தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, April 24, 2009

காமெடி டைம்

ஆதித்யா டீவிங்குறானுங்க, காமெடி டைமுங்கறானுங்க, கலக்கப் போவது யாரு,
அசத்தப் போவது யாருன்னுன்னு ஆளாளுக்கு ஒவ்வொரு பெயர் வெச்சுக்கிட்டு
காமெடி செய்கிறோம்னு அலப்பறை செய்துக்கிட்டிருக்காங்க. இது அத்தனைக்கும்
நடுவில சத்தமே இல்லாமல் "Bright Vision" தினமும் ஒரு மூன்றுமணி நேரம்
சரெவெடியா காமெடி நிகழ்ச்சிகளை தந்துட்டிருக்காங்க. ஆனால் இவங்களுக்கு
சரியான டைம் தராததால இவர்களுடைய காமெடி முயற்சிகளும், திறமைகளும்
உலகத்திற்கு தெரியாமலே போய்க்கிட்டிருக்கு.

தினமும் விஜய் டீவியில் இரவு 11 மணிக்கு மேல ஒரு மூணு மணி நேரம்
தொடர்ச்சியா போடற நிகழ்ச்சிகளைப் பாருங்க. அங்க சில மேதாவிகள் தோன்றி
தரிசனம் கொடுத்து நமக்கு என்ன பிரச்சினை வந்தாலும் தீர்த்து வெப்பாங்க.
வேலை கிடைக்கலை, கல்யாணம் ஆகலை, உங்க வீட்டு நாய்க்கு உடம்பு சரியில்லை,
பைக் அடிக்கடி பங்சர் ஆகுது, கிரிக்கெட் மேட்சுல முனாஃப் படேல்
செஞ்சுரியே அடிக்க மாட்டீங்கிறாரு, சாப்பிடும் போது விக்கல் வருது இப்படி
உங்களுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் இவங்ககிட்ட போங்க. அவங்க சொல்ற
ஆலோசனைகளைக் கடைபிடியுங்கள். வாழ்க்கையில ஓஹோன்னு முன்னுக்கு வந்துடுங்க.
என்ன நான் சொல்றது?

மஹாதன் சேகர் ராஜா: யாரு இவருன்னு உங்கள்ல யாராவது கேட்டிங்கன்னா நான்
மானாங்கன்னியா டென்ஷன் ஆயிடுவேன் சொல்லிப்புட்டேன் ஆமா. ஃபார்மேட்
நியூமராலஜியை உலகிற்கு முதன் முதலில் அறிமுகப் படுத்தியவர் இவருதாங்க.
பார்ப்பதற்கு ஒரு சாயலில் இளையராஜா மாதிரியே இருக்கும் இவர் அள்ளி வீசும்
கருத்துக்களை சாணக்கியர் கூட சொல்லி இருக்க மாட்டார்.

அதாவது பார்த்தீங்கன்னா, சில பேரு நேர் வாக்கு எடுத்து தலை சீவுவார்கள்.
அவர்களது வாக்கைப் போலவே அவர்களது வாழ்க்கையும் நேராக சீரிய முறையிலே
இருக்கும். ஆனால் சில பேரு பார்த்தீங்கன்னா ஃபேஷன் அது இதுன்னு
சொல்லிக்கிட்டு கோணல் மாணலாக வாக்கெடுத்து சீவுவார்கள். அவர்களது
வாழ்க்கையும் கோணல் மாணலாகத்தான் இருக்கும். தலை எழுத்து மட்டும் நம்
வாழ்க்கையை நிர்ணயிப்பதில் தலை முடியும்தான் நம்ம வாழ்க்கையை
நிர்ணயிக்கிறதுன்னு அள்ளி வீசுனாரு. ஆனா இதெல்லாம் சொன்ன நம்ம மஹாதன்
சேகர் ராஜா அண்ணாச்சி தலையில ஒரு முடி கூட இல்லை. அட கடவுளே அப்போ
இவருக்கு வாழ்க்கைன்னு ஒண்ணே இல்லையா? அய்யோ பாவம் என் எதிரிக்கு கூட
இந்த நிலைமை வரக் கூடாதுப்பா.

பெயரியல் பேராசான் ராஜராஜன் : வெறும் வாயால முழம் போடறதுல இவரை விட்டா
இன்னிய தேதிக்கு தமிழ்நாட்டுலயே ஆளு இல்லை. நம்ம காங்கிரஸ் தங்கபாலு கூட
இவருக்கு அப்புறம்தான். தெரியாத்தனமா யாராவது இவருக்கிட்ட மாட்டிட்டா
போதும் அதோட அவன் செத்தான். இவரோட சிந்தனைத் துளிகளில் இருந்து ஒரு சில.

      அதாவது சார்லசும்,டயானாவும் பொறக்கும் போதே இவருக்கு இவர்னு
பிறந்தவங்களாமாம். அவங்களோட ஜாதகப் பொருத்தம் அப்படியாமாம். ஆனா
இத்தனையும் இருந்தும்,டயானா ஏன் சீக்கிரம் செத்துப்போனாங்கன்னு
உங்களுக்கு யாருக்காவது தெரியுமா? அவங்க கல்யாண நாள் 29-07-181.நல்லா
கூட்டிப்பாருங்க. 1 வரும். கூட்டுத் தொகை 1,3,7,9 வர்ரவங்க சீக்கிரம்
செத்துப் போயிடுவாங்களாமாம்.

      லட்சுமனண்னு ஒருத்தரு சார் எனக்கு தொழில்லயும் வாழ்க்கையும்
வெற்றியே கிடைக்கறதில்லை. இதுக்கு நீங்கதான் நல்ல வழி காட்டணும்னு கேட்க
தலைவரு சொல்றாரு: "உங்க பேரு லட்சுமனண். கடைசி ரெண்டு எழுத்து
பாருங்க"னன்". "னன்"ன்னுன்னா ஆங்கிலத்தில ஒண்ணுமே இல்லைன்னு அர்த்தம்.
அதனாலதான் உங்களுக்கு வெற்றிகளே கிடைக்க மாட்டேங்குது. இதுக்கு ஒரே வழி
பேரை மாத்தறது மட்டும்தான்".

      சார் என் பொண்ணு பேரு நந்தினி சார். என் பொண்ணுக்கு ரொம்ப நாளா
கண்ணாலம் தள்ளிப் போகுது சார். நீங்கதான் பார்த்து ஒரு நல்ல வழி
காட்டணும்னு கேட்டாங்க. மனுஷன் அசராம அடிச்சாரு. "அம்மா உங்க பொண்ணு
பேருல "நன்"ன்னுன்னு உச்சரிப்பு வருது. நன்ன்னுன்னா கன்னிகாஸ்திரிகள்னு
அர்த்தம் அதனாலதான் உங்க பொண்ணுக்கு இன்னும் கல்யாணம் ஆகாம இருக்குது.
பேரை மாத்திடுங்கம்மான்னு உடனே தீர்ப்பு சொல்லிட்டாரு".

      எப்படியெல்லாம் யோசிக்கிறானுங்க பாருங்கய்யா? இன்னும் இந்த மாதிரி
உமாங்கிற பேரு, ரவிங்கிற பேரு இந்த மாதிரி பல பெயர்களுக்கு, மனுஷன்
கைவசம் ஐடியா வெச்சிக்கிட்டு இருக்காரு. ஸ்ரீதர் வேம்பு ங்கிற பேருக்கு
என்ன சொல்றாருன்னு தெரியலை.என் பேரு கூட நந்தகுமார்தான். தலைவரு எங்க ஏரியா பக்கத்துலதான்
விருகம்பாக்கத்துல இருக்காரு. நாளைக்கு நான் போலாம்னு இருக்கேன். நீங்க
யாராவது வர்றீங்களா? பல்க் ஆர்டருன்னா ஏதாவது தள்ளுபடி கிடைக்கும்...

மஹாஸ்ரீராஜன்: இவரு சாதாரண ஆளு இல்லைப்பா. வெப்சைட் எல்லாம்
வெச்சிருக்காரு. இவருக்கு தெரியாத விஷயமே இல்லை. ப்ரோனாலஜி, நியூமராலஜி,
நேமியாலஜி, ஆஸ்ட்ராலஜி, க்ராபாலஜி, பால்மிஸ்ட்ரி அப்படி இப்படின்னு
மனுஷன் புகுந்து விளையாடறாரு.பொறந்தா இப்படி ஒரு ஜீனியஸா பிறக்கணும்யா.
இவரோட ஒரு திருவிளயாடலை நேத்து நைட் 1 மணிக்கு பார்த்து அசந்து
போயிட்டேன்.

ராஜன்: சார் உங்களுக்கு தீராத கால்வலி இருக்கணுமே.

வாசகர்: ஆமா சார். ரொம்ப நாளா இருக்குது.

ராஜன்: ஏன் இருக்குது. உங்களுக்கு வயசும் சின்ன வயசுதான். 30 தான் ஆகுது.
இன்னும் கல்யாணமும் ஆகலை.

வாசகர்: சார் நான் கொஞ்சம் வெயிட் அதிகம் சார். என் வெயிட் எல்லாமே என்
கால்லதான இறங்குது. அதனால கூட கால் வழி வரலாம் சார். (அடப் பாவி இவ்வளவு
நல்லா யோசிக்கிற ஆளு இங்க ஏன்யா வந்து மாட்டின?)

ராஜன்: என்ன சார் பெரிய வெயிட். என்ன ஒரு 90 இருப்பீங்களா?

வாசகர்: இல்லை சார் 80 இருக்கிறேன்.

ராஜன்: பாருங்க 80 தான். அதெல்லாம் காரணம் இல்லை. நான் சொல்லட்டுமா?

வாசகர்: சொல்லுங்க சார்.

ராஜன்: உங்க பேரு என்ன. இளமயில் (அடப் பாவிகளா எவ்வளவு அருமையான தமிழ்
பெயர்). இள மயில்னு பேரு வெச்சவங்க எல்லாருக்கும் 25 வயசுக்கு மேல கால்
வலி வந்தே தீரும். இதை யாராலும் மாத்த முடியாது. நீங்க எத்தனை டாக்டரைப்
பார்த்தாலும் இது தீராது. என் கிட்ட வாங்க நான் சொல்ற பேரை
வெச்சுக்குங்க. அதுக்கப்புறம் கால் வலி உங்க கிட்ட கூட நெருங்காது.

இதாவது பரவாயில்லை. ஒர் மாசத்துக்கு முன்பு இவரோட இன்னொரு நிகழ்ச்சி
பார்த்து பயங்கர டென்ஷன் ஆயிட்டேன்.

ஒரு அம்மாவும் பொண்ணும் கல்யாணம் தள்ளிப் போகுதுன்னு வந்து இவருக்கிட்ட
புலம்பி இருக்காங்க. தலைவரு ஏதேதோ பார்த்துட்டு அம்மா உங்க பொண்ணுக்கு
பெரிய தோசம் இருக்குன்னு ஏதோ ஒரு பேரைச் சொன்னாரு. இது சாதாரண தோசம்
இல்லைம்மா. பயங்கர கொடூரமானதுன்னு பயங்கரமா பில்டப் எல்லாம் விட்டாரு.
அதுக்கு நிறைய செலவாகுமேன்னு சொல்லிட்டு, சரி விடுங்க இன்னொரு வழி
இருக்கு. அதைச் செய்ங்க உங்க தோசமெல்லாம் போயிடும்னு ஒண்ணைச் சொன்னாரு.
அதைக் கேட்டதுக்கப்புறம்தான் நான் டென்ஷன் ஆனதே.

அவரு சொல்றாரு"அம்மா உங்க தோசத்தைப் போக்கணும்னா ஆற்றின் கரையோரமாய்
இருக்கும் அம்மன் கோவில் ஏதேனும் ஒன்றிற்குச் சென்று ஒரு பட்டு வேட்டி,
சேலை வாங்கி தட்டில் வைத்து, சஹஸ்கர பரிகாரம்னு (பேரு இப்படிதான் ஏதோ
காதுல விழுந்தது) ஒண்ணை பண்ணிட்டு அங்கே இருக்கும் அந்தண பிராமண
தம்பதிகளின் காலில் நீங்கள் சாஷ்டாங்காமாய் விழுந்து கும்பிட்டு மனமுருக
எங்களுக்கு நல்ல வழி காமியுங்கள்னு வேண்டிக்கிட்டு அந்த பட்ச்சு வேட்டி
சட்டையை அவர்களுக்குக் கொடுத்து விட்டு அவர்கள் ஆசியை வாங்கிக் கொண்டு
வந்து விடுங்கள். உடனே உங்கள் தோசம் சரியாய் போய் விடும்".

மவனே இது ஒண்ணுக்கே உன்னை மிதிக்கணும்னுதான் எனக்கு தோணுச்சு.

இந்த திருட்டுல எப்படி பிக்பாக்கெட், பிளேடு போடறவனுங்க, செயினை
பறிக்கிறவனுங்க, பூட்டின வீட்டுல க்டப்பாறை போட்டு திருடறவனுங்க,
எல்லாரும் இருக்கிறப்பவே கூட்டமா போயி மிரட்டி பணம் பறிக்கிறவனுங்கன்னு
வித்தியாசம் வித்தியாசமா இருக்கிற மாதிரி இவங்கள்ளயும் ஆயிரத்தெட்டு
வெரைட்டி வெச்சிருக்காங்க.

சாஃப்ட்வேர் சத்குருன்னு லேட்ப்டாப், கோட்சூட் போட்டுக்கிட்டு
கம்ப்யூட்டர் மூலமா உங்க கஷ்டங்களைத் தீர்க்குறேன்னு சொல்ற ஆளு, வைட்
அண்ட் வைட் நீல்கண்ட சிவான்னு ஒருத்தரு, ஓசோன்ல இருந்து வர்ற காஸ்மிக்
எனர்ஜியை வெச்சு உங்க வாழ்க்கையை மாத்தறேன்னு ஒருத்தரு இப்படி பலபேரு
திரியறாங்க. இந்த காஸ்மிக் எனர்ஜி ஆளு இருக்காரே, அவரு சேலத்துல ஏற்காடு
அடிவாரத்துல, சில வருஷத்துக்கு முன்னாடி ஒண்ணுமே இல்லாம இருந்தாராம்.
அவரு காஸ்மிக் எனர்ஜின்னு ஒரு பக்கம் ஊரை ஏமாத்தினா அவங்க
வீட்டுக்காரம்மா இன்னொரு பக்கம் வேறோ ஏதோ டெக்னாலஜி பேரை சொல்லிக்கிட்டு
ஏமாத்திக்கிட்டு இருக்கு. இப்போ அந்த ஏரியாலயே இவங்கதான் பணக்காரங்க.

நம்ம சாஃப்ட்வேர் சத்குரு சொல்றாரு. மாருதி ஆல்டோ ஒரு ஃபெயிலியர்
மாடலாமாம். ஏன் தெரியுமா? அதோட நம்பர்களைக் கூட்டிப் பார்த்தா 8
வரலையாமாம். அப்புறம் எப்படிங்க அது சக்சஸாகும்னு நம்மளைக் கேட்கிறாரு.
மாருதி 800 அப்படி இல்லாததாலதான் ஜெயிச்சுடுச்சு. கூட்டினா 8 வருதாமாம்.
பார்றா இந்த சின்னப் புள்ளை தனக்குள்ள எவ்ளோ திறமைகளை ஒளிச்சு
வெச்சிட்டிருக்கு. ராசா நீ இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை.

இவனுங்களை சொல்லி தப்பு இல்லை. இவங்க எல்லாம் ஒரு மனுஷங்கன்னு
சொல்லிக்கிட்டு, இவங்ககிட்ட போயி ஏமாறாங்க பாருங்க அவங்களைச் சொல்லணும்.
No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!