தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Monday, January 4, 2010

♥ "நான் என்ன மாவீரனா?" -பிரபாகரன் ♥

http://i49.tinypic.com/b7meqt.jpg

மாவீரன் பிரபாகரன் பற்றி தெரியாத பல விசயங்கள், ரகசியங்கள்
"தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்..!"

http://i47.tinypic.com/2j4t6xg.jpg

விகடன் இந்த வாரம் வெளியிட்டிருக்கும் பிரபாகரன்-25 குறிப்புகள், நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும். இந்த விஷயங்கள் அனைத்துமே, தமிழர்கள் பெரும்பாலானோருக்குத் தெரிந்த உண்மைகள்தான்.

ஆனாலும், மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா...

தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

"ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."

"பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!

ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!

தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!

பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"

"ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!

மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!

http://thamilar.blogspot.com/2010/01/blog-post_02.html

http://i40.tinypic.com/2zhjwgz.jpg

http://newsx.com/files/images/LTTE_AFP.jpg

புலிகளின் விமானங்களை கைப்பற்றுவதில் சிறிலங்கா தோற்றது எப்படி?

."இப்படியாக எமது முயற்சி புலிகளின் விமானங்களை கைப்பற்றுவதுதொடர்பில் ஊடகங்களால் பாரிய அளவில் பாதிக்கப்படைந்துள்ளது.இதுவெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் உளவியல்நடவடிக்கையாகவும் காணப்படுகிறது....!"

வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் சொத்துக்களை கைப்பற்றுவதாயின் முதலில் அது தொடர்பாக இரகசியம் காக்கப்படவேண்டும். சொத்துக்களை முடக்குவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை ஊடகங்களில் போட்டுடைத்துவிடுவதால் திட்டமிட்டபடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடினமாக உள்ளது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் -

விடுதலைப்புலிகளின் சொத்துக்கள் வெளிநாடுகளில் பல்வேறு வடிவங்களில் உள்ளன. அவர்களின் விமானங்கள்கூட குறிப்பிட்ட நாடடொன்றில் நிற்பதாக எமக்கு தகவல் கிடைத்தது. இவற்றையெல்லாம் கைப்பற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பது என்பது பெரிய முயற்சி. திட்டத்தை வகுத்து அந்தந்த நாடுகளுடன் பேசி தகவல்களை பரிமாறி அந்த சொத்துக்களை சிறிலங்கா வசம் கொண்டுவருவதென்பது இரகசியமாக செய்துமுடிக்கப்படவேண்டிய காரியம்.

விடுதலைப்புலிகளின் கப்பல்கள் கைப்பற்றப்பட்டதாக இருக்கட்டும், கே.பியை கைது செய்தவிடயமாக இருக்கட்டும் வெற்றிகரமாக செய்துமுடிக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டவை.

ஆனால், தற்போது விடுதலைப்புலிகளின் விமானங்கள் தொடர்பாக அவை நிறுத்திவைக்கப்பட்டதாக கூறப்படும் நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுநடத்த சென்றபோது, அது தொடர்பாக முற்கூட்டியே ஊடகங்களில் செய்தி வெளியாளதால், விமானங்களை கைப்பற்ற நாங்கள் எடுத்த முயற்சி குழப்பியடிக்கப்பட்டுவிட்டது. குறிப்பாக இந்த விமானங்களில் உரிமம் தொடர்பாக ஊடங்களில் வெளியிடப்பட்ட பல்வேறு ஊகங்கள் சிறிலங்காவின் முயற்சிகளை குழப்பியடித்துவிட்டது.

அத்துடன் குறிப்பிட்ட நாடொன்றில் புலகளின் விமானங்கள் நிற்பதாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவலுக்கு பின்னர் அந்த நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு அந்த விமானங்கள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. இப்படியாக எமது முயற்சி புலிகளின் விமானங்களை கைப்பற்றுவது தொடர்பில் ஊடகங்களால் பாரிய அளவில் பாதிக்கப்படைந்துள்ளது.இது வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் உளவியல் நடவடிக்கையாகவும் காணப்படுகிறது.

வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் பல நடவடிக்கைகளையும் முடக்குவதற்கு சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அவற்றுக்கெல்லாம் இரகசியம் பேணப்படவேண்டும். அந்த முயற்சிகளை முன்கூட்டியே ஊடகங்களில் வெளியிட்டு எமது புலனாய்வு நடவடிக்கை வெளிப்படையாகிவிடுகிறது. இதனால், முயற்சிகள் பாரியஅளவில் பாதிக்கப்படுகிறது.

எமது இந்த முயற்சிகள் தொடர்பாகவும் விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பாகவும் தொடர்ந்து தனது விமரசனங்களை முன்வைத்துவரும் அரசியல்தலைவர்களும் இதனை கருத்தில்கொள்ளவேண்டும்.

- இவ்வாறு ரோகித்த போகல்லாகம கவலை தெரிவித்திருக்கிறார்.
http://www.vannionline.com/2010/01/blog-post_5705.html

http://www.dailynews.lk/2008/12/20/z_p07-LTTE.jpg

கால்களை இழந்த பின்னும் களத்திலே நின்ற கிட்டு மாமா வின் படங்கள்கேணல் கிட்டு அண்ணை தேசியத்தலைவருடன்

தலைவருடன் கிட்டண்ணா


http://meenakam.com/?p=809

சிறிலங்காவின் இராணுவ இரகசியங்கள் விடுதலைப்புலிகளின் வலையமைப்புக்கு கிடைத்தமை தொடர்பாக விசாரணை

http://meenakam.com/wp-content/uploads/2010/01/Sri-Lankan-army.jpg

சிறிலங்கா இராணுவ இரகசியங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பிற்கு எவ்வாறு கிடைக்கப் பெற்றதென்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் மிகவும் இரகசியமாக பேணப்பட்ட விசேட இராணுவப் பிரிவுகள் தொடர்பான தகவல்கள் விடுதலைப் புலிகளுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொல்ப், ரோமியோ, ஏகே மற்றும் டெல்டா ஆகிய நான்கு விசேட இராணுவப் பிரிவுகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் அம்பலமாகியுள்ளதாக புலனாய்வுத் தகவல்களை ஆதாரம் காட்டி திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
யுத்த இரகசியங்களை வெளியிட்ட தரப்பினர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
வன்னி இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட குறித்த விசேடப் பிரிவுகள் தொடர்பிலான தகவல்கள் மிகவும் இரகசியமாக பேணப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://meenakam.com/?p=1803http://surviever.files.wordpress.com/2009/07/ltte20fighters20-2012.jpg

http://i46.tinypic.com/sw34gn.jpg

Photobucket


பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...


smail

http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg


Update me when site is updated


Get more followers

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!