தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்
There was an error in this gadget

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Thursday, May 14, 2009

இயக்குநர் அமீர் பேச்சு: தமிழன் திருப்பி அடிப்பான்

தமிழன் எப்படி திருப்பி அடிப்பான் என்பதை சோனியாவுக்கு தேர்தல் முடிவுகள் காட்டும்: இயக்குநர் அமீர்


தமிழன் எப்படித் திருப்பி அடிப்பான் என்பதை சோனியாவுக்கு எமது தேர்தல் முடிவுகள் கண்டிப்பாக தெரியப்படுத்தும் என்று தமிழீழ ஆதரவாளரும் திரைப்பட இயக்குநருமான அமீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விகடன் குழுமத்தின் ஜூனியர் விகடன் வாரமிருமுறை இதழில் வெளிவந்த அவரின் நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு:

இங்கிலாந்து ராணிக்கு இருக்கும் ஈவு இரக்கம், இத்தாலி ராணிக்கு ஏன் இல்லை? இதிலிருந்தே இலங்கையில் போரை நடத்தும் சூத்திரதாரி சோனியாதான் என்பது பச்சைப் பிள்ளைக்கும் புரிந்து விடுமே...

தமிழன் கொத்துக் கொத்தாக செத்துக் கிடக்கும் நேரத்தில், அதைக் கண்டித்து ஒரு வார்த்தைகூட பேசாத சோனியா, இழவு வீட்டில் ஆதாயம் தேடும் ஆளாக தமிழகத்துக்குப் பிரசாரத்துக்கு வந்து போயிருக்கிறார்.

காங்கிரசை எதிர்த்துப் பிரசாரத்துக்குப் போன திரைத்துரையினர் மீது உள்துறை அமைச்சரான ப.சிதம்பரத்தின் ஆட்கள் காட்டுமிராண்டி தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் பதிலாக போட்டியிடும் பதினாறு தொகுதிகளிலும் காங்கிரஸ் துடைத்து எறியப்படும். பி.ஜே.பி-யை மதவாதக் கட்சி என்பதுபோல் காங்கிரசை இனவாதக் கட்சியாகத்தான் இனி தமிழ் மக்கள் பார்ப்பார்கள்! எனக் கொதித்தவரிடம்...

திரைத்துறையினர் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக பகிரங்கமாக வாக்கு கேட்கப் போவது தெரிந்துதான் நீங்களும் சேரனும் பிரசாரத்தில் பின்வாங்கி விட்டதாகச் சொல்லப்படுகிறதே? எனக் கேட்டோம்.

இரட்டை இலைக்கு வாக்கு கேட்பதில் எனக்கு உடன்பாடு இல்லைதான். ஆனாலும், 'தனி ஈழம் அமைத்தே தீருவேன்' என ஜெயலலிதா முழங்கி இருப்பது உணர்வாளர்களின் கவனத்தை திருப்பி இருக்கிறது.

'யோகி' பட வேலைகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதால்தான் என்னால் பிரசாரத்துக்குப் போக முடியவில்லை. நான் பிரசாரம் செய்யவில்லை என்றால் என்ன? தமிழன் எப்படித் திருப்பி அடிப்பான் என்பதை இத்தாலி ராணிக்கு (சோனியா) நம் தேர்தல் முடிவுகள் கண்டிப்பாக தெரியப்படுத்தும்... என அவர் தனது நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

http://thesamnet.co.uk/wp-content/uploads/2008/10/seeman_ameer2510.jpg

http://www.puthinam.com/full.php?2aVVs1e0dVh3h0ecFDdL3b4n8BI4d3f0g2cc2EqX2d42dPO3b02ZNm4e


No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!