டிஎன்ஏ டெஸ்ட்… அப்படீன்னா? என்னாங்க ?அந்த வசதி இலங்கையில் இருக்கா?
தலைவர் பிரபாகரன் குறித்த வதந்திகளூடே இப்போது அதிகம் அலசப்படும் விஷயமாக இருப்பது டிஎன்ஏ டெஸ்ட் எனப்படும் மரபணுச் சோசதனை முடிவுகள்…
அது என்ன மரபணுச் சோதனை?
இறந்து போன ஒரு நபரை யாராலும் அடையாளம் காட்ட முடியவில்லை என்றால், அப்போது அவரது டிஎன்ஏ எனப்படும் மரபணுக்களையும், அவரது ரத்த சொந்தங்களின் மரபணுக்களையும் ஆராய்ந்து பார்த்து, அவற்றின் ஒற்றுமைகளின் அடிப்படையில் அடையாளம் காட்டுவார்கள். இதற்குப் பெயர்தான் டிஎன்ஏ சோதனை முறை.
இந்தச் சோதனையைச் செய்வது அத்தனை கடினமா… எந்தெந்த முறையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது?
டிஎன்ஏ செய்யப்படுவது அத்தனை எளிதான காரியமல்ல. முதலில் இறந்தவர் உடலிலிருந்து கொஞ்சம் திசுக்கள், எலும்பு மாதிரிகளை இந்த சோதனைக்கு சேகரிக்க வேண்டும். பின்னர் அவரது வாரிசு உள்ளிட்ட ரத்த பந்தங்களின் ரத்த அல்லது திசுக்களின் மாதிரியைச் சேகரிக்க வேண்டும். அவற்றில் கண்டுபிடிக்கப்படும் மரபணுக்களை வைத்து இறந்தவர், இன்னாருக்கு தொடர்புடையவராக இருக்கிறார் என்ற தகவலைச் சொல்ல முடியும்.
இதுகுறித்து சென்னை தடவியல் அறிவியல் மைய இயக்குநர் விஜயகுமார் கூறியதாவது:
"பொதுவாக ஒருவரது உடலில் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. இவற்றில் 22 ஆட்டோசோம்கள் எனப்படுபவை. மீதி ஒரு ஜோடி, பாலினத்தை தீர்மானிப்பவை. தாய் மற்றும் தந்தையர் இருவரது குரோமோசோம்களும் 50:50 என்ற விகிதத்தில் ஒருவரது உடலில் அமைந்திருக்கும்.
இவை எக்ஸ் மற்றும் ஒய் என வகைப்படுத்தப்படுகின்றன. இதில் ஒருவேளை தாயின் மாதிரிகள் கிடைக்காமல் போனால், தந்தையின் திசு மாதிரிகளைக் கொண்டும் ஆய்வு நடத்தி ஒய் குரோமோசோம்களின் ஒத்திசைவைப் பொறுத்து முடிவு காண முடியும்.
ஆனால் இதையெல்லாம் செய்து முடிக்க 2 மணிநேரமல்ல… 20 மணி நேரம் இருந்தால்கூட போதாது. அதிலும் இந்த ஒய் குரோமோசோம் சோதனை முறை மிக மிக அரிதாகவே கையாளப்பட்டுள்ளது கடினமானதும் கூட!"
இந்தியாவின் செல்லுலர் மற்றும் மாலிக்யூலர் பயாலஜி மையத்தின் லால்ஜி சிங் என்ன கூறுகிறார் என்று பாருங்கள்:
'தந்தை - மகன் செல்களில் உள்ள ஒய் குரோமோசோம்களை வைத்து ஆய்வு நடத்தி முடிவுகளைச் சொல்வது அசாதாரண விஷயம். மருத்துவ விஞ்ஞானத்தில் கொடிகட்டிப் பறக்கும் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலேயே இதற்கு குறைந்தது 10 நாட்கள் தேவை.
அடிப்படை மருத்துவ கட்டமைப்பு வசதிகளே இல்லாத இலங்கையில் சில மணிநேரங்களில் போஸ்ட் மார்ட்டம் செய்வது கூட சாத்தியமல்ல… இதில் டிஎன்ஏ டெஸ்ட்டாவது… என்ன விளையாடுகிறார்களா?'
இலங்கையில் உண்மையிலேயே டிஎன்ஏ சோதனை செய்யும் வசதிகள் உள்ளனவா? அதற்கான பக்கா லேப், உபகரணங்கள் உண்டா?
இந்தியாவின் புகழ்பெற்ற தடயவியல் துறை நிபுணர் சந்திரசேகர் இதற்கு பதில் கூறுகிறார். இவர் ராஜீவ் காந்தி உடலை டிஎன்ஏ பரிசோதனை செய்து, அந்த மரபணுக்களின் அடிப்படையில்தான் இறந்தவர் ராஜீவ் காந்தி என்பதையே உறுதிப்படுத்தினார், 18 ஆண்டுகளுக்கு முன்பு. சிவராசன் மற்றும் தணுவின் டிஎன்ஏ மேப்பிங் செய்தவர்.
"நான் இலங்கைக்கு சில முறை சென்றுள்ளேன். எனக்குத் தெரிந்த வரையில் அங்கு டிஎன்ஏ பரிசோதனைக் கூடமே இல்லை. இறந்தவரின் செல்களிலிருந்து மரபணுக்களைக் கண்டறியவே குறைந்தது 4 நாட்களாவது ஆகும். சோதனைகள் முழுமேயைக முடிந்து அறிக்கை தர 10 நாட்களுக்கு மேலாகும்," என்கிறார் சந்திரசேகர்.
சரி… விஷயத்துக்கு வருவோம்:
தமிழீழ விடுதலைப புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் சார்லஸ் ஆண்டனியின் உடலை நேற்று கண்டுபிடித்தததாகக் கூறும் ராணுவம் இன்று சார்லஸின் டிஎன்ஏ சோதனையை முடித்துவிட்டதாகக் கூறியுள்ளனர். எனில், சார்லஸ் மரபணுவுடன் ஒப்பிட, அவரது தாய் அல்லது தந்தை அல்லது உறவினர் திசுக்களின் மாதிரிகளை இலங்கை ராணுவம் எங்கே எடுத்தது?
ஆண்டனியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது நேற்றுதான்… ஆனால் பிரபாகரன் 'உடலை' கண்டெடுக்கும் முன்பே ஆண்டனிக்கு டிஎன்ஏ சோதனை முடித்து விட்டதாகக் கூறுகிறார்கள். அதுவும் பிரபாகரனின் மரபணுவும், ஆண்டனியின் மரபணுவும் ஒன்றாக இருந்ததாகச் சொல்கிறது ராணுவத்தின் டிஎன்ஏ சோதனை. ஒருவேளை, நேற்று முன்தினமே சிங்கள ராணுவத்தினருக்கு தனது செல்களை நேரில் போய் கொடுத்துவிட்டு வந்திருப்பாரோ பிரபாகரன்?!
அவரது உடலின் டிஎன்ஏவை அவரது ரத்தத்துடனோ அல்லது உடல் பகுதியின் பிற திசுக்களுடனோ ஒப்பிட ஏற்கனவே அவரது ரத்தம் அல்லது திசு அவர்களிடம் இருந்திருக்க வேண்டும். அப்படி இலங்கையில் பிரபாகரனின் ரத்தம் முன்பே இருந்திருக்க வாய்ப்பேயில்லை.
இன்னொன்று, ஆண்டனியின் தாய் மதிவதனியின் மாதிரி செல்கள் கிடைக்க வாய்ப்பே இல்லை என ராணுவம் ஒப்புக் கொள்கிறது. அப்படியெனில் மிகக் கடின சோதனை முறையான ஒய் குரோமோசோம் ஒத்திசைவு சோதனைதான் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
சகல நவீன மருத்துவ வசதிகளும் கொண்ட இந்தியாவிலேயே இந்த சோதனையைச் செய்ய குறைந்தது 10 நாட்கள் தேவை என நிபுணர்கள் கூறும்போது, எந்த விஞ்ஞான கட்டமைப்பு வசதியும் இல்லாத டுபாக்கூர் நாடான இலங்கையில் சில நிமிடங்களில் டிஎன்ஏ சோதனை நடத்தி முடித்தது எப்படி? இவர்களுக்கு சாதாரண மூத்திரப் பரிசோதனையாவது செய்யத் தெரியுமா?
சாரலஸ் இறந்தார்… அடுத்த நாள் பிரபாகரனை முடித்துவிட்டோம். இருவர் உடலும் எங்களிடம் உள்ளன. உடனே அவற்றின் சாம்பிள் எடுத்து சோதனை செய்து சொல்லிவிட்டோம் என்று கூட ராணுவம் காததில் கூடை கூடையாய் பூச்சுற்றக் கூடும். ஆனால், பிரபாகரன் உடல் என்ற ஒன்றை காட்டும் முன்பே, சார்லஸின் டிஎன்ஏ சோதனையை முடித்துவிட்டோம் என்று இலங்கை ராணுவமும் பாதுகாப்பு அமைச்சும் இந்திய ஊடகங்களுக்கு அழுத்தம் திருத்தமாக பேட்டி வழங்கியுள்ளது அழிக்க முடியாத ஆதாரமாக இன்னும் உள்ளது.
பிரபாகரன், சார்லஸ், பொட்டு அம்மன் போன்றோர் கொல்லப்பட்டது உண்மையானால், இந்த டிஎன்ஏ அறிக்கைகளை தருமாறு இன்டர்போல், இந்திய அரசு போன்றவை இப்போது இலங்கையிடம் கேட்கத் துவங்கியுள்ளன. பத்திரிகைகளும் நடுநிலையாளர்களும் உள்புக முடியாத தேசத்தில், சிங்கள இனவெறி ராணுவமும் அரசும் திட்டமிட்டு தயாரித்து அளிக்கும் பொய்களே ஆய்வு முடிவுகள் என்றாகிவிடும் அபாயம் உள்ளது.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com