இலங்கையில் யுத்தம் முடிவடைந்துவிட்ட போதிலும், இலங்கையில் தமிழர்கள் அமைதியாக வாழ முடியவில்லை என்றும், வவுனியாவில் முகாம்களிலுள்ள சுமார் 3 இலட்சம் தமிழ்மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதாகவும் தனுஷ்கோடிக்கு நேற்று முன்தினம் வந்த இலங்கை தமிழரொருவர் கூறியுள்ளார்.
மன்னார் மாவட்டத்தின் அடம்பனைச் சேர்ந்த மணிவண்ணன் (35 வயது), அவருடைய மனைவி ரெஜினா (30 வயது), அவருடைய பிள்ளைகள் சுடர் (5 வயது), முகிலன் ஆகியோர் சனிக்கிழமை அரிச்சல்முனை கடற்கரைப் பகுதிக்கு வந்துள்ளனர்.
தனுஷ்கோடி பொலிஸ் நிலையத்தில் வைத்து நிருபர்களுக்கு கருத்துத் தெரிவித்த மணிவண்ணன் மன்னாருக்கு அருகில் கொக்காலை என்ற இடத்தில் தமது வீட்டில் இருந்தவேளை ரொக்கெட் தாக்குதலால் தான் காயமடைந்ததாக தெரிவித்திருக்கிறார். அவருடைய இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரால் நடக்க முடியவில்லை. ஆயினும், மாத்தளன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ள போதிலும், போதிய மருந்துகள் இல்லாமையினால் அவர் முடமாகிவிட்டார்.
தொற்றுநோய்கள் பரவுவதால் இலங்கையின் அகதி முகாம்களில் தமிழ் மக்கள் அதிக எண்ணிக்கையில் மரணமடைந்து வருவதாகவும் வயிற்றோட்டம், வாந்தி, காய்ச்சல் போன்றவற்றால் நூற்றுக்கணக்கான சிறுவர்களும் ஆண்களும் பெண்களும் இறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்துவிட்டது எனினும் தமிழர்கள் அமைதியாக வாழ முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார். வவுனியாவில் முகாம்களிலுள்ள சுமாWww.eeladhesam.coM
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com