முற்றுப் பெறாத இனம்...
அன்று...அரை வயிறுதான்
உறவுகள் வீடு நிரம்பலாய்.
இன்று...
உணவு நிரம்பலாய்
உறவுகள் தூரமாய்.
இன்றும்...இப்போதும்
நான் பசியோடுதான்.
ஆண்ட தமிழனாம்
இன்று
அம்மணமாய்
அடிமையாய்
அகதியாய்
அநாதையாய்!
கொழுத்த சிங்களம் அறிந்ததோ
முற்றுப் பெறாத இனம் தமிழனாய்.
அதுதான்
பொட்டே வைக்காமல்
முற்றுப்பெறாத சொல்லாய்
"தெமிழ"என்கிறதோ?
முட்கம்பி தாண்டி
கண்களில் நீர் ஏந்தியபடி
தூர நின்று அம்மா என்கிறேன்.
சேலை காய்கிறது கம்பி வேலியில்.
ம்ம்ம்...
அப்போ அம்மா எங்கே?
கம்பிகளோடு கம்பியாய்
ஒரு கை அசைகிறது.
மகளே...
சுருதிப் பெட்டியோடு
இணந்த குரல்
ஈனஸ்வரத்தில்.
அது அம்மா.
இன்னும்
கொஞ்ச நாட்கள்தான்
கம்பியே தேவையில்லை.
தமிழனின் எலும்புகளே போதும்
தமிழனையே
அடைத்து வைக்க !!!
http://kuzhanthainila.blogspot.com/2009/09/blog-post.html
"என்னத்த பெருசா புடுங்கீட்டார் இந்த பெரியார்?..."
கும்பிட்ட கைகளும்
கக்கத்தில் காலணியுமாய்
கொட்டாங்குச்சியில் கூழை
குடித்த இருளப்பனின்
மறுதலைமுறை வாரிசு,
இணையத்தில் இன்ஜினியர்
இல்லத்தரசிக்கு வலைவீசியபடி
கேட்டானே ஒரு கேள்வி
"என்னத்த பெருசா
புடுங்கீட்டார் இந்த
பெரியார்?..,"
http://suryakannan.blogspot.com/2009/09/blog-post_12.html
http://kavikilavan.blogspot.com/2009/09/blog-post_11.html
ராகுலுக்கு எதிர்ப்பு: சேலத்தில் ஆர்ப்பாட்டம் செய்த 100பேர் கைது! |
சேலம்: ராகுல் தமிழக வருகையை கண்டித்து சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள், வழக்குரைஞர்கள், பெரியார் தி.க.வினர், தமிழ் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் காங்கிரசை வலுப்படுத்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். இன்று சென்னையில் 3 வது நாள் பயணத்தை தொடங்கிய ராகுல் கிருஷ்ணகிரியில் இளைஞர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு சேலம் சென்றார். இந்நிலையில் சேலத்தில் ராகுல்காந்தியின் தமிழக வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள், வழக்குரைஞர்கள், மற்றும் பெரியார் தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் சட்டக்கல்லூரி முன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக செயல்படுவதைகண்டித்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முழக்கமிட்டனர். இலங்கையில் தமிழர்களை கொல்ல ராஜபக்செவுக்கு ஆதரவு அளிக்கும் ராகுல் காந்தி தமிழ்நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்று அவர்கள் வலியறுத்தினர். அவர்களை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் போலீசார் கைது செய்தனர். |
பெண்களுக்கு ஒரு முக்கிய செய்தி
இரவு மும்பை கேஸ் இரவு விடுதிக்கருகில் ஒரு இளம் பெண்ணை, அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் கடத்திச் சென்று பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கி இருக்கின்றனர்.பின்னர் அவளை வேறொரு இடத்தில் போட்டு விட்டுப் போய் விட்டார்கள்.
காவல் துறையினால் மீட்கப் பட்டு அவர்கள் விசாரித்த போது எந்தக் கொடுமைகளையும் அந்தப் பெண்ணினால் நினைவு கூர முடியவில்லை.மருத்துவ பரிசோதனைகளில்தான் அவள் பலமுறை அடுத்தடுத்துக் கற்பழிக்கப் பட்டிருக்கிறாள் என்பது தெரிய வந்தது. அதுமட்டுமல்ல அவளது ரத்தத்தில் ROHYPNOL என்ற மருந்து கலந்திருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.
‘பகல் நேரக் கற்பழிப்பு மருந்து ‘ என்று கொடுமைக்காரர்களால் செல்லமாக அழைக்கப் படும் அந்த மருந்து இப்போது பரவலாகப் பார்ட்டிகளில் உபயோகிக்கப் படுகிறது.குடிபானங்களில் சுலபமாகக் கரைந்து விடும் அந்த மருந்து குடித்தவர்களின் நினைவுகளை மட்டும் அழிப்பதில்லை,அந்தப் பெண்கள் கருத்தரிப்பதையும் தடை செய்து விடுகிறது.
கற்பழிப்பின் முக்கிய தடயமான ,பலியான பெண்ணின் கர்ப்பத்திலிருந்து தப்பிக்க அந்தக் கயவர்கள் பயன்படுத்தும் மருந்து இது.
கொடுமை என்னவென்றால் அந்தப் பெண் தற்காலிகமாக அல்ல, இனி நிரந்தரமாகவே கருத்தரிக்க முடியாமல் செய்து விடுகிறது அந்த மருந்து.
பெண்கள் பார்ட்டிகளில் குளிர் பானங்களைக் குடிக்கும் முன்னர் எச்சரிக்கைகளைக் கடைப் பிடிக்க வேண்டுமெனக் காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.
கொடுமை சூழ இந்த உலகத்தில்தான் நாம் பெண் குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி அந்த கடவுள் தான் அருள் புரிய வேண்டும்.
அந்த மருந்தைப் பற்றிய முழு விபரங்களை அறிய விரும்புவோர் பார்க்க..
http://en.wikipedia.org/wiki/Rohypnol.
http://beermohamedtamilgroup.blogspot.com/2009/09/blog-post_1186.html
வன்னி முகாம்களில் இருந்து 10 ஆயிரம் தமிழர்கள் விடுதலை
இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் நடந்த இறுதி கட்ட போரின்போது 3 லட்சம் தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தனர். அவர்கள் வன்னி தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அடிப்படை வசதிகள் ஏதுமின்றி இம்முகாம் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இம்மக்களை மீண்டும் அவர்கள் வசித்து வந்த அதே பகுதியில் குடியமர்த்த பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தன.
இதையடுத்து, இந்த வருட இறுதிக்குள் முகாமில் இருக்கும் 80 சதவீதம் மக்கள் மீண்டும் அதே பகுதியில் குடியமர்த்தப்பட்டு விடுவார்கள் என அதிபர் ராஜபக்சே ஐ.நா. சபையிடம் உறுதி அளித்து இருந்தார்.
எனினும் வாக்குறுதி அளித்து 100 நாட்கள் கடந்த விட்ட நிலையில் இதுவரை 29 ஆயிரத்து 280 பேர் மட்டுமே மீண்டும் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று வன்னி தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 9 ஆயிரத்து 984 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=16329
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com