போர்க் குற்ற வழக்கு தொடர்வோம்: சிறிலங்கா அரசுக்கு பிரித்தானியா கடும் எச்சரிக்கை |
இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவிப்பதை மகிந்த ராஜபக்ச அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்நாட்டின் மீது போர்க் குற்ற வழக்குத் தொடரப்படும் என்று பிரித்தானிய அரசு எச்சரித்திருக்கிறது. |
கடந்த 4 மாதங்களில் 6 ஆயிரத்து 500 தமிழர்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் பிரித்தானியா அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்நாட்டு நாடாளுமன்றம் முன்பாக கடந்த 39 நாட்களுக்கு மேலாக தமிழ் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் உணர்வை மதித்து இலங்கையில் போரை நிறுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பிரித்தானிய நாடாளுமன்றம் நேற்று வியாழக்கிழமை கூடி விவாதித்தது. விவாதத்தில் பேசிய கிங்ஸ்டன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான எட்வர்ட் டேவி, அப்பாவி தமிழர்களை இரக்கமின்றி கொன்று குவித்து வரும் சிறிலங்கா அரசு மீது போர்க் குற்ற வழக்குத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த பிரித்தானிய வெளியுறவுத்துறை அலுவலக அமைச்சர் பில் ராம்மேல், இலங்கையில் இனப்படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதில் பிரித்தானிய அரசு உறுதியாக உள்ளது. போரை நிறுத்தாவிட்டால் அங்கு நடைபெறும் இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். இதற்கு பிரித்தானிய அரசு முழு ஆதரவு அளிக்கும். பிரித்தானிய அரசின் இந்த நிலைப்பாட்டை சிறிலங்கா அரசிடம் ஏற்கெனவே தெளிவாகக் கூறிவிட்டோம் என்றார். இலங்கையில் மிகக் குறுகிய நிலப்பரப்புக்குள் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அடைக்கலம் புகுந்துள்ளனர். இந்த நிலையில் அப்பகுதி மீது கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்துவது மனித உயிரிழப்பை ஏற்படுத்தும். போரின்போது மனித உயிரிழப்புகளை இயன்றவரை குறைக்க வேண்டும் என்ற அனைத்துலக போர் விதிகளுக்கு எதிரான வகையிலேயே இத்தாக்குதல் அமைந்திருக்கிறது. இலங்கையில் போர்க் குற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா என்பதை உறுதி செய்வதற்காக அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை, மருத்துவமனைகள் தகர்ப்பு போன்றவை குறித்து உடனடியாக விசாரணை நடத்துவதை பிரித்தானிய அரசு முழுமையாக ஆதரிக்கிறது. சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் அனைத்துலக விதிகளைப் பின்பற்றி அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று பிரித்தானியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றும் அவர் கூறினார். தூதரக உறவை முறிக்க வேண்டும் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய உறுப்பினர்களில் பலர் சிறிலங்கா அரசுடனான தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். குறுகிய நிலப்பரப்புக்குள் உள்ள தமிழ் மக்கள் மீது நாள்தோறும் குண்டுமழை பொழியப்படுகிறது. இது மிகவும் பயங்கரமானது. கொசோவா நாட்டில் இனப்படுகொலை நடந்தபோது நாம் தலையிட்டோம். ஈராக்கில் தலையிட்டோம். இலங்கை இனப்படுகொலையை மட்டும் நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான கெயித் வாஸ் வலியுறுத்தினார். பிரித்தானிய நாடாளுமன்றத்தின் மனித உரிமைகள் குழுத் தலைவரும், தொழிற் கட்சியின் உறுப்பினருமான அன்ட்ரு டிஸ்மோர், இனப்படுகொலையைக் கைவிட மறுக்கும் சிறிலங்கா அரசுடனான அனைத்து உறவுகளையும் உலக நாடுகள் ஒட்டுமொத்தமாக முறித்துக்கொண்டு அந்நாட்டை தனிமைப்படுத்துவதற்கு இதுதான் சரியான நேரம். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு அந்நாட்டு அரசை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். சிறிலங்காவுக்கு ஆயுத உதவி வழங்குவதை நிறுத்தும்படி சீனாவை வலியுறுத்த வேண்டும் என்றும் உறுப்பினர்கள் கோரினர். விவாதத்தில் கலந்துகொண்ட அனைவரும் சிறிலங்கா மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆதரவு தெரிவித்தனர். http://www.puthinam.com/full.php?2b1Qs1e0dkk6l0ecEF8X3b4n8DY4d3c2i3cc2IuZ2d43aRX3b035Ot4e |
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
14 years ago
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com