பார்த்திபன் - வடிவேலு !
(வடிவேலு பார்த்திபனை இன்டர்வியூவில் கேள்வி கேட்கிறார்)
வடிவேலு : முதல் கேள்வி ஆபில், வாழைப்பழம், திராட்சை இதுல எது இனிபாஇருக்கும்?
பார்த்திபன்: எதுமே இனிப்பு கிடையாது... எல்லாமே பழங்கள் தான்.
வடிவேலு : ரொம்ப புத்திசாலி....
வடிவேலு : நான் உங்க கிட்ட பத்து சுலபமான கேள்வி கேக்கட்டா ? இல்ல ஒரு கஷ்டமான கேள்வி கேக்கட்டா ? யோசிச்சு சொல்லுங்க...
பார்த்திபன்: கஷ்டமான ஒரு கேள்வியே கேளுங்க...
வடிவேலு : நல்ல யோசிங்க... கேள்வி ரொம்ப கஷ்டமானது...
பார்த்திபன்: (கேள்வி கேக்குறது நீ தானே... கேனத்தனமா கேப்ப கேளு)... கேளுங்க சார்...
வடிவேலு : எது முதல வரும்.... இரவு இல்ல பகலா...?
பார்த்திபன்: (அட மடையா) ....ம்ம்ம்... பகல் சார்...
வடிவேலு : எப்படி சொல்லுறீங்க ?
பார்த்திபன்: நீங்க ஒரு கஷ்டமான கேள்வி தா கேட்பேனு சொன்னுனீங்க....ரெண்டவது கேள்வி கேக்குறீங்க...
வடிவேலு : ( அஆ... மடகிட்டானே ! ) உனக்கு இங்க வேலை இல்ல...
பார்த்திபன்: வேலை இல்லன பரவாயில்ல... மாசமான சம்பளம் தாங்க....
வடிவேலு : ஐயோ.... உனக்கு வேலையே கிடையாது
பார்த்திபன்: சரி சார்.... நீங்க சொன்னதுக்கு அப்புறம் நான் வேலையே செய்யமாட்டேன். எப்போ ஆபாய்ண்ட் மென்ட் ஆர்டர் எப்ப தருவீங்க....
வடிவேலு : ???
*****
(வடிவேலு உடம்பு குறைக்க ஜிம்முக்கு போய் ஜிம் மாஸ்டர் பார்த்திபன் கிட்டஐடியா கேக்குறாரு )
வடிவேலு : நான் உடம்பு குறைக்கனும்...
பார்த்திபன் : உடம்பு குறைக்காது.. நாய் தான் குறைக்கும்
வடிவேலு : நா அத சொல்லல்ல... உடம்பு இலைச்சு சிம்ரன் மாதிரி சிலிம்மா இருக்கனும்...
பார்த்திபன் : எவ்வளவு கிலோ இலைக்கணும்... 5 கிலோவா..10 கிலோவா...
வடிவேலு : 5 கிலோ இலைக்கணும்
பார்த்திபன் : கவலையே படாத.. மரத்த இலைக்கிர மாதிரி இலைசிடுறோம்..
வடிவேலு : ஏய்.... எஃஸ்ஸைஸ் பண்ணி உடம்ப இலைக்கனும்
பார்த்திபன் : சரி... தைரியமா உள்ளே போ...
வடிவேலு : ( என்ன இவன் தைரியமா உள்ளே போ சொல்லுறான்... எதாவச்சு ஆப்பு வைக்க போறானா...)
வடிவேலு உள்ளே நுழைந்தவுடன் ஒரு அழகான பெண் நின்றுக்கொண்டுஇருந்தாள்.
அழகான பெண் : நீ என்னை பிடிச்சா... நான் உனக்கு தான்.
அந்த பெண் ஒட...வடிவேலு அவளை துறத்தி ஒடினான்.
வடிவேலு : ச்சே... ரொம்ப கிட்ட பொய்ட்டேன்... இன்னும் கொஞ்சம் வேகமா ஓடியிருந்தா.. அவளை பிடிச்சிருப்பேன்.
பார்த்திபன் : என்ன... உடம்புள... 5 கிலோ குறைஞ்சதா...!
வடிவேலு : ஆ.....இப்போ நான் 10 கிலோ உடம்பு இலைக்கனும்
பார்த்திபன் : சரி... தைரியமா உள்ளே போ...
வடிவேலு : ( பொண்ண பிடிக்கிறதுக்கு எது தைரியம்....வேகம் இருந்தா போதும்...இப்போ எப்படியும் அந்த போண்ண பிடிச்சிடனும் )
வடிவேலு உள்ளே நுழைந்தவுடன் ஒரு பெரிய சிங்கம் நின்றுக்கொண்டு இருந்தது.
பார்த்திபன் : இப்போ... அந்த சிங்கம் உன்ன பிடிச்சா... நீ அந்த சிங்கத்துக்கு தான்...
வடிவேலு : ஐயோ.... வழக்கம் போல ஆப்பு வச்சிடானே....
*****
(பாத்திபன் - மளிகை கடையில் வேலை செய்றான். வடிவேலு வாங்க வராரு....)
வடிவேலு : அரை கிலோ சக்கர கொடு...
பாத்திபன் : அரை கிலோ எல்லாம் வராது... ஒரு கிலோக்கு தான் சக்கர கிடைக்கும்
வடிவேலு : அதெல்லாம் முடியாது... எனக்கு அரை கிலோ தான் வேணும்....
பாத்திபன் : இரு முதலாளிக்கிட்ட பேசிட்டு வரேன்..
வடிவேலு : சரி போய்ட்டு.. சிக்கரம் வந்து அரை கிலோ சக்கர கட்டு..
பாத்திபன் : முதலாளி.... ஒரு மடையன், முட்டாள் பைய... அரை கிலோ சக்கர தரமாட்டோம்னு சொல்லியும் போகாம அடம் பிடிக்கிறான்....
(பாத்திபன் முதலாளி கிட்ட பேசிட்டு திரும்பும் போது வடிவேலு பின்னாடி நிற்க்கிறான்)
பாத்திபன்: அப்புறம்.... இன்னொரு அரை கிலோ சக்கரையே... இந்த பெரிய மனுஷர் கேட்டாரு...
வடிவேலு : திட்டுரது எல்லாம் திட்டிடு... பெரிய மனுஷனு சொல்லுற... எனக்கு சக்கரையே வேண்டாம்....
பாத்திபன் : அத தான்... தர முடியாது அப்போவே சொல்லிட்டேனே...
வடிவேலு : யோவ் ! இந்த மாதிரி ஆளு வேலைக்கு வச்சா... கடை விளங்குனமாதிரி தான்... அவன வேலைய விட்டு முதல்ல எடு...
பாத்திபன் : அவரால என்ன வேலைய விட்டு அனுப்ப முடியாது...
வடிவேலு : ஏன் ?
பாத்திபன் : ஏன்னா.. நான் இந்த கடை முதலாளி....
http://guhankatturai.blogspot.com/2009/08/blog-post.html
M.R.ராதாயணம்
நாடகங்களில் நடிபபதை ஒரு தொழிலாக செய்யாமல் அதையே காதலித்தார். தன் நாடக குழுவில் இருந்தோரையும் அவ்வாறே நடத்தினார். தூங்கும் போது 'நாடக நடிகர்கள் எல்லாம் தூங்கவே கூடாது. தூங்குறப்ப கூட காலாட்டிட்டே தூங்கணும். இல்லேண்ணா செத்துப் போயிட்டான்னு வேற யாரையாவது போட்டிருவாங்க' என்று தன் நாடக குழுவில் இருந்தோரிடம் அடிக்கடி சொல்வார்.
நாடகமாகவும் பின் சினிமாவாகவும் உருவாகிய "இரத்தக்கண்ணீர்" மக்களிடையே எம்.ஆர்.ராதாவுக்கு பெரும் புகழை உருவாக்கியது. பெண்களுடன் தவறான உறவு வைத்திருந்தால் குஷ்டம் வரும் என்று மக்கள் நம்பும் அளவுக்கு எம்.ஆர்.ராதாவின் நடிப்பின் பாதிப்பு அமைந்தது.
சினிமாவில் நடித்தாலும் அதனை அவர் விரும்பி ஏற்கவில்லை என்பதே உண்மை. தன்னை ஒப்பந்தம் செய்ய வந்த தயாரிப்பாளரிடம் "நான் நாடக நடிகன். கேமாரவின் இஷ்டத்துக்குத் திரும்பித் திரும்பி நடிக்க மாட்டேன். என் இஷ்டத்துக்குத் தான் கேமரா திரும்பித் திரும்பி என்னை படம் பிடிக்கணும்..... என்ன சொல்றீங்க?" என்று கேட்டு அசர வைத்தார். தயாரிப்பாளரும் சம்மதம் சொல்லி ஒப்பந்தம் செய்தார்.... வேறு வழி!
கொள்கை ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும் காமராசர், ஜீவா, அண்ணா போன்ற தலைவர்களுடன் பெரும் நட்போடு இருந்தார். திராவிட கழக மாநாடுகளில் நாடகம் நடத்தி பகுத்தறிவு கொள்கைகளை பரப்பி வந்தாலும் கடைசி வரை திராவிட கட்சியில் உறுப்பினராக இருக்கவில்லை.
புது இம்பாலா கார் வாங்கி அது நிறைய வைக்கோல் கட்டுகளை நிரப்பி நகரத்தை வலம் வந்து தனக்கு கார் தர மறுத்த சிவாஜி கணேஷையே கடுப்படித்தார். காசை அவர் எப்போதுமே ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இது.
எந்த ஒரு சூழ்நிலையிலும் வாழ்க்கையை துச்சமாக நினைத்தவர் எம்.ஆர்.ராதா. M.G.R-ஐ சுட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சித்து தோற்று மருத்துவமனையில் இருந்த எம்.ஆர்.ராதா எதிர்பாராத விதமாக அங்கே வந்த டைரக்டர் நீலகண்டனிடம் அசால்டாக கேட்டது,
"வாய்யா நீலகண்டா! ராமச்சந்திரனை சுட்டேன். அவனும் சாவலை. என்னை சுட்டுக்கிட்டேன். நானும் சாவலை. என்னையா துப்பாக்கி கண்டுபிடிக்கிறானுங்க? இந்த துப்பாக்கியை வச்சிக்கிட்டு தான் சைனாக்காரனை ஓட்டப்போறாங்களா?"
சிறைக்கு போய் வந்த வாழ்க்கையை கூட சிறிய ஓய்வாகவே எண்ணினார் எம்.ஆர்.ராதா.
http://stalinfelix.blogspot.com/2009/07/blog-post_31.html
குருவை மிஞ்சிய குழந்தை - மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
செங்கப்படுத்தான் காட்டில்
எழுந்த
செங்கொடி
பொதுவுடைமை
பா வடித்த
புரட்சியாளன்
உள்ளம்
கொள்ளை கொள்ளும்
ஒளிப்பாவலன்
சிரிக்கவும் வைத்து
சிந்திக்கவும் வைத்த
சீனா கல்கண்டு
நின் பாட்டு
பாத்துகள்களை
அணுவாக்கிய
ஞானி
பாவேந்தனின்
படைத்தலைவன் நீ
எழுதியது
எளிய நடை
இலக்கியம்
நடையின்
அழகோ
நறுந்தேன்
நின் பாக்கொடை
பைந்தமிழ்க் குடை
அலுக்காத
நின் பாட்டு
வெளுக்கும்
இழையோடும்
கிராமத்து நதியல்ல
தென்றல் தவழும்
ஓடை
புரையுடிய
புற்று நீக்கப் பிறந்த
புடம் போட்ட
தங்கம் நீ
குருவை மிஞ்சிய
குழந்தை நீ
குறுகிய காலத்தில்
உனை
இழந்தோமே
அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற பாட்டுக் கோட்டையாம் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார் விழா, தமிழ் கடல் திரு. நெல்லை கண்ணன் அவர்களின் சிறப்புரையோடு வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. அது சமயம் வெளியிடப்பட்ட சிறப்புமலரான "கழனிக்கல்வி மலரில்" வெளிவந்த எனது பாச்சரம்.
http://jothibharathi.blogspot.com/2009/08/blog-post_01.html
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com