தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Monday, September 28, 2009

♥ முழங்கு சங்கே ! ♥
http://subavee.files.wordpress.com/2008/12/periyar-prabha.jpgபெரியார்

சங்கே முழங்கு!


http://2.bp.blogspot.com/_4H70-D76t1U/SjYoRknnfvI/AAAAAAAAFVY/Xqpjs1mmq6k/s320/sangu.jpg

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும்
உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமி ழுடன்பிறந்தோம்
நாங்கள், ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம்செய்
முழங்கு சங்கே!

சிங்க ளஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென் றூதூது சங்கே!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம்!

http://4.bp.blogspot.com/_6KDxNeBPslQ/SBbpzc_ucwI/AAAAAAAAAEg/UzMXVKExTG0/s200/bdasan%5B1%5D.jpg
பாரதிதாசன்


http://lh5.ggpht.com/_IEYubfMaOJM/Snzt59eljMI/AAAAAAAABWU/snnT7fkIDu0/periyar2%5B3%5D.jpg


அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை 'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழைகொன்று தொலைத்தாய்...

தமிழா! நீ பேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய், உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை, பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய், விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய், அறுத்தெறி நாக்கை...

தமிழா! நீ பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான், 'லெப்ட்டா'? 'ரைட்டா'?
வழக்கறிஞன் கேட்டான், என்ன தம்பி 'பைட்டா'?
துண்டுக்காரன் கேட்டான், கூட்டம் 'லேட்டா'?
தொலையாதா தமிழ், இப்படிக் கேட்டா?

தமிழா! நீ பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை 'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ் மொழியை, ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம், 'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி, சாவது நல்லதா?

தமிழா! நீ பேசுவது தமிழா?

பாட்டன் கையில் 'வாக்கிங் ஸ்டிக்கா'?
பாட்டி உதட்டுல என்ன 'லிப்ஸ்டிக்கா'?
வீட்டில பெண்ணின்தலையில் 'ரிப்பனா'?
வெள்ளைக்காரந்தான் உனக்கு அப்பனா?

தமிழா! நீ பேசுவது தமிழா?


உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!