தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Friday, October 16, 2009

♥ இலங்கைக்கு வந்த அனுமனும்,சனியனும்...! ♥

பாபர் மசூதியை இடித்த இந்து முஸ்லீமாக மாறிய விநோதம்
மதம்

1992 டிசம்பர் மாதம் ஆறாம் தேதி (டிசம்பர் 6 என்பது அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள்) அத்வானி தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவர்களின் வழிகாட்டுதலோடு ஒரு பட்டப் பகலில் ஆயிரக்கணக்கான காவிக் கூட்டத்தினர் 450 ஆண்டுகால வரலாறு படைத்த முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினர்.

இந்தியா மட்டுமல்ல, உலகமே அதிர்ந்தது. 17 ஆண்டுகள் பறந்தோடிய நிலையிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பது வெட்கக்கேடு.

இதில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. அன்று பாபர் மசூதியின் நடுக் கோபுரத்தை கடப்பாரையால் இடித்துக் கூத்தாடிய இரு இளைஞர்கள் சிவசேனா அமைப்பினைச் சேர்ந்தவர்கள். ஒருவர் சிவசேனா பறக்கும் படையின் துணைத் தலைவர் பல்பீர் சிங், மற்றொருவர் யோகேந்திரபால்.

சரி, அவர்களுக்கு இப்பொழுது என்ன வந்தது? ஒரு சுவையான திருப்பம் இதில் ஏற்பட்டுள்ளது. அந்த இரு இளைஞர்களும் இப்பொழுது முசுலிம்களாக மாறிவிட்டனர் என்பதுதான் அந்தச் சுவையான திருப்பம் மிகுந்த செய்தியாகும்.

பாபர் மசூதி கோபுரத்தின்மீது ஏறி, இரு இளைஞர்கள் யானையின் மத்தகத்தைப் பிளப்பதுபோல செயல்பட்டார்களே ஏடுகளில் அந்தப் படங்களெல்லாம்கூட வெளியானதே சாட்சாத் அந்த இரு இந்து இளைஞர்கள், சிவசேனாவின் சிப்பாய்கள்தான், இப்பொழுது முகம்மது ஆபிராகவும், முகம்மது உமர் ஆகவும் மாறிவிட்டனர்.

இளைஞர்கள் மூளையில் சாயம் ஏற்றி ஏற்றி, வெறித்தனமான போதனைகளை ஊட்டி ஊட்டி, வெறியாட்ட வன்முறைப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுத்துக் கொடுத்து, மாற்று மதக்காரர்கள்மீது வெறுப்பினைக் கூர்மைப்படுத்தி கூர்மைப்படுத்தி, ஒரு கட்டத்தில் அவர்களை வேட்டை நாய்களாக ஏவிவிடுவார்கள். அவ்வாறு ஏவிவிடப்பட்டு இடிக்கப்பட்டதுதான் பாபர் மசூதி.

காலம் கடந்து இப்பொழுது உண்மையை உணர்ந்து, தாம் செய்த குற்றத்துக்குப் பிராயச்சித்தமாக எந்த மதத்துக்கு விரோதமாக வெறியாட்டம் போட்டார்களோ, அந்த மதத்தோடேயே அய்க்கியமாகும் நிலை ஏற்பட்டுவிட்டது!

பொதுவாக மதம் என்பது விலங்குகளைப் பிடிப்பது, மனிதர்களைப் பிடித்தால் அதைவிட ஆபத்து! ஆபத்து!! நினை-விருக்கட்டும்!

http://thamizhoviya.blogspot.com/2009/10/blog-post_7904.html

மலட்டு கத்தரிக்காய்க்கு அனுமதியா?


http://product-image.tradeindia.com/00211674/b/Brinjal-Hybrid-Seed-PK-123.jpg

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரிக்காயை அனுமதிக்கக் கூடாது என்று அகில இந்திய விவசா யிகள் சங்கத்தின் தலைவர் எஸ். ராமச் சந்திரன்பிள்ளை மற்றும் பொதுச் செயலாளர் கே. வரதராசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி.கத்தரிக்காயை வணிக ரீதியாகப் பயிரிட அனும தித்து, புதன்கிழமை நடைபெற்ற மர பணு பொறியியல் ஏற்பளிப்புக் குழு (ஜிஇஏசி) கூட்டத்தில் முடிவு மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்த முடிவு அமல்படுத்தப்படுமானால், சந்தைக்கு வரும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட முதல் காய்கறியாக கத்தரிக்காய் மாறி விடும்.

இதனை அடுத்து மேலும் பல் வேறு காய்கறிகளும் மரபணு மாற்றம் செய்யப்பட்டு சந்தைக்கு வரத் தொடங்கிவிடும். இவ்வாறு மரபணு மாற்றம் செய்யப்பட்டு வரும் காய்கறி களின் விதை கள் அனைத்தும் மான் சாண்டோ மற்றும் மஹிகோ போன்ற பன் னாட்டு விதை நிறுவனங்களின் கட்டுப் பாட்டில்தான் இருக்கும். இந்நிறு வனங்கள், இவ்விதைகளுக்கு அநியா யமாய் விலை நிர்ணயித்திடும் . இதனால் இந்திய விவசாயத்தின் எதிர்காலமே இவர்களின் கட்டுப் பாட்டிற்குள் செல்லும் ஆபத்து இருக்கிறது என்று அவர்கள் எச்ச ரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அவர்கள் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இப்போது அனுமதிக்கப்பட்டி ருக்கிற மரபணு மாற்றம் செய்யப் பட்ட கத்தரிக்காய் அமெரிக்க உதவித் திட்டத்தின் ஒரு பகுதியேயாகும். இத் திட்டத்தின் கீழ் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக் கழகம், தார் வாடில் உள்ள வேளாண் விஞ்ஞானப் பல்கலைக்கழகம் மற்றும் வாரணாசி இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவ னம் ஆகியவற்றில் மான்சாண்டோ மற்றும் மஹிகோ பன்னாட்டு விதை நிறுவ னங்களுடன் இணைந்து மேற் கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக உருவாக்கப்பட்டதே ஆகும்.

இதன் பாதிப்பு குறித்து மரபணு பொறியியல் ஏற்பளிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் வேளாண் பொறி யாளர்கள் பலர் குறிப்பிட்டு, இதற்குக் கடும் ஆட்சேபணைகள் தெரிவித் திருக்கின்றனர். ஆனால் இவற்றை அரசு கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை.

கத்தரிக்காயை அடுத்து அரிசி, சோளம், வெண்டை உட்பட 60 வித மான விளைப்பொருள்கள் மீது மர பணு மாற்றம் செய்திட முடிவு எடுக் கப்பட்டிருக்கிறது. இவ்வாறு மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்தி ருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் அனுமதிக்கப்படுவதை அடுத்து, இந்திய விவசாய உற்பத்தி முறை முழுமையாக மான்சாண்டோ/ மஹிகோ போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் தள்ளப்பட்டுவிடும். பின்னர் அவர்கள் நிர்ணயித்திடும் கடும் விலையைக் கொடுத்துத்தான் விவசாயிகள் விதை களை வாங்க வேண்டியிருக்கும். மேலும் இந்தியா உணவு உற்பத்தியில் சுயசார்புத் தன்மையையே முற்றிலு மாக இழக்க வேண்டிய அபாயத்திற் குள் தள்ளப்பட்டு விடும். எனவே, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை அனுமதிப்பது மிகவும் ஆபத்தானது.

எனவே, மரபணு மாற்றம் செய் யப்படும் கத்தரிக்காய் மற்றும் பல் வேறு விதைகளை அனுமதிப்பதில் அரசு அவசரம் காட்டக்கூடாது. மர பணு பொறியியல் ஏற்பளிப்புக் குழு வின் அறிக்கையை பொதுமக்களின் விவாதத்திற்காக வெளியிட வேண்டும். பொது விவாதம் இன்றி இத்தகைய திட்டங்களை அரசு அமல்படுத்தக் கூடாது. (ந.நி.)

http://www.theekkathir.in/index.asp


http://farm4.static.flickr.com/3291/2790828480_74d9d886ec.jpg

இலங்கைக்கு முன்பு அனுமன் வந்தான்: இப்போது சனி வந்து விட்டார் – தமிழ் நாளிதழ்


இலங்காபுரிக்கு முன்பு அனுமன் வந்தான்! இப்போ சனீஸ்வரனும் வந்துவிட்டார் என டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக-காங்கிரஸ் கூட்டணி எம்.பிக்கள் குழு வருகை குறித்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழின் தலையங்கம் விமர்சித்துள்ளது.

இதுகுறித்து வலம்புரியின் தலையங்கம்:

தமிழக எம்.பிக்கள் குழு நேற்று யாழ்ப்பாணத்திற்கு வந்தது. வழக்கப்படி மங்கள வாத்தியம், பொன்னாடை, மலர்மாலை, வரவேற்ப்பு பாடல், நினைவுப் பரிசு என தடல் புடலான ஏற்பாடு.

இவை எதுவுமே வேண்டாம். தமிழர் பிரச்சினையை கூறுங்கள் என அவர்கள் தெரிவித்த போதிலும், அதனை எம்மவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இருந்தும் தமிழகத்தில் இருந்து வந்த எம்.பிக்கள் குழு அதனை நிராகரித்து விட்டன. அதுவொன்றே தமிழகக் குழுவிடம் விருப்பிற்குரிய செயலாக இருந்தது. இதற்கு மேலாக அந்தக் குழுவிடம் எதனையும் எதிர்பார்க்க முடியவில்லை.

எங்கள் கஷ்டகாலம் தமிழக குழுவிற்கு டி.ஆர்.பாலு தலைமை ஏற்றிருந்தார். அட! ராமா! வந்த மனுஷன் யாழ். பொது நுலகத்தில் இருந்து, வந்தவர்களை அதட்டினார். நேரமில்லை என்று கூறி கருத்துக்களை தட்டிவிட்டார். ஒரு சிலர் கூறிய கருத்துக்களையும் அவர் செவி மடுக்கவில்லை.

வந்த குழு தமிழரின் அவலத்தை கேட்கும் என்றால் சுடுமூஞ்சி டி.ஆர்.பாலு எதற்குமே இடம் தரவில்லை.

ராவணன் காலத்தில் இலங்கைக்கு அனுமன் வந்ததுண்டு. ஆனால் நேற்று யாழ்ப்பாணத்திற்கு வந்த தமிழக எம்.பிக்கள் குழுவுக்கு சனீஸ்வரன் தலைமை ஏற்று வந்ததென்பதை யாழ் பொது நூலகத்திற்கு சென்ற பின்பே தெரிய வந்தது.

சனீஸ்வரனின் பார்வை கனிமொழியின் வாயை அடைத்தது. தொல்.திருமாவளவனை பேசவே விடாமல் தடுத்தது .

அப்படியானால் வந்தது சனீஸ்வரன் என்பதை புரிந்து கொள்வதுடன் டி.ஆர்.பாலு ஒரு தமிழ் உணர்வற்றவர் என்பதும் நிருபணமாகியுள்ளது.

அவரின் தலைமையுரை -யாழ் மக்களுடன் அவர் கலந்துரையாடிய நெறிமுறை, யாழ்ப்பாண பல்கலைக்கழக சமுகத்திற்கு அவர் கொடுத்த கெளரவம் எதுவுமே பொருத்தமானதல்ல. இது அவரின் சிறுபான்மைத் தனத்தையே சுட்டிநிற்கின்றது.

எதுவாயினும் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் தொல்.திருமாவளவன் ஆகியோர் எங்கள் அவல நிலையை எடுத்துரைப்பர் என்ற நம்பிக்கை மட்டுமே எஞ்சியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

http://www.nerudal.com/nerudal.10997.htmlஊடகங்களுக்கு கருத்து வெளியிட இந்திய குழுவுக்கு தடை!


handstopதமது வவுனியா விஜயம் தொடர்பிலான உண்மை நிலவரங்களை ஊடகங்களுக்கு வெளியிட கூடாது என நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக இந்திய நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

வவுனியா முகாமில் உள்ள மக்கள், தமது விஜயத்தின் போது கண்ணீருடன் கதறி அழுது, தம்மை விடுவிக்க வேண்டும் என கோரியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த தகவல்களை வெளியிட்டால், இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கு இடையிலான உறவுகள் பாதிப்படையும் என தெரிவித்து, கருத்து வெளியிட தமது குழுவால் தடைவிதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடுகளுக்கு இடையிலான உறவுகளை கருத்தில் கொண்டு, மக்களின் உண்மை நிலைகளை வெளிப்படுத்தாதிருப்பது தவறானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.nerudal.com/nerudal.11004.html

ராஜபக்சேவுக்குக் கூட நோபல் தரலாம் – கனடா நாளிதழ்laughing-guy-thumb168075அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்திருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. அதற்குப் பேசாமல், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இந்தப் பரிசைக் கொடுத்திருக்கலாம். அவர் இதற்குப் பொருத்தமானவர் என்று கூறியுள்ளார் கனடாவைச் சேர்ந்த ஜோனத்தான் கே என்பவர்.

இதுகுறித்து கனடாவின் நேஷனல் போஸ்ட் செய்தித் தாளில் எழுதியுள்ள கட்டுரை.

இப்போதைக்கு நோபல் அமைதிப் பரிசுக்கு முழுப் பொருத்தமான ஒரே நாடு இலங்கை மட்டுமே. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அதிபர் ராஜபக்சே மேற்கொண்ட நடவடிக்கையால் அங்கு போய் ஓய்ந்துள்ளது. எனவே அவருக்கே இந்தப் பரிசைக் கொடுத்திருக்க வேண்டும்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இலங்கைப் போரால், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆனால் ராஜபக்சே மிகவும் உறுதியாக இருந்து போரை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைமையே இல்லாமல் செய்து விட்டார்.

ஒரு வலிமை வாய்ந்த கொரில்லா அமைப்பை நவீன போர் முறைகளால் அழித்திருப்பது வரலாற்றில் மிகவும் அரிதான விஷயமாகும்.

ஒரே நாள் இரவில் போர் என்பது இலங்கைக்கு வினோதமான விஷயமாக மாறியுள்ளது என்று கூறியுள்ளார் கே.

ஆனால் ஒரே நாளில் 3 லட்சம் பேர் அகதிகளாக திறந்த வெளி முகாம்களில், துப்பாக்கி முனையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்தோ அல்லது அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்டு அவலமான நிலையில் இருப்பது குறித்தோ கே ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

http://www.nerudal.com/nerudal.11016.html

கடும் குரலில் பாலு கண்டிப்பு – அழுத வவுனியா பெண் கலெக்டர்


tn_12-balu200வவுனியா சென்ற திமுக – காங்கிரஸ் எம்.பிக்கள் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு கடும் குரலில் கண்டித்துப் பேசியதால் வவுனியா பெண் கலெக்டர் பி.எஸ்.எம்.சார்லஸ் அழுது விட்டார். இதையடுத்து அருகில் இருந்த கனிமொழி, டி.ஆர்.பாலுவை தடுத்து அமைதிப்படுத்தினார். பின்னர் பாலு தவிர அனைவரும் பெண் கலெக்டரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.

திமுக – காங்கிரஸ் எம்.பிக்கள் குழு இலங்கை சென்றுள்ளது. தமிழர் பகுதிகளின் நிலை குறித்து அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். நேற்று காலை யாழ்ப்பாணம் சென்ற அக்குழுவினர் மாலையில் வவுனியா சென்றனர்.

அப்போது வவுனியா மாவட்ட பெண் கலெக்டர் பி.எஸ்.எம்.சார்லஸ், குழுவினருக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அப்போது அவரது செயல்பாட்டால் கோபமடைந்த டி.ஆர்.பாலு, தனக்கே உரித்தான கடுமையான குரலில், நீங்கள் யார் எங்களது விஷயங்களில் தலையிட, உங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று கண்டிப்புடன் கேட்டாராம்.

இதுகுறித்து பி.எஸ்.எம்.சார்லஸ் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், குழுவினரின் நடவடிக்கையில் தலையிட நீங்கள் யார், உங்களது தகுதி என்ன என்று கடுமையான குரலில் கேட்டார் டி.ஆர்.பாலு.

அவரது கோபமான பேச்சால் நான் அழுது விட்டேன். இத்தனைக்கும் நான், தமிழக குழுவினரின் விருப்பத்திற்கேற்பதான் ஏற்பாடுகளைச் செய்திருந்தேன். ஆனால் அவர் கண்டிப்பான குரலில் பேசியதால் நான் மனம் உடைந்து அழுது விட்டேன்.

இதையடுத்து அருகில் இருந்த கனிமொழி தலையிட்டு பாலுவை அமைதிப்படுத்தினார். அவரும், மற்றவர்களும் என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டனர். ஆனால் நான் பேசியதை மறந்து விடுங்கள் என்று மட்டுமே பாலு என்னிடம் கூறினார் என்றார் சார்லஸ்.

இந்த சம்பவம் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.nerudal.com/nerudal.10986.html[sonia.jpg]

ரபாகரன் 64 படகுகளுடன் தப்பினாரா?


விடுதலைப் புலிகளின் கடற்படையிடம் அவர்களால் வடிவமைக்கப் பட்ட மிக வேகமாகச் செல்லக்கூடிய சிறிய ரகப் படகுகள் பல இருந்தன. இவை 23 மணித்துளிகளில் பாக்கு நீரிணையக் கடக்கக்கூடியன. அத்துடன் இலங்கைக் கடற்படையினரிடம் இருந்து கைப் பற்றப் பட்ட படகுகளும் இருந்தன. இவற்றை இலங்க அரச படைகள் கைப் பற்றியதாக காட்சிப் படுத்தவில்லை. இப்படகுகளுக்கு என்ன நடந்தது? இலங்கையில் இருந்து கசிந்த தகவல்களின் படி மே மாததின் இரண்டாம் வாரத்தில் வன்னியில் இருந்து 64 படகுகள் தப்பிச் சென்றதாக செய்மதிப் படப் பதிவுகள் கிடைத்துள்ளனவாம். இப் படகுகளின் மூலம் விடுதலை புலிகளின் முழுத்தலைமையும் தப்பிச் சென்றிருக்கலாம் என்று நம்பப் படுகிறது. எஞ்சிய விடுதலைப் புலிகள் பெருமளவு பணத்துடனும் நகைகளுடனும் குடும்பத்தினருடன் மக்களோடு மக்களாக அரச கட்டுப் பாட்டுக்குள் வந்து ஒருவருக்கு பத்தாயிரம் அமெரிக்க டொலர்கள் வரை செலவழித்து தமது உறவினர் அல்லது நண்பர்களாக உள்ளஅரச சார்புத் தமிழ்க் குழுக்களின் உதவியுடன் தப்பிச் சென்று விட்டனர். இறுதிவரை களத்தில் நின்றவர்களில் முக்கியமானவர்கள் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனியும் மகளிர் அணித் தலைவி தமிழினியும் மற்றும் அரசியற் துறையினருமே.

அண்மையில் இறுதிக் கட்டப் போரில் பத்மநாதனுடன் படைத் துறையைச் சார்ந்தவர்களில் சாள்ஸ் அன்ரனி மட்டுமே தொடர்பில் இருந்ததாக அயல் நாட்டு உளவுத்துறையின் ஒட்டுக் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதி நேரத்தில் பிரபாகரனோ பொட்டு அம்மானோ ஏன் பத்மநாதனுடன் தொடர்பு கொள்ளவில்லை?
இன்றுவரை பிரபாகரனுக்கும் பொட்டு அம்மானுக்கும் எதிரான ராஜீவ் காந்தி கொலை வழக்கு இந்தியாவில் நிலுவையில் ஏன் உள்ளது?

  • இறக்காத ஒரு கரந்தடிப் படைத்(கொரில்லா இயக்கம்) தலைவனை இறந்துவிட்டான் என்று பொய்ப்பிரச்சாரம் செய்தல் எளிது.
  • இறந்த ஒரு கரந்தடிப் படைத்(கொரில்லா இயக்கம்) தலைவனை இறக்கவில்லை என்றும் சாதிக்கலாம்.
இதுவரை இலங்கை அரசு வெளியிட்ட இறந்த பிரபாகரனின் உடலின் படங்கள் நம்ப முடியாதன. இதுவரை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு உறுதியான சாட்சியங்கள் கிடைக்கப் பெறவில்லை.

அழுகிய கனிமொழியா?


எம் தாய் மண்ணைப் பிணவாடையால்
நிறைத்த பன்றிப் பன்னாடைக்கு
தாயகத்து உடன் பிறப்புக்கள்
உடன் வந்து பொன்னாடை போர்த்த
பார்த்துப் புன்னகைக்கும் கனிமொழியே
நீ அழகிய கனிமொழியா?
இல்லை அழுகிய கனிமொழியா?

அன்னை இந்திரா அனுப்பிய தூதர்
பொன்னாடை போர்த்தவில்லை
சிங்களவனை மிரட்டிச் சென்றார்
சில்லறைகள் சுருட்டிச் செல்லவில்லை.

சிங்களவனின் சில்லறைக் கூலிகளாய்
வாழ்ந்தது போதும் தமிழனாய் வாழ்வோம்.
தமிழினத்தைத் தலை நிமிர வைப்போம்.
சரத் பொன்சேகாவின் கோமாளிகளாய்
வாழ்ந்தது போதும் தமிழனாய் வாழ்வோம்.
தமிழினத்தைத் தலை நிமிர வைப்போம்.

திருமா: தன்னைத் தானே தாழ்த்தினாரா?தோழர் திருமாவளவனைச் சுட்டிக் காட்டி இலங்கைக் குடியரசுத் தலைவர் இவர் பிரபாகரனின் நண்பன். இவரின் நல்லகாலம் இவர் பிரபாகரனுடன் இருக்கவில்லை இருந்திருந்தால் இவரையும் போட்டுத் தள்ளியிருப்போம் என்று கிண்டலடித்தார்.
தோழர் திருமாவும் வேறு வழியின்றி அதைச் சிரிப்புடன் ஏற்றுக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் இருந்தே மேதகு பிரபாகரனுடன் இருந்த தோழர் திருமாவளவனை சந்தேகிப்பது தமிழினத்தின் சாபக்கேடு என்று அவரது இணையத் தளம் கூறுகிறது. நல்ல நண்பனைச் சந்தேகிக்கக் கூடாது என்பதை யாம் அனைவரும் அறிவோம்.

திருமாவை தமிழ்த்தேசியவாதிகள் தங்கள் உற்ற நண்பனாகவே பார்க்கின்றனர். ஆனால் திருமாவை தமிழினக் கொலையாளிகளுடனும் எதிரிகளுடனும் துரோகிகளுடனும் படம் எடுத்துக் கொள்வதை தமிழ்த் தேசிய வாதிகள் விரும்புவார்களா? இலங்கையின் பிரதம மந்திரியாக இருந்த சிறிமாவோ பண்டார நாயக்க இந்தியாவிற்கு பயணம் ஒன்றினை மேற்கொண்டபோது அவருடன் இணைந்து புகைப் படம் எடுத்துக் கொள்ள அப்போதைய முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரி மறுத்துவிட்டார். பின்னர் அது பற்றி அவரிடம் வினவியபோது "அந்த அம்ம தமிழர்கள் விஷ்யத்தில் நல்லமாதிரியாக நடந்து கொள்வதில்லை" என்றார். இத்தனைக்கும் சிறிமாவோ பண்டாரநாயக்கா தமிழர்களைக் கொன்றதில்லை. ஆனால் தமிழர்களைக் கொன்று குவித்து கொள்ளையடித்து கற்பழித்து வதை முகாம்களில் தள்ளியவர்களுடன் தோழர் திருமாவளவன் இணைந்து நிற்பதை யார் ஏற்றுக் கொள்வார்கள்?

இந்தத்தூதுக் குழுவை தோழர் தவிர்த்திருந்திருக்க வேண்டும்.
முகாம்களின் நிலைமை பற்றி அறிய வேண்டுமானால் மெனிக் பாம் முகாம்கள் மட்டுமல்ல மற்ற எந்த முகாமிலுள்ள நிலைமைகள் பற்றி தோழர் திருமாவளவனுக்கு நெருக்கமான தமிழ்தேசியவாதிகள் எடுத்துரைத்திருப்பார்கள். தோழர் திருமாவளவனை இலங்கையில் தமிழர்களைச் சந்திக்க இராணுவம் மறுத்து விட்டது. அவர் இலங்கைக்கு மேற்கொண்டது ஒரு இலங்கை அரசால் நெறிப்படுத்தப் பட்ட பயணம்தான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இப்பயணத்தால் தோழர் திருமாவளவன் தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டாரா என்ற கேள்விக்கான விடை அவர் தமிழ் நாடு சென்று வெளிவிடும் பகிரங்க அறிக்கையில்தான் இருக்கும்.

இந்தியத் தூதுக் குழுவின் குட்டு வெளிப்பட்டது.


வன்னியில் உள்ள வதை முகாம்கள் தொடர்பான நெருக்கடி நாளுக்கு நாள் இலங்கை அரசிற்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. மேற்கு நாடுகளிலிருந்தும் மனித நேய அமைப்புக்களிடம் இருந்தும் பல அழுத்தங்கள் இலங்கைமீது அதிகரித்தே வருகின்றது. இதிலிருந்து ஒரு தற்க்காலிக நிவாரணமாவது இலங்கை அரசிற்குத் தேவைப் படுகிறது.

இலங்கை அரசைப் பொறுத்தவரை தமிழர் பிரதேசங்களை சிங்களவர்களைக் குடியேற்றிய பின்னரே அங்கு முகாம்களில் இருக்கும் மக்களை சிங்களவர்களின் கொத்தடிமைகளாக குடியேற்ற வேண்டும்.
இந்தியவைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளை இனி தலையெடுக்க முடியாதவாறு அழிக்கவேண்டும். எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையும் அழித்தொழிக்க வேண்டும். இதற்கு இன்னும் சிலமாதங்கள் வன்னி முகாம்கள் நீடிக்க வேண்டும்.
இதற்கு டெல்லியில் "ரூம்" போட்டு யோசித்தார்கள். விளைவு ஒரு தூதுக் குழு. பல கட்சிகள் கொண்ட தூதுக் குழுவாயின் அது இலங்கைக்கு சார்பாக நடக்கும் என்று உறுதியிட்டுச் சொல்ல முடியாது. அதற்காக ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களைக் கொண்ட குழு அமைக்கப் பட்டது. இது நடுநிலையானது எனக் காட்ட அகப் பட்டவர்கள் கனிமொழியும் திருமாவளவனும்.

இந்தக் குழு தொடர்பாக கலைஞர் தெரிவித்தது: ''இது அரசு சார்பாகச் செல்லும் குழுவல்ல... தி.மு.க. கூட்டணியின் சார்பாக சென் றிருக்கும் குழு. அக்கறையிருந்தால் எதிர்க்கட்சி எம்.பி-க்களும் செல்லலாம்!''

ஆனால் இந்தக் குழுவின் மீது பல தரப் பட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் படுகின்றன:
  • ஜூனியர் விகடன்: மேளதாள வரவேற்பு, மாலை மரியாதைகள் என திருமண விழாவுக்கு வருப வர்களைப் போல தமிழக எம்.பி-க்களுக்கு ராஜ மரியாதை கொடுத்து அழைத்தது சிங்கள அரசு. 'எங்கள் மக்கள் துக்கத்தில் தவிக்கும் நிலையில் ஏன் இத்தனை ஆடம்பர வரவேற்பு?' எனக் கேட்டு தமிழக எம்.பி-க்கள் அதனைத் தவிர்த்திருக்கலாம். அவர்களோ புன்முறுவல் பூத்தபடி... சிங்கள அதிகாரிகளின் விரல் பிடித்து நடந் தார்கள்.
  • உதயன்(யாழ்ப்பாணப் பத்திரிகை):பத்து தமிழக எம்.பிக்களின் யாழ்.வருகை வெறும் பம்மாத்துத் தானா? இன்றைய எரியும் பிரச்சினை பற்றி அறிய வந்தவர்கள் மக்களின் மனஆதங்கத்தை அறிந்துகொள்ள விரும்பவில்லையே! "இதெல்லாம் நமக்குத் தெரியும். ஒரே விஷயத்தையே எல்லோரும் சொல்லாதீங்க. வேறு ஏதாவது சொல்லுங்க" என்று கிளிப் பிள்ளைபோல திரும்பத் திரும்ப சற்று அதிகாரத் தொனியில் அங்கு குழுமியிருந்தவர்களை வேண்டினார்.இப்போது இலங்கைத் தமிழர்களின் முன்னாலுள்ள மிகப்பெரிய "எரியும் பிரச்சினை" நலன்புரிநிலையங்களில் வாடும் மக்கள்தான். எனவே அவர்கள் அனைவரும் அதைப் பற்றித்தான் அதிகம் பேசமுடியும். நலன்புரிநிலைய மக்களின் பிரச்சினைகளை அறியத்தான் இந்தியக் குழுவே இலங்கைக்கு வந்திருந்தது வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அப்படியிருக்கையில் நலன்புரி நிலைய மக்களைப் பற்றி எல்லோரும் கதைப்பதை ரி.ஆர்.பாலு ஏன் விரும்ப வில்லையென்பது புரியவேயில்லை. அத்துடன் அங்கு நிகழ்ந்த கருத்தாடலை வேறொரு திசைநோக்கி நகர்த்தவே அவர் பெரிதும் விரும்பினார்.


கொழும்பில் இருந்து வரும் செய்திகள்:
  • சந்திப்பின்போது இடம்பெயர்ந்தோர் விவகாரம் மற்றும் அரசியல் தீர்வு விடயம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. வடக்கின் நிலைமையை பார்வையிடுவதற்காக தமக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக இதன்போது இந்திய எம்.பி. க்கள் குழு தெரிவித்துள்ளது. மேலும் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றும் நோக்கில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியவை என்றும் இந்திய எம்.பி. க்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் வேலைத்திட்டத்துக்கு முன்னுரிமை அளித்துள்ளதாக கூறினார்.
  • இந்திய எம்.பி. க்களின் இலங்கை விஜயத்துக்காக நன்றி தெரிவித்த ஜனாதிபதி இதன்மூலம் தவறான பிரசாரங்கள் குறித்து தெளிவடைய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கருத்து "இதன்மூலம் தவறான பிரசாரங்கள் குறித்து தெளிவடைய முடியும்" இந்தியத் தூதுக் குழுவின் குட்டை உடைத்துவிட்டது. இதற்க்காகத் தானே இலங்கை ஜனாதிபதியின் "அழைப்பின் பேரில்" இந்தக் குழு இலங்கை சென்றது.

கனிமொழி இதுவரை பகிரங்கக் கருத்துக்கள் எதையும் தெரிவிக்கவில்லை. தோழர் திருமா மக்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர் என்றார். தங்கபாலுவும் வந்தாரா? சுதர்சன நாச்சியப்பன் "மொக்கைத்தனமாக" முகாம்கள் சர்வதேச நியமங்களுக்கு அமைய இருக்கிறது என்றார். இலங்கையில் மெனிக் பாம் மட்டும் முகாம் என்பது மாதிரி இலங்கையும் இந்தத் தூதுக் குழுவும் நடந்து கொள்கின்றன.

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தூதுக் குழுவைச் சந்தித்ததின் காணொளியைக் காண இங்கு சொடுக்கவும்: Daily Mirror

http://veltharma.blogspot.com/2009_10_11_archive.html

தமிழினத்தை அழித்த கொடும்பாதகத்துக்கு
நன்றிக்கடனாக பரிசில் பெற்று மகிழும் நாடாளுமன்ற‌


நாயகநாயகிகளைக் கண்டு மகிழுங்கள்:-(?!

இந்திய நாடாளுமன்றக் குழு!


http://www.youtube.com/watch?v=EuGkTRZZesg


Update me when site is updated

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!