நீரோ மன்னனைப் பற்றி நாம் வரலாற்றில்தான் படித்திருக்கிறோம். ஆனால் தமிழின கொலைஞர் கருணாநிதியின் மூலமாக அதை நேரிலே பார்க்கிறோம்.
நீரோ மன்னனைப் பற்றி நாம் வரலாற்றில்தான் படித்திருக்கிறோம். ஆனால் தமிழின கொலைஞர் கருணாநிதியின் மூலமாக அதை நேரிலே பார்க்கிறோம். 1 லட்சம் அப்பாவி மக்கள், குழந்தைகள், முதியோர்கள், பெண்கள் கொல்லப்படுவதை ஒரு அதிகாரமுள்ள ஜீவன் எவ்வாறு பார்த்துக் கொண்டிருக்க முடிந்தது. ஈராக்கில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தால் அதற்கு கண்டனம், இரங்கல் தெரிவிக்கும் கருணாவுக்கு அருகிலிருந்த சொந்த மக்களை காப்பாற்ற குரல் கொடுக்க முடியவில்லை.
அமரர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு தானாகவே உதவிகளை வாரி வழங்கினார். கல்நெஞ்சம் கொண்ட கருணாவிடமோ ஈழத்தமிழர்கள் காலில் விழுந்து கெஞ்சாத குறையாக கேட்டும் மனம் இரங்கவில்லை. உதவி செய்யாவிட்டாலும் உபத்திரமாவது செய்யாமல் இருந்திருக்கலாம். சிங்களர்களை கோபப்படுத்தக் கூடாது, அவர்களின் அடியை வருடி விட வேண்டும், மனம் புண்படாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று 7 கோடி தமிழர்களுக்கு அறிவுரை கூறுகிறார்.
பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் கதையாக இப்போது தன் மகள் கனிமொழியை இலங்கைக்கு அனுப்ப் போகிறாராம். சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த பெண்களுக்கு இடம் தராமல் விரட்டியடித்த கருணாநிதி, தன் மகள் கனிமொழியை அனுப்பி அவர்களை சமாதனாப்படுத்த முயன்றார். ஆனால் அவர்கள் தொடர்ந்து ம.தி.மு.க அலுவலகத்தில் போராட்டத்தை நடத்தினார்கள்.
போரை நிறுத்தக்கூடிய பொத்தான் தன் கையில் இருந்தும் அதை தன் சொந்த நலனுக்கு மட்டுமே உபயோகப்படுத்திய இந்த கருநாகம் இப்போது கனிமொழியை வதைமுகாம்களுக்கு அனுப்பி பார்த்து விட்டு வரச் சொல்கிறார்.
இதில் இருக்கும் சூட்சுமத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கருணாவின் மீது கோபத்திலிருக்கும் ஈழ மக்கள் மகிந்தவின் மகனை சேறை வாரியிறைத்து, கல்லெறிந்து அவமானப்படுத்தியது போல் கனிமொழியையும் அவமானப்படுத்தினால் உடனே அதை வைத்து அரசியல் செய்வார். "இதோ உதவி செய்ய்ப்போன என் மகளை அவர்கள் அவமானப்படுத்திவிட்டார்கள்" என்று தமிழ்நாட்டு தமிழர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் சிண்டு முடித்து விடுவார்.
அவ்வாறில்லாமல் ஈழ மக்கள் கனிமொழியை வரவேற்றால் "பாருங்கள் என் மகள்தான் முகாம்களை பார்த்து விட்டு சேவை செய்தார். எதிர்க்கட்சிகள் ஒன்றுமே செய்யவில்லை, நான் தான் ஈழ மக்களின் காவலன்" என்று நற்பெயர் பெறுவார். எப்படிப் பார்த்தாலும் கருணாவிற்கு லாபம்தான். தன் மீதான களங்கத்தை நீக்குவதற்காக அவர் மக்களுக்கு வைக்கும் பரிட்சைதான் இது.
தமிழ்நாட்டிலிருது உண்மையாக போராடும் பழ. நெடுமாறனோ, வைகோவோ அல்லது மற்றவர்களோ இலங்கைக்கு பத்திரமாக விமானத்தில் சென்று வர முடியாத போது கனிமொழி மட்டும் எப்படி செல்ல முடிந்தது? அவர்கள் கொலைகார கரங்களையுடைய இந்திய அரசின் ஆதரவோடு சென்றால் அவர்கள் உண்மை நிலையை வெளிக்கொண்டு வருவார்களா? அல்லது இந்து ராம் போன்றவர்களைப் போல இலங்கை அரசு வதை முகாம்களை 5 நட்சத்திர விடுதிகளைப் போல் பராமரிக்கிறது என்று புளுகுவார்களோ என்னவோ?
தமிழர்களின் நலனுக்கு எதிரான முடிவுகளை இவர் எடுப்பார். எதிர்க்கட்சியினர் எதிர்த்தால் உடனே "தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை. ஒற்றுமை இல்லாவிட்டால் நான் எவ்வாறு ஈழத்தமிழர்களுக்காக போராடி இந்திய அரசை வற்புறுத்த முடியும்" என்று பழியை அடுத்தவர் மீது தூக்கி போடுவார்.
எது எப்படியோ? உண்ணாவிரத நாடகம், ராஜிநாமா நாடகம், கடிதம் எழுதிய நாடகங்களைப் போல் இதுவும் மக்களை கிறுக்குப் பிடிக்க வைக்க்ப் போகும் கருநாக கருணாவின் அடுத்த கபட நாடகம் என்பதில் சந்தேகம் இல்லை. ஏற்கனவே வதை முகாம்களில் வாடும் ஈழ மக்களுக்கு இது இன்னொரு சோதனை...
- தமிழகத்திலிருந்து அதிபதி.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com