சிறி லங்கா கார்டியன் வலைத்தளம் தடை செய்யப்பட்டது பைத்தியக்கார செயல் |
இலங்கையில் சிறி லங்கா கார்டியன் இணையத்தளம் தடைசெய்யப்பட்டுள்ளமை குறித்து அவ்விணையம் வெளியிட்டுள்ள பதிப்பில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் செயல் பைத்தியக்காரத்தனமெனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஏசியன் டிரிபூன் அல்லது பாதுகாப்பு அமைச்சின் வலைத்தளத்தை மட்டுமே வாசிப்பது உலக அறிவை ஜனாதிபதிக்குத் தரமாட்டாது, அவை மூளையை மழுங்கடிக்கவே செய்யும் என ஜனாதிபதிக்கு பதிலடி கொடுத்துள்ளனர். இந்தத் தடையானது அரசினால் செய்யப்பட்டிருப்பின், அது தவறான பாதையில் சென்று நாட்டை வளமற்றதாக மாற்றுகிறது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகிறது என்று கூறியுள்ளதோடு இந்த வலைத்தளத்தை கல்வியறிவு மிக்க பலர் தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் ஊடகமாகவும், புலிகளுக்கு எதிரான விளம்பரமாகவும் கூட பயன்படுத்தியிருக்கின்றனர் என்று கூறும் சிறி லங்கா கார்டியன், தற்போதைய அரசின் வெற்றிக்கும் இந்த தளம் மிகவும் பாடுபட்டுள்ளது என்று கூறியுள்ளது. எனவே இவ்வாறான தடைகளால், அரசு தமது வெற்றிக்கு கைகொடுத்தவர்களைக் கர்வத்துடன் தூக்கியெறிகிறது. இதேபோலத் தான் முன்னைய சிறி லங்கா அரசுகளும் செயற்பட்டு வந்தன என்பதற்கு வரலாறுகள் சாட்சியாக இருக்கின்றன. தற்போது புலிகளைத் தோற்கடித்துவிட்டதால், தமது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பலம் பொருந்திய அரசாக இருப்பதாகவும் செருக்குக் கொண்டுள்ள இலங்கையரசின் இந்தப்போக்கானது அதை தப்பான வழிகளில் இட்டுச்செல்லப்போகிறது என்றும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1248934934&archive=&start_from=&ucat=2& |
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
14 years ago
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com