கொழும்புக்கு அனுப்புவதற்கு இந்திய இராணுவ ஆயுதங்கள் ஏற்றிவந்த 5 லாரிகள் தமிழக தமிழர்களால் சேதம் | |
[ சனிக்கிழமை, 02 மே 2009, 09:07.35 AM GMT +05:30 ] | |
ஈழத்தமிழினத்தினை கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசுக்கு 80 சரக்குந்துகளில் போர் தளவாடங்களை இந்திய அரசு இன்று அனுப்புகிறது. அதில் 5 லாரிகளை கோவையில் அடித்து எரித்துள்ளனர். பலர் கைது. | |
ஈழத்தில் தமிழர்கள் மீதான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர் அரசானது தமிழகம் சேலம் , கோயம்பத்தூர் வழியாக போர் தளவாடங்களை 80 லாரிகளில் அனுப்புகிறது. சேலம் வழியாக செல்லும் பொழுது இதை கேள்விப்பட்ட தமிழுணர்வாளர்கள் அவ்வண்டிகளை தடுக்கும் முயற்சிகளில் இறங்கினர். இதற்கிடையே மதுக்கரை இராணுவ முகாமில் இருந்து 30க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் போராட்டக்காரர்களை தாக்க வந்ததாகவும்> இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் யு.என்.ஐ. செய்தி கூறுகிறது. இந்த மோதலில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றதாகவும்> அந்த இடமே ஒரு போர்க்களம் போல காட்சியளித்ததாகவும் அச்செய்தி கூறுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலர் கோவை இராமகிருஷ்ணன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்> அதன் பிறகு அங்கு சிதறிக் கிடந்த ஆயுதங்களை இராணுவத்தினர் அப்புறப்படுத்தி மதுக்கரை முகாமிற்கு கொண்டு சென்றுதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. | |
|
♥ காதல் தீ..! ♥
-
[image: Valentine Day wallpaper]
*பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...*
*அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...*
...
14 years ago
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com