ரத்தவெறிபிடித்த சிங்களர்களால் சிதைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள்:மீண்டும் அதிர்ச்சியூட்டும் படங்கள்
இலங்கையில் உள்ள ராணுவ வதை முகாமில் தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகளை லண்டனில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டது.
இந்நிலையில் இலங்கை இராணுவம் ஈழத்தமிழர்களை கொன்று பெண்களையும் இளைஞர்களையும் முழுநிர்வாணமாக்கி புகைப்படங்களை எடுத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. விமான ஓடுபாதையில் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.
இது அனுராதபுரம் வான் தாக்குதலாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இறந்த போராளியின் மீது தனது பூட்ஸ் காலை வைத்து இலங்கை இராணுவம் புகைப்படம் எடுத்துள்ளது.
இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தவேண்டாம். ஒரு குழிக்குள்ளாவது போட்டு புதைத்திருக்கலாம். அப்படி செய்யாமல் காக்கா,குருவி கொத்தித்தின்ன அப்படியே போட்டு வைத்திருக்கிறார்கள்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15398
ராஜபக்சேவின் ராஜா வேஷம்
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை ஒரு மன்னனாக சித்தரித்துத் திரைப்படம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் அரசு தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆரியரட்ண ஆதுகல ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சிங்கள மன்னனான இரண்டாம் இராஜசிங்க மன்னனின் கதா பாத்திரதை மையப்படுத்தியே இத்திரைப்படம் உருவாக்கப்படவுள்ளதாம்.
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் புத்தி கீர்த்தி சோ இத்திரைப்படத்தின் தயாரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்,இத்திரைப்படம் 90 கோடியில் தயாரிக்கப்படவுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15396
இலங்கையில் பத்திரிக்கையாளர்கள் காணாமல் போகிறார்கள்:மர்மம் என்ன?
இலங்கையில் ஊடகவியலாளர்கள் அடிக்கடி காணாமல் போகின்றார்கள் என்று எல்லைகளற்ற ஊடவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
காணாமல் போன ஊடகவியலாளர்களைத் தேடும் பணிகள் அதிகமாக மேற்கொள்ளப்படுவதில்லை என்று அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை முக்கிய பணியாகக் கொண்டு காணாமல்போன ஊடகவியலாளர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.
ஊடகவியலாளர்களைக் கடத்துவதற்கு அவர்கள் கொடூரமான எந்த வழிமுறைகளையும் கையாளத் தயங்காதவர்கள் என்றும் அமைப்பு கூறியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அனைத்துலக ஊடக சுதந்திர அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் சிறிலங்காவில் காணாமல் போன ஊடகவியலார்கள் தொடர்பில் நீதி கிடைக்காத தன்மையும் வேறுபாடு காட்டப்படும் நிலையும் நீடிப்பதாகத் தெரிவித்திருந்தது என எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
'தினக்குரல்', 'வலம்புரி' நாளேடுகளின் செய்தியாளரான சுப்பிரமணியன் இராமச்சந்திரன் 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்து காணாமல் போனமை குறித்தும் 'உதயன்' நாளேட்டின் துணை ஆசிரியர் வடிவேல் நிமலராஜா 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து காணாமல் போனமை குறித்தும் தனது அறிக்கையில் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ள எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, காணாமல் போனவர்களின் விதி குறித்த கவலையையும் அவர்களுக்காக காத்திருக்கும் வலியையும் உறவுகளுடன் சேர்ந்து தாமும் பகிர்ந்து கொள்வதாகவும் கூறியுள்ளது.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15395
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com