
கொழும்பு, ஆக. 12-
விடுதலைப்புலிகளை முறியடித்து விட்டதாக கடந்த மே மாதம் இலங்கை அரசு அறிவித்தது. இருந்தாலும் தொடர்ந்து விடுதலைப்புலிகளை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக உள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிசையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுற்றித் திரிந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மன்னார் மாவட்டம் உப்புகுளம் பகுதியில் வெடிகுண்டுகளுடன் ஒரு வேன் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வேனில் 20 குண்டுகள் இருந்தன. அவை ஒவ்வொன்றும் 5 கிலோ எடைகொண்டவை. தாக்குதல் நடந்தால் இவை மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தக் கூடியவை.
கொழும்பில் தற்கொலை தாக்குதல் நடந்த இந்த வேன் தயார்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து கொழும்பில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. முப்படையினரும், போலீசாரும் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வீடு வீடாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
http://www.maalaimalar.com/2009/08/12104820/CNI0140120809.html






No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com