தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்
There was an error in this gadget

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Sunday, June 14, 2009

♥ தமிழீழப் படுகொலைக்கு.... உன் எதிர்வினைதான் என்ன?-'குமுதம்' ♥

தமிழ் இனப் படுகொலைக்கு இந்திய, தமிழக அரசுகளின் எதிர்வினை என்ன?: 'குமுதம்' வார ஏடு கேள்வி


தமிழ் இனப் படுகொலைக்கு இந்திய, தமிழக அரசுகளின் எதிர்வினை என்ன? என்று தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் பிரபல வார ஏடான 'குமுதம்' கேள்வி எழுப்பியிருக்கின்றது.

இது தொடர்பாக 'குமுதம்' வார ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"இந்த நாட்டின் சட்டத்தில் நீதி கிடைக்கும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. இலங்கை முகாம்களில் இடம்பெயர்ந்திருக்கிற தமிழ் மக்களின் துன்பங்களைச் சொற்களால் விளக்க முடியாது'' இப்படிப் பட்டவர்த்தனமாகச் சொல்லியிருப்பவர் இலங்கைத் தலைமை நீதிபதியான சரத் என். சில்வா.

"வெற்றியால் மகிழாமல், பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களுக்கு மருந்திடுங்கள்" என்கிறார் இலங்கை சென்று வந்தவரான ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன்.

பிரிட்டனும், ஐரோப்பிய நாடுகளும், சர்வதேசப் பத்திரிகையாளர்களும் இலங்கையில் கொத்தாக நடந்த இனப் படுகொலைகளுக்கு எதிரான குரலை உயர்த்தியிருக்கின்றன. இலங்கையில் நடந்த கொடூரங்களைத் தாங்கமுடியாத சிங்களப் பத்திரிகையாளர்கள் கூடக் கடுமையாக மிரட்டப்பட்டிருக்கிறார்கள்.

ஒன்றரை லட்சம் தமிழ்மக்கள் சொந்த நாட்டில் மிகக் கேவலமான முறையில் வீடற்றவர்களாக முகாம்கள் என்கிற பெயரில் திறந்தவெளி சிறைச்சாலைகளில் வதைபடுகிறார்கள்.

விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதிகள் தந்திரமாக அழிக்கப்பட்டிருக்கிறார்கள். ஈழக் கனவு கண்டதற்காக அவர்களுடைய பார்வையை மட்டுமல்ல, உயிரையே பறித்திருக்கிறார்கள். தமிழ் இனம் கண்ட அவலங்களின் உச்சம் - சமீபத்திய இந்த ஈவு இரக்கமற்ற படுகொலைகள்.

பன்னாட்டு ஆதரவுடன் நடந்த இனப்படுகொலைகளுக்கு எதிரான விசாரணையை இன்னும் யாராலும் துவக்க முடியவில்லை. உலகெங்கும் சிதறிக் கிடக்கும் தமிழர்கள், அகதிகளாக இந்தியாவில் இருப்பவர்கள் மத்தியில் வெறுமையுடன் குடையும் கேள்வி - இலங்கையில் தமிழர்களின் எதிர்காலத்தை யார் நிர்ணயிப்பது?

இந்திய அரசின், தமிழக அரசின் எதிர்வினைதான் என்ன?

"சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே" என்ற வரிகள் நினைவுக்கு வருவதைத் தடுக்க முடியவில்லை.

என்ன செய்ய முடியும் ஊமை சனங்களால்? என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://puthinam.com/full.php?2bYUmWe0dYe3A0ecAEar3b4qcAl4d3f4l3cc2DvS3d42aOT3b020Qr3e


No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!