Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, October 11, 2009

♥ 30 வருடங்களாக பட்டாசு வெடிக்காத கிராமம் ♥

30 வருடங்களாக பட்டாசு வெடிக்காத கிராமம்

 சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வவ்வாலுக்காக பட்டாசு வெடிக்காத வினோத கிராமம் உள்ளது. இங்குள்ள ஊனத்தூர் கிராமத்தில் சுப்பிரமணியர் கோயில் உள்ளது. இதனையொட்டி மணி அம்மன் கோயில்.

இக்கோயில் அருகில் மருத மரம். மூங்கில் மரம் உள்ளது. இங்குள்ள மரங்களில் கடந்த 30 வருடங்களாக சுமார் 15 ஆயிரம் வவ்வால்கள் வசித்து வருகிறது. காலை நேரத்தில் அம்மன் கோயிலிலும் மதியம் சுப்பிரமணியர் கோயிலுக்கும் இடம் மாறிக்கொள்ளும்.

இரவில் அருகில் உள்ள சின்னக்கல்வராயன் மலைக்கு சென்று இரை தேடி பறந்து விடும். காலையில் அம்மன் கோயிலுக்கு வந்து சேர்ந்து விடும்.

கோயிலில் இருக்கும் நேரத்தில் வவ்வால்கள் கோரசாக எழுப்பும் குரலை இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றனர். இந்த வவ்வால்களை யாராவது வேட்டையாட வந்தால் தடுத்து அறிவுரை கூறி அனுப்பி விடுவர்.

ஒரு வவ்வால் சுமார் 1 கிலோ முதல் ஒன்றரை கிலோ வரை எடை இருக்கும். கோயில் விழாக்கள் என்றாலும், திருவிழாக்கள் என்றாலும் இக்கிராம மக்கள் பட்டாசு வெடிக்க மறுத்து விடுகின்றனர். குறிப்பாக தீபாவளிக்கு அதிர் வேட்டுகள் வெடிப்பதில்லை.

இந்த சப்தம் கேட்டு வவ்வால்கள் பயந்து ஓடிவிடும் என்ற பரந்த எண்ணத்தினால் தான். வவ்வால்களை பார்ப்பதற்கென்று ஒரு கூட்டம் இந்த கோயிலுக்கு வருகின்றனர்.


http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18318

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 

ட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

பிறப்பு, குடும்பம்

தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.

எழுத்தாற்றல்

பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1951ஆம் ஆண்டு 'படித்த பெண்' திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.

கம்யூனிஸ ஆர்வம்


இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.

கல்யாணசுந்தரம் அவர்களின் பன்பரிமாணங்கள்

1.விவசாயி
2.மாடுமேய்ப்பவர்
3.மாட்டு வியாபாரி
4.மாம்பழ வியாபாரி
5.இட்லி வியாபாரி
6.முறுக்கு வியாபாரி
7.தேங்காய் வியாபாரி
8.கீற்று வியாபாரி
9.மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி
10.உப்பளத் தொழிலாளி
11.மிஷின் டிரைவர்
12.தண்ணீர் வண்டிக்காரர்
13.அரசியல்வாதி
14.பாடகர்
15.நடிகர்
16.நடனக்காரர்
17.கவிஞர்

பட்டுக்கோட்டையாரின் முத்திரைக் கேள்வி

"சித்தர்களும் யோகிகளும்
சிந்தனையில் ஞானிகளும்

புத்தரோடு ஏசுவும்

உத்தமர் காந்தியும்


எத்தனையோ உண்மைகளை

எழுதிஎழுதி வச்சாங்க

எல்லாந்தான் படிச்சீங்க

என்னபண்ணிக் கிழிச்சீங்க?"


இது 1959-ல் பட்டுக்கோட்டையார் இந்த சமூகத்தை நோக்கி எழுப்பிய கேள்வி

"தனியுடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா, தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா..." என்றும், "திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" எனவும், "ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி" போன்ற பெரிய தத்துவங்களை எளிமையாக திரைப்பாடல்களில் இடம்பெற வைத்தவர் பட்டுக்கோட்டையார். தேவையில்லா உவமை, உவமானங்களைத் தேடி அவர் போனதில்லை.

பட்டுக்கோட்டையார் என செல்லமாக அழைக்கப்பட்ட பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் இந்த உலகில் வாழ்ந்தது மொத்தம் 29 வருடங்கள்தான் ஆனால் இந்த குறுகிய காலத்தில் அவர் எழுதிச் சேர்த்த கவிதைச் செல்வங்கள் நிறைய.

http://ularuvaayan.blogspot.com/2009/10/blog-post_9871.html



இந்த பிஞ்சு குழந்தையின் தமிழ் பற்றை பாருங்கள்..


http://www.youtube.com/watch?v=RpZQPDrWi4k








"இறப்பில் கூட இல்லாத திராவிடம்"



ப்படியோ 25 சுற்றுலாப்பயணிகள் மட்டுமே  உயிர்பிழைத் திருக்கிறார்கள். இதுவரை தமிழர்களின் 15 சடலங்கள் உட்பட இது  வரை 50 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 50 சடலங்கள்?

    "சாயங்காலம் ஐந்தரை மணிக்கு இந்தக் கோர விபத்து நடந்திருக்கிறது. இறந்தவர்கள் கையில் கட்டியிருக்கும் அத்தனை கடிகாரங்களும் 5.30-ல் நிற்கின்றன. 7 மணிக்குதான் போலீஸ் எங்கள் உதவியைக் கேட்டது. கொச்சியிலிருந்து 31 பேர் வந்தோம். 3 குழுவாகப் பிரிந்து ஆக்ஸிஜன் உதவியோடு மூழ்கித் தேடித் தேடி எடுத்து வருகிறோம்.  சில இடங்களில் 100 அடி 120 அடி ஆழம் இருக்கிறது. பாறை இடுக்குகளில் குழந்தைகளின் பிஞ்சு சடலங்கள்'' -கவிழ்ந்த படகின் முதுகில் நின்றபடி முகத்தில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டே சொன்னார் கப்பல்படை வீரர் அவினாஷ்.

    தன் குடும்பத்தில் 9 பேரை பறிகொடுத்துவிட்டு கதறிக் கொண்டிருந்தார் பெரியகுளம் சரஸ்வதி.

    "தேக்கடிக்குப் போகணும்னு நான்தானே கட்டாயப்படுத்தி கூட்டி வந்தேன்.  எங்க குடும்பத்துல 9  பேரை சாகடிச்சிட்டானே அந்த பாவிப்பய டிரைவர். நான் டிரைவர் சீட்டுக்கு பக்கத்துல இருந்தேன் சார். என் மகள் தாரணியும், சந்தியாவும் "மான், யானை, காட்டெருமை எல்லாம் வரும்னு சொன்னியே  எங்கேம்மா'ன்னு கேட்டு அடம்புடிச்சதுங்க. "இங்கே வாங்கம்மா... நான் காட்டறேன்'னு எங்க அண்ணன் ஜெயப்பிரகாஷ் குழந்தைகளை அப்பதான் போட்டோட இன்னொரு பக்கம் கூட்டிப்போனார். படகு வேகமா போயி லெப்ட்ல லேசா திரும்புச்சு. படகு சாயுற மாதிரி இருந்துச்சு. ஏய்... கவுறப்போகுதேனு கத்திக்கிட்டே அந்த டிரைவர் தண்ணிக்குள்ள குதிச்சுட்டான். எனக்கு ஒண்ணும் புரியலை. வேகமா எந்திரிச்சு ஸ்டேரிங்கை கெட்டியாப் புடிச்சேன்... முடியலை... படகு திடீர்னு தலைகுப்புற கவுந்திருச்சு. செத்தம்னு தான் நெனைச்சேன். கொஞ்ச நேரத்துல ஃப்ரன்ட் கண்ணாடியை உடைச்சு என் னை இழுத்து வேற படகுல போட்டாங்க. அந்தக் கண்ணாடி குத்திடுச்சு.

    பயணிகள் எல்லாரும் ஒரே பக்க மாகப்போய் நின்னதாலதான் பாரம் தாங்காம கவுந்ததா சொல்றாங்க. திடீர்னு ஸ்டேரிங்கை திருப்பினான். படகு ஒருமாதிரி சாய்ற மாதிரி திரும்புச்சு... போட் கவுறப்போகுதுன்னு சொல்லிக்கிட்டே சீட்ல இருந்து தண்ணிக்குள்ள டிரைவர் குதிச்சிட்டான். என் குழந்தை கள், எங்க மூத்தார் குடும்பம், என் அண்ணன் குழந்தைகள் மொத்தம் 9 பேரும் அய்யோ... அய்யோ... சுருளி அருவியைப் பார்த்துட்டு அப்படியே திரும்பிப் போயிருந்தா எங்க வாரிசுகள் பிழைச்சிருப்பாங்களே...'' -திரும்பத் திரும்ப சொல்லி கட்டட காண்ட்ராக்டர் ரவியின் மனைவி சரஸ்வதி கதறிய கதறல் இன்னும் நம் இதயத்தை துளைத்துக்கொண்டிருக்கிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் ஏந்தல் பகுதி. இதுதான் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி லேக். இங்குதான்... 30.9.09 புதன் மாலை 5.30 மணிக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற ஜலகன்யகா என்ற பைபர் கிளாஸ் இரண்டடுக்கு படகு கவிழ்ந்து, சுமார் 80 பேரை சாகடித்த கோரவிபத்து நடந்திருக்கிறது.

    பயணிகள் பலரை காப்பாற்றிய பயணிகளின் லோடுமேன் கண்ணன், ஜட்டியோடு தண்ணீர் சொட்டச் சொட்ட நின்றார்.

    "குமுளி கடை வீதியில நின்னுட்டிருந்தேன். படகு கவுந்திருச்சு, நீச்சல் தெரிஞ்சவங்க ஓடிவாங்க வாங்கனு கத்துனாங்க. படகுக் கண்ணாடிகளை உடைச்சுதான் பலரை காப்பாத்தினோம். படகுல ஒரு மூலையில ரெண்டு குழந்தைங்க... கட்டிப்புடிச்சபடி பிணமா படு பயங்கரம்ங்க...'' -கண்கலங்கினார் இளைஞர் கண்ணன்.

    "50 வருஷமா ஒரு விபத்தும் நடந்ததே இல்லையே...'' -புலம்பிக்கொண்டிருந்த தேக்கடி படகுத்துறை ஊழியர் களிடம் கவிழ்ந்த படகு பற்றி கேட்டோம்.

    "மற்ற 10 படகும் இரும்புப்பலகையி லான படகுகள். கவுறவே கவுறாது. அதோட மாடியெல்லாம் ஓப்பனா இருக்கும். ஸ்ட்ராங்க்கா இருக்கும். இது ஒண்ணு தான் ஃபைபர் பிளாஸ்டிக் போட். சென்னையில் நர்கீஸ் கம்பெனியில 80 லட்சத்துக்கு வாங்கினார்கள். புத்தம் புது போட். ஆகஸ்ட் 17 அன்னைக்குதான் லேக்கில் ஓட விட்டாங்க. ஃபர்ஸ்ட்லேயே கம்ப்ளைண்ட்தான். பேலன்ஸ் இல்லாம இப்படி அப்படி சாயுதுன்னு கம்ப்ளைண்ட்ஸ். அதிகாரிகள் கண்டுக்கலை. இந்தப் படகு எல்லாம் மீன்பிடிக்க மட்டும்தான் பயன் படுத்தணும். கமிஷன் கிடைக்குதேன்னு 80 லட்சம் கொடுத்து வாங்கிட்டு வந்து 80 பேரை கொன்னுட்டாங்க.  ஜாலியாக படகில் சவாரி செய்துகொண்டே, ஏரியை ஒட்டிய சரணாலயத்தில் வன விலங்கு களைக் கண்டு ரசிப்பதற்காக தினமும் சராசரியாக ஆயிரம் சுற்றுலா பயணி கள் தேக்கடிக்கு வருகிறார்கள்.

    படகின் கீழ்த்தளத்திற்கு 100 ரூபாயும், மேல்தளத்திற்கு 150 ரூபாயும் கட்டணம் வசூலிக்கிறார்கள். 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு டிக்கெட் இல்லை. கவிழ்ந்த படகில் 75 சீட்டுகள்தான். எக்ஸ்ட்ரா நாற்காலிகளைப் போட்டு 83 டிக்கெட் கொடுத்திருக் கிறார்கள். 20-க்கும் அதிகமான குழந்தைகள்  பயணித்திருக்கிறார்கள்'' என்றனர்.

    "கேரள சுற்றுலாத்துறை வருடத்திற்கு வரும் 120 கோடி வருமானத்தை மட்டும்தான் பார்க்கிறது. இவ்வளவு பெரிய டூரிஸ்ட் ஸ்பாட் டில் தீயணைப்பு நிலையமோ, மீட்புக்குழுவோ ஏற்படுத்தவில்லை. எந்தப் படகுக்கும் கண்டக்ட ரும் இல்லை'' -வேதனையைக் கொட்டினார் குமுளி ஹோட்டல்கள் சங்கத் தலைவர் சுப்ப ராயலு. தேக்கடி படகு விபத்து பற்றி அறிந்ததும் பதட்டத்தோடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் செரியன் பிலிப்ஸை தொடர்புகொண்ட கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி ""நம்ம மலையாளிகள் யாராகிலும் இறந்தார் களோ...?'' என்று கேட்டார்.

    "இல்லை... இல்லவே இல்லை'' என்றதும் நிம்மதியாக போனை கட் செய்தார்.

    மலையாள தொலைக்காட்சிகள் கூட, ""நம்ம மலையாளிகள் யாரும் மரிக்கவில்லை. 13 வருடம் முன்பு கும்பகோணத்துக்கு போய்விட்ட 3 மலையாளிகள் படகு விபத்தில் இறந்திருக் கிறார்கள். அவர்கள் முழுக்க மலையாளிகள் இல்லை'' என்று ஃபிளாஷ் நியூஸ் ஓட்டிக் கொண்டிருந்தன.
இது என்னடா தேசம்!

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!