தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Tuesday, November 3, 2009

♥ தன் நாக்கை தானே துண்டித்து....! ♥

இந்து கோவில்களை இடித்தவன் ராஜபக்சே

இலங்கையிலுள்ள இந்து கோவில்கள் பலவற்றை இடித்தவர் ராஜபக்சே.
திருப்பதி வந்த ராஜபக்சேவுக்கு, பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்ற
செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

-வைகோ

http://img151.imageshack.us/img151/8181/p4ey0.jpg

சிங்களப் படைக்குள் சீனப்படைகள்


இன்று இலங்கையின் இராணுவ தளபதி ஜெனத் ஜெயசூரிய பூநகரி மற்றும் துணுக்காய் அதி உயர் இராணுவ பாசறை களிற்கு சென்று பல மூத்த உயர் இளம் நிலை தளபதிகளை சந்தித்து உரையாடியுள்ளார் .

உலங்கு வானூர்திகள் மூலம் சென்ற இவரை கிளிநொச்சி கட்டளை தளபதி Major General Athula ஜெயவர்டென வரவேற்று அழைத்து சென்றார் .

65வது தலைமையகம் அமைந்துள்ள துணுக்காய் பகுதிக்கும்
பூநகரிக்கும் சென்று பல படை நிலை தளபதிகளிட்கு பதவிகளையும் விருதுகளையும் வழங்கி வந்துள்ளார் .

எதிர்காலத்தில் அங்கு நடைபெறவிருக்கும் பாது காப்பு வியு யுகங்களை விளக்கி வந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது
நேற்று எமக்கு சிலர் கூறிய தகவல் வன்னி மற்றும் வவுனியா பகுதிகளில் மேலதிகமாக படைகள் குவித்துவிடபட்டுளதாக .இன்று இவரது பயணத்தின் பாதுகாபிட்கே இந்த படை குவிப்பும் சுற்று காவல் நவடிக்கை என்பது இன்று தெரிய வந்துள்ளது

கீழே உள்ள படத்தை வடிவாக உற்று பாருங்கள் இவர்கள் சீனதவர்கள் போல் இல்லையா ..?

இராணுவ தளபதிக்கு சலுட் அடிக்கும் அணியில் உள்ள இருவரை மேலும் வடிவாகா உற்று பாருங்கள் . தமிழகமே கொந்தளி இந்தியாவிற்கு ஆபத்து ஆபத்து ..
arm.jpg

arm 2.jpg

arm 3.jpg

army 4.jpg

army 6.jpg

army 5.jpg

army 7.jpg


சின்ன பாம்பென்றாலும் பெரிய தடியால் அடி
http://www.ethiri.com/phpbb/viewtopic.php?f=9=10&t=1868
http://1.bp.blogspot.com/_2ALKLhzsLHQ/SlphHxdtmiI/AAAAAAAAAGI/afxoj227ymI/s400/kasper.jpg

போலிச்சாமி பகத் பஸ்பருக்கு கடிதம்வணக்கம் போலிச்சாமியார் பகத் பஸ்பர் அவர்களே. இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை என்று கேட்கிறீகளா ? அதை நான் ஏன் கேட்கக்கூடாது சொல்லுங்கள்.

முதலில் நீங்கள் யார் ? அருட்தந்தை என்கிறார்கள். எப்போது எங்கே, யாரின் அருள் உங்களுக்கு கிடைத்தது ? உங்களை பார்த்தால் கிருத்தவ மி(வி)ஷநரிகள் நம் நாட்டில் விட்டுவிட்டுப்போன, இந்தியாவில் அபகரித்த நிலங்களில் பில்டிங்குகள் ப்ளேகிரவுண்டுகள் கட்டிக்கொண்டு, மிச்சத்தை எச்சத்தை தின்றுவிட்டு, ஒயினை குடித்துவிட்டு, சுருட்டை புகைத்துக்கொண்டு உடல் பெருத்து உட்கார்ந்திருக்கும் பிரிஸ்ட்டு சாமியார்கள் போல தெரியவில்லையே ?

ஆள் கொஞ்சம் வெடவெடவென்றுதானே இருக்கிறீர்கள் ? ஏன் பிரான்ஸில் இருந்து ஒயின் வருவதில்லையா ? இல்லை நீங்கள் தங்கியிருக்கும் இடத்தில் நல்ல சிக்கன் மட்டன் சமைக்க ஆட்கள் இல்லையா ?

அப்கோர்ஸ், நீங்கள் ஆர்.சி (ரோமன் கத்தோலிக்கு) சாமியாரா, பிராட்டஸ்டண்டு சாமியாரா, அல்லது இவாஞ்சலிக்கல் செவண்த் டே அல்லேலூயா கோஷ்டியா என்று தெரியவில்லை. ஏன்னா, ரோமன் கத்தோலிக்கு கோஷ்டி சாமியார்கள் கல்யாணம் செய்துகொள்வதில்லை (அதற்காக அவர்கள் வாலிப வயோதிக அன்பர்களே என்றழைக்கும் டாக்டர்கள் கொடுக்கும் தாது புஷ்டி லேகியத்தை சாப்பிடாமல் இருப்பதில்லை), அல்லது கண்ணிகாஸ்திரிகளுக்கும் பஞ்சமில்லை. பிராட்டஸ்டண்டு சாமியார்கள் என்றால் குடும்பம் குழந்தை குட்டி பொட்டி என்று எல்லாமும் இருக்கும்.

சரி அந்த கதை எதுக்கு இப்போ ? ஏன் பொழுது போகவில்லையா பகத் பஸ்பர் ? வெண்ணை மங்கமம் என்று கவிஞர் ஒருவரோடு இணைந்து கலைநிகழ்ச்சி நடாத்தினீர்களே ? அது போரடித்துவிட்டதா ? அல்லது தமிழ்நாட்டில் காலையில் அவுட்ஸைடில் அவுட்சைட் போகிறவர்கள் யார், அல்லது வெஸ்டர்ன் டாய்லெட்டில் வெளிக்கு போகிறவர்கள் யார் என்றெல்லாம் சர்வே செய்துகொண்டிருந்தீர்களே ? அதுவும் இப்போது செய்யவில்லை போலிருக்கிறது.

ஆங் நீங்கள் ஏதோ புனைவுகள் கட்டுரைகள் எழுத ஆரம்பித்துவிட்டதாக சொன்னார்கள். பொதுவாக ஆளுங்கட்சிகளுக்கு அல்லது ஆட்சியாளர்களுக்கு பீப்பி ஊத, கும்மி அடிக்க, மேளம் தட்ட பெரிய கோஷ்டியே உண்டு. நீங்கள் அந்த மாதிரி ஒரு பத்திரிக்கையில் பீப் பீப் என்று ஊதிப்பார்க்க ஆரம்பித்திருப்பதாகவும் சொன்னார்கள்.

அந்த புனைவுகளில் போராளிகளுக்கு நீங்கள் தான் காண்டாக்ட் பாய்ட்ண்ட் என்றும், காலையில் நீங்கள் பல் விளக்கும்போது சாட்டிலைட் போனில் என்ன டிபன் என்று கேட்க அவர்கள் வன்னியிலிருந்து போன் செய்துகொண்டிருந்ததாகவும் சொல்கிறீர்களாமே ? இருக்கும் இருக்கும். நம்பித்தானே ஆகவேண்டும். மறுத்துப்பேச யாரும் இல்லையென்றால் நாம் விடும் கரடியெல்லாம் வரலாறு ஆகிவிடுமே ? யார் கண்டா ? நாளை ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உங்கள் புருடாக்களை சேர்த்தாலும் சேர்த்துவிடுவார்கள்.

தயவுசெய்து போராளிகளை, அவர்களின் தியாகத்தை, தன்னுயிரை ஈந்து கொள்கைகாத்த மாவீர்களை கொச்சைப்படுத்தாதீர்கள். நீங்கள் மத்தியஸ்தம் செய்ததாகவும், அவர்கள் சரணடைய தயார் என்றும் புனைந்துகொட்டாதீர்கள். தேவை என்றால் நான் சொல்லுவதெல்லாம் பொய் என்று தலைப்பில் பிள்ளையார் சுழி, மன்னிக்க, மேரி மாதா சுழி போட்டுவிட்டு, எந்த கருமத்தையாவது எழுதி தொலையுங்கள். அஞ்சனா தேவி, மஞ்சனா தேவி போன் செய்தார், ஆரோக்கிய சாமி லெட்டர் போட்டான் என்றெல்லாம் உங்கள் உடான்ஸுகளுக்கு வலு சேர்த்துக்கொண்டிருக்காதீர்கள்.

2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் இயேசு. நல்லவன். ஆனால் கொஞ்சம் லூசு. அதே சமயம் கொஞ்சம் இண்டலக்சுவல். நிறைய கதை சொல்லிவிட்டு, உபதேசம் செய்துவிட்டு, மக்களை திருத்த முயன்று செத்து தொலைந்தான். அதனால் கடவுள் என்கிறீர்கள். இட்ஸ் ஓக்கே. கண்டுகொள்ளவில்லை. ஆனால் நான் பாவ மன்னிப்பு வழங்குகிறேன், கடவுளிடம் டேரக்ட் ப்ரான்ஸைசி பெற்ற என்னிடம் வந்து பாவ மன்னிப்பு பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லும் உடான்ஸ் மதம் கிருத்தவ மதம். அதில் இருந்து வரும் சாமியாரான உங்களை எப்படி நம்புவது ?

நீங்கள் அரசியலில் ஈடுபடவோ, மத்தியஸ்தம் செய்யவோ, உங்கள் சர்ச் அனுமதிக்கிறதா ? நீங்கள் அதற்காகவா பணிக்கப்பட்டீர்கள் ? உங்களை செலவு செய்து படிக்கவைத்து, சம்பளம் கொடுக்கும் சர்ச்சுக்கே நீங்கள் நேர்மையாக இல்லையே ? உங்களிடம் எப்படி அரசியல் நேர்மையை எதிர்பார்க்கமுடியும் ?

உங்கள் சர்ச்சில் பியானோ இருக்கிறதா ? அதில் ட்யூன் போடுங்கள். இசை பழகுங்கள்.

'இறைவனின் ஆவி நிழலிடவே
இகமதில் அவர் புகழ் பகர்ந்திடவே
என்னை அழைத்தார்
அன்பில் பணித்தார்
அவர் பணிதனை தொடர்ந்திடவே.'

இப்படி எதையாவது எழுதி, அதற்கு இசையமைத்து பாடுங்கள். அதன் மூலம் உங்கள் நேரம் அழகான முறையில் செலவிடப்படும். இனியும் அந்த அப்பழுக்கற்ற தலைவனின் பெயரை உச்சரிக்காதீர்கள். அசிங்கமாக இருக்கிறது.

நன்றி. (கடிதம் முடிஞ்சுபோச்சு. எச்சில் துப்பி உறையை ஒட்டவேண்டும்)

http://tvpravi.blogspot.com/2009/11/blog-post.html

தன் நாக்கை தானே துண்டித்து....!


http://www.tamilnet.com/img/publish/2008/04/23_04_08_sla_arms_09_68097_445.jpg


"தன் நாக்கை வெளித்தள்ளி பற்களால் இறுக கடித்தபடி தலையை உயர்த்தி தன் நாடியை ஓங்கித் தரையில் அடித்தான். நாக்குத் துண்டானது. சித்திரவதையின் போது தன்னால் உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காக...."


"தன் தலையை அந்த இரும்புக்கட்டிலில் மோதி மோதி மண்டையுடைந்து
இறந்துபோனான்...."


யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச்
சம்பவமொன்றுதான் இது.

விடுதலைப்புலிகளின் கொள்கைகள் பற்றி விமர்சனங்களும் சர்ச்சைகளும்
ஆச்சரியங்களும் உண்டு. எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை
இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து
வருபவர்கள் அவர்கள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள்
இருக்கும். இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது
நடந்ததுதான்.

1997 ஆனி மாதம் மட்டக்களப்பிலிருந்து வன்னி நோக்கி இருபடகுகளில் சில
போராளிகள் வருகிறார்கள். இரவுப்பயணம். கடும் சண்டைக்குரிய
ஆயத்தங்களேதுமற்ற சாதாரண பயணம். எப்படியோ திருகோணமலையை நெருங்கியபோது
எதிரியின் விசைப்படகின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். படகு சேதமடைகிறது.
கடலிற்குதித்து நீந்தத் தொடங்குகின்றனர். எல்லோரும் பிரிந்துவிட்டனர்.
அதில் ஒருவன் தான் பாலன். கடற்கரும்புலி அணியைச் சேர்ந்தவன் தான் பாலன்.

இரவிரவாக நீண்டதூரம் நீந்தி "இறக்க கண்டி" எனுமிடத்திற் கரைசேர்கிறான்
பாலன். விடிந்துவிட்டது. கரையில் சோர்வினால் மயங்கிப்போன நிலையில்
சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இராணுவத்தாற் கைதாகிறான்.

இராணுவ முகாமில் கண்விழித்த பாலனுக்கு அப்போதுதான் தாம்
கைதுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கழுத்தில் குப்பியில்லை.
இனி சித்திரவதை செய்யப்படப்போவது உறுதி. அதில் இரகசியங்கள் காப்பாற்றப்பட
வேண்டுமே. அதுவும் பாலன் கடற்கரும்புலி அணியாதலால் நிறைய விசயங்கள்
தெரிந்திருந்தான். தன்னை மாய்த்துக்கொள்ள ஏதும் கிடைக்குமா என்று
முயன்றான்.

கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் குப்புறக் கிடத்தப்பட்டிருந்தான்.
இன்னும் சிறிது நேரத்தில் ‘விசாரணை’ தொடங்கப் போகிறது. எதுவும் செய்ய
முடியாத நிலை. அந்த நேரத்தில் தான் அசாதாரணமான முடிவையெடுத்தான். தன்
நாக்கை வெளித்தள்ளி பற்களால் இறுக கடித்தபடி தலையை உயர்த்தி தன் நாடியை
ஓங்கித் தரையில் அடித்தான். நாக்குத் துண்டானது. சித்திரவதையின் போது
தன்னால் உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காகத் தன் நாக்கைத் தானே
துண்டித்தான்.

மீண்டும் மயங்கிய அவன் கண்விழித்தபோது இராணுவ மருத்துவமனையிற்
கிடத்தப்பட்டிருந்தான். தனக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த பாலன்
அடுத்த கட்டத்தை யோசித்தான். எப்படியும் தன்னை மாய்த்துக்கொள்ள
வேண்டுமென்பதிலேயே குறியாயிருந்தான். ஏனெனில் தன்னிடமிருந்து போகப்போகும்
விவரங்கள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பயங்கரமானவையென்பதை நன்கு
அறிந்திருந்தான். முயற்சித்து முயற்சித்து இறுதியில் அந்த
முடிவையெடுத்தான். நினைத்தும் பார்க்க முடியாதது அது.

தன் தலையை அந்த இரும்புக்கட்டிலில் மோதி மோதி மண்டையுடைந்து
இறந்துபோனான்.
ஒரு மோதலுக்குப்பின்னும் சாகும்வரை தொடர்ந்து தன் தலையைக் கட்டிலின்மேல்
மோதுமளவுக்கு அவனுக்குத் துணிவும் வைராக்கியமும் இருந்தது, ஒரு துளி நீர்
கூட வாயில் வைக்காமல் 12 நாட்கள் இருந்து அணுவணுவாகச் தன்னைத்தானே
சாகடித்த திலீபனைப் போல. (பாலனது இயற்பெயர்கூட திலீபன் தான்.).

எப்போதும் மரணம் நிகழ்ந்தவண்ணமே இருக்கிறது..ஆனால் சிலரது மரணம் மட்டுமே
நினைவுகளாக வாழ்கிறது..!!
(நெஞ்சையுருக்கும் இப்படி எத்தனையோ தியாக தீபங்களின் இதய ஓலங்கள்
போலித்தனமான தமிழக அரசியல்வாதிகளின் நெஞ்சை கடைசி (இன்று) வரை
தொடவில்லையே... :( )
--
-- பாக்கியராசன் சே..
நீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...
www.naamtamilar.org

http://www.tamilnet.fr/img/publish/2008/09/02_09_08_vanneari_01.jpgசாமியார்கள் தேசத்தில் விஞ்ஞானிகள் படும் பாடு...!


http://www.tamilvanan.com/content/wp-content/uploads/2008/11/kariveppilai.jpg*மூலிகை பெட்ரோல் கண்டு பிடித்ததாக நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய
ராமர்
பிள்ளை, 1996-ல் ஹாட் டாப்பிக்கில் இருந்தவர். 1999-ல் ஒரு
நிறுவனத்தையும்
தொடங்கி, ஒன்பது மாதங்களில் 15 லட்சம் லிட்டர் 'மூலிகை பெட்ரோலை'
உற்பத்தி
செய்து விற்பனை செய்தார். விலை மலிவு என்பதால் பலரும் வாங்கினர். அதன்
பிறகு
ராமர் பிள்ளை மீது விதவிதமான குற்றச்சாட்டுகள், ரெய்டு, வழக்கு என்று
பல்வேறு
அலைக்கழிப்புகள்... தற்போது வழக்கு விசாரணை முடிவடையும் நிலையில்
தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் அவர்.

இதற்கிடையே நண்பர்கள் மூலம் டச்சு நாட்டின் மிக முக்கிய ஆய்வகத்தில்
இவரது
மூலிகை எரிபொருள் சோதனை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் அமெரிக்காவில்
காப்பு
ரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளார், ராமர் பிள்ளை. அந்தக் காப்புரிமையைப்
பெறக்
காத்திருக்கும் ராமர்பிள்ளையை சென்னை சூளைமேட்டில் சந்தித்துப்
பேசினோம்.


'மூலிகை எரிபொருள் ஃபார்முலா, மூலப்பொருட்களைத் தெரிவிக்கவேண்டும் என்று
எனக்கு
ஏகப்பட்ட நெருக்கடிகள் கழுத்தை நெரித்தன. என் அம்மா, தம்பி,
தங்கைகளையும்கூட அவர்கள் நிம்மதியாக விடவில்லை. என் மீது மோசடி வழக்கு,
சகோதரர் மீது கொலைவழக்குப் போட்டனர். ஒரு தங்கையின் கணவரையும் கொலை
செய்தனர்.
இவ்வளவையும் தாண்டி இன்று நண்பர்கள் உதவியால், எனது கண்டுபிடிப்பு உலக
அரங்கில்
அங்கீகாரத்துக்குக் காத்திருக்கிறது...'' என்று குதூகல மாகப் பேசிய ராமர்
பிள்ளை, தொடர்ந்து...

''என் கண்டுபிடிப்பு பற்றிக் கேள்விப்பட்ட டச்சு நாட்டில் உள்ள டேனிஷ்
டெக்னாலாஜிக்கல் இன்ஸ்டிட்யூட் விஞ்ஞானிகள், நேரடியாக சென்னைக்கே
வந்தார்கள். அவர்கள் முன்னிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எனது
கண்டுபிடிப்பை நிகழ்த்திக் காட்டினேன். மூலிகை எரிபொருள் உருவாக்குவதற்கு
முன்னர் அந்தத் தண்ணீரை
சோதித்தார்கள். அது எரியவில்லை. பின்னர் நான் மூலிகை பெட்ரோல் செய்து
காட்டியதும், அதை பரிசோதித்த அவர்கள், தண்ணீர்தான் எரிபொருளாக
மாறியுள்ளது என்பதை ஒப்புக்கொண்டனர்.

அதைத் தங்கள் ஆய்வகத்தில் பரிசோதித்துப் பார்த்து எனக்கு ஆய்வறிக்கை
அளித்தவர்கள், 'உங்கள் கண்டுபிடிப்பால், மிகக் குறைந்த செலவில் எரிபொருளை
உருவாக்க முடியும். இதன் மூலம் உலக அளவில் மிகப்பெரிய சாதனையை
செய்துள்ளீர்கள்!' என்று எனக்குக் கடிதம் அனுப்பினர் (நம்மிடம் அந்தக்
கடிதத்தை காட்டுகிறார்). மேலும், 'மற்ற மாற்று எரிபொருள்களுடன்
ஒப்பிடுகையில், என்னுடையதுதான் மிகக் குறைந்த செலவில் பெட்ரோல்
தயாரிக்கக்கூடியது' என்றும்
தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில்தான் காப்புரிமை பெற, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 'வேர்ல்ட்
இன்டலெக்சுவல் பிராப்பர்ட்டி ஆர்கனைசேஷ'னுக்கு (ஐக்கிய நாடுகள் சபையின்
சிறப்பு அந்தஸ்து பெற்றது) விண்ணப்பித்தேன். அவர்களும் இந்த எரிபொருளால்
இயந்திரத்துக்கு ஏதேனும் பாதிப்பு வருமா என்று ஆய்வு செய்து, அதைத்
தங்கள்
ஜர்னலில் பதிப்பித்துள்ளனர். இந்தப் பதிப்பு எல்லா நாடு களிலும்
வெளியிடப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்திய காப்புரிமை அதிகாரிகளும் என்னைத் தொடர்புகொண்டார்கள்.
உலக
நாடுகள் ஒப்புக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதால், இந்தியாவும் காப்புரிமை
தரத்
தயாராக உள்ளதாக வாய்மொழியாகச் சொன்னார்கள். அதோடு, பல்வேறு நாடுகளில்
இருந்தும்
என்னைப் பற்றி தங்கள் தூதரகம் வாயிலாக விசாரித்துத் தொடர்பு
கொள்கிறவர்கள்,
'மூலிகை எரிபொருள் தயாரிப்பு ஃபார்முலாவை தர வேண்டாம், உங்களுக்குத்
தேவை
யானவற்றைச் செய்து தருகிறோம், நீங்களே செய்து கொடுங்கள்' என்றும்
கூறுகிறார்கள். ஆனால், காப்புரிமை முறைப்படி வரட்டும் என்று
காத்திருக்கிறேன்.

கலப்பட பெட்ரோலை வேறு ஒரு இடத்தில் இருந்து பெற்று, விநியோகித்ததாக என்
மீது
வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதைப் பற்றி நான் எதுவும் கூற
முடியாது.
ஆனால், டச்சு நாட்டில் இருந்து பெறப்பட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில்,
அவர்கள்
மேற்கொண்ட சோதனையை கோர்ட்டில் காட்டினோம். அப்போது, 'ஐரோப்பிய நாடுகளின்
தர
அடிப்படையில் என்னுடைய மூலிகை எரிபொருளை பரிசோதித்து ஆய்வறிக்கை கொடுத்
துள்ளனர். அதில் வெறும் நான்கு சோதனையைக்கூட நடத்தும் வசதி இந்தியாவில்
இல்லை.
பிறகு எப்படி இது உண்மையில்லை?' என்று அரசு தரப்பைக் கேட்டபோது,
அவர்களால்
பதில் கூற முடியவில்லை.

இந்த 10 ஆண்டுகளில் என் மூலிகை எரிபொருளை நவீனப்படுத்தியுள்ளேன். முன்பு
16
ரூபாய்க்கு மூலிகை எரிபொருளைத் தயார் செய்தேன். இப்போது வெறும் எட்டு
ரூபாய்க்கே லட்சக்கணக்கான லிட்டர்களை தயாரிக்கத் தயாராக இருக்கிறேன்.
இந்த
மூலிகை எரிபொருள் நிச்சயம் ஐரோப்பிய யூனியன் தரத்தில் இருக்கும்.

13 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சென்னை, டெல்லி,
ஹைதராபாத்தில் நான் நடத்திய ஆய்வுகள், தோல்வியடைந்ததாக அதிகாரிகள்
கூறினார்கள்.
அப்போது அதிகாரிகள், 'ஒரு குழாயில் பெட்ரோலை மெழுகால் அடைத்து
வைத்ததாகவும்,
தண்ணீர் வெப்பநிலையில் மெழுகு உருகியபோது பெட்ரோல் கலந்ததாகவும்' சொன்
னார்கள்.
டச்சு விஞ்ஞானிகளிடம் இதைக் கூறியபோது, 'சமையல் உப்பைக்கொண்டு தண்ணீரை
அடைத்து வைக்க முடியும் என்பதுபோல அது ஒரு தவறான வாதம்' என்றனர்.

நான் இந்திய அரசிடம் எனது கண்டுபிடிப்புக்கு பாதுகாப்புதான் கேட்டேன்.
பாதுகாப்பு அளித்தால், முழுக் கண்டுபிடிப்பையும் தருவதாகக்கூறினேன்.
இப்போது
காப்புரிமைக்காக என் முழுக் கண்டுபிடிப்பையும் சர்வதேச அமைப்பிடம்
கொடுத்துள்ளேன். எனது வழக்கும் முடிவடையும் நிலையில் உள்ளது. தீர்ப்பு
வரும்போது மக்களுக்கு நிஜம் புரியும். பள்ளிப் படிப்பை பாதியில்
நிறுத்தியவன் எப்படி
இப்படிக் கண்டுபிடிக்கலாம் என்ற எண்ணம்தான் நம் நாட்டில் மெத்தப்
படித்தவர்களிடம் உள்ளது. இந்த 10 ஆண்டுகளில் எத்தனையோ கஷ்டம்,
தொல்லைகள்,
அவமானங்கள் எல்லாம் பட்டேன். ஆனால், எனது கண்டுபிடிப்பை எதிர்காலத்தில்
ஒவ்வொரு
மனிதனும் பயன்படுத்துவான்!'' என்கிறார் ராமர் பிள்ளை.

அடுத்தடுத்து பல சர்சைகளை சந்தித்த மனிதர், இப்போது சர்வதேச அளவில்
சவாலுக்குப்
போயிருக்கிறார்... பார்க்கலாம்... நல்லது நடந்தால் நாட்டுக்குப் பெருமை!
-- பா.பிரவீன்குமார்

நன்றி : ஜூனியர் விகடன்.*

DTI Main Reception
Phone: +45 72 20 20 00
info@teknologisk.dk

http://www.dti.dk/contact

Muthamizh
Chennai


மாவோயிஸ்டுகள் யார்?


http://1.bp.blogspot.com/_fDJKgMmt09Q/SkBgCzJrlzI/AAAAAAAAAFE/7aHTJx-gDb0/s320/8th+special.bmp

"அவர்கள் தனி தேசம் கோரவில்லை. அது ஏற்கெனவே அவர்களிடம் உள்ளது. அவர்கள் நினைத்தபடி அது இல்லை என்பதுதான் விஷயம்...'"Sudeep Chakravarti எழுதிய Red Sun புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்து, நூறு பக்கங்கள் கடப்பதற்குள் மாவோயிஸ்டுகள் குறித்து சூடான தலைப்புச் செய்திகள் வெளிவர ஆரம்பித்துவிட்டன. நக்ஸலைட் பீதி. தாலிபன் பாணியில் தலையை வெட்டிக் கொலை. இந்தியாவின் மிகப் பெரும் பயங்கரவாத அச்சுறுத்தல். இன்னபிற. மினுக் மினுக்கென்று மின்னும் சிவப்பு வட்டங்களை இந்திய வரைபடத்தில் ஒட்டவைத்து, 'நக்ஸல் பயங்கரத்தை' விவாதித்துக்கொண்டிருக்கிறது மீடியா.

ரெட் சன் ஒரு பயண நூல். இந்தியாவில் நக்ஸலிஸம் பரவியிருக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று, பலருடன் (அரசாங்க அதிகாரிகள், மாவோயிஸ்டுகள், மக்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், சல்வா ஜுடும்) பேசி, தகவல்கள் சேகரித்து இந்நூலை எழுதியிருக்கிறார். தன் புத்தகத்தை சுதீப் இவ்வாறு அறிமுகம் செய்துவைக்கிறார். 'இந்தியாவில் மாவோயிஸம் என்னும் தலைப்பில் வரலாறு எழுதும் எண்ணம் எனக்கில்லை. நான் அதற்குத் தகுதியானவன் அல்ல. இயக்கத்தின் வரலாறு, அதைச் சார்ந்தவர்களால் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. இனியும், எழுதப்படும்.'

முன்னுரையில் இருந்து ஒரு பகுதி.

'நம் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல், மாவோயிஸம் அல்ல. ஏழைமை, செயலற்ற அரசாங்கம், அநீதி, ஊழல் ஆகியவைதான். மூன்றில் ஒரு பகுதியில் மாவோயிஸ்டுகள் பரவியிருப்பது, நம் தோல்விகளைத்தான் பிரதிபலிக்கிறது. சரியாக நடத்தப்படாதவர்கள், வாழ்வாதாரம் மறுக்கப்பட்டவர்கள், அநீதி இழைக்கப்பட்டவர்கள் ஆகியோரே மாவேயிஸ்ட் இயக்கத்தில் இடம்பெற்றிருக்கிறார்கள். இந்த யதார்த்தங்களை மாவேயிஸ்ட் தலைவர்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள். எனவே, பலாத்கரத்தைப் பயன்படுத்தி இந்தச் சூழலை மாற்றலாம் என்று நம்புகிறார்கள்.'

வேறொரு இடத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். 'இந்தப் புத்தகத்தில், இடது சாரி போராளிகளை, எந்தவொரு இடத்திலும் 'தொந்தரவு' என்றோ 'சாபம்' என்றோ 'பரவும் கிருமிகள்' என்றோ குறிப்பிடமாட்டேன். அவ்வாறு குறிப்பிட்டாகவேண்டும் என்றால், பெரும்பாலான இந்திய அரசாங்க அமைப்புகளையும் பல அதிகாரிகளையும் இதே பெயர்களில் அழைக்கவேண்டியிருக்கும்.'

இந்தியாவில் நக்சலிஸம் பரவியிருக்கும் பகுதிகள் பிற்படுத்தப்பட்ட, வளர்ச்சி குன்றிய பகுதிகளாக நீடிப்பது நிச்சயம் தற்செயலானதல்ல. இதனை இந்திய அரசாங்கமும் ஒப்புக்கொள்கிறது. மாவோயிஸத்தை முற்றிலுமாக வெறுத்தொதுக்கும் காவல்துறை அதிகாரிகள்கூட சில விஷயங்களை வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கிறார்கள். ஆம், அவர்களிடம் மக்கள் பலம் உள்ளது. ஏதுமற்ற ஏழைகள், குடியானவர்கள், விவசாயிகள், பழங்குடிகள், இளைஞர்கள், படித்தவர்கள் என்று பலரும் நக்ஸலைட்டுகளை ஆதரிக்கிறார்கள். அவர்களை வெற்றிகொள்வது சுலபமான காரியமல்ல. நக்சலிஸம், சட்ட ஒழுங்கு பிரச்னையல்ல.

சுதீப் சந்திக்கும் ஓர் அதிகாரியின் கருத்து இது. நக்சலிஸத்தை மிகப் பெரிய அச்சுறுத்தலாகக் காட்டுவதை இந்தியா விரும்பவில்லை. ஆமாம் அது ஒரு பிரச்னைதான் என்று மேம்போக்காக குறிப்பிடவே அரசு விரும்புகிறது. நக்சலிஸத்தைப் பற்றி அதிகம் விவாதிக்க ஆரம்பித்தால், அதிகம் கவலைப்பட ஆரம்பித்தால், பிரச்னையின் பின்னணியை ஆராயவேண்டியிருக்கும். ஒரிஸ்ஸா, மேற்கு வங்கம், பிகார், ஆந்திரா, ஜார்க்கண்ட் என்று இந்தியாவின் வளர்ச்சியற்ற பகுதிகள் குறித்து சிந்திக்கவேண்டியிருக்கும். அதை இந்தியா விரும்பாது. அதே சமயம், காஷ்மீர் குறித்தும் பாகிஸ்தான் குறித்தும் இந்தியா கவனம் செலுத்தும். காஷ்மீர் தீவிரவாதம் குறித்து உரத்து விவாதங்கள் நடத்தும். வெளி எதிரிகள் இருந்தால் பரவாயில்லை. உள் எதிரிகளை அங்கீகரிக்கக்கூடாது.

மாவோயிஸ்டுகள் யார்? சுதீப் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். 'மாவோயிஸ்டுகள் தேசபக்தி கொண்டவர்கள். அவர்களே இதனை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் தனி தேசம் கோரவில்லை. அது ஏற்கெனவே அவர்களிடம் உள்ளது. அவர்கள் நினைத்தபடி அது இல்லை என்பதுதான் விஷயம்.'

தற்போதைய மீடியா செய்திகளைப் பார்க்கும்போது, பெரிய அளவில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் நடவடிக்கையை இந்தியா எடுத்து வருவதை யூகிக்க முடிகிறது.

புத்தகத்தை முழுவதுமாகப் படித்த பிறகு, மேலதிகம் எழுதுகிறேன்
மருதனின் வலைப்பதிவில் இருந்து

http://img.dinamalar.com/data/images_news/tblfpnnews_67621576787.jpg
http://marudhang.blogspot.com/2009/10/blog-post.html

http://1.bp.blogspot.com/_iCwfgochm0s/R3Sw_oAgwxI/AAAAAAAAA24/zYlDVH6bsQk/s320/sign_2%5B1%5D.jpgகலக்கல் ராசி பலன் ................!


மேஷ ராசி மக்களே!

ஏலேய் மக்கா, ரெண்டாவது மாடியிலிருந்து, மூனாவது மாடிக்கு
குரு பெயர்ச்சி ஆகறதால, நீங்க 2ல இருந்தா 1க்கும், 1ல இருந்தா
0க்கும், 0ல இருந்தா, அதான் கீழ் போர்ஷன்ல இருந்தா பூமிக்கடியில
போய் ஒளிஞ்சிக்கோங்க!

மேலும் நீங்க இங்கிலீசுல, 'a,e,i,o,u', அப்புறம் தமிழில 'கசடதபற'ல
ஆரம்பிக்கிற வார்த்தைகளை 126 நாள் பேசக்கூடாது. ஜோடி நெம்பர்
ஒன்னோ, மானாட மயிலாடவோ மாங்கு மாங்குன்னு பார்த்தா,
கல்யாணம் ஆகாதவங்களுக்குக்கூட விவாகரத்து நடக்க வாய்ப்பிருக்கு.

பரிகாரம்: ராமராஜனையோ, ஜே.கே. ரித்தீஷையோ உங்க காஸ்ட்யூம்
டிசைனரா நியமிச்சு, அவங்க சொல்ற கலருல வலம் வருதல் ஷேமம்.
................................................................................................
ரிஷப ராசி மக்களே!

நீங்க அடுத்த ஆறு மாசத்துக்கு நேரா நிமிர்ந்து நடக்கக்கூடாது.
98.3டிகிரி சாய்ஞ்சாப்ல நடக்கறது நல்லது. நடக்கறப்போ முக்கியமா
உங்க வலதுகாலும், இடதுகாலும் உரசவே கூடாது. அப்படி
நடக்காலேன்னா என்ன ஆகும்னு கேக்கறீகளா, நடக்கக்கூடாத
தெல்லாம் நடந்துரும். யோகாதிபதியான குரு,பாதகாதிபதியான
சனியோட வீட்டுல வலுக்கட்டாயமா தொடர்வதால, உங்க புள்ளைக்கு
எந்தக் கல்லூரியில இடம் கிடைக்கலைன்னாலும், சட்டக் கல்லூரியிலயாவது
இடம் கிடைக்கும்.

பரிகாரம்: உங்களுக்கு ஏழரை உச்சத்துல உட்கார்ந்துறதால, 'நாலரை
பால்' குடிக்கிறது நல்லது.
................................................................................................
மிதுன ராசி மக்களே!

எஸ்.எம்.எஸ் அனுப்பி அனுப்பியே, முடக்குவாதம் வந்த மிதுன மக்களே,
அடுத்த குருபெயர்ச்சிவரை நீங்க செல்லைக் கையால தொடக்கூடாது,
காதாலயும் தொடக்கூடாது.
குரு ஆறுல இருந்து பாஸாகி ஏழுக்கு வந்தாலும், சனி எட்டாம்
பாதத்துலயிருந்து தொடர்ந்து 'நோக்கியா'. அதனால செல்லோட யாரும்
பக்கத்துல வந்தாக்கூட கல்லைக் கண்ட நாய் மாதிரி தறிகெட்டு ஓடுறது நலம்.
இல்லாட்டி சனி ரிங்டோனா 'சங்கு சவுண்டை' அனுப்பி வைக்கும்.

பரிகாரம்: ரிலையன்ஸ் அம்பானிக்கு வாராவாரம் ஞாயித்துக்கிழமை நெய்
விளக்கு போடணும்
...................................................................................................... .
கடக ராசி மக்களே!

சன் டிவிக்கும் கலைஞர் டிவிக்கும் வித்தியாசம் தெரியாம திரியுறநீங்க,
இன்னும் ஏழரை மாசத்துக்கு, டி.விப் பொட்டியில, நியூஸே பார்க்கக்கூடாது.
அதுவும் அடியில் ப்ளாஷ் நியூஸ் ஓடிச்சுன்னா, தெறிச்சு தெற்குப் பக்கமா
ஓடுறது நல்லது.

ஏன்னா, ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு. உங்க ராசியோட
அஞ்சாவது வீட்டைக் குரு குத்துமதிப்பா பார்க்குறதால, மதுரைக்குப் போய்
மறந்து தினகரன் வாங்கிடப் போறீங்க, கவனம்.

பரிகாரம்: டேபிள்ல குரு இருந்தாலும் வீட்டுக்குள்ள வர்ற கேபிள்ல
சனி இருக்கறதால,உங்க வீட்டு ரிமோட்டை உடனடியா எடுத்துட்டுப் போய்,
பேங்க் லாக்கர்ல வைச்சிருங்கோ! முரசொலியில் ராசிபலன் வருகிறதா என்று
தேடிப்பாருங்கோ!
..........................................................................................................
சிம்ம ராசி மக்களே!

குருவும் ராகுவும் ஒரே நேரத்துல நாலாம் பாதத்துக்கு 'Login'
ஆகியிருக்கறதால, இன்னும் 222 நாளுக்கு நீங்க இமெயில் செக் பண்ணக்கூடாது.
சாட் ஆகவே ஆகாது.

'orkut, facebook' பக்கம் தலை, கை, கால் எது வைச்சும் படுக்கக்கூடாது.
முக்கியமா வலைப்பதிவை கொலைவெறியோட பண்ணுறவங்க, அந்தப்பக்கமே
வரக்கூடாது.

ஜூன், ஜூலை மாதத்துல குரு லாப வீட்டுல குந்தப்போறதால,
மேட்ரிமோனியல்ல பதிஞ்சு வைச்சுருக்கிற கன்னிப்பசங்களுக்கு உடனடியா
சஷ்டியப்த பூர்த்தி ப்ராப்திரஸ்து!

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் இட்லிவடையைத் தேடிக் கண்டுபிடிச்சு
வடைமாலை சாத்தறது உத்தமம்.
..............................................................................................................
கன்னி ராசி மக்களே!

ஹைக்கூ.. பைக்கூ.. கொக்கரக்கூ.. இப்படி எந்தவித கவிதைகளையும்
உங்க வாழ்க்கையில நீங்க இன்னும் அரை வருசத்துக்கு நுழையவிடக்கூடாது.
வைரமுத்து, வாலி வகையறாக்களை பாத்தா உங்க வாய் 'வாய்தா' வாங்கிட்டு
போயிடறது நல்லது.

முக்கியமா பின்நவீனத்துவக்காரங்ககிட்ட முன்னெச்சரிக்கையா இருக்கறது
நல்லது. இதையெல்லாம் மீறி நீங்க காதல் கவிதை படிச்சீங்கன்னா, குருவே
தடுத்தாலும் உங்க கண்ணை 'சனி பகவானோட' காக்கா வந்து கொத்திரும்.
........................................................................................................................

என்னுரை: இதற்குப் பரிகாரம் எழுதி, அடுத்து உள்ள ஆறு ராசிகளுக்கும்
பலன் எழுதுவதற்குள், அந்த ஜோதிடர் கடத்தப் பட்டுள்ளதாக அறிகிறேன்

கோபமுற்ற சில கட்சிக்காரர்கள் சேர்ந்து அவரைக் கடத்திக் கொண்டு போய்
விட்டதாகத் தெரிய வருகிறது.

1. தாடியும், மீசையும்

தாடி, மீசையிடம் சொல்கிறது.
இருவரும் ஒன்றாகப் பிறந்தோம் வளர்ந்தோம்...
ஆனால் நீ வீரத்திற்கு, நான் மட்டும் சோகத்திற்கா?

2. லேடீஸ் பஸ்

ஏ பேருந்தே! எளிதில் தீப்பற்றக்கூடியதை ஏற்றக் கூடாது என்று சொல்லிவிட்டு
இத்தனை இளம் பெண்களை ஏற்றிச் செல்கிறாயே!

3. லஞ்சம்

வாங்கினேன்...கைது செய்தார்கள்
கொடுத்தேன்...விடுதலை செய்தார்கள்!

4. அரசியல்

பிறர் சொத்தை சூரையாடினான்...திருடா என்றார்கள்
பல உயிர்களைக் கொன்றான்...கொலைகாரா என்றார்கள்
சில பெண்களின் கற்பை பறித்தான்...பாவி என்றார்கள்
இவை அனைத்தயும் செய்தான்...தலைவா என்றார்கள்!!!

5. அரசியல்வாதி

ஒரு அரசியல்வாதியின் கடைசி சடங்குகள் செய்யும் போது...
மறந்தும் கைத்தட்டி விடாதீர்கள்!
அவன் மறுபடியும் எழுந்துவிடுவான்!பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg


Update me when site is updated

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!