மனதை தொடும் தாய்லாந்து விளம்பரம்
தாய்லாந்தின் இந்த விளம்பரத்தை கூட மனதை தொடும் வடிவில் ஒரு குறும்படம் போல எடுத்துள்ளார்கள்.எளிதான ஒரு கான்செப்ட் ஐ கொண்டு சிறப்பான இசையுடன் வழங்கியுள்ளார்கள்.எந்த பொருளுக்கான விளம்பரம் இது என முன்பே தெரிந்தாலும் ஒரு குறும்படம் போலவே உணர வைக்கிறது.
http://www.youtube.com/watch?v=oom9sr377aa
http://www.premkg.com/2009/08/blog-post_11.ஹ்த்ம்ல்
சென்னையை கலக்கும் ஆன்-லைன் ஜாப் மோசடிகள் .
நோகாமல் நோம்பு கும்பிடலாம் வாங்க என்று பண ஆசைகாட்டும் விளம்பரங்களை நாளிதழில்களில் செய்துவிட்டு சைலண்டாக கல்லா கட்டிக்கொண்டு இருக்கிறது விவரம் தெரிந்த ஒரு ஏமாற்று கூட்டம் .
மாதம் 30,000 சம்பாதிக்கலாம் 50,000 சம்பாதிக்காலாம்.
ஆன் லைன் ஜாப்
தினந்தோறும் இரண்டு மணிநேரம் வேலை செய்தால் போதும்
வீட்டில் கம்ப்யுட்டர் இல்லா விட்டால் பிரவுசிங் சென்டரில் செய்யாலாம் என விளம்பரம் செய்வார்கள் .
விளம்பரத்தில் ஒரு வெப் சைட் ஐடி யை கொடுத்து பார்க்க சொல்லி இருப்பார்கள் . அல்லது செல் நம்பர் இருக்கும் . ஏற்கனவே பணம் சம்பாதிக்க முடியாமல் நொந்து நூலாகி இருக்கும் நொந்தகுமாரர்கள் உடனே இந்த நம்பருக்கு தொடர்பு கொள்வார்கள் .
கொஞ்சம் ஜாக்கிரதை உணர்வுடன் இருப்பதாக சிலர் நினைத்து கொண்டு அந்த வெப்சைட்டை தேடி பார்ப்பார்கள் .
அதில் இவர்களின் ஆசையை கிளறிவிட டாலரில் தொகையை போட்டிருக்க . அதனை பற்றி முழு விபரம் அறிய ஒரு தொகையை கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும் .
பண ஆசை யாரை விட்டது அதுவும் டாலரில் வந்தால் வுடனே நம்ப நொந்த குமாரர்கள் பணத்தை கட்டி விடுவர். அப்புறம் என்ன நடக்கும் . கீழே ...
ஆன் லைன் ஜாப் சிலவகை படும் .
டேட்டா என்ட்ரி ஜாப் .
பார்ம் பில்லிங் ஜாப்
இ மெயில் ரீடிங் ஜாப்
காபி பேஸ்ட்
பிளாக் ஆரம்பித்தல் .
பல்க் எஸ் எம் எஸ் அனுப்புதல்
ரெபரல் .
பெரும்பாலும் டேட்டா என்ட்ரி மற்றும் பார்ம் பில்லிங் ஜாப் களுக்கு நீங்கள் சுலபத்தில் எட்ட முடியாத டார்கெட் இருக்கும் தவிர குவாலிட்டி கண்ட்ரோல் என நீங்கள் செய்த தப்புகளுக்கு தகுந்த வாறு பணம் பிடிக்க படும். இதெல்லாம் அந்த கம்பெனி சென்னையில் இருந்து அதன் முகவரி தெரிந்து இருந்தால் தான். சென்னை இல்லாத ,முகவரி தெரியாத நிறுவனமா ? ... சொல்லவே தேவை இல்லை.
அடுத்து இ மெயில் ரீடிங் ஜாபில் உங்களை கிளுகிளுப்பூட்டும் வகையில் வேலையின் தன்மை மிக சுலபமாக இருப்பதாக தெரியும். இந்த வகை ஜாப் இருப்பதாக சென்னையில் ஒரு நிறுவனம் விளம்பரம் செய்து அதற்காக வெறும் ஐந்நூறு ரூபாய்யை ஒரு தனி மனிதர் பெயரில் பேங்கில் கட்ட சொல்லி அதனுடைய வெப்சைட்டில் போட்டிருக்கிறது .
மாதம் முப்பதாயிரம் ருபாய் சம்பாதிக்க சொல்லித்தரும் அந்த வெப்சைட் கூட அதனுடைய சொந்தமான டொமைனாக இல்லாமல் நெட்டில் இலவசமாக கிடைக்கும் டொமைன் நேமில் உருவாக்கப்பட்டிருக்கும் .
அப்புறம் நீங்கள் அந்த பெயருக்கு பணத்தை கட்டிய பிறகு உங்கள் இ மெயிலிற்கு இந்த, இந்த வெப் சைடில் உங்கள் பெயரை பதிவு செய்து கொண்டிர்கள் என்றால் பணத்தை அல்ல அல்ல குறையாமல் எண்ணலாம் என கூறி இருப்பர் .
நீங்கள் அந்த வெப்சைட்டில் பதிவு பண்ணும்போது கூட அப்படித்தான் அதில் போட்டிருக்கும். அதேப்போல் உங்கள் எர்நிங்(earning) பகுதியிலும் காட்டும் . ஆயிரம் டாலர் , இரண்டாயிரம் டாலர் , பத்தாயிரம் டாலர் என கிளுகிளுப்பூட்டுமே தவிர அது உங்கள் அக்கௌண்டில் அந்து சேராது. பணம் சம்பந்தமாக அந்த நிறுவனத்திற்கு ஏதேனும் இ மெயில் அனுப்பினால் கூட பதில் இருக்காது.
அடுத்து காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணும் ஜாபில் சில இந்திய நிறுவங்கள் தங்களுக்கு கிடைக்கும் வொர்க்கை வெளியில் கொடுத்து செய்கிறது இதற்கும் நம்மிடையே பணம் வசூலிக்கப்படும் .
வேலையும் கஷ்டமானது தவிர நேரம் அதிகம் இழுக்ககூடியது.
இதனையெல்லாம் வீட்டில் கம்ப்யுட்டரும் , அன்லிமிடெட் broadband connection -நும் இருந்தால் ரிஸ்க் எடுத்து ரசக் சாப்பிடலாம் .
http://ungalodukonjam.blogspot.com/2009/08/blog-post.html
கன்னட அமைப்புகளை நோக்கி ஒரு கர்நாடக தமிழரின் குரல்
திரும்ப திரும்ப திருவள்ளுவர் சிலையைப் பற்றி எழுதவது போல் உள்ளது. இருந்தாலும் இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்வது அவசியம் என்று கருதுகிறேன்.
சிலை திறப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நீதிபதி தினகரன் கூறியது, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது.
வழக்கு தொடர்ந்த கன்னட அமைப்பினர், அதை எதிர்க்க காரணமாக கூறியது - இடத்திற்கான அனுமதியையும், வீரப்பன் கோரிக்கையை ஏன் செயல்படுத்த வேண்டும் என்பதையும்.
தீர்ப்புக்கு முன் நீதிபதி பேசிய வார்த்தைகள், ஒவ்வொன்றும் சவுக்கடி.
----
சிலையைத் திறப்பதற்கான அனுமதியை மாநகராட்சியும், அரசும் வழங்கிவிட்டதைத் தெரியாமல் மனுதாரர்களாகிய கன்னட சங்கத்தினர் பொதுநல வழக்குத் தொடர்ந்தது சரியல்ல. மாநகராட்சி நிலம் என்பது அரசு நிலம்தானே? நீங்கள் தவறான முறையில் வழக்கைத் தொடர்ந்துள்ளீர்கள்.
நீங்கள் திருவள்ளுவர் சிலை திறப்பை எதிர்த்து மனு தாக்கல் செய்தீர்களா அல்லது ஒட்டு மொத்தமாக நகரில் சிலைகள் அமைப்பதற்கு எதிராக மனு தாக்கல் செய்தீர்களா? வழக்கை விட்டு வேறு பக்கம் போகாதீர்கள். நாமெல்லாம் இந்தியர்கள் என்பதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா?
நான் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவன். இப்போது கர்நாடக தலைமை நீதிபதியாக பணியாற்றுகிறேன். கடந்த ஓராண்டாக கர்நாடகத்தில் வாழ்கிறேன். கன்னடராக வாழ்ந்து வருகிறேன். பெங்களூரில் நடக்கும் சிலை திறப்பு விழாவில், மனுதாரர்கள் கலந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்.
குடகு, சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் முன்பு கோவை ஆட்சியரின் ஆளுகையின் கீழ் இருந்தன. காவிரி நீரை தரமாட்டேன் என்கிறீர்களே, காவிரியை கர்நாடக எல்லைக்குள்ளே கட்டுப்படுத்த முடியுமா? அது இயற்கையாகவே தமிழகம் நோக்கி பாயத்தானே செய்யும்? மொழியின் பெயரால் நாட்டை பிரிக்காதீர்கள்.
வீரப்பன் கோரிக்கை விடுத்ததாலேயே, ஒரு விஷயம் சட்டவிரோதம் ஆகிவிடுமா? திருவள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர். 50 வருடங்களுக்கு முன்பு வந்தவர்கள் கூறியதற்காக சிலை திறப்பை தவிர்க்க முடியாது. தமிழகத்துடன் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம். அதற்காக திருவள்ளுவர் சிலை திறப்பை தடுப்பது நியாயமாகாது. பிரச்சனைகள் இருப்பதால் தமிழகத்துடன் போருக்கு போக முடியுமா? அப்படி போரிட்டால் என்னை எந்த அணியில் சேர்ப்பீர்கள்?
நமது நாடு மிகுந்த பலம் வாய்ந்த நாடாகும். கூட்டமைப்பின் கீழ் நாடு செயல்படுகிறது. இதனால் நாம் நம்மிடம் உள்ள கருத்துவேறுபாடுகளை மறக்க வேண்டும். நம் அனைவருக்குள்ளும் இந்தியன் என்ற மனப்பான்மை வளர வேண்டும். தமிழர், கன்னடர், மலையாளிகள் என்ற வேறுபாடு கூடாது.
மனுதாரர்களின் குற்றச்சாட்டுகள் ஏற்கும்படியாக இல்லை. காவிரி, ஒகேனக்கல் பிரச்சினையுடன் இதை சம்பந்தப்படுத்த வேண்டாம். கர்நாடக எல்லைக்குள்ளேயே காவிரி நீரை உங்களால் தடுத்து நிறுத்த முடியுமா? அது இயற்கையுடன் ஒன்றுபட்டது. உங்களது முயற்சி இரு மாநிலங்களிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களிடம் கருத்து வேறுபாட்டை உருவாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?. எரிகிற தீயில் எண்ணை ஊற்றுவது எளிது. ஆனால் தீயை அணைப்பது கஷ்டம். குழப்பத்தை ஏற்படுத்தி போராட்டத்துக்கு வழி வகுப்பது எளிது. ஆனால் போராட்டத்தை கட்டுப்படுத்துவது கடினம்.
கோர்ட்டில் மனு செய்வது சுலபம். ஆனால் இதன் மூலம் ஏற்படும் விளைவுகளை சந்திப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை நீங்கள் உணர்ந்துகொண்டீர்களா?.
இதுபோன்ற வழக்குகளை கோர்ட்டுக்கு கொண்டு வந்து, பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டாம். இந்த வழக்கில் எந்த ஓர் அவசரமும் இருப்பதாக தெரியவில்லை. இதை ஒரு பொது நலன் வழக்கு என்றுகூட சொல்ல முடியாது. அப்படியிருக்கும்போது வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதற்காக அவசரம் காட்டுகிறீர்கள். இது முக்கியமான பொதுநல வழக்கு என்று கூறுகிறீர்கள். ஆனால் மனுதாரர்களில் ஒருவர் கூட கோர்ட்டுக்கு வரவில்லை. அப்படி இருக்கையில் இதை முக்கியமான வழக்கு என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?
திருவள்ளுவர் சிலை திறப்பு விழா அரசு விழா இல்லை என்பதுபோல நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, தமிழக முதல்வர் கருணாநிதியை நேரில் சென்று சந்தித்து, விழாவில் பங்கேற்று திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார். அப்படி இருக்கும்போது இது எப்படி தனியார் நிகழ்ச்சியாக இருக்க முடியும்? அப்படியே இது அரசு விழா இல்லை என்று நீங்கள் கூறினால், அதையும் நீதிமன்றத்தில் நீங்கள் நிரூபிக்க வேண்டும் அல்லது நீங்கள் தான் பிரச்னைகளை சந்திக்க வேண்டியது இருக்கும்.
முதலில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா அழைப்பிதழை கொண்டு வாருங்கள். அதில் கர்நாடக அரசு சின்னம் இருக்கிறதா இல்லையா என்று பார்ப்போம். அது அரசு விழாவா இல்லையா என்பதை நானே உங்களுக்கு ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறேன். எனவே மொழி, மதம், சாதி போன்றவற்றை காரணம் காட்டி, நாட்டை துண்டாடாதீர்கள். கர்நாடகாவிற்கும், தமிழகத்திற்கும் இடையேயுள்ள இதயப்பூர்வமான உறவை கெடுக்கக்கூடாது.
திருவள்ளுவர் சிலைக்கு எதிராக போராடினீர்கள் என்றால் அதை வெளியே வைத்துக் கொள்ளுங்கள். நீதிமன்றத்திற்குள் அதை எடுத்து வராதீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால், சென்னையில் சர்வக்ஞர் சிலை திறக்கக் கூடாது என்று தமிழக நீதிமன்றத்தில் சென்று வழக்கு தொடர்ந்து கொள்ளுங்கள்.
மாநகராட்சி தேர்தலை முன்வைத்து சிலை திறக்க அரசு முயற்சிப்பதாக கூறுகிறீர்கள். திருவள்ளுவர் ஒரு அரசியல்வாதி அல்ல.
திருவள்ளுவர், சர்வக்ஞர் ஆகியோர் நாட்டின் கலாசார வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள பெரும் புலவர்கள். இதன் மூலம் மதம், மொழி ஆகியவற்றின் பெயரால் நாட்டைப் பிரித்துப் பார்க்க முயற்சி செய்துள்ளீர்கள். இது தவறு. தவறான வழக்கை தாக்கல் செய்துள்ள உங்கள் மீது அபராதம் விதிக்க முடியும். ஆனால் மனுதாரர்களுக்கு, நீதிமன்றம் எச்சரிக்கை மட்டும் விடுக்கிறது.
9-ந் தேதி நடை பெறும் சிலை திறப்பு விழா முழு வெற்றி பெறட்டும். இதன் மூலம் சாதி, மதம், இனம், மொழிபேதம் இல்லாத சமுதாயத்தை படைப்போம்.
----
நீதிபதி ஐயா, சபாஷ்!
நன்றி : தினத்தந்தி, தினமணி, தமிழ்செய்தி
மனசு ...
சிற்றுண்டி முடித்து
அலுவுலகம் கிளம்புகையில்
சிறுவுண்டி வைத்து ,
கடவுள் வேடமிட்டு
காசு கேட்கும்
சிறுவனிடம் ,
கடவுள் நம்பிக்கையே
இல்லையெனிலும் ,
காசு போடாமல் போக
வருவதில்லை மனசு...
http://magiscorner.blogspot.com/2009/08/blog-post_10.html
நாய்கள் கற்க மறுக்கும் தமிழ் மொழி
பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த ஒரு இளம் பெண் இந்தியா வருகிறார். தமிழ் மொழி மேல் பற்று கொண்டு, தமிழ் கலைகள் மீது ஆர்வம் ஏற்பட்டு பரத நாட்டியம் கற்றுக்கொள்கிறார். சமீபத்தில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நடந்த வல்வில் ஓரி விழாவில் ஒரு தமிழ் பாடலுக்கு அற்புதமாக பரத நாட்டியம் ஆடுகிறார்.
காட்சி 2:
அதே வல்வில் ஓரி விழாவில் பல நிகழ்வுகள் நடைபெறுகிறது. அதில் ஒன்று நாய் கண்காட்சி. சுற்றுப்புற நகரங்களிலிருந்து நிறைய நாய்கள் கலந்து கொள்கின்றன. அதன் பயிற்சியாளர்கள் நாய்களுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே கட்டளையிடுகின்றனர். அதன் பயிற்சியாளர் “சிட்” என்றால் உட்காருகிறது, “ஸ்டேண்ட்” என்றால் நிற்கிறது, “ரன்” என்றால் ஓடுகிறது, “ஜம்ப்” என்றால் குதிக்கிறது, “லே டவுன்” என்றால் படுக்கிறது...
(இந்தச் சம்பவத்தை மிகுந்த வருத்தத்தோடு பகிர்ந்து கொண்டவர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் அவர்கள்)
சரி...
அந்த நாய்ப்பயிற்சியாளர்களிடம் சில கேள்விகள்...
இந்த நாய்களை ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பி ஆங்கிலம் கற்றுக் கொடுத்தீர்களா!!!???
ஆங்கிலப் பள்ளிக்குழந்தைகள் போல், இந்த நாய்களுக்கும் தமிழ் மொழி பிடிக்காதா!!!???
நாய்கள் கற்க மறுத்த, நம் தமிழ் மொழியை, எப்படி ஒரு பிரான்ஸ் பெண்மணியால் கற்றுக்கொள்ள முடிந்தது!!!???
டமிள் சரியா வராது, ஒன்லி இங்கிலீஷ் தான் என்று சொல்லும் தமிழர்களை நாங்கள் நாய்கள் என்றே கருதலாமா!!!???
ஒரு தமிழனாக நாங்கள் யாரை புறக்கணிப்பது தமிழ் கற்காத ஐந்தறிவு படைத்த நாயையா? கற்றுக் கொடுக்காத ஆறறிவு(!!!) படைத்த உங்களையா!!!???
நாய்கூட தமிழ் கற்கவில்லையென வருத்தப்படுவதா!!!??? அல்லது நாய் கற்கும் மொழியல்ல தமிழ் என மகிழ்ச்சியடைவதா!!!???
http://maaruthal.blogspot.com/2009/08/blog-post_10.html
யாருக்கு சுதந்திரம்?
நம்மளுக்கு சுதந்திரம் கிடைச்சாச்சு ஆகஸ்ட் 15 1947 லில்
http://priyamudanvasanth.blogspot.com/2009/08/blog-post_14.html
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com