இலங்கை முகாம்களில் அனாதையாக சுற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள்
இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்த போது வெளியேறிய 2 லட்சத்து 80 ஆயிரம் தமிழர்கள் வன்னி பகுதியில் பல்வேறு அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
போர் முடிந்து 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும் அவர்களை இன்னும் சொந்த ஊருக்கு அனுப்பவில்லை. எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இந்த மக்கள் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு போதிய உணவு, மருத்து, சுகாதாரம், முறையான கழிப்பிடம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. இனதால் பல ஆயிரம் பேர் நோய்வாய்பட்ட நிலையில் இறந்து விட்டனர்
தினமும் சிங்கள ராணுவத்தினர் முகாமுக்குள் புகுந்து அங்கு இளைஞர்களையும், இளம் பெண்களையும் விடுதலைப்புலிகள் என்று கூறி அழைத்து செல்கின்றனர். அவர்கள் அதன் பிறகு திரும்பியதே இல்லை. அவர்கள் கதி என்ன ஆகிறது? என்று தெரியவில்லை. அவர்கள் சித்ரவதை செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த முகாம்களில் 1064 சிறுவர் சிறுமிகள் அனாதையாக சுற்றித்திரிகிறார்கள். அவர்களுடைய தாய் தந்தை உறவினர்கள் கதி என்ன ஆனது என்று தெரிய வில்லை. பெற்றோர்களை தேடி பரிதாபமாக அலைகிறார்கள்.
இவர்களுடைய பெற்றோர்கள் போரில் கொல்லப்பட்டு இருக்கலாம் அல்லது ஏதாவது முகாம்களில் இருக்கலாம் என கருதப்படுகிறது. அகதி முகாம்களுக்குள் இதுவரை சர்வதேச குழுக்கள் செல்ல அனுமதிக்கவில்லை. எனவே அங்கு நடக்கும் கொடுமைகள் வெளியே தெரியாமலேயே இருக்கிறது.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15196
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: சீமான்
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று நாம் தமிழர் இயக்கத் தலைவரும், திரைப்பட இயக்குநருமான சீமான் கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே முள்வேலியில் அடைக்கப்பட்டு சித்திரவதைச் செய்யப்படுவதாக, அவர்கள் தமது இருப்பிடங்களுக்கு குடிபெயரச் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் மாபெரும் பேரணி நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில், இயக்குநர் சீமான் தலைமையில் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வந்த இயக்குநர் சீமான் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழின அழிப்பு போரில் ஈடுபட்ட இலங்கை அரசுக்கு உலக நாடுகள் பொருளாதார தடை விதிக்க வேண்டும். குறிப்பாக இந்தியா உடனடியாக அதைச் செய்ய வேண்டும்.
இலங்கையில் போர் முடிந்து 3மாதங்கள் ஆகியும், முள் வேலிக்குள் வாழ்விழந்து கிடக்கும் தமிழ் மக்களை உடனடியாக, அவரவர் தம் இருப்பிடங்களுக்கு சென்று குடியேற அனுமதிக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான உணவு வசதிகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பச்சிளம் குழந்தைகள் பால் இல்லாமல் தவித்து வருகின்றனர். உணவு, உடை உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும்.
தொடர்ந்து இந்திய அரசும், தமிழக அரசும் இலங்கைக்கு பண உதவி செய்வதை நிறுத்த வேண்டும். மேலும், நம் நாட்டில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். காந்தியை கொன்ற வழக்கில் கூட ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு 17 மாதங்கள் மட்டுமே தடை விதிக்க முடிந்தது. ஆனால் 20 ஆண்டுகளாக ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதற்கான வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.
அடுத்த ஆண்டு மே மாதம் 17ம் தேதி தமிழ் மக்களையும், இந்த மண்ணையும் இணைக்கும் விழாவாக, நாம் தமிழர் இயக்கம் அரசியல் இயக்கமாக உருவாகும் என்றார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15297
வணங்காமண் நிவாரணப் பொருட்கள் கடலில் கொட்டப்படும் அபாயம்!
கொழும்பு துறைமுகத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக தேங்கிக் கிடக்கும் வணங்காமண் நிவாரணப் பொருட்கள் காலாவதியாகியோ அல்லது பழுதடைந்தோ கடலில் கொட்டப்படும் அபாயம் தோன்றியிருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கையில்,
கொலராடோ கப்பலில் எடுத்து வரப்பட்ட நிவாரணப் பொருட்களை அங்கிருந்து வெளியகற்றுவதற்காக சகலவித அனுமதிகளையும் பெற்றுக் கொண்டுள்ள போதிலும், துறைமுக அதிகார சபைக்கு 6.5 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதால் நிவாரண பொருட்களை விநியோகிப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சுரேன் பீரிஸ் தெரிவித்தார்.
இத்தொகையை அரசாங்கம் செலுத்துவதற்கு முன்வரும் என தாம் நம்புவதாக தெரிவித்த அவர், இன்றைய தினத்திற்குள் அதற்கான இணக்கம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் பட்சத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை நிவாரணப் பொருட்களை வவுனியாவுக்கு கொண்டு செல்லக் கூடியதாக இருக்கும்.
நிவாரணப் பொருட்கள் 27 கொள்கலன்களில் அடைக்கப்பட்ட நிலையில் கொழும்பு துறைமுகத்தில் சுமார் ஒன்றரை மாதங்களாக தேங்கிக் கிடக்கின்றன. எனவே இந்த பொருட்களில் சில காலாவதியாகி இருக்கக்கூடும் அல்லது பழுதடைந்திருக்கக்கூடும் என கருதப்படுகின்றபோதிலும் அதனை உறுதிப்படுத்த எம்மால் முடியவில்லை என்று கூறியுள்ளார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15270
கரூரில் இலங்கை தேசிய கொடி எரிப்பு
தமிழர்களை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்து கொலை செயத் செயலைக் கண்டித்து கரூர் நீதி மன்றம் முன்பு வழக்கறிஞர்கள் இலங்கை தேசிய கொடியை செருப்பால் அடித்து, தீ வைத்து எரித்தனர்.
இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் போர் முடிந்த நிலையில் அப்பாவி தமிழர்களை பாதுகாப்பு வளைத்திற்குள் வைத்து இலங்கை ராணுவம் நிர்வாணப்படுத்தி கொடுமை செய்து படுகொலை செய்து வருவதாக தமிழ் ஈழ ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் உள்ள ராணுவ வதை முகாமில் தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகளை லண்டனில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்த காட்சிகள் தமிழ் உணர்வாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இலங்கை ராணுவத்திற்கு தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் கரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இலங்கை வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் ரமேஷ் தலைமையில், வழக்கறிஞர்கள் செயலாளர் நடேசன், இராஜேந்திரன், நன்மாறன் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இலங்கை தேசிய கொடியை செருப்பால் அடித்து தீ வைத்து கொளுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15298
ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியம்: சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்
இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஈழத்தமிழர்களை சுட்டுக்கொல்லப்படுவதாக வெளியாகியுள்ள வீடியோ காட்சிகள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.
இலங்கை ராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் நடந்த போரின் போது, இரண்டு தரப்பும் மனித உரிமை மீறல்களில் ஈடுப்பட்டன என்ற குற்றச்சாட்டையும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுமத்தியுள்ளது.
இந்த வீடியோ 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை படைவீரர் ஒருவரால் தமது செல்போன் மூலம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர்கள் அழைத்து வரப்பட்டு இலங்கை படையினரால் சுட்டுகொல்லப்படும் காட்சிகள் காண்பிக்கப்பட்டுள்ளன.
இது 1949 ஆம் ஆண்டு ஜெனிவா உடன்படிக்கையின் சரத்து மூன்றில் கூறப்பட்டுள்ள கைதிகள் தொடர்பான நியதிகளை மீறும் செயலென மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டியுள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சே இந்த போர் புலிகளுக்கு எதிரானதென கூறும் நிலையில் இந்த வீடியோ படம் மாறுப்பட்ட விதத்தில் அமைந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஐக்கிய நாடுகளின் பணிப்பாளர் ஸ்டீவ் கிரே சோவ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை சுயாதீன சர்வதேச ஆணைகுழுவொன்றை அமைத்து இதனை விசாரணை செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=15207
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com