தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Saturday, September 12, 2009

♥ "என்னை பிடிப்பதற்குள் அவர்களை நான் முடிப்பேன்"♥

நியூயார்க்கில் இருந்து பிரகாஷ் எம்.ஸ்வாமி

இலங்கை அரசின் அடுத்த குறி, ருத்ரா?கே.பி-யை 'கைது' செய்த கையோடு தங்கள் அடுத்த இலக்கு நியூயார்க்கில் இருந்துகொண்டு தமிழ் ஈழ அரசு பிரகடனம் செய்த வழக்கறிஞர் ருத்திர குமாரன்தான் என்று இலங்கை அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது!

'கே.பி-'யை தலைவராக அறிவித்து பிரபாகரன் மறைவுக்குப் பிறகு உலக அளவில் ஈழத்தமிழர்களை தன் நாவன்மையால் வசீகரித்தவர் ருத்திரகுமாரன். 'இனி ஆயுதம் வேண்டாம்; அமைதிப் பேச்சு வார்த்தையே தமிழ் ஈழத்தைப் பெற்றுத் தரும்!' என்று கூறி இந்தியாவிடமும் நேசக்கரம் நீட்டினார். ஐக்கிய நாடுகள் சபையிலும், சர்வதேச கிரிமினல் கோர்ட்டிலும் இலங்கை அரசின் முகத்திரை கிழியக் காரணமாக இருந்தவரே இந்த ருத்திரகுமாரன்.

''எனது உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து வரலாம்!'' என்று அமெரிக்க அரசின்


உயர் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். ருத்திரகுமாரனை உயிருடன் பிடிக்க இலங்கை அரசின் தீவிரவாதத் தடுப்புத் துறை போலீஸார்,ராணுவ அதிகாரிகள் குழு அமெரிக்கா வந்துள்ளது. 'கே.பி.' ஸ்டைலில் அலேக் காக அவரை இலங்கைக்கு தூக்கிச் சென்று புலிகளின் சர்வதேசத் தொடர்புகளை விசாரிக்கத் திட்டமாம்.

'கே.பி.' மீது பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுகள் எழுந்ததால், கடைசி காலகட்டங்களில் ஆண்டன் பாலசிங்கத்தின் அபிமானத்தைப் பெற்ற ருத்திரகுமாரனைத்தான் பிரபாகரன் வெகுவாக நம்பி வந்தார். புலம்பெயர்ந்த நாடுகளின் ஈழத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் பணியும் தரப்பட்டது. வழக்கறிஞரான ருத்திரகுமாரன் தன் கூர்மையான வாதத் திறனால் புலிகளின் மீது அமெரிக்க அரசு விதித்திருந்த தடையை நீக்கப் போராடியும் வந்தார். அமெரிக்க தலைநகர் வாஷிங் டனில் எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி காங்கிரஸ் மகாசபை உறுப்பினர்களைசந்தித்து அவர்களை தமிழ் ஈழத்துக்கு ஆதரவாகவும் இலங்கை அரசின் ஜனநாயகப் படுகொலை பற்றியும் ஆதாரங்களுடன் பேசி அவர்களை மசிய வைத்தார். இதில் தொடங்கி ஹிலாரி கிளிண்டன் அதிபர் ஒபாமா வரை தமிழ் ஈழம் பற்றி பேசுமளவு செய்ததில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு என்று கூறப்படுகிறது.

சமீப காலமாக கனடா, ஐரோப்பிய நாடுகளில் அடிக்கடி விஜயம் செய்து நாடு கடந்த தமிழ் ஈழம் ஆதரவாக மக்களைத் திரட்டியும் வந்தார். இது இலங்கைக்கு பெரும் குடைச்சலைக் கொடுத்துவந்தது. ருத்ராவை எப்படி யாவது பிடித்துப் போட்டுவிட்டால்... புலிகளே இல்லாமல் செய்து விடலாம் என்று கணக்குப்போட்ட இலங்கை அரசு அவரை கைதுசெய்ய தனிப்படையே அமைத்தது.

இது பற்றி அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் பேசியதில், ''அதுஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை...'' என்று கூறினார்கள். ''அமெரிக்கா ஒன்றும் மலேசியா இல்லை. இங்கு சட்டதிட்டங்களே வேறு. முதலில் ஓர் அமெரிக்க பிரஜையைக் கைதுசெய்ய சர்வதேச வாரண்ட் வேண்டும். அவர்மீது வழக்குப் பதிவாகி நீதிபதியின் தீர்ப்பு நகலை முதலில் தரவேண்டும். முக்கியமாக அந்நாட்டுடன் 'நாடு கடத்தப்படுவதற்கான ஒப்பந்தம்' (EXTRADITION TREATY) அமலில் இருக்கவேண்டும். இலங்கையிடம் அமெரிக்காவுக்கு அப்படி ஒரு ஒப்பந்தமோ வாக்குறுதியோ இல்லை.

கே.பி. கைது வேறு கதை! அவர் இண்டர்போல் அமைப்பினால் தேடப்பட்ட சர்வதேசக் குற்றவாளி. ஆகவே, மூன்று நாடுகளைக் கடந்து கடத்திப்போக முடிந்தது. எங்களுக்குத் தெரிந்த வரை ருத்திரகுமாரன் மீது எவ்வித வழக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அவரை கைது செய்வதானால் முதலில் எங்கள் அனுமதி பெறவேண்டும். அமெரிக்காவின் தனிமனித சுதந் திரம் மிகவும் போற்றப்படக் கூடியது!'' என்று கூறினார்கள்.

ருத்திரகுமாரனின் நடவடிக்கைகளைஅமெரிக்க அரசேகூட மிகத் தீவிரமாகக் கண்காணித்து வந்தாலும் அவர் மீது தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட தற்கான ஆதாரங்கள் இல்லை. இவ்வளவுக்கும் நியூயார்க் மாநகரில் பிரபாகரன் படம், புலிக்கொடி ஏந்தி பத்தாயிரம் ஈழத்தமிழர்களை வைத்துப் பேரணியைப் நடத்தியவர் ருத்திரகுமாரன்.

ருத்திரகுமாரனையும் சேர்த்து நான்கு தலைவர்களை இலங்கை அரசு 'கைது' செய்யத் திட்டமிட்டுள்ளது. அவர்கள் லண்டனில் வாழும் அடேல் பாலசிங்கம், கலிஃபோர்னியாவில் வாழும் ஜெயந்தா டொனால்டு ஞானக்கோன் மற்றும் ஐரோப்பாவிலுள்ள காஸ்ட்ரோ ஆதரவாளரான நெடியவன். ஆண்டன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பிறகு அவர் மனைவி அடேல், பல்வேறு குழுக்க ளாக உள்ள தமிழ் ஈழத் தலைவர்களை தனது அன்பினால் தாயைப்போல் உரிமையுடன் கண்டித்து ஒருங்கிணைத்தார். லண்டனில் எந்த ஆர்ப்பாட்டம் என்றாலும் முதலில் நிற்பார். இவரது சக்தி வெள்ளையர்களை புலிகளின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. ஞானக்கோன் ஒரு விமான பைலட். முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கேயின் நெருங்கிய நண்பர். கலிஃபோர்னியாவில் வாழும் இவர் புலிகளுக்கு ஆயுத சப்ளை ஏஜண்ட் என்று கூறுகிறது இலங்கை அரசு. லக்ஷ்மண் கதிர்காமர் கொலையிலும் இவரை வளைத்துப்போடப் பார்க்கிறது. ஆனால், எதற்கும் அஞ்சாதவர் ஞானக்கோன். ''என்னைப் பிடிப்பதற்குள் அவர்களைத் தீர்த்துவிடுவேன். அமெரிக்காவில் உயிரை காப்பாற்றிக்கொள்ளக் கொன்றால் குற்றமில்லை!'' என்று சிரிக்கிறார் அவர்.

இலங்கையில் விழுந்த பிணக் குவியல்களையும், நிகழ்ந்த பட்டினிச் சாவுகளையும் கண்டு கொதித்ததோடு... பிஞ்சுக் குழந்தைகளை வதைமுகாம்களில் அடைத்துக் கொடுமை செய்ததை அமெரிக்காவில் எடுத்துச் சொல்லி பிரசாரம் செய்தவர் ருத்திரகுமாரன். கழிப்பிடம் இல்லாத பெண்களும், கஞ்சி இல்லாத குழந்தைகளையும் கண்டு அமெரிக்க அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் கடும் கண்டனம் தெரிவித்தன. சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியான 'சேனல்-4' வெளியிட்ட பயங்கரமான காட்சிகளைக் கண்டு உலகமே அதிர்ந்தது. அதே சேனல், எப்படி அப்பாவி மக்கள் கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள் என்றும் காட்டியது. ஐக்கிய நாடுகள் இந்த வீடியோக்களை மிக மிக சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளது. இதனால், கடுப்பாகிப்போன இலங்கை அரசு, கூலிப் படைகளை வைத்தாவது அமெரிக்காவில்ருத்திர குமாரனை போட்டுத் தள்ளவும் தயாராகி வருகிறது என்கிறார்கள்.

''என் தந்தை யாழ் மாநகரின் மேயராக இருந்தவர். எனக்கு அந்த மண்ணின் மீதும் மக்களின் மீதும் உள்ள பிணைப்பை என்ன பயமுறுத்தினாலும் போக்கி விட முடியாது. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் உலகம் முழுவதும் இப்போது பட்டவர்த்தனமாகத் தெரிந்துவிட்டது. என்னை அவர்கள் அழிக்கப் பார்ப்பது உண்மைதான்! என் உயிரைப்பற்றி கவலைப்படுகிறவன் இல்லை நான். ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் உயிர்களைப் பற்றித் தான் கவலைப்படுகிறேன்'' என்று நறுக்கென்று இதற்கு பதில் தருகிறார் ருத்திரகுமாரன்.

நன்றி


No Limitations For Helping (forward please...)

JOIN OUR COOL EMAILS GROUP

JOIN OUR COOL EMAILS GROUP

JOIN OUR COOL EMAILS GROUP

JOIN OUR COOL EMAILS GROUP

2008ல் உலகிலேயே அதிக அளவில் ஆயுத விற்பனை செய்த அமெரிக்கா

http://www.freefoto.com/images/22/01/22_01_5---U-S--Army-Helmet_web.jpg
உலகப் பொருளாதாரம் ஒடிந்து போன நிலையிலும் கூட அமெரிக்காவின ஆயுத விற்பனையில் எந்தவித சுணக்கமும் ஏற்படவில்லை. கடந்த ஆண்டு உலகிலேயே அமெரிக்காதான் அதிக அளவில் ஆயுத

விற்பனையை மேற்கொண்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. 2008ம் ஆண்டு அமெரிக்கா மொத்தம் 30.8 பில்லியன் டாலர் மதிப்புக்கு ஆயுதங்களை விற்றுள்ளது.

கடந்த ஆண்டு உலக அளவில் நடந்த மொத்த ஆயுத விற்பனையின் மதிப்பு 55.2 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது உலக அளவில் நடந்த ஆயுத விற்பனையில் மூன்றில் 2 பங்கை அமெரிக்கா மட்டும் மேற்கொண்டுள்ளது.

தனது வழக்கமான கஸ்டமர்களுக்கு மட்டுமல்லாமல், ரஷ்யாவிடம் பெருமளவில் ஆயுதங்களை வாங்கும் இந்தியா போன்ற சில நாடுகளுக்கும் கூட பெருமளவில் ஆயுத விற்பனையை மேற்கொண்டு ரஷ்யாவின் ஆயுத விற்பனையில் மண்ணையும் அள்ளிப் போட்டுள்ளதாம் அமெரிக்கா.

வளரும் நாடுகளுக்கு பாரம்பரிய ஆயுதங்களை வழங்குதல் என்ற தலைப்பில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில்தான் இந்த விவரங்கள் உள்ளன. இதை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

உலக அளவில் அமெரிக்காவிடமிருந்து பெரிய அளவில் ஆயுதக் கொள்முதல் செய்து நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகும். எமிரேட்ஸுக்கு 6.5 பில்லியன் மதிப்பிலான வான் பாதுகாப்பு சாதனங்களை வழங்கியுள்ளது அமெரிக்கா.

அதேபோல மொராக்கோ நாட்டுக்கு 2.1 பில்லியன் டாலர் மதிப்பிலான போர் விமானங்களை வழங்கவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தைவானுக்கு 2 பில்லியன் டாலர் மதிப்பிலான தாக்குதல் ஹெலிகாப்டர்களை வழங்கவும் அமெரிக்கா ஒப்பந்தம் போட்டுள்ளது.

இவர்கள் தவிர இந்தியா, ஈராக், சவூதி அரேபியா, எகிப்து, தென் கொரியா, பிரேசில் ஆகிய நாடுகளுடன் பெருமளவிலான ஆயுத விற்பனை ஒப்பந்தங்களையும் அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
http://appaa.com/index.php?option=com_content&view=article&id=203:2008-------&catid=30:2009-08-18-13-08-16&Itemid=59

http://www.freefoto.com/images/22/01/22_01_4---U-S--Army-Machine-Gun_web.jpg


இறுதிப்போரில்’ தப்பிய மருத்துவப் பணியாளரின் திடுக்கிடும் தகவல்கள்பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் ஆயிரத்திற்கும் அதிகமான குழிகளை வெட்டி அதிலிருந்து மண்ணோடு கலந்த தண்ணீரை எடுத்து பிறகு வடிகட்டி அந்த மக்களுக்கு அளித்தனர்.

கிளிநொச்சியை கைப்பற்றியதற்குப் பிறகு கண்ணில் கண்ட தமிழர்களையெல்லாம் சுட்டுப் படுகொலை செய்த சிறிலங்க ராணுவம், பதுங்கு குழியில் இருந்த மக்களை டாங்கிகள் ஏற்றியும், பதுங்கு குழிகளுக்குள் கையெறி குண்டுகளையும் வீசிக் கொன்றதென நேரில் கண்ட மருத்துவப் பணியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

தமிழர்கள் மீது சிறிலங்க ராணுவம் நடத்திய இனப்படுகொலையை மே 12 ஆம் தேதி வரை அங்கிருந்து கண்டு பிறகு காயமுற்று, சிறிலங்க ராணுவத்தின் பிடியில் இருந்து சமீபத்தில் தப்பித்து வெளியேறி வெளிநாட்டிற்கு வந்துள்ள மருத்துவப் பணியாளர் ஒருவர் தான் கண்ட காட்சிகளை விளக்கியுள்ளார்.

கிளிநொச்சியை கைப்பற்றியதற்குப் பிறகு முன்னேறிய சிறிலங்க ராணுவம், தர்மபுரம், வடக்கச்சி, விசுவமடு, உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளை கடந்தபோது, ஒவ்வொரு நாளும் 50க்கும் மேற்பட்ட தமிழர்களை படுகொலை செய்துகொண்டு முன்னேறியது என்றும், முள்ளிவாய்க்கால் பகுதியை எட்டுவதற்கு முன்னரே 8,000 பேர் படுகொலை செய்யப்பட்டுவிட்டனர் என்று தொண்டு நிறுவனத்தின் மருத்துவ ஊழியராகப் பணியாற்றிய அந்த நபர் கூறியுள்ளார்.

அவர், தனது மொழியில் அளித்த குறிப்புகளை நார்வே தமிழர் நல அமைப்பு தமிழில் மொழிபெயர்த்து அளித்துள்ளது.

அவர் அளித்த அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வருமாறு :


முள்ளிவாய்க்கால் பகுதியில் தஞ்சமடைந்திருந்தபோது அவர்கள் மீது சிறிலங்க ராணுவத்தினர் கடுமையான தாக்குதல் நடத்தியபோது தாங்க முடியாமல் வெளியேறிய மக்கள் துப்பாக்கியால் சுடப்பட்டதற்கு, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஊடுருவிய சிறிலங்க அரசின் கைப்பாவைகளே காரணம் என்றும், அவர்களின் நடவடிக்கை கண்டு விடுதலைப் புலிகளின் உயர் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

கிளிநொச்சியை பிடித்த பிறகு மருத்துவமனையை குறிவைத்து சிறிலங்க படைகள் தொடர்ந்து எறிகணை வீசி தாக்குதல் நடத்தியவண்ணம் இருந்தனர். கிளிநொச்சியை கைப்பற்றிய பிறகு உடையார்கட்டு பகுதியில் இருந்த ஒரு பள்ளியில் தற்காலிகமாக மருத்துவமனை இயங்கியது. அதன் மீது மட்டும் 2,000 எறிகணைகள் வீசப்பட்டன. இதனைக் கண்டு பொதுநல ஊழியர்களும், மருத்துவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

பாதுகாப்பு வளையத்திற்குள் தஞ்சமடைந்திருந்த 3 லட்சம் மக்களுக்கு வெறும் 30,000 பேருக்கு மட்டுமே போதுமான அளவு உணவை ராணுவம் அனுமதித்தது.

மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்காகத் தேவைப்படும் மயக்க மருந்துகளோ உயிர் காக்கும் மருந்துகளோ அனுப்பப்படவில்லை.

குழந்தைகளுக்கான பால் உணவுகளைப் பெறுவதற்காக வரிசையில் நின்றுக்கொண்டிருந்த மக்களின் மீது சிறிலங்க ராணுவம் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பல தாய்மார்கள் தங்களின் குழந்தைகளை இழந்தனர். பல குழந்தைகள் தாய்களை இழந்தனர்.

இதேபோல, உணவுப் பொருட்களுக்காக காத்து நிற்கும் மக்களின் மீது சரியாக குறிவைத்து எறிகணை வீச்சு நடத்தப்பட்டது. ஆளில்லா விமானம் அளிக்கும் விவரங்களைக் கொண்டு இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

பொதுமக்களுக்கு போதுமான உணவு இல்லாதபோது, போராளிகளுக்கு சேமித்து வைத்திருந்த உணவுகளை மக்களோடு பகிர்ந்துகொண்டனர் விடுதலைப் புலிகள்.

பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் ஆயிரத்திற்கும் அதிகமான குழிகளை வெட்டி அதிலிருந்து மண்ணோடு கலந்த தண்ணீரை எடுத்து பிறகு வடிகட்டி அந்த மக்களுக்கு அளித்தனர்.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அம்மக்கள் இருந்தபோது தொற்று நோய் ஏதும் அங்கு இல்லை. ஆனால், அப்பகுதியில் உருவாக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவமனைகளுக்கு எறிகணைத் தாக்குதலால் காயமுற்ற கருவுற்றப் பெண்களும், குழந்தைகளும் வந்தவண்ணம் இருந்தனர்.

காயம்பட்டவர்களை கொண்டுசெல்ல சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் கப்பல் வந்தபோதெல்லாம் எறிகணைத் தாக்குதல் அதிகமாக நடந்தது.

பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள மாத்தளன், பொக்கனை ஆகிய இரண்டு பகுதிகளையும் சிறிலங்க ராணுவம் கைப்பற்றிய அன்று (ஏப்ரல் 20) ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.

மே 12 ஆம் தேதி எறிகணைத் தாக்குதலில் நான் காயமடைந்தேன்.

மே 15, 16 தேதிகளில் பல நூறு ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்திருந்த ஒரு சிறிய நிலப் பகுதிக்குள் சிறிலங்க ராணுவம் நுழைந்தது. அப்பொழுது வெளியேற முயன்ற நான், 300க்கும் அதிகமான உடல்களை தாண்டிச் சென்றேன். காயங்கள் பட்டு பலரும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அந்த இடத்தை சிறிலங்க படையினர் கைப்பற்றியதற்குப் பின்னர் பல நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயினர்.

சிறிலங்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் அந்த மக்களை வெயிலில் நிற்க வைத்து தாகத்தால் தவிப்பதை சிறிலங்க ராணுவத்தினர் ரசித்தனர்.

அங்கிருந்த பலர் அவர்களின் உறவினர்களின் கண்களுக்கு எதிரே சுட்டுக் கொல்லப்பட்டனர்.

போரின் இறுதிகட்டத்தில் சில நாட்களில் மட்டும் 18,000 பேருக்கும் மேல் கொல்லப்பட்டனர். 7,000 பேர் படுகாயமுற்றனர். 5,000 பேர் ஏதாவது ஒரு அங்கத்தை இழந்து ஊனமுற்றுக் கிடந்தனர். பல்லாயிரக்கணக்கான பேர் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் ஆனார்கள். நூற்றுக்கும் அதிகமான மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.

சிறிலங்க தரப்பில் வறுமையின் காரணமாக அந்நாட்டு ராணுவத்தில் சேர்ந்த இளைஞர்கள்தான் பெரும்பாலும் உயிரிழந்தனர்.

பாதுகாப்பு கருதி தனது பெயரை வெளியிட வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

http://tamilthesiyam.blogspot.com/2009/09/blog-post_9440.html


No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!