|
http://www.tamilnenjam.org/2009/03/blog-post_19.html
| |
இணைய உலவிச் சந்தையில் நெருப்பு நரி என செல்லமாக அழைக்கப்படும் Firefox அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வேகமாக இயங்குவதுடன் ஏராளமான நீட்சிகளை (addon) உடையதாகவும் இருப்பதால் இது உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏதேனும் கோப்புகளை இணையத்தின் ஊடாகத் தரவிறக்கம் / இணையிறக்கம் (download) செய்யும்போது மட்டும் பிற முடுக்கிகளின் (accelerator) அளவிற்கு இதன் வேகம் இருப்பதில்லை என்கிற குறை உண்டு. தரவிறக்க வேகத்தை அதிகரிப்பதற்காகவே நெருப்புநரிக்காக ஒரு நீட்சி உள்ளது. இதை Firefox உடன் ஒருங்கிணைத்துவிட்டால் தரவிறக்க வேகம் 10 மடங்கு அதிகரிக்கிறது என வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த நீட்சியை நிறுவுவதற்கு முன்னர் உங்கள் நெருப்பு நரி உலவியை மேம்படுத்திக் (update) கொள்ளவும். உலவின் வெர்சன் (version) 3.0+ ஆக இருத்தல் நலம். சுட்டி : http://www.fireaddons.com/iamchosen/
|
Posted: 18 Mar 2009 09:24 PM PDT உங்களுக்கு மின்னஞ்சல் (e-mail) வாயிலாக உங்கள் நண்பர் பல கோப்புகளை (files) அனுப்பியுள்ளார். அவற்றில் சந்தேகமும் கேட்கிறார் என வைத்துக்கொள்வோம். இப்படிப்பட்ட தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும்போது நமக்கு உதவுவதற்காகவே ஒரு இணையத்தளம் உள்ளது. அந்தத் தள முகவரி : http://www.openwith.org/ ஆனால் அவர் அனுப்பியிருக்கும் கோப்புகளில் பல உங்களுக்குத் தெரியாத எக்ஸ்டென்ஸ்களில் (extension) உள்ளன. உதாரணமாக மைக்ரோசாப்ட் வேர்ட் (MS Word) கோப்புகள் - .doc எனவோ .docx என்றோ இருக்கும். படக் கோப்புகள் பெரும்பாலும் .jpg, jpeg, .gif, .png என்பனவாக இருக்கும். ஆனால் நண்பர் உங்களுக்கு அனுப்பிய கோப்பின் எக்ஸ்டென்ஸன் (File Extension) எல்லாம் உங்களுக்கும் பரிச்சயமில்லாதவை. மேலும் உங்கள் இயங்குதளமான(OS) விண்டோஸுக்கும் பரிச்சயமில்லாதவை. இந்த நேரங்களில் அவர் அந்தக் கோப்புகளைத் திறந்து பார்க்கச் சொல்லியும், அதில் சந்தேகமும் கேட்டுள்ளார். ஒவ்வொரு கோப்புகளையும் அவற்றிற்குரிய சரியான மென்பொருட்களைக் கொண்டுதான் திறந்து பார்க்க இயலும். ஆனால் குறிப்பிட்ட கோப்புகளை இயக்கிப் பார்க்கவோ / திறந்து பார்க்கவோ ஒன்றுக்கு மேற்பட்ட மென்பொருட்கள் (Software Applications) உள்ளன. உதாரணமாக .mp3 வகை கோப்புகளைத் திறந்து பார்ப்பதற்கு VLC மீடியா ப்ளேயரில் இருந்து, நம் விண்டோசுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள மீடியா ப்ளேயர் (Media Player) வரை ஏராளமான மென்பொருட்களைப் பயன்படுத்தலாம். இப்படி நமக்கும், விண்டோஸுக்கும் நன்கு அறியப்பட்ட கோப்புகளை இரண்டு முறை மவுசால் சொடுக்கினால் (Double Click) அதற்குரிய மென்பொருள் பயன்பாட்டின் வாயிலாக அந்தந்த கோப்புகளைத் திறந்து பார்த்து இயக்கலாம். ஆனால் இனம் கண்டறியாத கோப்புகளை இரண்டு முறை சொடுக்கினால் என்ன ஆகும்? கீழ்க்கண்ட காட்சியைத் தான் காண்போம். ஒரு பிழைச்செய்தியுடன் தனி உரையாடல் பெட்டி திரையில் தெரியும். free programs to open any file extension இந்தத் தளத்திலிருந்து அவர்கள் கொடுக்கும் ஒரு இலவசப் பயன்பாட்டை இணையிறக்கம் செய்து நிறுவ வேண்டும். பின் நண்பர் அனுப்பிய கோப்பின் மேல் மவுசை வைத்து வலது பட்டனை அழுத்தி "OpenWith.org - How do I Open This?" என்பதைச் சொடுக்கவேண்டும். இதன் பிறகு குறிப்பிட்ட கோப்பினைத் திறந்து பார்ப்பதற்காக எந்த வகையான மென்பொருள் பயன்படும் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும். பின் அந்த மென்பொருளை இணையிறக்கம் செய்து அதன் மூலம் நண்பரின் கோப்பினைத் திறந்து பார்த்து அவரது சந்தேகத்தைத் தீர்த்து வைக்கலாம் |
Thanks!
ஆதிசிவம், சென்னை. நன்றி!...
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com