தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, October 11, 2009

♥ கற்பழிப்பில் கைதேர்ந்த சிங்கள இராணுவம் ♥


கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை! கற்பழிப்பில் கைதேர்ந்த ஸ்ரீலங்கா இராணுவத்தை கட்டியம் கூறி நிரூபிக்கத் தேவையில்லை!

- ஹைத்தி நாட்டில் அந்நாட்டுப் பெண்களை தான்தோன்றித்தனமான கற்பழிப்பு!
- கிரிசாந்தி கற்பழிப்பு - கொலை - கீழதரமான செயலுக்கு எடுத்துக்காட்டு
- சாரதாம்பள் கற்பழிப்பு - கொலை - சரித்திரம் அழிந்துபோகாத பதிவு
- கோணேஸ்வரி கற்பளிப்பு - கொடூரத்தின் ஒரு எடுத்துக்காட்டு
- தர்சினி கற்பழிப்பு - கொலை தரங்கெட்ட ஸ்ரீலங்கா இராணுவத்தின் பதிவு!
- 13 வயதான மனோதுஸ்காவை கற்பளிப்பு மனித குலத்திற்கே கேவலமான பதிவு!
- தென்னிலங்கையில் முட்டை விற்கச் சென்ற 14 வயதுச் சிறுமியைக் கற்பழித்தது!


இவையெல்லம் ஒருசில உதாரணங்களே தவிர இன்னமும் முழுமையான விபரக் கோவைகள் கைவசம் உள்ளன. அவற்றைக் கையும் மெய்யுமாகச் சர்வதேசத்திடம் ஒப்படைக்க முன் வரும் இலங்கைப் பிரஜைகளாயினும் சரி, வெளிநாட்டுப் பிரஜைகளாயினும் சரி அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று பொய்க்குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்பட்டு,பின்னர் கொலை செய்யப்பட்டு, அவர்கள் பற்றிய தடயங்களை அழித்து விடுவதிலும், இலங்கையின் இராணுவத்திற்கும், புலனாய்வுப்பிரிவு என்று கூறிக்கொள்ளும் கொலைகாரப் பிரிவுக்கும் கைவந்த கலையாகிவிட்ட வேளையில் எப்படித்தான் அமைச்சர்கள் எல்லோரும் தங்கள் நாட்டு இராணுவம் பாலியல் துஸ்பிரயோகம் செய்யாதவர்கள் என்று பச்சைப் பொய்யைச் சொல்லிக் கொள்வதுடன், அமெரிக்க அமைச்சர் மாண்புமிகு கிலாரி கிளிங்டன் அவர்களின்
குற்றச்சாட்டை வாபஸ் வாங்கச் சொல்கிறார்களோ தெரியாது.

சர்வதேச பாதுகாப்பு இராணுவமாக ஹைத்தி நாட்டிற்கு இலங்கை இராணுவத்தின் அதி உயர் (றோயல்) பிரிவினர் சென்றபோது, அங்கும் பாலியல் குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் திருப்பி இலங்கைக்கு அனுப்பப்பட்டது இன்னமும் பதிவில் உள்ளதை மகிந்த அன்கோ மறந்து விடக்கூடாது என்பதை இங்கு ஸ்ரீலங்கா அரச மட்டத்தினருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அதி உயர்பிரிவு இராணுவத்தினரே, வெளிநாட்டில் எத்தனையோ கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்த பாலியல் நாடகம் ஆடியவர்கள் என்றால் , உள்நாட்டில், பிறர் கட்டப்பாடுகள் ஏதுமற்ற நிலையில், தங்கள் முழுமையான கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள அப்பாவிப் பெண்கள் மீது இவர்கள் எத்தகைய வெறித்தனங்களைக் காட்டியிருப்பார்கள். இதுவும்கூடத் தெரியாதவர்கள் அல்ல சர்வதேச சமூகம் என்பதை ஸ்ரீலங்கா பாசிச அரசமட்டத்தினர் புரிந்துகொள்ள வேண்டும் .

அதுமட்டுமல்லாது, இலங்கை இராணுவத்தின மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்படுவது அபாண்டமானது என்பதை அவர்கள் மகிந்தர் சமூகம் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அமெரிக்க அமைச்சர் மாண்புமிகு ஹில்லரி கிளிங்டன் அவர்களை வாபஸ் வாங்கச் சொல்ல இலங்கை அரச மட்டத்தினருக்கு எந்தவிதமான அருகதையும் இல்லை என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கை இராணுவத்தினரால் அரங்கேற்றப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கான பல தடயங்கள் இதோ இத்துடன் இணைக்கப்பட்டள்ளது. இது மட்டும் போதுமா? இல்லை இன்னும் பல ஆதாரங்கள் வேண்டுமா?

இராணுவத்தின் பல பாலியல் துஷ்பிரயோரயோகத்திற்கான தடயங்களை அதிக பணத்திற்கு விற்க முயன்ற சிங்கள இளைஞர்கள் கடந்த மாதம் மாளிகாவத்தையில் பாதாள உலகக் குழுவினர் என்று கூறி இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் என்கவுண்டர் முறையில் சுட்டக்கொல்லப்பட்டது அனைவுருக்கும் ஞாபகமிருக்கும்.

இப்படித் தடயங்களை அழித்துவரும் அரசின் புலனாய்வுத்துறை. இதற்கு மத்தியில் தங்கள் இராணுவத்தின் இல்லாத தூய்மைபற்றிப் பேச அரச அமைச்சர்களுக்கு என்ன அருகதை
இருக்கின்றதோ. உண்மைகளை ஒளிக்காமல் வெளிக்கொண்டுவரும் வீரப் பெண்மணி ஹில்லரி கிளிங்டன் அம்மையாருக்கு உலகத்தமிழ் மக்கள் சார்பில் நன்றி கலந்த வாழ்ததுக்கள்.!

தொடரட்டும் உங்கள் பணி! உண்மைகள் உறங்குவதில்லை! ஒருநாள் முழுமையாக வெளிவரும்.

- சங்கிலியன்
http://www.ponmaalai.com/2009/10/blog-post_6894.html

தமிழர்களுக்காக வீரமரணத்துக்கு தயாராகுங்கள் - தா.பாண்டியன்

Saturday, January 17, 2009

சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக வீர மரணம் அடையவும் தமிழ் இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.மறைமலைநகரில் உண்ணாவிரதம் இருந்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை வாழ்த்தி அவர் பேசுகையில்,இலங்கை பிரச்சனை தீர்க்க முடியாத பிரச்சனையே அல்ல. ஆனால், இந்திய அரசுக்கு மனமில்லை. தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கின்றனர்.நிலவுக்கு சந்த்ராயன் விண்கலத்தை அனுப்புகின்றனர். ஒரு ஏவுகணையை இலங்கையை நோக்கி திருப்பி நிறுத்தினால் போதும். போர் நிறுத்தம் ஏற்பட்டுவிடும். ஆனால், இதை யார் செய்வது?.முல்லைத் தீவில் அடைக்கம் புகுந்துள்ள லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை விமானப் படை குண்டுகளை வீசி கொன்று குவித்து வருகிறது.மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பி நீங்கள் உண்ணாவிரதம் இருக்காதீர்கள். நல்ல முடிவை எடுங்கள். தமிழர்களுக்காக போராடும் உங்களைப் போன்ற நல்ல தோழர்களை இழக்க நாங்கள் விரும்பவில்லை. நாம் சாகப்பிறந்தவர்கள் அல்ல.தமிழ் இனத்தை அழிப்பவர்களை நசுக்க பிறந்துள்ளோம். வாக்குச் சீட்டுகளை பெறுவதைவிட தமிழ் மக்களின் உயிரை காப்பதுதான் முக்கியம்.இலங்கை பிரச்சினையில் எங்கள் பங்கு என்ன என்பதை, மாநில செயற்குழுவில் அறிவிக்க இருக்கிறோம். இலங்கை பிரச்சனையைத் தீர்க்க இளைஞர்கள் வீர மரணம் அடையவும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

http://stop-the-vanni-genocide.blogspot.com/2009/01/blog-post_473.html

விஜய் படங்களின் ஓட்டைகளில் வழி(டி)யும் லாஜிக்

கமல் படம் பார்க்கும் முன் இணையத்தில் விமர்சனங்களைப் படித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு(குறிப்பா என்னுடையது என்று சொல்லவில்லை) என்று ஒரு நெருங்கிய நண்பன் சொன்னான்.அவன் சொன்னதை அப்படியே தருகிறேன்."இணைய அறிவுஜீவிகள் சொன்ன பார்ப்பனீசம்,இந்துத்துவா,குறியீடு எல்லாம் ஞாபகப்படுத்தி ஒவ்வொரு காட்சியாக பார்க்கும் நேரத்தில் அடுத்தக் காட்சியே வந்து விடுகிறது..அவர்கள் பார்வையிலே படம் பார்த்து எனக்கும் இருக்கும் ஒருவன் காணாமல் போய் விட்டான்..இந்த கூட்டத்தில் நீயும் ஒருவன்.." என்று என்னை நோக்கி சுண்டுவிரலை நீட்டினான்(நான் இப்போழுது தான் எழுத தொடங்கியதால் எனக்கு சின்ன விரலாம்).எனக்கு அந்த அளவுக்கு எதையுமே துல்லியமாக கணிக்க தெரியாத காரணத்தாலும் என்னால் ஒரு ரவுடியாக மாற முடியாதோ என்ற பயத்தாலும்(கொரில்லா செல்) இதுவரை அமைதி காத்து வந்தேன்.அதை உடைத்து முதலில் கை வைக்க போகும் தலை தப்பு தளபதி விஜய் அவர்கள்.(முதல்ல விஜய் அப்புறம் தான் மத்தவங்க..)

வில்லு படத்தில் மகன் விஜயை மண்ணுக்குள் புதைத்தப் பிறகு ஒரு மண்புயல் உருவாகி அவர் குழிக்குள் இருந்து எழுந்து வந்து உளுந்து வாங்குவார் இல்ல அடி வாங்குவார் அப்புறம் கொடுப்பார்.அப்படி வந்த மண்புயல்ல கொஞ்சம் மண் என் கண்ல விழுந்து நான் கண் கலங்கிட்டேன்.(இந்த படத்துக்கு நான் அழுததால் கூடப் படம் பார்ப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.காரணம் துள்ளாத மனம் துள்ளும் படத்தில் விஜய் அழும்போது நான் மட்டும் சிரித்து வீட்டில் திட்டு வாங்கினேன்.)

குருவி படத்துல ஒரு லாங்க் ஜம்ப் பண்ணி கூவத்தையே தாண்டி அப்படியே ஓடுற டிரெயின்ல ஏறிய சமயம் நான் குறுகிப் போய் உக்காந்துட்டேன்.(தரணி இந்த சீன் சொல்லும் போது உங்களுக்கே சிரிப்பு வரல..).இதெல்லாம் உங்களுக்கு ரொம்ப ரொம்ப சாதாரணம் என்று அடுத்த காட்சியிலே தெரிந்து கோண்டேன்.இன்னும் கண்ணுகுள்ளே நிக்குது நீங்க லிப்ட உடச்சு வெளியே வந்த சீன்.

அழகிய தமிழ்மகன் படத்தில் நீங்க ஒரு தடகள வீரர் தான் நான் ஒத்துக்கிறேன்.அதுக்காக ஸ்ரெயாவ மகாபலிபுரம் ரோட்ல துரத்தின நீங்க அப்படியே கோல்கொண்டா வந்துடீங்க(ஆந்திரா பிளேன் கூட இவ்வளவு வேகமா வராது).அதை பார்த்து நான் அசந்து போயிட்டேன்.

போக்கிரியும்,கில்லியும் நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு நடித்த படம்.பின்ன ஒரிஜினல் பார்த்த எனக்கு மகேஷ் பாபு தான் தெரிஞ்சாரு.அதுக்காக அவரு மூக்க ஊறிஞ்சா நீங்களும் அப்படி செய்யனுமா.(அன்னைக்கு அவருக்கு ஜலதோஷம்.மகேஷ் பாபு சீக்கிரம் ஒரு ஹிட் படம் குடுங்க)

ஆதி படத்துல வர்ற கடைசி சண்டையிலே முதுகு புல்லா தீப்பிடிச்சி எரியும்,அதை அணைக்காம கொள்ளாம சண்டை போடுவீங்க.அதைப் பார்த்து நான் தீய்ஞ்சு போயிட்டேன்.

சிவகாசி படத்துல ஹீரோயின் வந்து கேட்டப் பிறகு பொங்கி வரும் உங்க அம்மா பாசத்துல நான் தொங்கி போயிட்டேன்.அதுல வர்ற கடித மிரட்டல் எல்லாம் தூள் படத்துல வந்த மாதிரி ஞாபகம்.(பேரரசு தரணியோட உதவி தானே..பின்ன எப்படி இருக்காம போகும்)ரெண்டு படம் முடித்தப் பிறகு பேரரசுவ ஏன் அஜித் மேல ஏவி விட்டுடீங்க..

மதுரை படத்துல செல்போன்ல இருக்கும் பாம் பேசினா வெடிக்கும்,அதை தடுக்க சிக்னல் டவரையே வெடிக்க வைப்பீங்க.அதை பார்த்து நான் அசந்து போயிட்டேன்.காய்கறி விக்கிற பையனுக்கு இவ்வளவு அறிவா? பின்னாடி வர்ற சந்ததிகள் எப்படி இருப்பாங்கன்னு யோசித்து பார்த்தா விஜய் இந்த படத்துல நீங்க கலெக்டர் தானே.

திருமலை படத்தில் வில்லனை காப்பாத்த ஆறுபது அடி உயரத்தில் இருந்து குதித்து கால லேசா தடவும் போது எனக்கு ஒன்னுமே புரியல அதே உயரத்துல வில்லன் குதிச்சா மட்டும் சிதறி விடுகிறான் எப்படி.

புதிய கீதை படம் சில பல கோடியில் எடுத்து கடைசியில சைட் ஸ்டாண்ட் போட்டு வண்டி ஓட்டக் கூடாது சொன்ன மெஸேஜ் பார்த்துட்டு நான் மெர்சல்யாயிட்டேன்.

தமிழன் படத்துல நீங்க ஸ்டாம்ப் ரீலிஸ் பண்ணும் பொது கவர்னர் தமிழ்ல பேசுவாரு.நான் இந்த படத்தப் பார்த்து அப்படியே ஷாக் ஆயிட்டேன் காரணம் திரைக்கதை உங்க அப்பா எழுதினார் போல.

ஷாஜகான் படத்துல நீங்க டிரெயின்ல பறந்து பறந்து சண்டை போடுறதைப் பார்த்துட்டு கவுந்து படுத்துட்டேன்.ஆமா இந்தப் படத்துக்கும் ஷாஜகான் இந்த பெயருக்கும் என்ன சம்பந்தம்.காதலி கிடைக்காம ஓவரா சிரிச்சி பின்னாடி இருந்தவன் கிட்ட ரெண்டு உதை வாங்கினேன்.அந்த வெறிப் பிடிச்ச ரசிகனைப் பாக்கத் திரும்பினால் அவன் எனக்கு மேல சிரிச்சி எனக்கு உதை கொடுத்து இருக்கிறான்.

நேரா ரசிகன் படத்துக்கு போவோம்.நல்லவேளை சங்கவிக்கு பாட்டி இல்ல.

வருஷா வருஷம் தீபாவளிக்கு மொக்கை படம் பாக்குறது தான் வழக்கம்.இந்த வருஷம் தப்பிச்சோம்.

2001 - ஷாஜகான்

2002 - பகவதி

2003 - திருமலை

2004 - அட்டகாஷம்

2005 - அது ஒரு கனா காலம்

2006 - வல்லவன்

2007 - அழகிய தமிழ்மகன்.

2008 - சேவல்

2009 - இந்த வருஷம் தப்பிச்சோம்.(ஆதவனா இருக்கலாம்).வேட்டைகாரன் இல்ல

2010 - இறா இல்ல சுறா

டிஸ்கி :

பகவதி வர்ற வசனம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா ? "உயிரை எடுக்க ஆசைப்படுறவன் உயிர் மேல ஆசைப்படக் கூடாது" நாங்களும் உயிரை வெறுத்துத்தான் தான் போறோம்.இத்தனை உயிரை எடுக்கிறீங்க உங்களுக்கு உயிர் மேல ஆசை கிடையாதா ?

http://irumbuthirai.blogspot.com/2009/10/blog-post_05.html

படித்ததில் பிடித்தது

முன்னுரை :
உங்களில் பலருக்கு "டெலிமார்க்கெட்டிங்" எனப்படும் நம் அனுமதியில்லாமலேயெ தொலைபேசி வாயிலாக தங்கள் பொருட்களை விளம்பரம் செய்யும் மார்க்கெட்டிங் ரம்பங்களுடன் பேசிய (அறுபட்ட) அனுபவங்கள் வாய்த்திருக்கும்!
இப்பேர்ப்பட்டவர்களிடமிருந்து தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தப்புவது எப்படி?

இதோ சில ஐடியாக்கள் :

1. டெலிமார்க்கெட்டர் பேசி முடித்தவுடன் "ஒன்ஸ்மோர் பிளீஸ்" என பாந்தமாக, பவ்யமாகக் கேளுங்கள். நடுநடுவே "ஓ.. லவ்லி.. ஆஹா.. ஓ..அப்படியா.. ஃபேண்டாஸ்டிக்" எனப் போட்டுத்தாக்கிவிட்டு கடைசியில், மீண்டும் ஆரம்பியுங்கள், "ஒன்ஸ்மோர் பிளீஸ்."

2. பேசத் தொடங்கியவுடனேயே நீங்கள் வேலையாக இருப்பதாகவும், போன் நம்பர் கொடுத்தால் பிறகு தானே பேசுவதாகவும் கூறுங்கள். ஆனால் பேசாதீர்கள்.

3. பேசிக்கொண்டிருக்கும்போது நடு நடுவே ஹலோ.. ஹலோ.. என அலறுங்கள். சிக்னல் கிடைக்காததால் விட்டுவிட்டுக் கேட்பதாகக் கூறுங்கள். முடிந்தால் சத்தமாக, வெகு சத்தமாகப் பேசச் சொல்லுங்கள். அவர்கள் உச்சஸ்தாயில் பேசிக்கொண்டிருக்கும்போதே லைனைக் கட் செய்யுங்கள்.

4. விஷயத்தைக் கேட்டுவிட்டு, தற்போது சாப்பிட்டுக்கொண்டிருப்பதாகவும் சாப்பிட்டு முடிக்கும்வரை லைனிலேயே காத்திருக்கும்படியும் வேண்டுங்கள். எப்போது போன் செய்தாலும் சற்றுக் காத்திருக்கும்படி கேட்டுக்கொள்ளுங்கள்.

5. போனை எடுத்து விபரம் கேட்டுவிட்டு, அந்த மொபைலை தன் நண்பர் மறந்துபோய் டேபிளில் வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டதாகக் கூறி, உங்களுக்குப் பிடிக்காத நபர் யாருடைய போன் நம்பராவது, முக்கியமாக டென்ஷன் பார்ட்டியாக இருந்தால் நல்லது. அவருடைய எண்ணைக் கொடுத்துப் பேசச் சொல்லுங்கள்.

6. எந்தப்பொருள் வாங்குவதாக இருந்தாலும் தனது மேனேஜர்தான் முடிவு செய்யவேண்டும், அதனால் அவரிடம் பேசுங்கள் எனக் கூறிவிட்டு, மொபைலில் பேசத் துடித்துக்கொண்டிருக்கும் உங்கள் நான்கரை வயது மகனிடம் கொடுங்கள்.

7. அவர்களுடைய பொருள் மிக அருமையாக இருப்பதால் அதைப் பற்றிய விளக்கத்தை ஒவ்வொரு வார்த்தையாக மெதுவாக சொல்லச் சொல்லவும். ஏனென்றால் அதை பேப்பரில் எழுதுவதுபோல் பாவ்லா காட்டப்போகிறீர்கள்.

8. அவர்கள் பேச ஆரம்பிக்கும்போது, "நல்லா இருக்கீங்களா?" எனக் கேட்டுத்தான் ஆரம்பிப்பார்கள். ஆரம்பத்திலேயே பிடித்துவிடுங்கள், "அதை ஏன் சார் கேட்குறீங்க…. எங்க தாத்தா காலத்திலேர்ந்து…. " (1947ல் ஆரம்பித்து எதில் முடிக்கவேண்டுமென்பது உங்கள் விருப்பம்)

9. பேச ஆரம்பித்தவுடன் "ராங் நம்பர் சார்" எனக் கூறி விட்டு வைத்துவிடுங்கள்.

10. பேச ஆரம்பித்தவுடனேயே மலையாளம், ஹிந்தி, ஒரியா, குஜராத்தி போன்ற மொழிகளை மிக்ஸர் அடித்து ஒரு மொழியை உருவாக்கிப் பேசுங்கள்.

11. ஆச்சரியத்துடன் பேச ஆரம்பியுங்கள், "ஜோசப் நீயாடா பேசறே.. உங்கிட்ட பேசி ரொம்ப நாளாச்சு." எதிர்முனை சொல்லும், தான் ஜோசப் இல்லை என்று. நீங்கள் விடாதீர்கள், "ச்சும்மா ஜோக் அடிக்காதடா… எனக்குக் காது குத்தியாச்சு..." எதிர்முனை எதிர்பாலினத்தவராக இருந்தால் இன்னும் சுவாரசியம் கூடும்.

12. HSBC பேங்கிலிருந்து தொடர்பு கொண்டால் உங்கள் ஆபிஸ் எண்ணைக் கொடுத்து அந்த எண்ணுக்குப் பேசச் சொல்லுங்கள். அந்த எண் ICICI பேங்கின் மேலாளர் எண்ணாகத்தான் இருக்க வேண்டும் என நாம் சொல்லாமலே உங்களுக்குப் புரிந்திருக்கும்.

13. அவர்கள் தமிழில் பேசினாலும் ஆங்கிலத்தில் பேசச் சொல்லுங்கள். உங்கள் பீட்டர் இங்க்லீஷையும் 'டவுட் கேட்கிறேன் பேர்வழி!' என அவிழ்த்து விடுங்கள். இண்டர்வியூ செல்லும்முன் ஆங்கிலத்தில் பயமில்லாமல் பேசி பிராக்டிஸ் செய்வதற்கு இதை விட தோதான ஆட்கள் கிடைப்பார்களா என்ன?!

முடிவுரை :

இதையெல்லாம் பரீட்சித்துப் பார்க்குமுன் நல்ல பிள்ளையாக தெளிவாக, தன்மையாக, பொறுமையாக எடுத்துக்கூறுங்கள், இது போன்ற அழைப்புகள் தயவு செய்து வேண்டாமென்று. அவர்கள் பாவம் இல்லையா! அதைமீறி அவர்கள் கேட்கவில்லையென்றால் அவர்கள் காதில் இரத்தத்தைப் வரவைத்துவிட வேண்டியதுதான். ஹ்ம்ம்…வேறுவழி?

http://abdulraj89.blogspot.com/2009/10/blog-post.html

அபூர்வ சகோதரர்கள் கமல் நீக்கிய பாடல் உங்களுக்காக....

http://kittipullu.blogspot.com/2009/10/blog-post_05.html


நம்ம கமல் கலை உலகத்துக்கு வந்து 50 வருடம் ஆனதற்காக விழா எடுத்து பெருமை படும் நாம் அவர் ஒரு ஒரு படத்திலும் எப்படி perfection எதிர்பார்க்கிறார் என்று பாருங்கள்.....கீழே உள்ள பாடல் அபூர்வ சகோதர்கள் படத்திற்காக இசைஞானி இசை அமைத்த பாடல்.இந்த பாடல் இடைவேளை வரும் போது வருவதாக படமாக்க பட்டுள்ளது ....பின்பு இந்த பாடலை விட "ராஜா கைய வைச்சா" பாடலை பயன் படுத்தி கொள்ளலாம் என்று அதனை பயன் படுத்தி உள்ளனர்.எனக்கு தெரிந்த வரையில் ராஜா கைய வைச்சாவிற்கு எந்த அளவிலும் இந்த பாடல் குறைவில்லை.இருந்தாலும் அவர் இந்த பாடலை நீக்கும் போது அவரிடம் உள்ள இசை தேடல் தெரிகிறது .......மற்றபடி கமலின் agmark கடவுள் சீண்டல் இந்த பாட்டிலும் இருக்கிறது


இந்த பாடலை முதலில் படமாக்கினோம் அதனால் ஜனகராஜ்,சின்னி ஜெயத் கதபாத்திரம் பின்பு மாற்றி அமைக்க பட்டது சொன்னவர் கமல்.நானும் கமல் ரசிகன் என்ற முறையில் இதனை உங்களிடம் பகிர்ந்து கமலுக்கு விழா எடுத்து விட்டேன்.டெம்போலாம் வைச்சு கடத்திருகன் பாத்து வோட்டு போடுங்க பா...

அப்பாவிகளை பந்தாடும் பாகிஸ்தானிய படையினர் (வீடியோ)


பாகிஸ்தானில் தீவிரவாத சந்தேகநபர்களை இராணுவ சீருடையில் இருப்பவர்கள் மிருகத்தனமாக அடித்து துன்புறுத்துவதை காட்டும் வீடியோ. பாகிஸ்தானை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களால் பதியப்பட்ட வீடியோ, வெளிநாட்டு தொடர்பாளர்களுக்கு அனுப்பப்பட்டது. தாலிபான் வேட்டையில் இறங்கியுள்ள பாகிஸ்தானிய படையினர் அக்கிரமங்களுக்கு, அப்பாவி மக்களும் பலியாகி வருவதை இந்த வீடியோ நிரூபிக்கின்றது.

Video Shows 'Pakistan Army Abuse'
The 10-minute clip, shows men in Pakistan army uniforms questioning at least four suspects in turn, before pushing them to the ground and kicking and whipping the cowering and screaming detainees.
Posted October 03, 2009

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!