Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic

தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Saturday, April 11, 2009

டிவிட்டர் புரட்சி வெடித்தது பாரீர்.



டிவிட்டர் புரட்சி வெடித்தது பாரீர்.


nmoஒரே ஒரு டிவீட்,அதுவே அக்னிகுஞ்சாக மாறி மால்டோவா நாட்டில் புரட்சித்தீயை பரவ வைத்தது.இதுவே இண்டெர்நெட் முழுவதும் காட்டுத்தீயாக பரவி
மால்டோவாவில் நடந்த டிவிட்டர் புரட்சி பற்றி பரபரப்பாக பேச வைத்திருக்கிறது.

முன்னால் சோவியத் குடியரசான மால்டோவாவில் டிவிட்டர் மூலம் நடைபெற்றதாக கூறப்படும் இந்த புரட்சி, டிவிட்டரின் செல்வாக்கை மேலும் உயர்த்தியிருப்பதோடு,டிவிட்டர் போன்ற ச‌முக தன்மை கொண்ட தொழில்நுடப சேவைகளின் வீச்சையும் மீண்டும் ஒரு முறை புரிய வைத்திருக்கிறது.

சோவியத் பிராந்தியத்தில் நடைபெற்ற வண்ண புரட்சிகளின் வரிசையில்(உக்ரைனில் ஆர‌ஞ்சு புரட்சி,ஜார்கியாவில் வெல்வட் புரட்சி) இந்த டிவிட்டர் புரட்சி சேர்ந்தாலும் டிவிட்டரால் அறங்கேறிய முதல் புரட்சியாக இது வர்ணிக்கப்படுகிறது.

இனி புரட்சிக்கு வருவோம். மால்டோவா உக்ரைனுக்கும் ருமேனியாவிற்கும் இடையே உள்ள சிறிய நாடு.இஙு போதிய வேலைவாய்ப்புகள் இல்லை என்பதால் இங்குள்ள இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு போய்விடுகின்றனராம். இப்போது பொருளாதார தேக்கநிலை காரணமாக இளைஞரகள் தாய்நாட்டிலேயே தங்கியிருக்கும் நிலை என்கின்றனர்.

மால்டோவாவில் நடப்பது கம்யூனிச ஆட்சி. சமீபத்தில் அங்கு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் தில்லுமுல்லு நடந்ததாக ஒரு சந்தேகம்.கம்யூனிச அரசு 50 சதவீத வாக்குகள் தங்களுக்கு ஆதராவாக பதிவானதாக தெரிவித்தது. இதனால் புதிய அதிபரை நியமிக்கும் உரிமை கம்யூனிச கட்சிக்கு கிடைக்கும்.

சர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாடுகளில் பெயருக்கு தேர்தல் நடத்தி தாங்களே வெற்றி பெற்றதாக அறிவித்துக்கொள்வது ரொம்ப சகஜம். இதை எதிர்த்து புலம்புவதை தவிர எதுவும் செய்ய முடியாது. விதியில் இறங்கி போராடினால் நசுக்கி விடுவார்கள்.

மால்டோவாவிலும் இப்படித்தான் தேர்தலில் முறைகேடு மூலம் ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்கான கொல்லைப்புற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த அநீதியை எதிர்த்து மால்டோவா இளைஞர்கள் பெரும் போராட்டத்தில் குதித்தனர்.

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இலைஞர்கள் அந்நாட்டு நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது ஏறி ஆர்ப்பாட்டம் செய்தது அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த போராட்டக்காட்சி மறுநாள் நாளிதழ்களில் புகைப்படத்தோடு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கடும் கட்டுப்பாட்டை கொண்ட மால்டோவாவில் இப்படி இளைஞர்கள் பொங்கிஎழுந்த‌தற்கு உதவியது குறுஞ்செய்தி வலைப்பதிவு சேவையான டிவிட்டர் தான் என்னும் தகவல் வெளியான போது புரட்சிக்கு புதிய பரிமாணம் கிடைத்தது.

நாளுக்கு நாள் பிரபலமாகி வரும் டிவிட்டர் சேவையின் பயன்பாட்டு எல்லை விரிந்துகொண்டே வரும் நிலையில் டிவிட்டர் வாயிலாக வெடித்த புரட்சி என்பது கவனத்தை ஈர்த்ததில் வியப்பில்லை.

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் வருவது போல குருதி சிந்தாமல்,டிவிட்டர் மூலம் ஆதரவு திரட்டி புரட்சியை ஏற்படுத்த முடிகிறது என்றால் போராட்டத்தில் புதியதொரு கத‌வு திறப்பதாக மகிழலாம் அல்லவா?

மால்டோவா புரட்சி இத்த‌கைய மகிழ்சியை தான் உண்டாக்கியுள்ளது.

காரணம் டிவிட்டரில் வெளியான ஒரு பதிவு தான் புரட்சிக்கான விதையாக அமைந்தது.

தேர்தல் முடிவு வெளியானதும் அதிருப்தி அடைந்த இளைஞர் ஒருவர் டிவிட்டரில், இந்த தகவலை குறிப்பிட்டு தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதை எதிர்க்க வேண்டும் என்றும் ஆவேசத்தோடு கூறியிருந்தார். தேர்தல் முடிவுக்கு எதிரான கண்டனத்தை தெரிவிக்க நாடளுமன்ற கட்டிடம் முன் திரளுமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.

இது புரட்சித்தீயாக மாறும் என அவர் எதிர்பார்த்தாரா என தெரியவில்லை. தன்னுடைய கோபத்தை டிவிட்டர் மூலம் இயல்பாக பகிர்ந்துகொண்டார்.த்ற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கான பதிலாக அமையும் டிவிட்டரின் இயல்பே அதுதானே, என்ன நடக்கிறது என்பதை உடனடியாக டிவிட்டர் வழியே பகிர்ந்துகொள்ளலாம் இல்லையா?

அந்த வாலிபரும் அதை தான் செதிருந்தார்.கூடவே ஒரு எதிர்பார்ப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் அழைப்பு விடுத்திருந்தார்.

அதன் பிறகு நடந்தவற்றை அவரே கூட எதிர்பார்க்கவில்லை.

இந்த டிவிட்டர் குறிப்பு மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளப்பட்டது. வலைபின்னல் தளமான ஃபேஸ்புக்கிலும் பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டது.

விளைவு மறுநாள் நாடாளும‌ன்ற கட்டிடத்தில் 10000 பேர் திரண்டுவிட்டனர்.இந்த கோபத்தையும் எதிர்வினையையும் அரசு நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

போராட்டக்காரர்கள் வன்முறியில் ஈடுபட்டதகவும் தகவல். அரசு அடக்குமுறையை கையாண்டாதாகவும் தகவல். இதனிடையே போராட்டம் அறங்கேறும் விதத்தையும் டிவிட்டர் மூலமே பகிர்ந்துகொண்டனர். ஆக ஒன்றுமே நடக்கவில்லை என அரசு பூசிமொழுக வாய்ப்பின்றி போனது.

பொதுவாக புரட்சிகள் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகாது என சொல்லப்படுவதுண்டு. அதற்கு மாறாக இந்த போராட்டம் நிகழும் போதே அது டிவிட்டரில் ஒலிபரப்பாகி கொண்டிருந்தது.

மால்டோவா முறைகேடு உலகம் முழுவது வெட்டவெளிச்சமானது. எதிபார்க்க கூடியது போலவே மால்டோவா அரசு இது எதிர்கட்சிகளின் சதி என்றது. அண்டை நாடான ருமேனியாவின் தூண்டுதலும் இருப்பதாக கூறப்பட்டது.ஆனால் இதற்குள் டிவிட்டர் மூலம் போராட்டம் நடந்த செய்தி தீயாக பரவி டிவிட்டர் புரட்சியாக அங்கிகரிக்கப்பட்டு விட்டது.

டிவிட்டர் மூலம் இனி பல புரட்சிகள் அறங்கேறுமா என்னும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இல்லை நடந்தது உண்மையில் டிவிட்டர் புரட்சி அல்ல ; டிவிட்டரின் ப்ங்கு மிகைபடுத்த்ப்பட்டுள்ளது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இருக்கட்டுமே டிவிட்டர் பொறி இருந்த்து உண்மைதானே.

அதைவிட முக்கியமாக மறு வாக்கு எண்ணிக்கைகு உத்தர‌விடப்பட்டுள்ளதே.

http://cybersimman.wordpress.com/2009/04/11/twitter-5/





No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"



பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

smail

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்
animated gifs

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!