமில் நிற்கும் அவர்களை நோக்கி கணினி வழியாக (நிச்சயம் அவர்கள் வந்து பதில் சொல்ல இயலாது என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு) கை நீட்டி கேள்வி கேட்க முடிகிறது.
போர் நிறுத்தத்திற்குத் தயார் என புலிகள் பலமுறை அறிவித்தும், போர் நிறுத்தத்தைத் தவிர வேறெதையும் கோராமல் தமிழ்நாடு உட்பட உலகின் பல பகுதிகளிலும் தமிழர்கள் போராட்டங் கள் நடத்திய போதும் சிங்கள அரசோ அதற்கு உறுதுணையாய் நின்ற இந்திய அரசோ, உலக நாடுகளோ இவை எதற் கும் செவிமடுக்க மறுத்தன என்பதையும், சிங்கள அரசே தொடர்ந்து போரை நடத்தியது என்பதையும் முற்றிலுமாக மறைத்து, புலிகள், குறிப்பாக புலிகளின் தலைமை ஏதோ தன் இச்சைக்கேற்ப கட்டாயமாக போரைத் தொடர்ந்து நடத்தியதாக குற்றம் சாட்டுவது, உலகறிந்த உண்மையை கோணி போட்டு மூட முயல்வதைப் போன்றதே.
உண்மைக்கு முன்னால் நடு நிலைமை என்பது இல்லை. ஆனால் போருக்கு முன் நடுநிலைமை என்பது உண்டு. பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பதே அது. உங்களைப் போன்றவர் களுக்கு மக்களின் பக்கம் நிற்பதைக் காட் டிலும் போராளிகளுக்கு எதிராக நிற்பதில் தானே ஆர்வம் அதிகமிருக்கிறது.
நினைவில் கொள்ளுங்கள். போராளிகள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல. அம்மண்ணிலிருந்து, அம்மக்களி லிருந்து வந்தவர்கள். அம்மக்களுக் காகவே தங்களை அர்ப்பணித்தவர்கள். அம்மக்களைக் காக்க இயலாமல் போனதில் உங்களையும் எங்களையும் நம் அனைவரையும் விட வலியும் வேதனையும் அவர்களுக்கே அதிகம். பெற்ற குழந்தையைக் கண் முன் பறி கொடுத்துவிட்டு நிற்கும் தாயின் வேதனைக்கு நிகரானது அது. பெற்ற குழந்தையைக் காக்க முடியாமல் போன வேதனையில் மருகி நிற்பவர்களை, உங்கள் சொற்களால் ஏறி மிதிக்காதீர்கள். இந்த நிலையில் இருப்பவர்களை நோக்கி நலமா என்ற கேள்வியிலேயே கெக்கலியிட்டுச் சிரிக்கும் உங்களின் 'நிறைந்த அன்பு' புலப்படுகிறது. அதிலும் எப்படி? உங்கள் சொற்களிலேயே சொல்வதானால், கால் வெட்டி வீசப்பட்டு வதை முகாமில் சிறையுண்டு இருப்பவரை நோக்கி, 'என்னாச்சு பார்த்தியா..? நீ யாரை யெல்லாம் நம்பினாயோ அவர்களின் யோக்கியதை இதுதான்
கண்டியா?'’என்று கேட்கும் தொனி வக்கிரமாக இல்லை?
'பிரபாகரன் உயிர்த்தெழுவார்' என்ற அவரது 'பக்தர்களின்' நம்பிக்கை ஒரு பக்கம் இருக்கட்டும். அவர் இறந்து விட்டார் என்று தலையில் அடித்து சத்தியம் செய்யும் நீங்கள் எந்த அறிவியல் பூர்வமான ஆதாரத்தைக் கொண்டு சொல்கிறீர்கள்? ஏற்கெனவே மூன்று முறை அவரைக் கொன்று விட்டு, பின்னர் சிறிதும் வெட்கமின்றி, முன்னர் சொன்ன செய்திக்கு ஒரு வருத்தம்கூட தெரிவிக்காமல், அவரின் பேட்டியையும் வெளியிட்டு காசாக்கி, இப்போது மீண்டும் கொன்றிருக்கும் ஊடகங்களில் வெளிவந்த படங்களை வைத்தா? உயிருடன் இருக்கிறார் என்பதை கேலிக் குள்ளாக்கும் உங்களுக்கு, சிங்கள அரசு வெளியிட்ட படங்களை பகுத்தறிவின்பாற்பட்டு கேள்விக்குள்ளாக்கும் நேர்மை இல்லாது போனதேன்? நாளை பிரபாகரன் வெளிப்படையாக வரும் போதும் கூட, நிச்சயம் இப்போது செய்த ஆர்ப்பாட்டங்களுக்கு உங்களைப் போன்றவர்கள் யாரும் வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை. மாறாக.. 'இத்தனை நாள் அவர் எங்கிருந்தார்? ஏன் தலைமறைவானார்?' என்று பல வகையான ஆரூடங்களுடன் அதை வைத்தும் இப்படியான எழுத்து வணிகத்தைத்தான் நடத்துவீர்கள்.
மீண்டும் மீண்டும் புலிகளுக்கு அரசியல் தெரியாது என்று சொல்வதன் மூலம் உங்களைப் போன்றவர்கள் எதை நிலைநிறுத்த விரும்புகிறீர்கள்? 'அரசியல் நீக்கிய ஆயுதப் போராட்டம்'’என்ற ஒன்று இருக்கவே முடியாது என்பதை அறியாதவரா நீங்கள்? அரசியல் நீக்கினால் அது வெறும் 'ரவுடியிசம் தானே ஒழிய ஆயுதப் போராட்டம் அல்ல. எந்தவொரு போராட்டமும் ஓர் அரசியலின் பாற்பட்டே எழுகிறது என்ற அடிப்படையைக் கூட அறியாதவரா நீங்கள்? அப்படியானால் நீங்கள் குறிப்பிடும் 'அரசியல்'’என்பது என்ன?
'புலிகளை ஒழித்துக் கட்டிவிட்ட'’புலிகளுக்குப் பின்னான’ இந்த 100 நாட்களில் என்ன மாதிரியான அரசியல் முன் முயற்சிகளை சிங்கள அரசு எடுத்திருக்கிறது?
வெறுமனே ஒரு குழுவினரின் ஆயுதப் போராட்டம்தான் சிக்கல் எனில்.. அவர்களும் மக்களும் வேறு எனில்.. அந்த குழுவையும், அதன் தலைவரையும் அழித்து விட்டோம் என்று அறிவித்த பிறகு மக்களை அடைத்து வைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? உங்களுக்குப் புரியாதது.... அல்லது நீங்கள் புரியாதது போல் நடிப்பதைச் சிங்கள அரசு புரிந்து வைத்திருக்கிறது. அதனால்தான் குழந்தைகள் உட்பட, ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அது போராளிகளாகப் பார்க்கிறது. ஓர் அரசியலின் அடிப்படையில் கிளர்ந்தெழுந்த போராட்டமே அது என்பதை சிங்கள அரசு உணர்ந்திருக்கிறது. அதனால்தான் அவர்களின் போராட்ட உணர்வுகளை முற்றிலுமாக நசுக்கத் திட்டமிட்டுச் செயல்படுகிறது.
'புலிகளின் அரசியல் தோற்றிருக்கிறது. அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை' என்று நீங்கள் குறிப்பிடும் அந்த சூழ்ச்சி அரசியல் அவர்களுக்குத் தெரியத்தான் இல்லை. இந்தியாவையும் சிங்களத்தையும் போன்ற ஒரு சூழ்ச்சி அரசியலை முன்னெடுக்காமல் ஒரு நேர்மையான போராட்டத்தையே அவர்கள் முன்னெடுத்ததன் விளைவுதான் இன்று நாம் காண்பது. ஆக, நீங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் நேர்மையற்ற சூழ்ச்சி அரசியலை புலிகள் செய்திருக்க வேண்டும் என்பதைத்தானா?
சிங்கள அரசு சொல்வது போல் போர் முடிந்துவிடவில்லை. ஒரு தலைப் பட்சமான போர் இன்னமும் நடந்து கொண்டுதானிருக்கிறது என்பதற்கு இலங்கை அரசின் 'நலன்புரி' முகாம்களில் தினமும் செத்து விழுந்து கொண்டிருக்கும் மக்களே சாட்சி. சொந்த நாட்டில் ஒட்டுமொத்தமாக ஓர் இனமே சிறைப்படுத்தப்பட்டிருப்பது வரலாறு கண்டறியா கொடுமை. 'இது ஓர் இனப் படுகொலை அல்ல. இரு தரப்பினருக் கிடையே நடந்த போர்'’என்று கூசாமல் சொல்பவர்கள், இந்த முகாம்களில் ஏன் ஒரு சிங்களர் கூட இல்லை என்பதற்கு பதில் சொல்ல முற்படுவதில்லை. இரு இனங்கள் வாழும் ஒரு நாட்டில், ஒரு இனத்தைச் சேர்ந்த மக்களை ஒட்டு மொத்தமாக முகாம் என்ற பெயரில் சிறையிலடைத்துவிட்டு மற்றொரு இனம் அதிகாரத்தில் இருந்து கொண்டு நிருவாகத்தை நடத்துகிறது எனில் அதற்குப் பெயரென்ன? அப்படியான நிருவாகத்தில் இந்த மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருந்துவிட முடியும்? 'புலிகளால்தான் இந்த நிலை'’என்று கூக் குரல் இடுபவர்கள், புலிகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நடந்த இனக் கலவரங்களுக்கும் அதில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கும் யாரைப் பொறுப் பாக்குவார்கள்? எதற்கு எதிர்வினை எது என்ற வரலாற்றையே மாற்றிச் சொல்கிற உரிமையை இவர்களுக்கு யார் தந்தது?
புலிகள் தங்கள் மக்களைப் பாது காக்க தங்கள் மண்ணைக் காக்கும் போரை மட்டுமே நடத்தினார்களே ஒழிய, மிகுந்த பலம் பொருந்திய காலக் கட்டத்தில் கூட எல்லை மீறிச் சென்று சிங்கள மக்கள் மீது தாக்குதல் நடத்தவோ சிங்களர் வாழும் மண்ணை ஆக்கிரமிக்கவோ முற்பட்டதே கிடை யாது என்பதே வரலாற்று உண்மை. அப்படி தமிழ் மக்களைக் காத்து வந்த புலிகளும் இல்லாத நிலையில் சிங்கள அதிகாரத்தின் கீழ் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு யார் உறுதி அளிப்பது?
இன்று (26-8-2009) வெளியான ஒளிப்படங்களில் கடந்த ஜனவரி மாதத்தில் தமிழ் இளைஞர்களை நிருவாணப்படுத்திச் சுட்டுக் கொல்லும் காட்சிகளைக் கண்டது போல் இன்னும் 6 மாதங்களுக்குப் பிறகு இன்றைய கொடூரங்கள் வெளிவரக்கூடும். அனைத்தையும் இழந்து அதிகாரத்தின் பிடியில் சிக்கியிருக்கும் இம்மக்கள் மீது ஏவப்படும் உளவியல், உடல் மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளை 'ஒரு தலைப்பட்சமான போர்'’என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? நடந்து கொண்டிருக்கும் இந்த ஒரு தலைப்பட்சமான போரைக் குறித்த கேள்விகளை விட்டுவிட்டு, நடந்து முடிந்தவற்றிற்கு போராளிகளை பொறுப் பாக்குவதில் நீங்கள் தீவிரம் காட்டுவதேன்?
உலகுக்கெல்லாம் மனித நேயம் பேசிக் கொண்டு, காசுக்காகவோ கலை தாகத்திற்காகவோ என்கெளண்டர் ஸ்பெஷலிஸ்டுகளுடன் சேர்ந்து படம் (பணம்) பண்ணும் உங்கள் அளவிற்கு அன்புள்ளவர்களாக அவர்கள் இல்லாமல் போகலாம். உலகிலேயே சுபிட்சமான இடம் மாணிக் பார்ம்தான் என்று கூசாமல் எழுதும் 'இந்து'’ இதழைப் போன்ற நேர்த்தியானவர்கள் இவ்வுலகில் இல்லை என்று கருதும் நடுநிலைமை எனக்கில்லாமல் போகலாம். அல்லது நடுநிலைமையாளராகவும் மிகுந்த அக்கறை கொண்டவராகவும் காட்டிக் கொள்வதற்காக இந்தியாவையும் தமிழகத்தின் அரசியல் கட்சிகளையும் சாடும் நாடகத்தை ஒரு புறம் நடத்திக் கொண்டே, நுட்பமான சொற்களால் நஞ்சை நுழைக்கும் திறன் எனக்கு இல்லாமல் போகலாம்.
('இந்திய அமைதிப்படையின் கொடுமைகளால் போராளியானதாகச் சொன்னீர்கள் தமிழினி', நான் உங்களைச் சந்தித்த அதே கிளிநொச்சி நகரைப் புதுப்பிக்க இப்போது இந்தியா உதவி செய்யவிருக்கிற தகவல் உங்களுக்குத் தெரியுமா?'’- இந்த வரிகளில் உங்களின் இந்த இரட்டை நிலைப்பாடு தன்னையும் அறியாது வெளிப்பட்டுள்ளதே.)
ஆனாலும், உங்களிடம் கேட்ப தற்கு எனக்கு ஒன்று உள்ளது. உரிமைகள் அனைத்தையும் இழந்த நிலையிலும், சுயமரியாதையான ஒரு வாழ்விற்காக நித்தமும் போராடிக் கொண்டிருக்கும் அந்த எளிய மக்களிடம் உங்கள் திறனைக் காட்டி நோகடிக்காதீர்கள். அவர்கள் விடுதலைக்கு ஏதேனும் செய்ய இயலுமாயின் செய்யுங்கள். இயலாதெனில் இடையூறாவது செய்யாதிருங்கள். நியாயமான உரிமைகளுக்கான அவர்களின் போராட்டம் அவை கிடைக்கும் வரை ஓயப் போவதில்லை. அடக்குமுறை களாலேயே ஒரு விடுதலைப் போராட் டத்தை நசுக்கிவிட முடியாது என்கிற போது அவதூறுகள் என்ன செய்து விடும்?
தோழமையுடன்,
பூங்குழலி
♥ தமிழக அரசே...! துப்பாக்கி கொடு...!! ♥
இலங்கை கடற்படையினரிடம் இருந்து தப்பிக்க மீனவர்களுக்கு துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி; ராமேசுவரத்தில் தா.பாண்டியன் பேச்சு
ராமேசுவரம், நவ. 4-
ராமேசுவரம் மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ராமேசுவரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், சுட்டுக்கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு சில மாதங் கள் மட்டும் நடந்தால் தற்செயலாக நடந்தது என்று பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் சுமார் 40 ஆண்டு களாக இந்த அவல நிலை நீடித்து வருகிறது.
இதுவரை 400-க்கும் அதிகமான மீனவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் சித்ரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை தாக்குதலில் கை, கால் இழந்து உடல் ஊனமுற்று தொழில் செய்ய முடியாமல் ஆயிரக்கணக்கானோர் இதற்கு சாட்சிகளாக உள்ளனர்.
எல்லையோர பகுதியை காக்க வேண்டிய மத்திய அரசும், தமிழக மீனவர்களை காக்க வேண்டிய மாநில அரசும் உருப்படியான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இலங்கை தமிழ் மக்களை காப்பதற்காக முதல்-அமைச்சர் கூட்டிய கூட்டத்தில் தமிழக மீனவர்கள் காப்பாற்றுவது குறித்த கோரிக்கையும் இடம் பெற்றது. எத்தனை முறை கோரிக்கைகள் வைக்கப்பட்டாலும் இது வரை தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்படவில்லை.
இந்திய மக்களை காக்க வேண்டிய தலையாய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. தாக்குதல் நடத்தி சிறைபிடித்து சித்ரவதை செய்த பின்பு ஒருவாரம் கழித்து நடவடிக்கை என்ற பெயரில் அவர்களை மீட்டு வெற்றி விழா எடுப்பது வெட்கக்கேடான செயல்.
இலங்கை அரசை தட்டிக்கேட்க முடியாத அரசாக மத்திய அரசு உள்ளது. சோமாலிய கடற்கொள்ளை யர்கள் இந்திய கப்பல்களை சிறை பிடித்தால் விரைந்து செல்லும் கப்பல் படை 40 ஆண்டுகளில் தமிழக மீனவர்களுக்காக ஒருமுறை கூட செல்லவில்லை.
இலங்கை தமிழர்களை கொலை செய்ய ஆயுத உதவி வழங்கிய இந்திய அரசு தமிழக மீனவர்களையும் படுகொலை செய்ய ஊக்கம் அளிக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. முப்படைகளையும் வைத்திருக்கும் இந்திய அரசால் தமிழக மீனவர்களை காப்பாற்ற முடியவில்லை.
எனவே தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது தற்காத்துக்கொள்ள மீனவர்களுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதிகோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மீனவர்கள் சட்டத்தை மீற விரும்ப வில்லை. சட்டத்திற்கு உட்பட்டு துப்பாக்கியை பயன்படுத்துவோம் என உறுதி கூறியுள்ளனர். துப்பாக்கியும் தர மாட்டோம், பாதுகாக்கவும் மாட்டோம் என்று மத்திய அரசு இருந்தால் மீனவர்கள் வேறு விதமாக சிந்திக்க தொடங்கி விடுவார்கள்.
எனவே இதற்கு தீர்வு காண மீனவர்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்படும்.
இவ்வாறு தா.பாண்டியன் பேசினார்.
http://www.maalaimalar.com/2009/11/04172735/MDU02041109.html
சரிகிறதா கணினித்துறை? வேலை கிடைக்காதோர் எண்ணிக்கை அதிகரிப்பு
"கணினித்துறையில் வேலைதேடுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சமாகும். இதில் சுமார் பாதிப்பேருக்கு வேலை கிடைப்பதில்லை. கணினித்துறையில் முன்னணி நிறுவனங்களே கூட தற்போது இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையையே குறைத்துக் கொள்ளலாமா என்ற திட்டத்தில் இருக்கின்றன..."
லட்சக்கணக்காக இளைஞர்களுக்கு டாலர் கனவுகளை ஏற்படுத்திய கணினித்துறை நெருக்கடியில் சிக்கியிருப்பதாக பல மனிதவள ஆய்வு நிறுவனங்கள் கூறுகின்றன.
கணினிப்படிப்பு படித்தால் வேலை உறுதி என்று சில ஆண்டுகளாக இருந்த நிலைமை மாறி விட்டது. ஏழெட்டு நிறுவனங்களுக்கு நேர்முகத்தேர்வுக்காக சென்றுவிட்டு, எதில் சேரலாம் என்று காசு சுண்டிவிட்டுப் பார்த்த நிலை போய், நேர்முகத் தேர்வில் இடம் பெறவே கடுமையாகப்பாடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். கணினி பொறியியல் படிப்பை முடித்துவிட்டு பிபிஓக்களில் வேலை கிடைத்துவிட்டாலே திருப்தி அடைந்துகொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
ஊதியம் வழங்கும் தன்மையிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக வேலையில் சேர்ந்தவர்களுக்கு துவக்கத்திலேயே 30 ஆயிரம், 35 ஆயிரம் என்று ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது அது 15 ஆயிரம் என்ற அளவுக்கு சரிந்துவிட்டது.
கணினி மற்றும் அறிவியல் படிப்பை முடித்துவிட்டு ஒவ்வொரு ஆண்டும் கணினித்துறையில் வேலைதேடுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சமாகும். இதில் சுமார் பாதிப்பேருக்கு வேலை கிடைப்பதில்லை. கணினித்துறையில் முன்னணி நிறுவனங்களே கூட தற்போது இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையையே குறைத்துக் கொள்ளலாமா என்ற திட்டத்தில் இருக்கின்றன.
நெருக்கடி நீடிப்பதால் பிபிஓக்களுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகியவற்றிலிருந்து வேலைகள் கிடைப்பது குறைந்துள்ளது. இதன் பாதிப்பும் கடுமையாக இருக்கிறது. கடந்த ஆண்டில் வளாகத்தேர்வுகளை நடத்தி வேலைவாய்ப்புக்கான கடிதங்களை அளித்த நிறுவனங்கள், அந்தக் கடிதங்களைப் பெற்றவர்களுக்கு வேலை தரவில்லை. பலரும் அந்தக் கடிதங்களோடு நிறுவனங்களின் படிகளில் அடிக்கடி ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
http://theekkathir.in/index.asp
கல்லறையில் கதிரவன் - கப்டன் கஸ்தூரியின் கவிவரிகள்..
வீரனே...!
உன்
கல்லறையில் விளக்கேற்றி
களங்கப் படுத்தவில்லை...
கண்ணீர் வடிக்கவில்லை
ஏனென்றால்
எமக்குத் தெரியும்...!
உள்ளே இருப்பது
சூரியன் என்று...!
தமிழீழ தேசியத் தலைவரின் பெற்றோர் 4ம் மாடியின் சித்திரவதைக்குள்….
"கேட்ட கேள்விக்குப் பதில் வராவிட்டால் வாய்க்குள் தீக்குச்சியைக் கொளுத்திப் போடுவார்களாம் குரூர அதிகாரிகள்! இதில், உடலின் உள்ளுறுப்புகள் தீயினால் வெந்து பொசுங்கிவிடும்..."
பிரபாகரனின் பெற்றோர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் இப்போது சிங்கள அரசின் முரட்டுச் சித்திரவதைகளில் அவதிப்பட்டு வருவதாகக் கடல் கடந்து வரும் தகவல்கள்தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனங்களில் வேதனை வலியைப் பரவ வைத்திருக்கிறது. இவ்வாறு தமிழக வார சஞ்சிகை ஆனந்த விகடன் தெரிவித்துள்ளது.
anna-amma‘மே, 1968…
அர்ச்சகரின் மீதுதான் தவறு!’ – அந்த இளைஞனின் உதடுகளில் இருந்து உஷ்ணமாக வெளிப்பட்டன வார்த்தைகள். கோபம் அனலாகத் தெறிக்கும் தன் மகனின் முகத்தை விநோதமாகப் பார்த்தார்கள் பெற்றோர் இருவரும்.
‘என்ன நடந்தது எனத் தெரிந்துதான் பேசுகிறாயா? தமிழரான அந்த அர்ச்சகரை சிங்களவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?’ – பதில் கோபத்துடன் திருப்பிக் கேட்டார் அந்த இளைஞனின் தந்தை.
‘தெரியும், சிங்களவர்கள் கொளுத்திவிட்டார்கள். அவர்கள் கொளுத்தும் முன்பே அர்ச்சகர் அவர்களைக் கொன்றிருக்க வேண்டும்’ – கோபம் குறையாமல் அந்த இளைஞன் சொல்லவும் கூடுதலாக அதிர்ச்சி தந்தைக்கு!
‘தேவாரத்தையும், திருவாசகத்தையும் சொல்லிக்கொடுத்து, திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் எனப் படித்த உன்னிடம் இருந்தா இப்படிப்பட்ட வார்த்தைகள் வருகின்றன? தவறு, பகைவனிடம்கூட நாம் அன்பு பாராட்டத்தான் வேண்டும். அன்பே சிவம், அன்பே கடவுள், அன்பே உலகம்!’ எனப் பதிலுக்கு அழுத்தி அழுத்தி அந்த இளைஞனுக்கு அன்பைப் போதிக்கிறார் அந்தத் தந்தை!
30 ஆண்டு காலமாக ஈழத் தமிழர்களுக்காக இராணுவம் கட்டிப் போராடிய பிரபாகரன்தான் அந்த இளைஞன். பிரபாகரனுக்கு அன்பை அழுத்தி அழுத்திச் சொன்னவர் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை. சிங்களப் பகைவனுக்குக்கூட அன்பு பாராட்ட வேண்டும் எனப் போதித்த பிரபாகரனின் பெற்றோர் திருவேங்கடம் வேலுப்பிள்ளையும், பார்வதியம்மாளும் இப்போது சிங்கள அரசின் முரட்டுச் சித்திரவதைகளில் அவதிப்பட்டு வருவதாகக் கடல் கடந்து வரும் தகவல்கள்தான் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனங்களில் வேதனை வலியைப் பரவ வைத்திருக்கிறது.
இலங்கை வல்வெட்டித்துறையில் நன்கு அறியப்பட்ட நடுத்தரவர்க்கக் குடும்பம் திருவேங்கடம் வேலுப்பிள்ளையினுடையது. இலங்கை அரசாங்கத்தில் மாவட்டக் காணி அதிகாரியாகப் பணிபுரிந்தவருக்கு பிரபாகரன், ஜெகதீஸ்வரி, விநோதினி என மூன்று குழந்தைகள். மகன் பிரபாகரன் தேர்ந்தெடுத்த பாதையை மாற்ற ஆரம்பத்தில் எவ்வளவோ முயற்சித்தவர்.
பின்னாட்களில் மகனுக்குப் பின்னால் திரண்ட போராட்ட வீரர்களைப் பார்த்து, தவிப்புடன் ஆசி வழங்கி போராட்டத்துக்குத் தத்துக் கொடுத்தார் மகனை. அதன் பிறகு சிங்கள அரசுக்கும் பிரபாகரனின் படைக்கும் பல முறை போராட்டங்கள் நடந்தபோதெல்லாம் முதலில் பாதிக்கப்படுவது வேலுப்பிள்ளைதான். வேதனையும் பயமும் உள்ளுக்குள் நொறுக்கினாலும், மகனின் வீரப் போராட்டத்துக்காக எதையும் வெளிக்காட்டாமல் வெள்ளந்தி மனிதராக வாழ்ந்தவர்.
ஒரு கட்டத்தில் இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடித்துக் கொடுக்க… மூத்த மகள் ஜெகதீஸ்வரி கணவருடன் கனடா சென்றுவிட்டார். இளைய மகள் விநோதினி திருச்சியில் தங்கி விட்டார்.
மரபுவழி இராணுவப் போர் உக்கிரமாகத் தொடங்கிய காலத்தில் பிரபாகரன், தன் பெற்றோரை வற்புறுத்தி 83-ம் ஆண்டில் இந்தியா அனுப்பிவைத்தார். திருச்சி இராமலிங்க நகரில் இருந்த விநோதினியின் வீட்டில் தங்கியிருந்தபடி மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தனர் இருவரும். பின்னர், விநோதினியும் கனடா சென்றுவிட, தங்களுக்கு மருத்துவம் பார்த்த முசிறி டாக்டர் இராஜேந்திரனுடன் முசிறியிலேயே தங்கி இருந்தனர்.
அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் 2003-ம் ஆண்டில் தமிழீழம் கிளம்பிப் போனார்கள். அதன் பிறகு கடைசி வரை பிரபாகரனுடயே இருந்தவர்களை இறுதிக்கட்டப் போரின்போது தமிழகத்துக்குச் செல்லும்படி எவ்வளவோ கூறி இருந்திருக்கிறார் பிரபாகரன். ‘வாழ்வோ, சாவோ… இனி உன்னோடுதான்’ என்ற உறுதியோடு இருந்தவர்கள், சிங்கள இராணுவத்தின் கைகளில் சிக்கியது காலத்தின் கோலம்தான்.
”போர் பாதிப்பின் அடையாளமாக எஞ்சிஇருந்த மிச்சசொச்சம் தமிழ்ச் சொந்தங்கள் சொந்த தேசத்துக்கு உள்ளேயே நாடு கடத்தப்பட்ட அகதிகளாக இராணுவத்திடம் சரண் அடைந்திருந்தனர். அந்த மக்களோடு மக்களாக மெனிக்பாம் அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்திருந்தனர் பிரபாகரனின் பெற்றோர்.
அவர்களைத் தேடி வந்த இராணுவத்தினர் ஏனைய மக்களைச் சித்திரவதைக்கு உள்ளாக்கியபோது, தாங்களாகவே முன்வந்து 2009, மே 20-ம் தேதி தங்களை ஒப்புக் கொடுத்தனர் பிரபாரனின் பெற்றோர்.
வவுனியா இடைத்தங்கல் முகாமுக்கு இருவரையும் அழைத்துச் சென்ற இராணுவம், அங்கு தனிமையில் வைத்திருந்தது. 76 வயதான வேலுப்பிள்ளையும், 71 வயதான பார்வதியம்மாளும் உடல்நிலை மோசமாகி மிகவும் சிரமப்பட்டபோதுகூட, அவர்களுக்கான மருத்துவ உரிமையைப் பறித்தது இராணுவம்” என்று இப்போது சொல்லும் சில ஈழத் தமிழ் பிரமுகர்கள்,
”60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு உதவியாக உறவினர் ஒருவரை வைத்துக் கொள்ளலாம் என்ற பொது விதியைக்கூட பிரபாகரனின் பெற்றோருக்கு அவர்கள் மறுத்துவிட்டனர். ஒரு மாத காலம் வவுனியா முகாமில் இருந்தவர்களை, பின்பு சிங்கள இராணுவம் எங்கோ கொண்டு சென்றது. இதுவரை விவரம் தெரியாமல் இருந்தது.
இப்போது, அந்த அப்பாவி முதியவர்கள் இருவரும் ‘போர்த் ப்ளோர்’ எனப்படும் 4வது மாடியில் இலங்கை மத்திய குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் இருப்பதாக வரும் செய்திகள் கேட்டு நடுங்கிப் போயிருக்கிறோம்” என்கிறார்கள் உள்ளார்ந்த பதைபதைப்புடன்!
நாலாவது மாடி என்ற வார்த்தையைக் கேட்டு ஏன் பதைபதைக்க வேண்டும்?
அது அப்படித்தான்! ஜெ.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் கொழும்பு கொள்ளுப்பிட்டிப் பகுதியில் உள்ள கட்டடத்தின் நான்காவது மாடிக்கு மெள்ள மெள்ள அப்படியொரு ‘புகழ்’ சேரத் தொடங்கியதாம்! இலங்கை மத்தியக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அங்கே ஹிட்லரின் சித்திரவதைக் கூடத்தைவிட பயங்கரமான நிகழ்வுகளை அரங்கேற்றிக் காட்டுவது வழக்கமாம். அரசுக்கு எதிரான முக்கிய தமிழ்முகங்கள் சிக்கிவிட்டால்… அவர்களை சிறுகச் சிறுக நொறுங்கவைத்து இரகசியங்களைப் பிடுங்க முடிவெடுத்துவிட்டால்… இந்தநாலாவது மாடிக்கு கொண்டு போய்விடுவார்களாம்.
”இங்கே போய் உயிரோடு திரும்பியவர்கள் மிக அபூர்வம்தான்! அப்படி உயிரோடு திரும்பி வருபவர்களும் வாழ்நாள் முழுக்க நிம்மதியாத் தூங்க முடியாது. கனவிலும் மிரட்டும் கொடுமைகள் அப்படி! சுவர் எங்கும் தெறித்து விழுந்த இரத்தக்கறைகளும், ஓயாத மரணவலி ஒலங்களும் அந்த நான்காம் மாடியில் ஒலித்துக்கொண்டே இருக்குமாம். அந்த இடத்தை ‘சாத்தானின் மாளிகை’ என்றும் ‘பிசாசுக் கூடாரம்’ என்றும் விவரம் தெரிந்த தமிழர்கள் சொல்வது வழக்கம்” என்று விளக்கம் கிடைக்கிறது.
விசாரணைக்காக வரும் நபர்களை வகைப்படுத்தியே சித்திரவதை தொடங்குவார்களாம். ஆடைகளைக் கழற்றி, பனிக்கட்டிகள் நிரம்பி இருக்கும் ஓர் அறையில் நடுங்கும் குளிரில் உறையவைப்பது… கேட்கிற கேள்விக்கு ‘திருப்தி’கரமான பதில் வராவிட்டால், குளிருக்கு நேரெதிரான பாஸ்பரஸ் ட்ரீட்மென்ட் நடக்குமாம். பாஸ்பரஸை உடலில் தடவி, கொதிக்கிற மின் தகட்டைக் கையிலெடுத்து… மேற்கொண்டு கேட்டால், இளகிய மனங்கள் துடிதுடித்துப் போகும்.
தலைகீழாகத் தொங்கவிடுவது… பிறகு, பி.வி.சி. பைப்புகளில் மணலை நிரப்பி அடித்து நொறுக்குவது… தலைகீழாகத் தொங்குபவரின் தலையில் முழுக்க பெட்ரோல் நிரம்பிய ஒரு பொலித்தீன் பையை மாட்டுவது… மூச்சுவிட முடியாமல் அவர்கள் பெட்ரோலை மெள்ள மெள்ளக் குடிப்பதையும்… அதன் நெடி மிகுந்த காற்றைச் சுவாசிப்பதையும் ரசிப்பது!
விதவிதமாக நீள்கின்றன இந்த சித்திரவதைப் படலங்கள்.
வாய் வழியே பெட்ரோல் சென்று அரை மயக்க நிலையில் ஆழ்ந்த பிறகும், கேட்ட கேள்விக்குப் பதில் வராவிட்டால் வாய்க்குள் தீக்குச்சியைக் கொளுத்திப் போடுவார்களாம் குரூர அதிகாரிகள்! இதில், உடலின் உள்ளுறுப்புகள் தீயினால் வெந்து பொசுங்கிவிடும்.
உயிர் ஊசலாடிக்கொண்டு இருக்கும்போது, நான்கைந்து பேர் மட்டுமே கால்நீட்டி அமரக்கூடிய ஓர் அறைக்குள் 20-க்கும் மேற்பட்ட நபர்களை நின்ற நிலையில் அடைத்து விடுவார்களாம். துளிகூட வெளிச்சம் புகாத அந்த இருட்டறைக்குள் முனகலும், மூச்சுவிடும் சத்தமும் மட்டும்தான் துணையிருக்கும். மற்றபடி எல்லாமே அந்தகாரம்தான்!
மனநிலையை உருக்கி, உண்மைகளை வாங்குவதற்காக இப்படி உணவு, தண்ணீர் தராமல் பலநாட்கள் இருட்டுக்குள் வைத்திருப்பது உண்டு என்றும் இலங்கைத் தமிழ்ப் புள்ளிகள் மத்தியில் பரவிக்கிடக்கிறது சேதி.
”பெண்களின் நிலைமையோ எழுத்தில் வடிக்க முடியாது” என பயம் பரவ நாலாவது மாடி பற்றி விவரிக்கிறார்கள் இலங்கைத் தமிழ் நிருபர்கள் சிலர்.
”இத்தகைய ஓரிடத்தில் கடந்த நான்கு மாதங்களாக விசாரணை என்ற பெயரில் பிரபாகரனின் தாய் – தந்தை வைக்கப்பட்டு இருப்பதாக அறிகிறோம். வேலுப்பிள்ளைக்கு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் உள்ளனவாம். தாய் பார்வதியம்மாளுக்கும் சர்க்கரை, உயர் இரத்த அழுத்த பாதிப்பு உண்டாம். அவர்களுக்கு அங்கே என்னவிதமான மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. அவர்களிடமிருந்து சிங்கள அதிகாரிகள் என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்றும் புரியவில்லை!
இருவரையும் தனித்தனியே பிரித்து தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதாக துளியளவு இரக்கமுள்ள சில அதிகாரிகள் மூலம் தகவல் வருகிறது. முதுமையில் தனிமையின் பயம் எத்தகைய மனக் குழப்பங்களை உண்டாக்கும் என்று சொல்லத் தேவையில்லை. உணவுக் கட்டுப்பாட்டுக்கும் வழியில்லை அந்த நோயாளித் தம்பதிக்கு!
இந்திய எம்.பி-க்கள் குழு இலங்கை சென்றபோது ‘பிரபாகரனின் பெற்றோரைப் பார்க்க வேண்டும்’ என வேண்டுகோள் வைத்திருக்கிறார் திருமாவளவன். இதற்கு மறுப்புத் தெரிவித்த அதிபர் ராஜபக்ஷவின் சகோதரரான பசில், பிரபாகரனின் பெற்றோர் நலமுடன் இருப்பதாக மட்டுமே தெரிவித்திருக்கிறார். ”அவர்களை வெளியில் விடுவதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், அவர்கள் இந்தியாவில் தங்குவதாக இருந்தால் மட்டும்தான் வெளியில் விடுவோம். மற்ற வெளிநாடுகளுக்குப் போனால், அவர்கள் எங்களுக்கு எதிராகப் பேட்டிகள் கொடுப்பார்கள். இப்படித்தான் டாக்டர் தமிழ்வாணியை நாங்கள் வெளியில் விடச் சம்மதித்தோம். ஆனால், லண்டன் போனவர் எங்களையே விமர்சித்தார். அந்த மாதிரி பிரபாகரனின் பெற்றோர் செயல்படக் கூடாது அல்லவா?” என்று பசில் ராஜபக்ஷே, திருமாவளவனிடம் சொன்னதாக எங்களுக்கு ஒரு தகவல் இருக்கிறது” என்கிறார் இலங்கை தமிழ் பத்திரிகையாளர் ஒருவர்.
இலங்கைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தன் மற்றும் எம்.பி. சேனாதிராஜா ஆகியோரின் உதவியுடன் பெற்றோரை மீட்டுத் தமிழகம் கொண்டுவரும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறாராம் பிரபாகரனின் சகோதரி விநோதினி. இதற்கு இலங்கை அரசாங்கம் எந்தளவு ஒத்துழைக்கும் என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இலங்கை குறித்த போர்க் குற்ற அறிக்கை தாக்கலாகி இருப்பதைத் தொடர்ந்து, இங்கிருந்து யாரையும் இனி வெளிநாடுகளுக்கு அனுப்ப இலங்கை சம்மதிக்காது என்கிறார்கள் கொழும்பு பத்திரிகையாளர்கள்!
”பிரபாகரனின் பெற்றோருக்கு உண்மையில் என்ன நடந்தது, அவர்களது இப்போதைய நிலைமை என்ன என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்” என்று தமிழீழ ஆதரவு அமைப்புகள் கோரிக்கை வைக்கத் தயாராகி வருகின்றன.
இலங்கையின் சித்திரவதை அத்தியாயம் இப்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை!
http://www.nerudal.com/nerudal.11819.html
தீபாவளிதினமன்று வெளியெங்கும் பட்டாசுப் புகை மண்டலமாகிக் கிடந்ததால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். சித்தர் பாடல் சொல்வதுபோல சில நேரங்களில் சும்மா இருத்தலே சுகமாகத்தான் இருக்கிறது. மதியம் உறங்கித் தீர்த்த பின் தொலைக் காட்சியைத் தட்டினால் ஸ்டார் அலைவரிசையில் "பேர்ள் ஹார்பர்' (Pearl Harbour) -தமிழில் சொன்னால் "முத்துத் துறைமுகம்' ஆங்கிலத் திரைப்படம் தொடங்கியிருந்தது.
இப்போதெல்லாம் தனிப்பட்ட விருப்பங்களுக்கு நேரம் ஒதுக்குகிற வசதிகளை வாழ்க்கை அபகரித்துக்கொண்டுவிட்டது. பழைய நாட்களில் வரலாறு தொடர்பான திரைப்படங்க ளென்றால் ஒன்றுக்குப் பலமுறை பார்த்து உரையாடல்களை மனப்பாடம் செய்யும் பழக்கம் இருந்தது. ஆஸ்கர் விருது வென்ற "கிளாடி யேட்டர் (Gladiator) படத்தை இருபது முறையாவது பார்த்திருப்பேன். படத்தின் பாதி உரையாடல்களை இப்போதுகூட வாய்ப்பாடுபோல் சொல்ல முடியும்.
"பேர்ள் ஹார்பர்' -"முத்துத் துறைமுகம்' வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஓர் நிகழ்வைச் சுற்றி பின்னப்பட்ட காதல் கதை. இரண்டாம் உலகப்போரின் போக்கினையும், முடிவினையும் தீர்மானித்து அதன் தொடர்ச்சியாக இன்றைய உலகில் நாம் காணும் அரசியல் ஏற்பாடுகளுக் கெல்லாம் காரணமான நிகழ்வு அது. குறுக்கக் கூறினால் அமெரிக்காவை இரண்டாம் உலகப்போரில் இணையச் செய்த நிகழ்வு.
பசிபிக் பெருங்கடல் ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்றான ஓகூ தீவில் அமைந்த திருகோணமலை போன்ற இயற்கையான ஆழ்கடல் துறைமுகம் பேர்ள் ஹார்பர். அமெரிக்காவின் பசிபிக் கடற்படை முற்றாக இங்குதான் நிலைகொண்டு நின்றது.
பேரரசுப் பெரும்பசியில் நின்ற ஜப்பான், ஆசியா முழுவதையும் தன் கட்டுக்குள் கொண்டுவந்துவிட வேண்டுமென 1940-வாக்கில் முடிவெடுக்கிறது. மஞ்சூரியா, சீனாவின் எஞ்சிய பகுதிகள், இன்றைய இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பின்ஸ் ஆகியவைதான் முதற்கட்ட இலக்கு. ஆனால் இவற்றை ஆக்கிரமிக்கும் பட்சத்தில் பேர்ள் ஹார் பரில் நின்றிருக்கும் அமெரிக்க கடற்படை மேற் சொன்ன நாடுகளில் நின்றிருந்த பிரித்தானிய - பிரெஞ்சு - டச்சு படைகளுக்கு உதவியாக விரைந்து வரக்கூடிய வாய்ப்பு தான் ஜப்பானை தயங்க வைத்தது. எனவே வியப்பூட்டும் தாக்குதல் ஒன்றின் மூலம் அமெரிக்காவின் பசிபிக் கடற்பிரிவினை முற்றாக அழிக்கும் முடிவினை 1941-ம் ஆண்டு தொடக்கத்தில் ஜப்பான் எடுத்தது.
அதே ஆண்டு டிசம்பர் 7 ஞாயிறு காலை, ஆறு விமானம் தாங்கிக் கப்பல்கள், நான்கு நீர்மூழ்கிக் கப்பல்கள், 408 விமானங்கள் காட்டுப்புலிகள்போல் பின்னிரவு இருளினூடே நகர்ந்து பேர்ள் ஹார்பர் மீது "வான் அலை' தாக்குதல் தொடங்கின. இரண்டு சுற்றுத் தாக்குதல்கள் முடிவுற்றபோது அமெரிக்காவின் பசிபிக் கடற்படை ஏறக்குறைய எல்லா கப்பல்களையும், 188 விமானங்களையும் இழந்திருந்தது. 2402 அமெரிக்க கடற்படையினர் கொல்லப்பட்டனர், 1282 பேர் படுகாயமுற்றனர்.
காதல் கதையொன்றை வனைந்து வரலாற்றை அற்புதமாகத் திரைப்படத்தில் வடித்திருந்தார் புகழ்பெற்ற இயக்குநர் மைக்கேல் பே. சில இடங்களில் அழுத்தமாகப் பதிந்து செல்லும் சில உரையாடல்கள் மறக்க முடியா தன்மை கொண்டிருந்தன. கேட்டதுமே தமிழ்ஈழ விடுதலைப் போராட்டக் களத்திற்கும் ஏதோ ஒரு தொடர்புகொண்டிருப்பது போலவும் அவை உணர்வு தூவின.
முதல் இரண்டு சுற்று, ""அலை அலையான'' தாக்குதல்களில் கப்பல்கள், விமானங்கள் அழிந்துபோக பேர்ள் ஹார்பரில் மிச்சமிருந்தது துறைமுகமும், தரைமைய ஆயுதங்களும், சில சிறு கப்பல்களும். அவற்றையும் தாக்கி அழிக்க மூன்றாம் சுற்றுத் தாக்குதலுக்கான விவாதத்தில் ஜப்பானிய தலைமைத் தளபதி கூறுவார் : ""முதல் இரு சுற்றிலும் "வியப்பூட்டும் தன்மை' நமக்கு தனித்துவமான சாதக நிலையை தந்தது. மூன்றாம் சுற்றில் அது இருக்காது. நமக்காக அவர்கள் காத்திருப்பார்கள். இருக்கிற வளங்களைக் கொண்டு திறமையாகத் திருப்பித் தாக்குவார்கள். நமது ராணுவக் கொள்கையின் ஆதார நாதமே "எதிரி யின் வளங்களை அழிப்பதைவிட நமது வளங்களை பாதுகாப்பதுதான்' என்று.
தொலைக்காட்சி உரையாடல் நடக்கையிலே மனத்திரையில் தமிழ் ஈழக் களம் விரிந்தது. ஒரு கொரில்லா இயக்கமாய் இருந்தவரை விடுதலைப்புலிகளின் மிகப்பெரிய ராணுவ குணாம்சமாய் உலகத்தால் பாராட்டப்பட்டது. அவர்களின் ""வியப்பூட்டும் தன்மை'', ""ஆச்சரியப் படுத்தும்'' அற்புத அழகு. எங்கு, எப்போது, எப்படி புலிப்படை பாயும் என்று எவருக்கும் தெரியாது. ஆனையிறவை வென்று வெற்றிக்கொடி ஏற்றியது வரை அந்த வித்தகம் அவர்களிடம் இருந்தது. பேச்சு வார்த்தைகள் தொடங்கி புலிகள் மரபுரீதியான ராணுவ மனநிலைக்கு மாறியபின் "வியப்பூட்டும் தன்மை' அணி மாறியது. அதன்பின்னர் முள்ளிவாய்க்கால்வரை சிங்களப்படைகளே ஆச்சரியப்படுத்தின. பின்னோக் கிப் பார்க்கையில் யாழ்ப்பாண முற்றுகையைத் தொடர்ந்துகொண்டே பேச்சுவார்த்தைகளையும் செய்திருந்தால் சரியாயிருந்திருக்குமோ... என்றெல்லாம் எண்ணி மனம் கனத்தது.
பிறிதொரு உரையாடலில், பேர்ள் ஹார்பர் இரண்டு சுற்றுத் தாக்குதல்களுக்குப் பின் நடக்கும் ராணுவ உயர்மட்டக் கூட்டத்தில் மாற்றுக் கருத் துடைய மூத்த தளபதி ஒருவர் கூறுவதாக இப்படி வரும் : ""பேர்ள் ஹார்பரில் அமெரிக்காவின் பசிபிக் கடற்பிரிவை நிர்மூலமாக்கிவிட்டதாக இப்போதைக்கு நாம் பெருமிதம் கொள்ளலாம். ஆனால் உண்மையில் நீண்ட உறக்கத்திலிருந்த ஒரு மலையாற்றல் கொண்ட விலங்கின் தன்மானத்தைச் சீண்டி உசுப்பி விட்டிருக்கிறோம். அதன் எதிர்விளைவுகளிலிருந்து நாம் தப்பிக்க முடியாது'' என்பார் அந்த மூத்த தளபதி. அவர் சொன்னதுதான் பின்னர் வரலாறா கியது. பேர்ள் ஹார்பர் தாக்குதல் நடக்கும்வரை அமெரிக்கா உலகப்போரில் இணையாமல் விலகியே நின்றது. பேர்ள் ஹார்பர் அமெரிக்காவை நேச அணியில் இணைத்து ஹிட்லர்-முசோலினி-ஜப்பான் அடங்கிய "அக்சிஸ்' அணியின் படுதோல்விக்கு வழி சமைத்தது.
ராஜபக்சே கூட்டத்தின் முள்ளிவாய்க்கால் கொடூரங்களும் அப்படித்தான். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வதம் செய்து நிர்மூலமாக்கிவிட்ட தாய் சிங்களம் கொக்கரித்துக் கொண்டாடுகிறது. ஆனால் மறுபுறம் உலகின் கண்களுக்குத் தெரியாமல் கோடானு கோடி தமிழ் உள்ளங்களில் நீதியுணர்வு தமிழின உணர்வாய் உருவெடுத்துக் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது பூமித்தாயின் அடி மடியில் ஆர்ப்பரிக்கும் எரிமலைக் குழம்பு போல. எரிமலைகள் உறங்குவதுமில்லை, சீறி வெடிக்காமல் நீர்த்துப்போவதுமில்லை. தோல்வியின் கணத்தில் பிறக்கிற தோழமை தமிழீழ விடுதலை மட்டுமல்லாது பரந்துபட்ட தமிழ் இன, மொழி, கலை, பண்பாட்டு மறுமலர்ச்சிக்கும் புதிய வழித்தடங்களை அமைக்கப் போகிறதென்பதை இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது. "பேர்ள் ஹார்பர்' திரைப்படத்தில் மனம் சிலிர்க்க வைத்த, மறக்க முடியாத பல உரையாடல் களில் முதன்மையானதாக என் மனதிற்குப் பட்டது இது. பயிற்சித் தளபதி சொல்வதாய் வரும். முன் னணி வீரர்கள் ஜப்பானிய குண்டுவீச்சில் கொல்லப் பட்ட நிலையில் தன்னார்வ தொண்டர்களுக்கு அவசர களப்பயிற்சி கொடுக்கையில் கூறுவதாக அமையும் வரி இது : ""உணர்வெழுச்சி பெறும் தன்னார்வத் தொண்டர் ஒருவரது பலத்திற்கு இணையாக உலகில் எந்த மரபு ரீதியான வீரனும் போர் செய்ய முடியாது.''
இன்று உலகெங்கும் தமிழ் இளைஞர்களிடையே, கல்லூரி மாணவர்களிடையே நடந்துவரும் அமைதியான அதிசயமும் இதுதான். ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் குறிப்பாக இளைய தமிழர்களும், இதுவரை விளிம்பில் ஒதுங்கிநின்ற தமிழர்களும் உணர்வெழுச்சி பெற்ற தன்னார்வத் தமிழ் வீரர்களாய் தாங்களே களங்களை உருவாக்கி இயங்கத் தொடங்கியிருக்கிறார்கள். வியப்பான தோர் ஜனநாயகத் தன்மை தமிழ்த்தளத்தில் விடியலாவதை கண்ணுற முடிகிறது. கடந்த பத்து நாட்களில் நடந்த இரு பெரும் முன்நோக்கிய மாற்றங்களுக்கு இத்தகையோரது ஆரவாரமில்லா இடைவிடா உழைப்பே காரணம்.
முதல் மாற்றம் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பில் நிகழ்ந்துள்ளது. சித்ரவதைகள் குறித்த ஐ.நா. ஒப்பந்தம், குழந்தைகளது உரிமைகள் குறித்த ஐ.நா. ஒப்பந்தம், அரசியல், குடியுரிமைகள் தொடர்பான ஐ.நா. ஒப்பந்தம் மூன்றையும் இலங்கை அரசு மீறியுள்ளது என குற்றம்சாட்டி யுள்ளது ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆய்வறிக்கை. இது வரை இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு வர்த்தகச் சலுகைகளை ரத்துசெய்ய பரிந்துரை முன்வைத்துள்ளது. இதனால் ஆண்டுக்கு 1000 லட்சம் டாலருக்கு மேல் இலங்கைக்கு வர்த்தக இழப்பு ஏற்படும். பலமுறை நாம் குறிப்பிட்டுள்ளதுபோல் அரசியல் அழுத்தங்களைவிட பொருளாதார அழுத்தங்கள்தான் பேரினவாதச் சிங்கள அரசை அடிபணிய வைக்கும்.
இரண்டாவது மாற்றம் அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த வியாழனன்று அமெரிக்க காங்கிரஸ் அவைக்கு சமர்ப்பித்துள்ள 70 பக்க அறிக்கை. விடுதலைப்புலிகள், இலங்கை ராணுவம் இருதரப்பினர் மீதும் அந்த அறிக்கை குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறதென்றாலும் ""யுத்த குற்றங்கள் தொடர்பான அனைத்துலக விசாரணை அவ சியம்'' என்ற தமிழர்களின் கோரிக்கையை அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறையின் வெளிப்படையான இந்த நிலைப்பாட்டினை முக்கியமான தாகவே நாம் கருதவேண்டியுள்ளது. இந்த மாற்றமும் அங்கு ஆர்ப்பாட்டங்களின்றி உறுதியாக இயங்கிவரும் தனி நபர்களாலும் தரம் நிறைந்த சிறு அமைப்புகளாலேயுமே நடந்திருக்கிறது.
மேற்குலக நாடுகள் ராஜபக்சே கும்பலைச் சுற்றி படிப்படியாக நகர்த்திவரும் முற்றுகையிலிருந்து தப்பிக்க மீண்டும் இந்தியாவைப் பயன்படுத்தும் தந்திரோபாயத்தை இலங்கை கடை விரிக்கிறது. இலங்கைக்கு கடனுதவி வழங்க வேண்டுமென்று பன்னாட்டு நிதி நிறுவனத்திற்கு இந்தியா கொடுத்துள்ள அதிகாரபூர்வ அழுத்தம் ஒழுக்கக் கேடானதாகவே கண்டிக்கப்படவேண்டும். இன்றைய சூழலில் இந்தியா எடுக்கவேண்டிய குறைந்தபட்ச நிலைப்பாடுகள் எளிதானவை, தெளிவானவை, குழப்பமற்றவை.
1. வதை முகாம்களில் மக்களை அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது. அனைத்து மக்களும் விடுவிக்கப்பட வேண்டும்.
2. ராஜபக்சே, கோத்தபய்யா, பொன்சேகா மூவரும் தமிழருக்கெதிராய் யுத்தக் குற்றங்கள் புரிந்த குற்றவாளிகள்.
3. தமிழ் மக்களின் நீண்ட அரசியற் சிக்கலுக்கான நிரந்தர அரசியற் தீர்வுத் திட்டம் என்ன என்பதை பகிரங்கமாக முன்வைப்பது. இம்மூன்று விஷயங்களிலும் குறைந்தபட்ச கருத்தொருமை உருவாக்குவதே தமிழகத்தில் உணர்வாளர்களின் பணி. அதற்கும் மேலாய் தமிழரை அழித்து, சீனாவின் ஆதிக்கத்தை இலங்கைக்குள் வளர்த்து இந்தியாவின் பாதுகாப்பையே விலைபேசியுள்ள சிறு கும்பலையும் நாம் எதிர்கொள்ள வேண்டிய தேவையும் கடமையும் உள்ளது.
அது...
(நினைவுகள் சுழலும்)
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=19259
பிரபாகரனை கலங்க வைத்த தலைவர்கள்!
ஆங்கிலநாளிதழ் ஒன்றின் மூத்த இதழியலாளர் ஒருவரை ஈழத்து மக்களின் அரசியல் பிரச்சனை குறித்து உரையாடி விவாதிக்க நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்டிருந்தேன். கடந்த வார இறுதியில் அது சாத்தியமாயிற்று. பிரித்தானிய தமிழ் மன்றம் (இழ்ண்ற்ண்ள்ட் பஹம்ண்ப் எர்ழ்ன்ம்) வெளிக்கொணர்ந்த "விடுதலைப் போராட் டத்தின் சுருக்கமான வரலாறு' ஆங்கில ஆக்கத்தை அவரிடம் கொடுத்தேன். அனைத்து பக்கங்களையும் வேகமாகப் பறவைப் பார்வையில் புரட்டியவர், "மிக நன்றாகச் செய்திருக்கிறார்களே... இதுபோன்ற ஆக்கங்களை முன்பே ஏன் வெளியிடவில்லை? என் போன்ற பலருக்குப் பயன்பட்டிருக்குமே...' என்றார்.
என்னைப் பேசச் சொல்லி சுமார் அரை மணி நேரம் பொறுமையாகக் கேட்டார். அடிப்படையில் சாத்வீகப் பண்புக் கூறுகளை அடிநாதமாகக் கொண்ட ஈழத்தமிழ் சமூகம் ஆயுதமேந்தும்படி உந்தித் தள்ளப்பட்ட வரலாற்றுப் பின்புலம், அன் றும் சரி இன்றும் சரி பிரச்சனையின் வேர் மூலம் பௌத்த சிங்களப் பேரினவாதம்தான் என்ற உண்மை, இந்திய அதிகார வர்க்கம் எவ்வாறெல்லாம் ஈழ மக்களின் போராட்டத்தைப் பந்தாடி இறுதியில் இன அழித்தலுக்கும், துணை நின்ற கொடுமை, விடுதலைப் போராட்டம் படைத்த சாதி ஒழிப்பு, பெண் விடுதலை போன்ற சாதனைகள் எனப் பலவற்றை எடுத்துச் சொன்னேன்.
விடுதலைப் புலிகள் இயக்கம் செய்த தவறுகளாக அவர் கருதியவற்றை பட்டியலிட்டார். "இவற்றிற்கெல்லாம் உங்கள் பதில் என்ன?' என்றார். "பல குற்றச்சாட்டுகள் தவறான புரிந்துமையால் வருவது. அதேவேளை நீங்கள் குறிப்பிட்ட சில குறைபாடுகள் உண்மை, ஒத்துக் கொள்கிறேன், ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்' என்றேன். உடனே என்னை அவர் கேட்டார், "அப்படியென் றால் சிந்திக்கும் பக்குவம் கொண்ட நீங்கள் கூட விடுதலைப்புலிகள் விட்ட பிழைகளை வெளிப்படை யாக சுட்டிக் காட்டத் தயங்குகிறீர்களே ஏன்?' என்றார்.
அவருக்கு நான் சொன்னேன், ""உலகில் எந்த ஒரு நாட்டினதும் உதவியின்றி தமது ஒப்பிலா தியாகத்தையும், தமது மக்களையும் மட்டுமே நம்பி, நாற்புறமும் கடலால் சூழப்பட்ட சிறியதோர் நிலப்பரப்பில் மகத்தானதோர் விடு தலைப் போராட்டத்தைக் கட்டி யெழுப்பியவர்கள் அவர்கள். தொடக் கத்தில் நமது (இந்திய) சுயநல பூகோள ராணுவ-அரசியல் தேவைகளுக்காக நாம் அவர்களை ஆதரித்தோம். நாம் சொல்கிறபடி யெல்லாம் கேட்கிற வீட்டு நாய் போல அடங்கி வாலாட்டி நிற்க மறுத்தபோது மனசாட்சியின்றி அவர்களை வேட்டையாடினோம், இன அழித்தலுக்கும் துணை நின்றோம். நீங்கள் ஒரு உயர்ஜாதிக்காரர். புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்பதற்காக மட்டுமே நீங்கள் ராஜபக்சே கொடுங்கோலர்களை ஆதரித்த தாக நான் கருதவில்லை. உங்களுக்குள் எங்கோ ஒரு மூலையில் தமிழன் ஜெயித்து விடக் கூடாதென்ற குரூர வைராக்கியம் இருந்ததாக நான் நம்பினேன், நம்புகிறேன். விடுதலைப்புலிகள் வெற்றி பெற்றால் அது தமிழரின் பொது வெற்றியாக அமைந்துவிடும் என நீங்கள் அஞ்சினீர்கள். அது உங்கள் உயர்ஜாதி அரசியல் பார்வையின் வெளிப்பாடு. ஆதலால்தான் பல்லாயிரம் அப்பாவி மக்களது மரணங்களைக் கூட உங்களால் மறைக்கவும் மனசாட்சியின்றி மறுக்கவும் முடிந்தது. உங்களைப் போன்று படித்தவர்களும் பொறுப் பான முக்கிய நிலையில் இருக்கிறவர்களும் உயர்ஜாதி மனோபாவத்துடன் தெளிவாக இயங்குவதாய் கருதிய காரணத்தினால்தான் விடுதலைப் புலிகளையும்- அவர்களது குறைபாடுகளுக்கும் அப்பால் என் போன்ற வர்கள் மனவெளியில் சுவீகரித்துக் கொண் டோம்'' என்றேன். ""உங்களது வெளிப்படை யாகப் பேசும் பாங்கினை, அதில் நான் உணரும் நேர்மையை மிகவும் பாராட்டுகிறேன்'' என்றார்.
தொடர்ந்து அவர் கேட்ட ஒரு கேள்வி, சந்திப்பு நிறைவுற்று இல்லம் வந்து சேர்ந்தபின் நிறையவே சிந்திக்க வைத்தது. இதுதான் அவர் கேட்டது: ""கடந்த நான்கு ஆண்டுகளாய் என்னை உங்களுக்குத் தெரியும். எல்லாம் முடிந்துவிட்டபின் உரையாட வந்திருக்கிறீர்கள். முன்பேயே வந்து பேசியிருக்கக் கூடாதா? எங்கள் நிறுவனத்திற்குள் ஓரளவுக்கேனும் மாற்றுக் கருத்தை குறைந்தபட்சம் முன்வைக்க வேணும் செய்திருப்போமே...'' என்றார். குற்ற உணர்வு என்னைக் குத்தியது. ஆம், கற்றறிந்த தமிழரெல்லாம், உணர்வுடைய தமிழரெல்லாம் உரிய காலத்தில் தம்மால் முடிந்தவற்றையேனும் ஒருங்கிணைந்து செய்திருந்தால் வாராது வந்த மாமணி போல் சோழமன்னர்களுக்குப் பின், பண்டார வன்னியனுக்குப் பின் தமிழ் வரலாறு கண்ட மகத்தானதோர் விடுதலை எழுச்சியின் பேரழிவை தவிர்த்திருக்க முடியுமென்ற உண்மை கனத்தது. 2002 முதல் சிங்களப் பேரினவாதம் தனது பணிகளை சீராகவும், நேர்த்தியாகவும், மிக விரிவாகவும் அதேவேளை அமைதியாகச் செய்து கொண்டிருக்க நாமோ, "எல்லாம் புலிகள் பார்த்துக் கொள்வார்கள்' என்ற நினைப்பில் அவர்களை பந்தயக் குதிரைகளாக்கி விட்டு வெறும் பார்வை யாளர்களாய் நின்றிருந்தோம்.
மனநிறைவு தந்த, நினைவில் இருத்த விரும்பும் சந்திப்புகளில் ஒன்றாய் அந்த மூத்த இதழியலாளரோடான நீண்ட உரையாடல் அமைந்தது. அடுத்த வாரம் மேலும் சில முக்கிய பத்திரிகையாளர்களை சந்திக்க ஒழுங்கு செய்வதாய் கூறி விடைபெற்றார்.
பத்திரிகை நண்பரோடான விவாதங்கள் தந்த மனநிறைவுடன் இரவு 9 மணியளவில் மருத்துவர் இளங்கோவன் அவர்களை சந்தித்தேன். அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அறுபது வயது இளைஞர் அவர். தந்தை பெரியாரின் பக்தர். அமெரிக்காவில் "அனைத்துலக பெரியார் ஆய்வு மையம்' நிறுவி நடத்தி வருகிறவர். தன் முனைப்போ, சுயநலமோ எதுவுமின்றி ஈழ விடுதலை அரசியலில் மிக நீண்ட காலமாய் தன்னை ஈடுபடுத்தி வருகிறவர். எவரையும் பொதுவில் காயப்படுத்த விரும் பாதவர். இந்தியா வந்துள்ள அவர் ஆழ்வார்பேட்டை உட்லண்ட்ஸ் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தார். கைகளை இறுகப் பற்றிக்கொண்டு, ""நீங்கள் அமைதியாக என்னென்ன பணிகள் செய்து வருகிறீர்களென்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் போய் காலணா பிரயோஜனமில்லாத இணைய தளங்களுக்கெல்லாம் பதில் எழுதிக் கொண்டிருக்கிறீர்களே... பல தமிழ் இணையதளங்களில் இன்று நடந்து கொண்டிருப்பது முடை நாற்றமடிக்கும் வயிற்றுப் போக்கு. தானாகச் செத்தாலொழிய இந்த பாக்டீரியாவுக்கு இப்போது நம்மிடம் மருந்து இல்லை. அதுவும் சென்னையில் இருந்துகொண்டு பல பத்திரிகையாளர்களையும், பல முக்கியமானவர்களையும் விலைக்கு வாங்கிய இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதர் ஹம்சா இப்போது லண்டனில் இருக்கிறார். அவர் அங்கு போன பின்னர் இந்த "இணைய வயிற்றுப்போக்கு' நோய் அதிகரித்துள்ளது'' என் றார். இந்த அசிங்க விவாதங்களுக்குள் நீங்கள் வராதீர்கள் என்று சகோதர வாஞ்சையோடும், உரிமையோடும் அறிவுறுத்தினார். "நீங்கள் சொல்வது சரியே' என்றேன்.
தொடர்ந்தும் அவர் சொன்னார், ""தமிழகத்தில் ஈழத்திற்காகக் குரல் கொடுத்து வரும் தலைவர்களை விமர்சிப்பதையும் நீங்கள் தவிர்ப்பது நல்லது. எல்லோரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம். நாம் ஒருவரையொருவர் அடித்துக் கொள்ள வேண்டுமென்றுதான் சிங்களவன் ஆசைப்படுகிறான்'' என்றார். அவருக்கு நான் சொன்னேன், ""ஐயா, ஈழ விடுதலைப் போரின் இன்றைய பின்னடைவிற்குக் காரணம் ஒன்றிரண்டல்ல, ஒரு சிலருமல்ல. காரணங்கள் பல, காரணமானவர்களும் பலர். எல்லா கட்சிகளினதும் எளிய தொண்டர்கள் அன்றும் இன்றும் ஈழ விடுதலை ஆதரவாளர்கள்தான்.
சில தலைவர்கள் ஈழ விடுதலை அரசியலில் ஈடுபட்ட காரணத்தினாலேயே பல்வேறு இன்னல்கள் அனுபவித்தார்களென்பதும் உண்மையே. ஆனால் எல்லோரும் சேர்ந்து குரல் கொடுத்திருந்தால் பேரழிவை தவிர்த்திருக்க முடியும். அதுவும் போராட்டம் தோல்வியின் பாதாள விளிம்பு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதென்பதை நன்றாகத் தெரிந்தும் கூட இங்கு எல்லோருமே தேர்தல் அரசியல்தான் விளையாடினோம். எனினும் எவரையுமே நாம் விமர்சிக்கவில்லை. காரணம் தமிழகத்தின் எல்லா தலைவர்களும் ஏதோ ஒரு வகையில் ஈழத் தமிழர்களுக்காய் குரல் கொடுத்திருக்கிறார்கள், உழைத்திருக்கிறார்கள். ஆனால் கட்டுப்படுத்த முடியாமல் இப்போது என்னைக் குமுற வைத்தது இரண்டு வாரங்களுக்கு முன் வந்த ஓர் தொலைபேசி அழைப்பு.
தொலைபேசியில் தொடர்பு கொண்டவர் தன்னை மூத்த போராளியென்றும் தமிழீழ தகவல் தொடர்பு (Communication) பிரிவுக்கு பொறுப் பாயிருந்த தளபதி அருணன் அவர்களுடன் தானும் தகவல் தொடர்பு பிரிவிலேயே கடமையாற்றியதாகவும் சொன்னார். கடந்த ஜனவரி முதல் மே 15 வரை தமிழகத்தின் சில தலைவர்களுக்கும் களத்திற்குமிடையே நடந்த உரையாடல்களை விரிவாக விவரித்த அவர் ஒரு கட்டத்தில் நா தழுதழுத்து, பின்னர் கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதார். கடைசியில் அவர் கூறிய வரிகள் வாழ்வில் இதுவரை சில கண்ணீர்த்துளிகளைத் தவிர அழுகை தவிர்த்து வளர்ந்த என்னை இரவு முழுவதும் கதறிக் கதறி அழ வைத்தது. நா குழறி அழுது கொண்டே அந்தப் போராளி சொன்ன கடைசி வரிகள் இவை: ""முப்பத்தேழு ஆண்டு காலம் ஒரு கணம் கூட கலங்காது விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திய எங்கள் தேசியத் தலைவருக்கு தவறான வாக்குறுதிகளையும் நம்பிக்கைகளையும் தந்து, அந்த மாமனிதனின் கண்கள் முதன்முறையாகக் கலங்கும் படி வைத்த இந்தத் தலை வர்கள் இனி எங்களுக்குத் தேவையில்லை''. இந்தத் தலைவர்கள் அனுப்பிய சில கடிதங்களின் நகல்களையும், உரையாடல் பதிவுகளையும் விரைவில் அனுப்பி வைப்பதாகவும் கூறினார். இத்தொலைபேசி அழைப்பு உருவாக்கிய உள்ளக் கதறல்தான் அடுத்தநாள் இணைய தள நேர்காணல் ஒன்றில் குமுறலாக வெளிப்பட்டது.
கடந்த சில நாட்களில் கிடைத்துள்ள மிகவும் நம்பகமான தகவல்களின்படி சமீப நாட்களில் நமது ராமேசுவரம் மீனவ மக்கள் மீது தாக்குதல் நடத்தும் சிங்கள கடற் படையினரோடு சீன கடற்படையினரும் இணைந்து இயங்குகிறார்கள். கச்சத்தீவு பகுதியிலேயே தனது பலத்தை நிறுவ சீனா ஏதோ திட்டங்கள் வைத்திருப்பதாகவும் அரசல் புரசலாகச் செய்திகள் வருகின்றன.
இருபத்தியோராம் நூற்றாண்டில் இந்தியாவின் எழுச்சிக்குப் பெரும் அச்சுறுத்தலாய் இருக்கப் போகிற சீனாவுக்கு நமது முற்றமான இந்தியப் பெருங்கடலையே இந்திய அதிகார வர்க்கம் தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறது. இந்த தேசத்திற்கும் அதன் எதிர்காலத்திற்கும் துரோகம் செய்கிற இந்த பாதுகாப்பு -வெளியுறவுக் கொள்கையை உந்தித் தள்ளியது அதிகார வர்க்கத்தின் தமிழின வெறுப்பு. அத்துரோகத்திற்கு அறிவு, ஊடகப் பின்புலம் உருவாக்கியதாக சந்தேகிக்கப்படும் சிலரைப் பற்றிய அறிவு விசாரணை கூட நம்மிடையே சொல்லும்படி இல்லை. ஆனால் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு எதிர்ப்பு பிரமாதமாய் களை கட்டுகிறது.
கூர்மைப்படப் போகும் சீன-இந்தியச் சிக்கல்தான் தமிழ் ஈழத்திற்கான சாத்தியப்பாட்டையும் முன் நகர்த்தும்.
எங்ஙனம்?
(நினைவுகள் சுழலும்)
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=19572
ஈழவிடுதலைப்போராட்டஅரசியற் களத்திற்குள் நான் அறிமுகமாகியது மிகப்பெரியதோர் பின்னடைவின், நெருக்கடியின் காலத்தில். வெளியேறியது புலிகள் ஆனையிறவில் ஈழக்கொடி உயர்த்திய வெற்றியின் நாளில். மீண்டும் உள் நுழைந்தது பேரிடர் சூழ்ந்த இறுதிப்போர் நாட்களில். நக்கீரன் வாசகர்கள் சந்திக்கையில் கேட்கும் கேள்வி- ""இத்தனை விபரங்கள் எப்படி உங்களுக்கு சாத்தியமாயிற்று?'' என்பது. கடந்த ஆகஸ்ட் மாதம் துஷாந்தன் என்ற போராளி எழுதிய கடிதத்தினை பதிலாகப் பதிவு செய்ய விழைகிறேன்.
அன்பின் ஜெகத் அண்ணா,
தங்களது "மறக்க முடியுமா?' தொடர் வெளிவரத் தொடங்கியதில் இருந்து, தொடர்ந்து படித்து வருகிறேன். ஈழ விடுதலைப் போராட்டத்தை வைத்துப் பிழைத்துக்கொண்ட பல சந்தர்ப்ப வாதிகளை இனம் காணக்கூடியதான இந்தப் போர் ஓய்ந்து, எம்மினம் அவல வாழ்வு வாழும் நாதியற்ற நிலையில், தங்களது எழுத்துக்கள் எம்மை புத்தெழுச்சி கொள்ள வைக்கின்றன. காலத்தின் தேவையான பலவற்றை உங்கள் நலன் பற்றியும் கவலை கொள்ளாது, அறத்துடன் முன்வைக்கிறீர்கள். "ஜெயசிக்குறுய்' ராணுவ நடவடிக்கை காலத்தில் தாங்கள் செவிவழியால் ஆற்றுப்படுத்தியது போலவே, தற்போதைய சூனிய நிலையிலும் தங்கள் எழுத்துக்கள் மருந்திடுகின்றன.
பத்து வருடங்கள் கழிந்த நீண்டதோர் காலப் பகுதியின் பின் முற்றிலும் மாறுபட்ட பல சூழல்களைத் தாண்டிய பிறகு உங்கள் நினைவுகள் மடைதிறக்கின்றன. கம்பீரமான, நம்பிக்கை வரிகள் சுமந்து சந்தத்துடன் எம் காதுகளில் தங்கள் குரல் ஒலித்த ஞாபகங்கள், ஓடி வருகின்றன.
தங்கள் குரலும், குரலைக் கேட்க உதவிய வேரித் தாஸ் வானொலி தமிழ்ப்பணியும் என்னுடன் ஒன்றித்துப் போய்விட்ட நினைவுகளைச் சொல்ல, கொஞ்சம் எனது சுய புராணத்தையும் சொல்லிவிடுகிறேன்.
அண்ணா, (உங்களை அருட்தந்தை என மத அடையாளத்தில் சுருக்கிட மனம் ஒப்பவில்லை) எனக்கு வயது 24. (85-ல் பிறந்தவன்) பிறந்தது வல்வெட்டித் துறையில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரமேயான "கெருடாவில்' எனும் சிற்றூர். என் அம்மாவின் அப்பா (தாத்தா - ஐயா என அழைப்போம்), ஒரு தமிழ் ஆசிரியராக இருந்தவர். வல்வெட்டித் துறை யின் மையப் பள்ளியான "சிவகுரு' வித்தியாசாலை யில் இருபது வருடங்களாக கற்பித்தவர். (அறுபது, எழுபதுகளில்) பின்னாளில் போராட்டத்தின் முது கெலும்புகளாக விளங்கிய பலர் (கிட்டு, மாத்தையா, வினோத் என பலர்) அவரிடம் படித்தவர்கள்.
வீட்டில் அம்மம்மாவும் தமிழாசிரியையாகவே இருந்ததால் இயல்பாகவே தமிழ், ஈழவிடுதலை, தமிழுணர்வு என்பன என் சிறுவயது முதலே என்னுள் முளைவிட்டிருந்தது. ஐயாவின் இறுதி காலத்தில் கண் தெரியாது போய்விட, அவருக்கு செய்தித்தாள் படித்துக் காட்டும் வேலை எனக்கு. இதே காலத்தில் செய்தி ஊடகங்கள் என்றால் (92, 93-களில்) பி.பி.சி.தான். ஆனந்தி அக்காவின் குரலில், ஓரளவு நடுநிலையான நம்பகமான செய்திகள், விரும்பிக் கேட்போம். இந்த வேளையில்தான் சபா அண்ணாவின் குரலில் வேரித்தாஸ் வானொலி எனக்கு அறிமுகமானது.
என்ன வேலை இருந்தாலும், 7.45-ற்கும், 9.15-ற்கும் ஐயாவின் "றழி' சைக்கிளின் பக்கத்தில் கூடிவிடுவோம். சைக்கிள் டைனமோவில் இருந்து உண்ர்க்ங்/Diode/Transister உபயத்துடன் கிடைக்கும் சிறிது இரைச்சலுடனான சிற்றலை மீற்றர்களின், உண்மையின் தூதுவர்களாய் பல்லாயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பாலுள்ள வேரித்தாஸ் தமிழ்ப் பணி செய்திகளை கேட்போம். வேரித்தாஸில் சபா அண்ணா ஓய்வு பெற்று செல்லும்போது புதிதாக வருபவரின் குரல் எப்படியோ? என ஏங்கி யிருந்தபோதுதான் -தெளிவான நீரோட்டம் போன்ற, கம்பீரமான, சந்தத் தமிழில் செய்தி வழங்கும் உங்களைப் பெற்றோம்.
தங்கள் மந்திரக் குரலில் உறவுப் பாலச் செய்திகள் ஒலிபரப்பாகும் அந்த ஐந்து, ஆறு நிமிடங்களும் Sielence Bell இங்ப்ப் ஒலித்தது போலவே இருக்கும். டைனமோவின் இரைச்சல், பழைய வானொலிப் பெட்டியின் சிற்றலை செய்யும் குளறுபடிகள் என எல்லாவற்றையும் தாண்டி செய்தி "பிடிக்க' எல்லோராலும் முடியாது. சிலவேளைகளில் சரி யான பீற்றர் கிடைக்காது, அக்கம் பக்க பீற்றர்களின் விரோதமான ஒலிகளைக் கேட்டு, எரிச்சலுடன் வானொலியை அணைத்துவிட்டு அயல் வீடுகளுக்கு ஓடிச்சென்று செய்தி கேட்போம்.
வலிகள் மட்டுமே தெரிந்த, வசந்தங்கள் ஒருபோதும் எட்டிக்கூடப் பார்த்திராத, அவலங்கள் சுமந்த எம் இனத்திற்காய், எந்த முன்தொடர்பும் இன்றி சரிவர எம் மனநிலை புரிந்து மருந்திட்டுத் தடவி, அரவணைத் தது தங்கள் குரல். மணிக்கூட்டில் 7.58, 7.59 என நேரம் ஓடும்போது மிக விரைவாக ஆனால் தெளிவு குன்றாது செய்தி வாசிக்கும் இலாவகம் தங்களுக்கு மட்டுமே வாய்ந்த ஒன்று. மேலும் அடிக்கடி எமக்காக நீங்கள் செய்யும் பிரார்த்தனையும், வெந்துபோன எம் உள்ளங்களுக்கு மருந்திட்டன. முகம் தெரியாது தங்கள் குரலால் மட்டுமே தொடுப்பு பெற்ற நாங்கள் உங்கள் குரலுக்கு அடிமையானோம். பின்னர் போராளி ஆகி களங் களில் நின்றபோதும், யாரின் தயவிலாவது கிடைக்கும் பற்றரிகளை வேரித்தாஸ் கேட்கவென கவனமாக வைத் திருந்தேன். (காவலரண்களில் சைக்கிள் கிடைக்காது). செய்திகள் கேட்டபின் பற்றரிகளை கழற்றி வெளியில் வைத்தும், பவர் குறையும்போது வெயிலில் வைத்தும் வாயால் கடித்தும் கூடிய காலம் அவற்றைப் பாவிப்போம்.
நாம் எடுத்த உறுதிமொழிகளும் அடிக்கடி பொறுப்பாளர்களுடன் நடக்கும் கலந்துரையாடல்களின் போது கிடைக்கும் ஊக்கமும் இலக்கு நோக்கி எம்மை எவ்வாறு உறுதியுடன் பயணிக்க வைத்ததோ, அதேயளவு பங்கு தங்கள் குரலுக்கும் இருந்தது.
கடுமையான களங்களின் பின்பும், தோழர்களை இழந்த துயரின்போதும் கசியாத கண்கள் தங்கள் செய்தியறிக்கைகளின்போதும், உறவுப்பால நிகழ்ச்சிகளை வழங்கும்போதும் கசிந்து விடுவதுண்டு.
இப்படியாக தங்கள் குரலை வைத்து, கம்பீரமான, நெடிதுயர்ந்த, ஒரு "பயில்வான்' தோற்றத்துடன் (எங்கள் சொர்ணத்தார் போல) ஒருவரையே என் மனதில் கற்பனை செய்திருந்தேன். இவ்வேளையில் தங்களுக்கு எழுதி வேண்டியதின்படி தங்கள் கலண்டர் புத்தகம் ஒன்றைப் பெற்றிருந்தேன். (98 ஆக இருக்க வேண்டும்) அதில் குரலுக்கும், தோற்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாத தங்களைப் பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியில் இப்பள்ளி மாணவன் போன்ற உருவத்திற்கா அந்தக் குரல் சொந்தமானது என திகைப்படைந்தேன். கையடக்கமான அந்தக் கலண்டர் இன்றும் யாழிலுள்ள எங்கள் வீட்டு நூலகத்தில் உள்ளது.
மலேனியத்தின் தொடக்கத்தில் அற்றுப்போன தங்களுடனான தொடர்பு (குரல்) பின் எப்போதுமே எனக்கு கிடைக்கவில்லை. வேரித்தாஸ் பணி முடிந்து, புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மத்தியில் சுற்றுப்பயணம் செய்து தாங்கள் ஆற்றிய பணிகள் பற்றி அறிந்திருந்தேன். தங்கள் உரைகளைக் கேட்ட உறவுகள், நெகிழ்ந்து போய் எமக்கான ஆதரவுகளை அள்ளி வழங்கியதையும், கேட்டு மகிழ்ந்தேன். இப்பணிகள் காரணமாக சில நாடுகளுக்கு தங்களுக்கு விசா மறுக்கப்பட்டதாயும் கேள்விப்பட்டிருந்தேன்.
பின் (2002 புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தின்பின்) வெளியிடங்களில் நின்றபோது, தாங்கள் வன்னி வந்து சென்ற சேதி அறிந்தேன்.
இடையிடையே tamilnaatham.com இணைய தளத்தில் தங்கள் நேர்காணல்களை கேட்டிருந்தேன். "அண்ணைக்கு' எழுதியிருக்கக் கூடிய கடிதங்களுக்கும் பின் உங்களுக்குத்தான் மனம் திறந்து எழுத வருகிறது.
தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களை "அண்ணை' என விளிக்கும் பாக்கி யம் பெற்றவன் நான். அந்த உறவில்தான் எம் உறுதியும் மாசுபடாது இருந்தது.
வெறுமனே ஆயுதம் தாங்கிய மனித இயந்திரங்களாய் எம்மை ஆக்காது நல்ல பண்பு களை எம்மில் வளர்த்து, சமூகம், அரசியல், வரலாறு, மருத்துவம், விஞ்ஞானம் என எதிலுமே தேடலுடன் கற்கும் ஆர்வத்துடன் எமை வளர்த்தவர். பல்வேறு தேவைகளைக் கருதி உலக நாடுகளெங்கும் தன் பிள்ளை களை அனுப்பி, "தமிழீழம்' என்ற நெடுங்கனவு கண்டவர் எம் தலைவர்.
தவறான நடத்தை, போதை எதற்கும் அடிமையாகாது, "அரசன் எவ்வழி அவ்வழி குடிகள்' என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்து காட்டியவர். குழந்தைகள், இயலாதவர்கள், அனாதைகள், காயமடைந்த போராளிகள், முதியோர் என மனித படைப்புகளிலேயே கடவுளை தரிசித்து போராளிப் பிள்ளைகளுக்கு ஆதர்சமாய் இருந்தவர்.
தெளிவற்ற, கரடுமுரடான, சதிகளும்- சகதிகளும் நிரம்பிய பெரும் குழிகள் கொண்ட பாதையில் பலர் முயன்றும் ஓட்ட முடியாது போய்விட்ட "தமிழீழ தேசம்' என்ற வண்டியை மூன்று தலைமுறைகளுக்கும் மேலாய், விடாப்பிடியாய் ஓட்டிச் சென்ற ஓட்டியாய் அவரைப் பார்க்கிறேன்.
மிக நீண்ட பாரம்பரியமாய் தொடர்ந்த, இறுக்க மான, மனிதாபிமானங்களைத் தூரவைத்துப் பார்க்க சாதியக் கட்டமைப்புகள் சிதைந்து போகவும், பெண் ணடிமை ஒழிப்பு, சீதன ஒழிப்பு போன்ற முற்போக்கு விடயங்கள் பக்கவிளைவுகளாக தொடரவும், நிலப் பரப்பிலும் எண்ணிக்கையிலும் சுண்டுவிரல் அளவேயான ஈழத்தமிழ் இனத்தை உலகெங்கும் பேசச் செய்ததும், தமிழினத்தின் பாரம்பரிய குணங்களை மீண்டும் எழுச்சி பெற வைத்ததும்... கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் கூடிய புதியதொரு சமுதாயத்தை வழங்கியதும் ஆயுதப் போராட் டம் என்பதற்கு அப்பால், போராட் டம் எமக்கு வழங்கியவை.
அண்ணா, ஏறத்தாழ ஒரு தலைமுறைக்கும் மேற்பட்ட கால வரலாறு தொக்கிப்போய் எம்முன் சூனியப்பெருவெளி சூழ்ந்து போயுள்ளது. இருந்தும் தடை களையும் சோதனைகளையும் கண்டு சோர்வடையாது, எஞ்சிய வர்களுடன் எம் இலக்கு எட்டப் படும். தன் இன விடிவு ஒன் றையே மனதில் விரித்து சாவை அணைத்த இருபத்தைந்தாயிரம் மாவீரர்களதும், தம் பொருளை, இருப்பிடங்களை, அவயவங் களை, உயிரைக்கூட அர்ப்பணித்த ஆதரவாளர்களதும் மக்களதும் கனவுகள் வீண்போகா.
மீண்டும் யாருமற்றிருந்த இவ்வேளையில் நக்கீரன் எழுத்துக்கள் ஆறுதல் அளிக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள். இதுவரை வெளிவராத உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள்.
நண்பர்களே!
விடுதலைப் போராட்டம் கண்டுள்ள பின்னடைவும் அது எழுப்பியுள்ள சில வெற்றிடங்களும் முதலில் பலிகொள்வது உண்மையைத்தான். எப்போதோ நிறைவாகி யிருக்கிற இந்த "மறக்க முடியுமா' பகுதி தவிர்க்க முடியாமல் தொடர்வதும் சிங்கள பேரினத்திற்கு எதிரான போரில் ஓர் அங்கமாக உண்மைக்கான போரையும் எடுத்துச் செல்வதற் காகத்தான். உண்மைகள் நமது முழு விடுதலையை சாத்தியப்படுத்தும்.
(நினைவுகள் சுழலும்)
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=19781
கடந்தசெப்டம்பர் மாதத்திற்குப் பின் இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபய்யா ராஜபக்சே தனது உரைகளில், பேட்டிகளில் மேற்குலக நாடுகளை வறுக்கத் தொடங்கினார். சீனா மட்டும் எங்களுக்குப் போதும் என்ற ரீதியிலும் பேசினார். அமெரிக்க குடியுரிமை பெற்ற அவரின் திடீர் மாற்றத்திற்கான காரணம் கடந்த ஞாயிறு வரை புதிராகவே இருந்தது. புதிர் திங்கட்கிழமை யன்று அவிழ்ந்தது: ""செப்டம்பர் மாதம் இறுதி வாரம் அமெரிக்க நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா. பொது அவை அமர்வில் பங்கேற்கச் சென்றிருந்தபோது அமெரிக்க அதிகாரிகள் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப் பட்ட யுத்த குற்றங்கள் (War Crimes) தொடர்பாக நீண்ட நேரம் அவரை விசாரித்திருக்கிறார்கள். விமான நிலையத்தில் வந்திறங்கும் ஒருவரை குடி வரவு அதிகாரிகள் தனியாக அழைத்துச் சென்று குடைச்சலான கேள்விகளைக் கேட்பதென்பது சற்றே அவமானம் தருகிற அனுபவம்தான். அதுவும் இலங்கையில் சர்வ வல்லமை கொண்டவராய் உலா வரும் கோத்தபய்யாவுக்கு அது உடல் முழுதும் கம்பளிப் புழுக்கள் ஊர்வது போலவே இருந்திருக்கும்''.
கோத்தபய்யாவுக்கு நடந்தது பற்றி இலங்கை அரசு அப்போது வாய் திறக்கவில்லை. இது மாதிரியான விஷயங்களை மோப்பம் பிடிக்கும் ஊடகங்கள் கூட இது பற்றி எழுதவில்லை. இப்போது அமெ ரிக்கா சென்றிருக் கும் தமிழர் இன அழித்தலில் மூன்றாவது குற்றவாளி யான போர்க்கால இராணுவத் தளபதி சரத் பொன் சேகாவை "சம்மன்ஸ்' என்ற விசாரணை அழைப்பு இல்லாமலேயே குறுக்கு விசாரணை செய்ய அமெரிக்க அரசு முடிவு செய்திருப்பதன் பின் னணியில்தான் கோத்தபய்யா செய்தியும் வெளி வந்துள்ளது. செப்டம்பரில் கோத்தபய்யா அமெரிக்காவால் விசாரிக்கப்பட்ட செய்தியை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ரோகித பொகொலகம்மா பூர்வாங்கமாக ஒத்துக் கொண் டிருக்கிறார். இப்போது இராணுவத் தளபதி பொன்சேகாவை இறுக்க வேண்டி செய்யப்பட்டி ருக்கும் அமெரிக்க முடிவின் உண்மையான இலக் கும் கோத்தபய்யா தான் எனத் தெரிய வருகிறது. கோத்த பய்யாவுக்கெதிராய் யுத்தக் குற்ற சாட்சியம் சொல்லும்படி பொன்சேகாவை அமெரிக்கா கேட் டுக் கொண்டுள்ள தாகவும் தெரிய வருகிறது.
கோத்தபய்யாவை அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் குறிவைக்க பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவது வெள்ளைக் கொடியேந்தி, இறுதி ரத்தக்களறியை தவிர்க்கும் ஒரே நோக்கு டன், ஆயுதங்களை மௌனப்படுத்துதல் (Silencing the Guns) தொடர்பாக பேச்சுவார்த்தைகளுக் குச் சென்ற நடேசன், புலித்தேவன் ஆகியோ ரது படுகொலை. இந்த முயற்சியில் பிரித் தானியா, அமெரிக்கா, இந்தியா மூன்று நாடுகளும் ஐ.நா. அமைப்பும் விடுதலைப் புலிகளது அனைத்துலகச் செயலகத்தினது வேண்டுகோளின் பேரில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தியாவை ஈடுபடுத்துவதில் தமிழகத் தலைவர் களும் இணைந்திருந்தனர். களத்திலிருக்கும் கட்ட ளைத் தளபதியை வெள்ளைக் கொடி ஏந்தி சந்திக்கச் சொல்லுங்கள் என்று அதிபர் ராஜபக்சே கூறிய பின்னர்தான் ஐ.நா. அமைப்பு புலிகளுக்கு செய்தி கூறியிருக்கிறது. ஆனால் அதிபர் கொடுத்த வாக்குறுதியையும் மீறி, நடேசன், புலித்தேவன் மற்றும் உடன் சென்ற வர்களை சுட்டுக் கொல்லும் உத்தரவை பிறப்பித்தது கோத்த பய்யா. இது அப் பட்டமான யுத்தக்குற் றம், நம்பிக்கைத் துரோ கம். இரண்டையும் மன்னிப்பதற்கு அமெ ரிக்க-மேற்கு நாடுகள் தயாராக இல்லை.
இரண்டாவது விடுதலைப் புலிகளை அழித்தபின் தமிழர் இனச் சிக்கலுக்கு நீதியான தொரு அரசியற் தீர்வினை ராஜபக்சே அரசு முன்வைக்குமென்றும், அதன் முதல் நிலையாக வதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து மக்களையும் தாமதமின்றி தத்தமது வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்குமென்றும் உள்ளபடியே மேற்குலகம் நம்பியது. அந்த நம்பிக்கையைச் சார்ந்துதான் விடுதலைப் புலிகளை அழிக்கும் சிங்களப் பேரினவாதத்தின் கொடூர யுத்தத்தை அந்நாடுகள் ஏற்றுக் கொண்டன. ஆனால் யுத்தம் முடிந்த பின் தன் சுயமுகத்தை சிங்களப் பேரினவாதம் காட்டியது, காட்டி வருகிறது. கோத்த பய்யாதான் இந்தக் கடும் போக்கின் பிதாமகன், சூத்திரதாரி. அவரைப் பொறுத்தவரை முல்லைத் தீவு முள்ளி வாய்க்கால் தமிழர் இன அழித்தலின் தொடக்கம் மட்டுமே. இனி எக்காலத்திலும் இலங்கை நிலப்பரப்பிற்குள் ""தமிழருக்கான அர சியல்'' என ஒன்று இருக்கக்கூடாது என்ற நிலைப் பாட்டில் நின்று கொண்டு இனவெறி மதம் பிடித்து இயங்குகிறார். அவரது இயக்கத்தில் அங்கு அரங்கேறி வரும் தொடர் இன அழித்தல் பயங்கரங்களை மேற்குலகம் பார்க்கத் தவற வில்லை. அவர்களை மிகவும் ஆத்திரத்திற்குள் ளாக்கியிருக்கிற சில செயற்பாடுகள் இவை:
கடந்த மூன்று வாரங்களில் மட்டுமே வவுனியா வதை முகாம்களிலிருந்து 2100-க்கும் மேலான தமிழ் இளைஞர்கள்- இளம்பெண்கள் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள், என்ன ஆனார்கள் என்பது அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்திற்கே தெரியவில்லை. கோத்தபய்யாவின் உத்தரவின் பேரில் இவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என மேற்குலக நாடுகள், ஐ.நா. அமைப்புகள் அஞ்சுகின்றன.
தமிழர்கள் பாரம் பரியமாக பல்லாயிரம் ஆண்டுகளாய் வாழ்ந்த தாயக நிலப்பரப் பொன்று இருந்தது, இருக்கிறது, அது வடக்கு-கிழக்கு இலங்கை என்ற அடிப்படையை மேற்குலக நாடுகள் ஏற் கின்றன. இனப்பிரச்சனை அரசியற் தீர்வுக்கு இதனை ஏற்றுக் கொள்வது முக்கியமெனவும் அந்நாடுகள் ராஜதந்திர வழிகளில் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் "தமிழர் தாயகம்' என்ற கோட்பாடு இனி ஒருபோதும் எழாதபடி தகர்த்து விட வேண்டுமென்பதில் கோத்தபய்யா வரிந்து கட்டி நிற்கிறார். முதற்கட்டமாக தமிழ்மக்களின் புனர்வாழ்விற்கென உலக நாடுகள் இதுவரை வழங்கியுள்ள பெரு நிதியைக் கொண்டு யாழ்குடா விலேயே பலாலி தொடங்கி தொண்டைமானாறு வரையான செழித்த நிலப்பரப்பில் 60,000 ராணுவக் குடும்பங்களை நிரந்தரமாய் குடியமர்த் தும் ஏற்பாடுகளை கோத்தபய்யா முடுக்கி விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவும் தென் னிலங்கையில் இருந்தால் காடைத்தனங்களில் ஈடுபடுவார்கள் என அஞ்சப் படும் "ரவுடி' ராணுவ அணிகள்தான் அங்கு நிரந்தர மாக்கப்படப் போகிறார்கள். உலக நாடுகள் கேட்டால், ""தமிழர் தாயகத்தில் சிங்களர் களை குடியமர்த்தவில்லை... நாட்டின் ராணுவத்தினரையும் அவர்தம் குடும்பங்களையும் தான் அமர்த்துகிறோம்...'' என புத்திசாலித் தனமாகப் பதில் சொல்வார்கள். நமக்கு கிடைக்கிற தகவல்களின்படி இந்த விபரம் கொழும்பிலுள்ள இந்திய அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் உரிய அக்கறையுடன் புதுடில்லி அரசுக்குத் தெரிவிக்கிறார்களில்லை. கொழும்பிலிருக்கும் இந்திய தூதர் அலோக் பிரசாத்தை அகற்றி விட்டு ஓர் இதயமுள்ள தமிழ் அதிகாரியை நியமிக்கும் மிகக்குறைந்தபட்ச அக்கறையை புதுடில்லிக்காரர்கள் செய்தாலே இன்று அது பெரிய விஷயமாக இருக்கும்.
வதை முகாம்களில் தொடர்ந்தும் மக்களை இருத்தி வைப்பதற்கு எந்த முகாந்திர மும் இல்லை என்பதில் மேற்குலக நாடுகள் உறுதியாக உள்ளன. எல்லா மக்களும் அவர்தம் வாழ்விடங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட வேண்டுமென ஏறக்குறைய அனைத்து மேற்குலக நாடுகளும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. ஆனால் கோத்தபய்யா கொள்கைப்படி முல்லைத்தீவு -கிளிநொச்சி மாவட்ட மக்களை இன்னும் ஓராண்டுக்கேனும் வதை முகாம் களில் வைத்திருந்து சிதைக்க வேண்டும்.
மேற்சொன்ன, மற்றும் மேலும் சில காரணங்களால் ஆத்திரமுற்றுள்ள அமெரிக்க மேற்குலக நாடுகள் கோத்தபய்யாவை குறிவைக்கத் தொடங்கியுள்ளன. கோத்தபய்யா வை யுத்தக்குற்றவாளி என உலகம் அறிவித் தால் கூட பெரிதாக என்ன நடந்து விடப் போகிறது? அவரைக் கைது செய்வது சாத்தியமா? அதனால் பாதி அழிந்துவிட்ட தமிழருக்கு என்ன பயன்? -என்றெல்லாம் கேள்விகள் எழும்.
அதிகாரத்தின் பீடங்களில் எவரும் நிரந்தரமாக அமர்ந்திருந் ததாய் நவீன கால வரலாறு இல்லை. அங்கும் ஆட்சி மாறுகிற நாளொன்று வரும். அப்போது அனைத்துலகக் காட்சிகளும் மாறும். கோத்தபய்யா, ராஜபக்சே, பொன்சேகா மூவரையுமே உலக நீதிமன்றத்திடம் ஒப்படைக்கச் செய்யும் அழுத்தத்தை உலகநாடுகள் நிச்சயம் இலங்கைக்கு ஏற்படுத்தும்.
இரண்டு, புலிகளின் பயங்கரவாதம் என்ற பழைய பல்லவி காற்றலைகளிலிருந்து அகன்று சிங்களத்தின் போர்க்குற்றங்கள் குறித்த பறை முழக்கம் உலகெங்கும் அதிரும். இலங்கை அவமானப்படும். உலகின் முன் கொடிய போர்க்குற்ற வாளிகளாய் அவர்கள் நிற்பார்கள். அதுவே தமிழ் மக்களது அரசியல் சுய நிர்ணய உரிமைக்கு உலக அங்கீகாரம் பெற்றுத் தரும் புதிய தொடக்கமாகவும் அமையும். ஆதலால் தமிழர்களே, நம்பிக்கைகள் முற்றுமாய் இற்றுப் போகவில்லை, அற்றுப் போவதுமில்லை. வரலாறு புதிய தோழமைகளோடு நம் இனத்தை விடுவிக்கும்.
கடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளது பொது பாராளுமன்றத்தின் உயர் அதிகாரிகள் இருவரும், இரண்டு நாடுகளது வெளியுறவுத்துறை அதிகாரிகள் இருவரும் அவர்தம் இந்தியாவிலுள்ள தூதரகப் பிரதிநிதிகள் சிலருமாய் சென்னை வந்திருந்தார்கள். அவர்கள் தத்தமது பாராளுமன்றங்களுக்கு மிக முக்கியமானதோர் ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண் டிய கடமையின் பேரில் வந்திருந்தார்கள். அவர்களோடு சுமார் மூன்று மணிநேரம் உரையாடும் அரிய வாய்ப்பு கிட்டியது. அவர்கள் ஆய்வு செய்யத் தலைப்பட்டது இரண்டு விஷயங்கள். முதலாவது: ""இலங்கை மீது மனித உரிமைகள், அரசியல் தீர்வு தொடர்பாக மேற்குலக நாடுகள் எடுக்க விழையும் எல்லா நடவடிக்கைகளுக்கும் எதிராக நிற்பது சீனாவும் இந்தியாவும். சீனாவின் செயலை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்திய வெளியுறவுக் கொள்கையின் தமிழர் மீது கரிசனையற்ற போக்கினைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை''. ஒரு கட்டத்தில் ஓர் அதிகாரி தலையை அசைத்துக் கொண்டே சொன்னார்: ""இந்தியா எங்களை களைப்படையச் செய்கிறது''.
இரண்டாவதாக அவர்கள் அறிய விரும்பியது:
(நினைவுகள் சுழலும்)
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=20086
சிங்களப்படத்தில் நான் நடிக்கிறேன் என்பது முற்றிலும் பொய்யான செய்தி:நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா சிங்களப்படத்தில் நடிப்பதாக செய்தி வெளியானது. இதைக்கண்டித்து தமிழர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதையடுத்து சூர்யா நான் சிங்களப்படத்தில் நடிக்கவில்லை என்று மறுப்பு கடிதம் எழுதியுள்ளார்.
’’இலங்கையில் சிங்கள இயக்குநரின் இயக்கத்தில் தயாரிக்கப்படும் சிங்களப்படத்தில் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்’
என்றொரு செய்தி வெளிவந்து படிப்போரை மட்டுமின்றி என்னையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது.
நான் இப்போது ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் சிங்கம் படத்தில் நடித்து வருகிறேன். அடுத்து ராம்கோபால் வர்மா இயக்கத்தில் இந்திப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன்.
மூன்றாவதாக உதயநிதி தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன். இவை தவிர வேறு எந்தப்படத்திற்கும் நான் ஒப்புதல் அளிக்கவில்லை.
சிங்கள இயக்குநரின் இயக்கத்தில் தயாரிக்கப்படும் சிங்களப் படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன் என்பது முற்றிலும் பொய்யான செய்தி.
சிங்கள படத்தில் நடிக்கும் உத்தேசம் எனக்கு கொஞ்சமும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.’’
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=20060
எங்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்க வேண்டும்: முகாம் தமிழர்கள் கோரிக்கை
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களின் மேம்பாட்டிற்காக முதல்- அமைச்சர் கருணாநிதி ரூ.12 கோடி நிதி ஒதுக்கி உள்ளார். இதற்கிடையே அகதிகள் முகாம்களுக்கு அந்தந்த பகுதி அமைச்சர்கள் நேரில் சென்று குறைகளை கேட்டறிந்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் முதல்- அமைச்சர் உத்தரவிட்டு இருந்தார்.
அதன் பேரில் தமிழகம் முழுவதும் அமைச்சர்கள் அகதிகள் முகாம்களுக்கு சென்று பார்வையிட்டனர்.
மதுரை மாவட்டத்தில் ஆனையூர், உச்சப்பட்டி, திருவாதவூர் ஆகிய இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் 1573 குடும்பங்களை சேர்ந்த 6 ஆயிரத்து 200 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் அமைச்சர் தமிழரசி நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தார்.
உச்சப்பட்டி முகாமுக்கு சென்றபோது அங்குள்ள அகதிகள் தங்களுக்கு ரேசன் கார்டு, குடிநீர் வசதி, சுகாதார வசதி ஏற்படுத்தி தர வேண்டுமெனவும், வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
ஆனையூரில் உள்ள முகாமில் அமைச்சர் தமிழரசி ஆய்வு செய்து குறைகளை கேட்டார்.
அகதிகளாகிய தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதோடு இலங்கை செல்ல விரும்புபவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழர்கள் கோரிக்கை வைத்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் தமிழரசி அவர்களிடம் கூறுகையில், முதல்-அமைச்சர் உத்தரவுபடிதான் இங்கு ஆய்வு செய்துள்ளதாகவும், அகதிகளின் குறைகளை இன்று மாலைக்குள் அறிக்கையாக தயார் செய்து முதல்- அமைச்சருக்கு அனுப்புவேன் என்றும் தெரிவித்தார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=20124
இலங்கை போர் குற்றவாளிகளை காப்பாற்ற இந்தியா உதவுவதா?: பழ.நெடுமாறன்
இலங்கை போர் குற்றவாளிகளை காப்பாற்ற இந்திய அரசு உதவுவதா என்று பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
இலங்கை போரின் போது தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவம் இழைத்த கொடுமைகள் குறித்து பற்றி ராஜபக்சேவின் சகோதரரும், இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாய ராஜபக்சே குறித்து அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது அமெரிக்காவில் இருக்கும் இலங்கை கூட்டு தளபதி சரத் பொன்சேகாவிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணையை தடுத்து நிறுத்தவும், சகோதரரை காப்பாற்றவும் ராஜபக்சே இந்தியாவின் உதவியை நாடி உள்ளார்.
இதற்காக அனுப்பப்பட்ட தூதர்கள் டெல்லியில் பிரதமரையும், உயர்அதிகாரிகளையும் சந்தித்து பேசியதாக தகவல் கிடைத்துள்ளது. ஒரு லட்சம் தமிழர்களை கொன்று குவித்த போர் குற்றவாளிகளை காப்பாற்ற இந்திய அரசு உதவுவது தமிழர்களுக்கு எதிரான செயல்மட்டும் அல்ல, மனிதநேயமற்ற செயலும் ஆகும்.
ஏற்கனவே ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுமீது கொண்டுவரப்பட்ட கண்டன தீர்மானத்தை தோற்கடிக்க இந்தியா வரிந்துகட்டி செயல்பட்டது. இப்போதும் அதுபோல செயல்படுமானால் தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=20014
அந்தமான் தீவுகளை இலங்கையுடன் இணைக்க வேண்டும் என்கிறார் வெளிநாட்டு அமைச்சர்
ஐ.நா.வின் கடற்படுகை உரிமை தொடர்பான புதிய கொள்கையின் கீழ் இந்தியாவுக்குரிய அந்தமான் தீவு இலங்கைக்குச் சொந்தமான கடற்படுகைக்குள் வருவதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதுவிடயமாக இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னரே இப்பகுதிக்கு உரிமை கோருவது தொடர்பான யோசனையை ஐ.நா. ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிப்போம் என்றும் அவர் கூறினார்.
இலங்கையின் கடல்படுக்கை உரிமைகள் குறித்து கொழும்பு மாவட்ட ஐ. தே. க. எம்.பி ரவி கருணாநாயக்கா கேட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே ரோகித மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் ஐ.நா ஆணைக்குழுவுக்கு இலங்கை சமர்ப்பிக்கவிருக்கும் உரிமை கோரலானது தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான தரவுகளை உள்ளடக்கி மிகச்சரியாக தீர்மானிக்கப்படும் என்றும் ஐ.நா இதை 2025 ஆம் ஆண்டளவில் கருத்தில் எடுக்கும் என்றும் கூறினார்.
மேலும் ஐ.நா இன் இந்த நீண்ட காலதாமதம் குறித்து தமது அதிருப்தியையும் ரோகித வெளியிட்டுள்ளார்.
http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=917
‘சீன நலனை முன்னெடுக்கிறார் இந்து ராம்’!!!
ஈழ விடுதலைக்கு எதிராகவும், ராஜபக்சேவி்ற்கு ஆதரவாகவும், அதே நேரத்தில்
திபெத்தியர்களின் போராட்டத்திற்கு எதிராகவும் தனது நாளிதழில்
செய்திகளையும், கட்டுரைகளையும் தீட்டும் தி இந்து நாளேட்டின் ஆசிரியர்
என். ராம், சீன நாட்டின் நலனை கருத்தில் கொண்டே செயல்படுகிறார் என்று மே
17 இயக்கம் நடத்திய கருத்தரங்கில் குற்றம் சாற்றப்பட்டது.
‘தி இந்து நாளிதழும், அதன் ஆசிரியர் என்.ராமும் வாசகர்களை ஏமாற்றுவது
ஏன், ஊடகங்களின் பொறுப்பு’ என்ற தலைப்பில் ஞாயிற்றுக் கிழமை சென்னை
தியாகராயர் நகர், வெங்கடநாராயணா சாலையில் உள்ள தேவநாயகம் பள்ளியில் மே 17
இயக்கம் கருத்தரங்கத்தை நடத்தியது.
தமிழர்கள், ஈழத் தமிழர்கள் தொடர்பான பிரச்சனைகளில் உண்மையை மறைத்து
எப்படியெல்லாம் தி இந்து கட்டுரை எழுதியது என்பதை இந்தக் கருத்தரங்கில்
பேசிய ஒவ்வொருவரும் ஆதாரத்துடன் எடுத்துரைத்தனர்.
இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்த மே 17 இயக்கத்தைச் சேர்ந்த ஜி.
திருமுருகன், இந்தியாவை நேசித்த ஈழத் தமிழர்கள் சிறிலங்க இனவெறி அரசால்
திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டதனால், அவர்களின் கட்டுப்பாட்டில்
இருந்த இலங்கையின் கடற்பகுதி இந்தியாவிற்கு எதிரான சீனா போன்ற சக்திகள்
ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திவிட்டது என்று கூறினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை இந்தியாவின் உதவியைப் பெற்று ஒழித்த சீனா,
தென்னிலங்கையில் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஹம்பன்தோட்டா துறைமுகத்தை
சீனாவிற்குத் தாரை வார்த்து, அதனை நன்கு காலூன்ற இடமளித்துவிட்டது. இது
மட்டுமின்றி, இலங்கையின் மற்ற இடங்களிலும் சீனா பலமாகக் காலூன்றி
வருகிறது” என்று கூறிய திருமுருகன், சீனா அமைத்துள்ள தளத்தில் இருந்து
100 கி.மீ. தூரத்திற்கு
உட்பட்டுத்தான் கூடங்குளம் அணு மின் நிலையம் உள்ளது என்று கூறினார்.
இந்தியா, சீனா எல்லைப் பிரச்சனையில் சீனத்தின் பக்கம் சார்ந்த தி இந்து
எழுதி வருகிறது என்று குற்றம் சாற்றிய திருமுருகன், இந்தியாவை 20, 30
துண்டுகளாக உடைக்க வேண்டும் என்று சீனத்தின் சர்வதேச இராணுவ ஆய்வு மையம்
தனது
இணையத்தளத்தில் எழுதியபோது அது குறித்து தி இந்து எந்தணச் செய்தியையும்
வெளியிடாதது மட்டுமின்றி, அதுகுறித்து சீனா அரசு கருத்தேதும் கூறாத
நிலையில், அதனை ‘அதிகப்படியான கருத்துக் கூறல்’ என்று கூறி தி இந்து அதனை
சாதாரணமாகக்
குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டினார்.
தி இந்து நாளேடு தொடர்ந்து ஆதரித்து எழுதிவந்த சிறிலங்க அரசு தனது நாட்டு
மக்கள் மீதே தொடுத்தப் போரில் எப்படிப்பட்ட போர்க் குற்றங்களையும், மனித
உரிமை மீறல்களிலும் ஈடுபட்டது என்பதை அமெரிக்க அயலுறவு அமைச்சகம்
தயாரித்த அறிக்கையை மேற்கோள் காட்டி விவரித்தார் இந்தியக் கடற்படையில்
பணியாற்றி ஓய்வு பெற்ற லெப்டினென்ட் எம். சுப்ரமணியம். மனிதாபிமானமும்,
உண்மை கூறல் வேண்டு்ம் என்ற நேர்மை சற்றும் இன்றி எவ்வாறு ஒவ்வொரு
பிரச்சனையிலும் தி இந்து நாளிதழ் தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டது என்பதை
தமிழ்.வெப்துனியா.காம் இணையத் தளத்தின் ஆசிரியர் கா.அய்யநாதன்
ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார்.
உலகமே அதிர்ச்சியுற்ற செஞ்சோலைப் படுகொலையை கண்டுக்காதது, போர் நிறுத்தம்
கோரி தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் போராடியபோது அதனை தமிழ் வெறித்தனம்
என்று
சித்தரித்தது, பாலஸ்தீன விடுதலைப் போரையும், ஹமாஸ் இயகத்தையும் சரியாக
தனது செய்திகளில் குறிப்பிட்ட அதே நேரத்தில், ஈழ மக்களின் விடுதலைப்
போராட்டத்தை
கொச்சைப்படுத்தியதும், தமிழீழ விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகள் என்று
தொடர்ந்து உண்மையை மறைத்து எழுதி வந்தததையும் எடுத்துக்காட்டிய
அய்யநாதன், கச்சத் தீவுப் பிரச்சனையில் எப்படியெல்லாம் உண்மையை மறைத்து,
தமிழ் மீனவர் நலனை கேவலப்படுத்தி எழுதியது தி இந்து என்று ஆதாரத்துடன்
சுட்டிக்காட்டி அம்பலப்படுத்தினார்.
இறுதியாக உரையாற்றிய திபெத் விடுதலைப் போராளி டென்சிங், இந்தியாவின்
பாதுகாப்பிற்கும், நலனிற்கும் திபெத் விடுதலைப் பெறுவதன் அவசியத்தை
தெளிவாக எடுத்துரைத்தார்.
இந்தியாவின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்புடைய
திபெத்தும், அதன் மக்களும் இந்தியாவின் இயற்கையான நண்பர்களாக வரலாற்றுக்
காலத்திலிருந்து
திகழ்ந்து வருகின்றனர் என்று கூறினார்.
இந்தியாவை வளப்படுத்தும் ஜீவ நதிகளான கங்கை, யமுனை, பிரம்புத்திரா ஆகியன
திபெத்தில் உருவாவது மட்டுமின்றி, இந்துக்கள் மிகப் புனிதமான இடமாக
கருதும் கைலாயமும், மானசரோவர் நதியும் திபெத்தில் உள்ளதையும், ஆனால்
திபெத் சீனத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளதால் அங்கு இந்தியர்கள் அனைவரும்
சென்றுவர முடியாத நிலை உள்ளது என்றும் கூறினார்.
இந்தியாவின் தெற்கிலுள்ள ஈழத்து விடுதலைப் போராட்டமும், வடக்கில் உள்ள
திபெத்தின் விடுதலைப் போராட்டமும் ஒன்றிணைவது காலத்தின் அவசியம் என்றும்
டென்சிங் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தி இந்து நாளிதழின் உண்மைக்குப் புறம்பான போக்கை
விமர்சித்து பத்திரிக்கையாளர்களும், வரலாற்றாளர்களும் எழுதிய
கட்டுரைகளின் தொகுப்பான ‘பத்திரிக்கை அறமும் இந்து என்.ராமும்’ என்ற
புத்தகம் வெளியிடப்பட்டது.
இப்புத்தகத்தை முதுபெரும் பத்திரிக்கையாளரும், பெரியார் திராவிடர்
கழகத்தின் பொதுச் செயலருமான விடுதலை இராசேந்திரன் வெளியிட, அதனை டென்சிங்
பெற்றுக்
கொண்டார்.
http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0911/02/1091102096_1.htm
http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0911/02/1091102096_1.htm
http://www.friendsoftibet.org/global/activities/tamil_nadu/media_freedom_011109.html
http://www.friendsoftibet.org/global/activities/sri_lanka/world_tibet_day_sl_060709.html
http://www.friendsoftibet.org/tenzin/
http://www.friendsoftibet.org/global/activities/tamil_nadu/ict_chennai_120109.html
====
Writer-Activist
tenzin.tsundue@friendsoftibet.org
MR Hubert, Chairperson of Friends of Tibet (Chennai/Puduchery)
michael.hubert@friendsoftibet.org
K Ayyanathan, Editor of Tamil news portal of webdunia.com
ayyanathan@webdunia.net
====
முத்தமிழ்வேந்தன்
சென்னை
இத்தாலியிலிருந்து அருள்பாலிக்க வந்த அம்மா போற்றி !
ஸ்ரீபெரும்புதூரில் திவ்யமாய் தியாகியான ராஜீவ் காந்தியின்
பட்டத்தரசியம்மா போற்றி !
புதுடெல்லியில் பாடிகாடால் போய்ச்சேர்ந்த இந்திராவின் மருமகளான தாயே போற்றி !
நாளைய பிரதமர் ராகுல் காந்தியைப் பெற்றெடுத்த காவியத் தாயே
போற்றி !
பிரியங்காவின் குழந்தைகளுக்கு என்ன பதவியின்னு தெரியலையே பாட்டியம்மா போற்றி !
நீலகிரிசயில் பிரபுவுக்கு கோஷ்டி, கோவையில எஸ்.ஆர்.பிக்கு கோஷ்டி, ஈரோட்டுல இளங்கோவனுக்கு கோஷ்டி, விக்கு புகழ் மயூரா ஜெயக்குமாருக்கு கோஷ்டி, மக்கு புகழ் ஞானசேகரனுக்கும் கோஷ்டி,
ப.சிதம்பரமும் அவன் பையனும் ஒரு கோஷ்டி, கிருஷ்ணசாமியும் அவன் புத்திரனும் இன்னொரு கோஷ்டி, மெகா டி.வி தங்கபாலு, வசந்த் டி.வி வசந்த குமார்,
கல்லுளி மங்கன் மன்மோகனுக்கு விட்டுக்கொடுத்தாய் போற்றி !
அவனோ நாட்டையே அமெரிக்காவுக்கு வித்துப்புட்டான் போற்றி
அம்மம்மா கோஷ்டிகளை எண்ணி எண்ணி வாயே வலிக்குதம்மா போற்றி
வைப்பாட்டன் கருணாநிதிக்கு மஞ்சள் சால்வை போர்த்தினாய் போற்றி
அவன் தோழில் கைபோட்டு கட்டி அணைத்தாய் போற்றி
கருணாநிதிி கன்னத்தில் இச்சென்று முத்தமிட்டாய் போற்றி
தமிழனின் பச்சை இரத்தம் குடித்த காட்டேறிப் பேயே போற்றி
தடியன் மகிந்தாவின் அந்தப்புர நாயகியே போற்றி
பிஞ்சுக் குழந்தையின் நெஞ்சில் மிதித்த வஞ்சகியே போற்றி
தமிழன்னையின் தாலியறுத்த மூழி அலங்காரியே போற்றி
தவித்த வாய்க்கு தண்ணீர் கொடாத சண்டாளியே போற்றி
பெண்வடிவில் வந்துதித்த பேயே பிசாசே போற்றி
naamtamilar@googlegroups.com
கல்லக்குடி கொண்டான் கச்சதீவு இழந்தான்
அஞ்சுக அம்மை மடி தவழ்ந்தான்
இயற் பெயரோ தட்சிணாமூர்த்தி
அஞ்சுக மடி தவழ்ந்தாலும்
நீதிக் கட்சியில் நீ இணைந்தாய்
அகவை பதின்மூன்றில் தொண்டனாகினாய்.
நீதிக் கட்சியில் நீ இணைந்தாலும்
சொத்துச் சேர்ப்பது நின் இலக்கென்று
அறிந்தோம் இன்று நாமெல்லாம்
தெளிந்தோம் இன்று நாமெல்லாம்
தண்டவாளத்தில் தலை வைத்தாய்
கல்லக்குடியை நீ கொண்டாய்
அதனால் பதவி தேடிக் கொண்டாய்
பதவிக்காக கச்சத் தீவை ஏன் இழந்தாய்
கழகம் ஒரு குடும்பம் என்றாய்
குடும்பமே கழகம் என்றாக்கினாய்
கோபாலபுரத்தையே கோட்டையாக்கினாய்
சொந்தவீடாகவே நாட்டையாக்கினாய்
ஒரு தாலி போனதால் ஒரு இத்தாலி
பலி கொள்ள வந்தாள் பலதாலி
பலதாலி கட்டிய பைந்தமிழ்க் கலைஞனே
ஏன் இணைந்தனையோ அச்சனியாள் கூட.
வீழ்வது நானாகிலும் வாழட்டும் தமிழென்றாய்
வளமாய் வாழ்கின்றது நின் குடும்பம்
கொலைக்களமாகியது நம் ஈழம்
பதவிகள் பல கொண்டது நின் குடும்பம்
இரு பெண்டாட்டிகள் துணைக்கிருக்க
இரு குளிரூட்டிகல் அருகிருக்க
நன்றாய் ஆடினாய் நாடக மொன்று
நாலு மணிநேர உண்ணா விரத மென்று
நாலு மணி உண்ணா விரதம்
நாடகமாக நல்லாய் ஆடினாய்
பொய்யாய் பெரும் புகழ் தேடினாய்
தேர்தல் வாக்கு வேட்டையாடினாய்
ஈழத்தில் சாந்தி நிலவுகிறது
அமைதி திரும்பிவிட்டது
சான்றிதழ் கொடுத்தாய்
ராஜபக்சேயிற்கு
பெற்ற வெகுமதி என்ன?
தொல்காப்பியத்துக்கு உரை தந்தோன்
தொல்லைக் காப்பியமாய் நின்றதேன்
ஓயுமோ உன்றன் பொய்நா
சாயுமோ நின்றன் கொடுமை.
"கருணாநிதியின் வரலாறு" என்று கூகிளில் தேடினால் "கருணாநிதியை வரலாறு மன்னிக்காது" என்று பல நூற்றுக் கணக்கான பதிவுகள் கிடைத்தன.
http://veltharma.blogspot.com/2009/11/blog-post_05.html
பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com