ஒரு கிராமத்துப்பண்ணை வீட்டில் தாத்தா காலத்து பழைய கடிகாரம் ஒன்று இருந்தது.
அது 150 ஆண்டுகள் இடைவிடாமல்ஓடி சரியான நேரத்தைக்காட்டிவந்தது.
ஒவ்வொருநாள் காலையும் அந்த வீட்டில் இருந்த விவசாயி காலை எழுந்ததும் முதலில் அந்தகடிகாரம் அருகில் சென்று அது சரியாக ஓடுகிறதா என்றுபார்ப்பார்.
ஒருநாள்காலை அவர் இப்படி நின்றுபார்த்தபோது திடீரென கடிகாரம் பேசத்தொடங்கியது.
: 150 ஆண்டுகளாக நானும் வேலை செய்துவருகிறேன் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன் எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது எனக்கு ஓய்வு வேண்டாமா : என்று கேட்டது.
;உன்னுடைய புகார் சரி இல்லை என் அருமை கடிகாரமே என்று ஆரம்பித்த விவசாயி
தொடர்ந்தார்,
:உன்னுடைய ஒவ்வொரு டிக்கிலும் ஒருவினாடி ஓய்வு இருப்பதை நீ மறந்துவிட்டாயே: !
கடிகாரம் ஒருநிமிடம் யோசித்தது பிறகு மறுபடி தன்பணியைத்தொடர்ந்தது.
நன்றி!...
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com