சிட்னியில் இலங்கை மாணவர்கள் மீது அசிட் வீச்சு
![http://www.elko.k12.nv.us/jackpot/users/lolson/images/Students%20in%20Classroom%20clip%20art.gif](http://www.elko.k12.nv.us/jackpot/users/lolson/images/Students%20in%20Classroom%20clip%20art.gif)
சிட்னியில் படிக்கும் இரு இலங்கை மாணவர்களான ஜெயஸ்ரீ வட்டவல (22), சதுயிகா வீரசிங்க (27) ஆகியவர்கள் மீது மே மாதம் 17 இல் அசிட் வீசிய ஐந்து பேரைக் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி இரு இலங்கை மாணவர்களும் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளானார்கள். தமிழ் சிங்கள் சமூகத்துடன் தொடர்புபடுத்தக்கூடியதென நம்பப்படும் தகராறின் பின்னரே இந்த அசிட் வீச்சு இடம்பெற்றதாகக் கூறுகிறார்கள். அவுஸ்திரேலியாவில் நடக்கும் இவ்வாறான வன்முறைகளுக்கும் இலங்கையில் எமது
உரிமையைக் கேட்டு நடத்தும் போராட்டங்களுக்கும் இப்போது முடிச்சுப் போடுகிறார்கள். ஆனால் க்டந்த வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் சிமித் இதுபற்றிக் கூறும்போது, சில தாக்குதல்கள் இன பேதம் காரணமாக நடைபெற்றவை என்றாலும்,இனபேதம் தான் தாக்குதலுக்கு காரணம் என்று கூறுவதற்கில்லை என்று தெரிவித்துள்ளார். எனினும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Www.eeladhesam.coM
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com