சிங்கள ராணுவ கொடுமை! பைத்தியமாக்கப்படும் ஈழத்தமிழர்கள்!
சிங்கள ராணுவம் நடத்திய போரினால் வன்னியிலிருந்து துரத்தப்பட்டு வவுனியா தடுப்பு முகாம்களில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் மூன்று லட்சம் தமிழர்களின் தற்போதைய நிலைமைகள் ஜீரணிக்க முடியாதவைகளாக இருக்கின்றன. வார்த்தைகளில் விவரிக்க முடியாத கொடுமை களையும் கொடூரங்களையும் அனுபவித்து வருவதாக, முகாம்களிலிருந்து அதிர்ச்சி தகவல்கள் வருகின்றன.
வவுனியா தடுப்பு முகாமின் பெண் உதவி யாளர் ஒருவர் உதவியுடன் நம்மிடம் பேசிய மதிமலர், ""போர் நிறுத்தப்பட்டதாக கடந்த மாதம் 18-ந்தேதி அறிவித்தது சிங்கள அரசு. இதனை யடுத்து போரினால் பாதிக்கப்பட்ட மக்களை இங்கு அடைத்து வைத்திருக்கிறது. இதனை முகாம்னு சொல்லக்கூடாது. திறந்தவெளிச் சிறைச்சாலை இது. இந்த சிறைச்சாலை முழு வதும் முள் கம்பிகளால் வேயப்பட்டிருக்கிறது. இதுலதான் மூன்று லட்சம் பேர் இருக்கிறோம். எங்களை கண்காணிக்க மட்டும் 53-வது டிவி ஷன் படையைச் சேர்ந்த 1200 ராணுவத்தினரை குவிச்சு வெச்சிருக்கு சிங்கள அரசு.
இந்த சிறைச்சாலையில் நாங்கள் அடைபட்டு ஒரு மாசத்துக்கும் மேலாச்சு. இதுவரை எந்த மனிதாபிமான உதவியும் அரசாங்கம் செய்து தரலை.
5 பேர்தான் இருக்க முடியுங்கிற ஒரு குடிசையில 20 பேர் இருக்கணும்னு கடுமையா உத்தரவு போட்டிருக்கு ராணுவம். இன்னைக்கு 5 பேர் குடிசைல தங்கினா... நாளைக்கு அந்த 5 பேரும் வெளியில நிக்கணும். மற்ற 5 பேர் குடிசைல தங்குவாங்க. இப்படி மாறி மாறி 20 பேரும் அந்த குடிசையை பயன்படுத்திக் கணும். குடிசைக்குள்ளே நுழைஞ்சம்னா நிமிர்ந்து நிக்க முடியாது. குனிஞ்சுக்கிட்டே உள்ளே போகணும். குனிஞ்ச நிலையிலேயே உட்கார்ந்துக்கணும். 5 பேர் உட்கார்ந்துக்கலாம். படுத்துக்க முடியாது. குடிசையில இவ்வளவு அவஸ்தைகள் இருக்கு.
ஒருநாளைக்கு ஒருவேளை கஞ்சி குடிச்சி ரொம்பநாளாச்சு. மூணு, நாலு நாளைக்கு ஒருமுறை ஒரு சோத்துப் பொட்டலத்தையும் ஒரு லிட்டர் அளவுக்கு கஞ்சியும் கொடுத்தார்கள். அடுத்தமுறை சோத்துப் பொட்டலம் வீசுற வரைக்கும் இதுதான். இப்போ அதுவும் இல்லே. சோத்துப் பொட்டலத்துடன் ராணுவ வண்டி எப்போ வரும்னு காத்துக் கிடக்கோம். எந்த பஞ்சமும் இல்லாம வாரி வாரி கொடுத்த எங்கட மக்கள் இன்னைக்கு ஒரு துண்டு பிரட் எப்போ வரும்னு காத்துக்கிடப்பதும், அப்படி பிரட் வரும்போது அதனை அடிச்சு பிடிச்சுக்கிட்டு வாங்க துடிக்கிறதும் கொடுமை!'' என்று சொல்லும் போதே, துயரம் தாங்காமல் கதறி அழுதார்.
அழுகையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் அருகில் இருந்த செல்வராணி என்கிற பெண்மணி மதிமலரிட மிருந்து ஃபோனை வாங்கிப் பேசினார். ""இங்க குடிக்கக்கூட நல்ல தண்ணி கெடை யாதுங்க. இந்த சிறைச்சாலைக்குள் (தடுப்பு முகாம்) 3, 4 நிலத்தடி பம்பு இருக்கு. கெமிக்கல் கலந்த மாதிரி மஞ்ச கலர்லதான் தண்ணி வரும். அதைத்தான், பசித்தாங்க முடியாம பச்சிளங் குழந்தை களிலிருந்து, வய சானவங்க வரைக் கும் குடிக்கிறோம். இதனால பல வியாதிங்க பரவிடுச்சு. இந்த ஒரு மாசத்துல மட்டும் 14 ஆயிரம் பேருக்கு மஞ்சள் காமாலையும் 10 ஆயிரம் பேருக்கு சின்னம்மை நோயும் தாக்கி, அவங்க உயிருக்கு போராடிக்கிட்டு இருக்காங்க'' என்றார்.
""வாரத்திற்கு ஒருமுறை, அங்குள்ள ராணுவத் தினருக்கு தேவையான அத்யாவசிய பொருட்கள் அனைத்தும் முறையாக அனுப்பப்படுகிறது. இந்த ராணுவ வாகனத்தைக் கண்டதும், "தங்களுக்கு உணவு வந்துவிட்டது' என்று ஏக்கத்துடன் ஓடி வரு கிறார்கள் தமிழர்கள். அப்போது, அந்த வாகனத்தை மக்கள் சூழ்ந்து விடாமல் அவர்களை விரட்டியடிக் கிறது ராணுவம், "இது மிலிட்டரிக்கு வந்தது' என்று எச்சரிக்கிறது. அப்போது, அந்த மக்களின் நிலைமையை கண்கொண்டு பார்க்க முடியாது. அய்யா, அய்யா, என்றும் சார்... சார்... என்றும் ஒரு பிரட் கேட்டு அவர்கள் கெஞ்சுவதை இதய முள்ள எவராலும் ஜீரணித்துக் கொள்ள முடியாது.
இந்த மக்கள் குளித்து ரொம்ப நாட்கள் ஆகிவிட் டது. காரணம், ஒரு சின்னத் தொட்டியில் 1000 லிட்டர் தண்ணியை ஊற்றி விடுகிறது ராணுவம். அந்த தண்ணியும் கிருமிகள் வாழும் கெட்டுப் போன தண்ணி போல இருக்கிறது. அந்த தண்ணீர் தொட்டிக்கு மறைவிடம் கிடையாது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், எல்லாரும் ஒரே சமயத்தில் ஒண்ணாக நின்னு குளித்துக் கொள்ள வேண்டும்னு ராணுவத்தின் உத்தரவு. இதனாலேயே பலரும் குளிப்பதில்லை. டாய்லெட் செல்ல நீண்ட க்யூவில் நிற்கிறார்கள். மலக்கூடங்கள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. அதனை சுத்தம் செய்ய மறுக்கிறது ராணுவம். இதனால், எங்கு பார்த்தாலும் துர்நாற்றம், கிருமிகள்.
மருத்துவ வசதிகள் எதையும் அரசாங்கம் செய்துகொடுக் காததால், சராசரியாக ஒரு நாளைக்கு 10-க்கும் மேற்பட்ட குழந் தைகளும், வயதானவர்களும் இறந்துபோகிறார்கள். இவர்களது உடல்கள் ஆங்காங்கே அப்படியே கிடக்கின்றன. இவைகளை அப்புறப்படுத்த எந்த அக்கறையும் ராணுவம் காட்டவில்லை. இத னாலும் தொற்றுநோய்கள் வேகமாகப் பரவி, மக்களை மரண அவஸ்தைகளில் தள்ளியிருக்கிறது.
முகாமிற்குள் நாங்கள் ரகசியமாக நுழைந்து மக்களிடம் பேசிக்கிட்டு இருந்தபோது 32 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி, கைக்குழந்தையை ஏந்திக்கிட்டு "ஒரு பாக்கெட் பால் எப்படியாச்சும் வாங் கிக் கொடுங்க' என்று கெஞ்சியவர், "என் மார்ல பால் வத்தி போயிடுச் சிங்கய்யா...' என்று கதறியபோது... எங்களால் தாங்கிக்க முடியலை. இப்படி நிறைய கொடுமைகளை அனுபவிச்சிக்கிட்டு இருக்காங்க தமிழ் மக்கள். இந்தக் கொடுமை களால் மனநோயாளிகளா மாறிக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்'' என்று விவரித்தனர் தடுப்பு முகாம்களின் உள்ளே சென்று வந்துள்ள அரசு சாரா தொண்டு நிறுவன பணியாளர்கள் சிவசங்க ரன், முத்தையா ஆகியோர்.
தடுப்பு முகாம்களில் உள்ள 14-ல் இருந்து 22 வயதுள்ள இளம் பெண்கள் தனியாகப் பிரித்து கிளி நொச்சி, திரி கோணமலை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட ராணுவ முகாம்களுக்கு ராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களை எங்கு வைத்திருக்கிறோம் என்கிற எந்த தகவலையும் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிப்பதில்லை ராணுவம். இதுவரை 3000 இளம்பெண் கள் ராணுவத்தினரால் கடத் தப்பட்டுள்ளனர். ராணுவ முகாம்களில் இந்த இளம் பெண்களை கூட்டு கற்பழிப்பில் சிக்கவைத்து, கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். அதேபோல, புலிகள் இயக்கத்தில் இருந்த பெண் போராளிகளை கைது செய்து தனிச்சிறையில் அடைத்து வைத்துள்ள ராணுவம், தினமும் இரவு நேரங்களில் 5 பேர், 10 பேர் என அவர்களை இழுத்துச் சென்று சுட்டுக்கொல்கிறார்கள். மேலும் இளைஞர்களை தனியாக பிரித்து இழுத்துச் செல்லும் ராணுவம், பல்வேறு இடங்களில் உள்ள ராணுவ முகாம்களை சீர்படுத்தவும், சுத்தப்படுத்தவும், காவல் அரண்களை அமைக்கவும் பயன்படுத்தி வருகிறது. அந்த பணி முடிந்ததும் வேறொரு ராணுவ முகாமிற்கு கடத்திவிடுகிறது. மேலும் தடுப்பு முகாமில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ஒவ்வொரு முகா மிற்கு மாற்றிவிடுகிறது. யார், யார் எங்கு இருக்கிறார் என்றோ, அவர்கள் என்ன ஆனார்கள் என்றோ சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவதில்லை. இதனால் அப்பா, அம்மா இல்லாமல் குழந்தை களும், குழந்தைகள் இல்லாமல் பெற்றோர்களும் பைத்தியம் பிடித்ததுபோல் அலைந்துகொண்டிருக்கிறார்கள் என்று வவுனியா, மன்னார், கிளிநொச்சி, இடைத்தங்கல் முகாம்களிலிருந்து நெஞ்சைப் பதறவைக்கும் தகவல்கள் வருகின்றன.
தடுப்பு முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு எவ்வித நிவாரண உதவிகளும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் ராஜபக்சே.
-கொழும்பிலிருந்து எழில்
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com