நகர் படங்களை (.gif) வலைப்பூவில் காண்பிப்பது எப்படி? நகர் படங்கள் என்றால் அசையக் கூடிய விதத்தில் அமைந்துள்ள animated .gif கோப்புகளைக் குறிக்கிறது. அசையாத நிழற்படங்களை .jpg, .png என்ற வடிவங்களில் சேமித்திருப்போம். ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்ச்சியான .jpg படங்களை அடுத்தடுத்து இணைத்து உருவாக்கப்பட்டதே .gif எனப்படும் புதிய நுட்பம் ஆகும். இந்த .gif கோப்புகளை உருவாக்க http://www.benetonfilms.com/bmg.zip http://www.whitsoftdev.com/files/unfreez.zip போன்ற இலவச மென்பொருட்களைத் துணைக்கு அழைக்கலாம். சரி விசயத்திற்கு வருகிறேன். எப்படியோ நான் ஒரு அசையும் / நகர்படத்தை உருவாக்கிவிட்டேன். அல்லது இணையத்தில் இருந்து இறக்கிவிட்டேன். அதை வலைப்பூவில் பொதிய வலைப்பூவின் எடிட்டரில் Add Image என்னும் பட்டனைக் க்ளிக் செய்து எனது .gif கோப்பை picasa வில் ஏற்றினேன். அது தந்த Coding எனப்படும் சிறிய html நிரலானது வலைப்பூவின் எடிட்டரில் தானாக அமர்ந்தது. இது வரை சரிதான். ஆனால் எனது கணினியில் நான் ஓட்டிப் பார்த்து மகிழ்ந்த .gif ன் அனிமேசன் வலைப்பக்கத்தில் வரவில்லை. அது அசையாத ஸ்டாட்டிக் படமாகக் காட்சியளித்தது. இதற்கு என்ன தீர்வு. அசை படத்தை அப்படியே வலைப்பக்கத்தில் காட்டுவதற்கு என்ன வழி? தீர்வு : .gif எனப்படும் அசைபடங்களை Picasaவில் வேண்டாம். அதற்கு மாற்றாக Photobucket என்னும் சிறப்புத் தளத்தில் ஒரு பயனர் கணக்கை ஆரம்பித்து அங்கே ஏற்றுங்கள். அங்கே ஒரு சிறிய html நிரலினைக் கொடுப்பார்கள். அதைக் காப்பி செய்து bloggerன் Edit html என்கிற பகுதியில் paste செய்துவிடுங்கள். செயல்முறை விளக்கம் - படங்களுடன் : 1: Photobucket தளத்தில் உள் நுழையவும் 2. உங்கள் கணினியில் இருக்கும் .gif கோப்பினை ஏற்றவும். 3. ஏற்றப்பட்ட படத்தின் மேலேயுள்ள share சுட்டியை அழுத்தவும் 4. அந்தத் தளத்தில் கிடைக்கும் html நிரலைக் காப்பி செய்யவும். 5. உங்கள் வலைப்பூவின் எடிட்டரில் Edit Html ஐ அழுத்தி அங்கே Paste செய்யவும். இப்படிச் செய்ததால் கிடைத்த fire heart என்னும் அசைபடத்தையே இந்தப் பதிவின் ஆரம்ப வரிகளுக்கு மேல் காண்கிறீர்கள். Photobucket ல் இருந்து கிடைத்த நிரல் கீழே : http://www.tamilnenjam.org/2009/04/gif.html |
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
14 years ago
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com