வாங்கிக் கொடுத்தாரோ, ராஜீவ் காந்தி எந்த சர்வதேச சட்டத்தை பின்பற்றி
இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பினாரோ; அதே சர்வதேச சட்டத்தை
பின்பற்றித்தான், அதே தர்ம நியாயங்களை பின்பற்றித்தான், நான் சொல்வதை கேட்கும்
மத்திய அரசு அமைந்தால், இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி அங்கே தனி ஈழம்
அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொல்கிறேன்.
எனவே, வருகின்ற தேர்தலில் தமிழினத் துரோகி கருணாநிதிக்கு மீண்டும் எழுந்திருக்க
முடியாதபடி மறுபடியும் தலைதூக்க முடியாதபடி நீங்கள் சம்மட்டி அடி கொடுக்க
வேண்டும் என்று உங்களை எல்லாம் இரு கரம் கூப்பி, வேண்டி விரும்பி கேட்டுக்
கொள்கிறேன்.
செய்வீர்களா?… நீங்கள் செய்வீர்களா? என்று கேள்வி ஜெயலலிதா கேள்வி எழுப்ப,
மக்கள் 'செய்கிறோம்' என உரத்து குரல் எழுப்பினர்.
தான் வாக்குறுதி கொடுத்ததுபோல் வீராணம் நீரைச் சென்னைக்குக் கொண்டு வந்ததையும்,
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடித்ததையும் மக்களுக்கு நினைவூட்டினார் செல்வி
ஜெயலலிதா.
http://www.envazhi.com/?p=7206
"நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் ! நான் ! நான் !," என மக்களுக்குத் தமது மன உறுதியைப் பாட்டால் உணர்வுகளையும் இலட்சியங்களையும் மக்களின் மனதில் ஆழப் பதிய வைத்து நீங்காத இடம் பிடித்தவர் புரட்சித் தலைவர் எம். ஜீ. ஆர்.ஆவர். அவருடைய அரசியல் வாரிசாகத் தன்னைப் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் நிலை நிறுத்திச் சாதனை படைத்த பெண்மணியாகத் திகழ்பவர்தான் செல்வி ஜெயலலிதா.
எம்.ஜீ.ஆரின் பாடல் வரிகளை வரிக்கு வரியாக சாதனை படைக்கும் சாமர்த்தியம்
படைத்தவராக செல்வி ஜெயலலிதா காணப்படுகிறார். நிறைந்த மனத் திடமும் மதி நுட்பமும் கொண்டு செயல்படும் திறமை படைத்தவர் செல்வி ஜெயலலிதா. அவர் எதையும் இலேசில் நினைத்து விடமாட்டார். ஆனால் நினைத்து விட்டாலோ எதனையும் நிறை வேற்றாது விடவும் மாட்டார். இதுவே அவரது சுபாவமாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது. காழ்ப் புணர்வுகளுக்கு அப்பால் அவரது அரசியல் வாழ்க்கையைப் பார்த்தால் தன்னந் தனிப் பெண்மணியாக பலமுனைகளிலும் இருந்து பலத்த சோதனைகளை எதிர் நோக்கி அவற்றை எல்லாம் முறியடித்துச் சாதனை படைத்தவர் என்பதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
அதுவும் பல வருட வயது முதிர்ச்சியும் அரசியல் அனுபவங்களும் நிறைந்த அரசியல் வித்தகர் சாணக்கியர் எனப் பெயர் பெற்ற கலைஞரை எம்.ஜீ.ஆராலும் வை.கோவாலும் எதுவும் செய்ய முடியாமல் போன நிலையில் இன்றுவரை கலைஞருக்குக் கடுக்காய்ப் பேதி கொடுக்கும் திறமை பெற்றவராக செல்வி ஜெயலலிதா ஒளிவீசுகிறார். ஜேயலலிதா முதல்வராக இருந்த நாட்களில் கலைஞர் சட்டசபைக்கே செல்லாது தவிர்த்து வந்த வரலாறு எவரும் மறந்து விடக் கூடியதல்ல. கலைஞர் சிங்கம் என்றால் அவர் சிங்கிளாகவே சட்டசபையில் சந்தித்து இருக்க வேண்டாமா?
இன்றுவரை உலகத் தமிழரின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்த்துப் பாராட்டப் பட்ட கலைஞர் கருணாநிதி இப்போ எரி நட்சத்திரமாக எரிந்து கருகிச் சாம்பலாகி விழுந்து கிடக்கிறார். அவர் விழுந்தது உலகத் தமிழ் மக்களின் இதய வானில் இருந்து மட்டும் அல்ல, ஈழத் தமிழர் வரலாற்றுப் பதிவிலிருந்தும் விழுந்து முற்று முழுதாகவே மறைந்து விட்டார். அவரைத் தமிழ் உலகம் வெறும் இலக்கியவாதியாக மட்டும் நினைவு கூருமே அல்லாது ஒரு இலட்சியவாதியாகப் பார்க்;கப் பட முடியாத அளவுக்கு அவரது நிலைமை தாழ்ந்து விட்டது.
வள்ளுவர் கோட்டமும் வள்ளுவருக்குச் சிலையும் திருக் குறளுக்கு உரையும் எழுதிய கலைஞருக்கு வள்ளுவரின் - ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்ற குறளின் அர்த்தம் தெரிந்து வாழ மட்டும் கலைஞருக்கு முடியாமற் போனது அவரது இரட்டை வாழ்க்கை முறைதான் காரணம் என நினைக்கத் தோன்றுகிறது. சுருக்கமாகச் சொல்வதானால் ஊருக்குச் சாத்திரம் சொன்ன பல்லி கூழுக்குள் விழுந்து அவிஞ்ச கதையாக உள்ளது.
காலம் நேரம் கருதிக் கிடைத்த சந்தர்ப்பத்தை கையில் எடுத்துக் கொண்டதன் மூலம் இன்று செல்வி ஜெயலலிதா தமிழகத் தமிழரின் இதயத்தில் மட்டும் அல்ல ஈழத் தமிழரின், ஏன் உலகத் தமிழினத்தின் இதயத்திலும் நம்பிக்கை நட்சத்திரமாக எழுந்து நிற்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகளையும் ஈழத் தமிழர் பற்றியும் தொடக்க காலத்தில் இருந்தே பல ஆணித்தரமான கருத்துக்களை தெரிவித்து வந்தவர்தான் இந்த ஜெயலலிதா.
இடையிலே துக்ளக் சோ ராமசாமியும் சுப்பிரமணியசுவாமியும் ஏற்படுத்திக் கொண்ட சகவாசமும் மற்றும் உளவுத் துறைச் சதிகளும் அவரைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராகவும் ஈழத் தமிழர் நலனுக்குப் பாதகமானவராகவும் செயற்பட வைத்தன என்பதே நடுநிலையாளரின் கருத்துக்களாக உள்ளன. பல முறை புலிகள் தம்மைக் கொல்ல முயற்சிக்கிறார்கள் என பத்திரிகைகளில் அறிக்கைகளும் அதற்கென அதி சிறப்புப் பாதுகாப்புப் படையும் கேட்டு பிரபல்யம் தேடியவர்.
இத்தனைக்கும் புலிகள் அவரைச் சீண்டவோ பதில் அறிக்கை விடுத்துச் சேற்றைப் பூசிக் கொள்ளவோ முன் வந்தது கிடையாது. புலிகளின் இந்த அமைதி, புலிகள் பற்றிய தெளிவான புரிந்துணர்வை ஜெயலலிதாவுக்கு ஏற்படுத்தி இருந்தாலும் நாம் ஆச்சரியப் படத் தேவையில்லை
அண்மைக் காலம் வரைக்கும் ஊரோடு ஒத்து ஓடி ஈழத் தமிழர் விவகாரத்தை தமது அரசியல் துருப்புச் சீட்டாக மட்டுமே பயன் படுத்தி வந்தவர். கலைஞரைச் சினிமாத் துறையில் உள்ள தமிழ் உணர்வாளர்களான சீமான, அமீர், பாரதிராஜா ஆகியோருக்கு எதிராகச் செயற்பட வைத்து அவரைப் பெரும் இக்கட்டுக்குள் மாட்டி மகிழ்ந்தவர். எனவே இப்போது அவர் எடுத்திருக்கும் நிலைப்பாடு பலருக்கும் அவரைப் பற்றிய சந்தேகம் பலமாகவே ஏற்படும் வாய்ப்புகளே அதிகம்.
ஆனாலும் அவரது இந்த நிலைப்பாட்டில் படிப்படியாக மாறுதல் ஏற்பட்டு வந்ததை," இலங்கையில் பாதுகாப்பு வலையத்தில் சிக்கி இருக்கும் தமிழர்கள் அனைவரையும் இலங்கை இராணுவம் மிருக வெறி கொண்டு தாக்கி வருகிறது தப்பி ஓடுபவர்களை எல்லாம் இலங்கை இராணுவம் விரட்டி அடித்துக் கொல்கிறது' என 21. ஏப்பிரிலில் விடுத்த அறிக்கை அவரது ஈழத் தமிழர்கள் பற்றிய பார்வையில் ஏற்பட்ட பாரிய மாற்றத்தைக் காட்டுகிறது.
அதே தினத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த அறிக்கையில், "விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத இயக்கம் அதன் தலைவர் போர்க் குற்றவாளி என அறிக்கை விட்டுள்ளார். இந்த இரண்டு அறிக்கைகளையும் சொல்லி வைத்தாற்போல் ஒரே நாளில் இரு துருவங்களில் இருந்தும் நேரெதிர்க் கருத்துக்களைப் பிரதிபலிப்பனவாய் உள்ளன்.
23ம் திகதி பத்திரிகைகளுக்குப் பேட்டி வழங்கிய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி இலங்கையில் தாம் கண்டவற்iறையும் மகிந்த ராஜபக்ஷவின் பதில்களையும் விமர்சித்து இப்படிக் கூறுகிறார்- "பிச்சைக் காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என ஈழத் தமிழரின் சோகத்தை, தாம் நேரில் கண்ட அவலத்தை பட்டவர்த்தனமாக வெளி உலகுக்கு படம் பிடித்துக் காட்டி அதற்கான அரசியல் களங்களையும் சாடியுள்ளார்;.
25 ஏப்பிரிலில் சேலத்தில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பகிரங்கமாகவே இலங்கைப் பிரச்சனைக்குத் தனி ஈழம் தான் நிரந்தரத் தீர்வு என்கிறார். இதனைப் பத்திரிகை அறிக்கையாக விடுக்காமல் தேர்தல் பிரகடனமாகவே தெரிவித்திருப்பது கவனிக்கப் பட வேண்டிய ஒன்றாகும். அதே கூட்:டத்தில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி தமக்குக் கூறிய வற்றையும் அவர் காண்பித்த ஒளித் தடடுகள் பற்றியும் முதன் முறையாக வெளிப் படுத்துகிறார்.
அதே தினத்தில் சென்னையில் ம.தி.மு.க. தாயக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்கும் பெண்களைப் பார்த்துப் பேசிய ஜெயலலிதா அவர்களை உண்ணா விரதத்தைக் கைவிட்டு தமிழீழ மக்களுக்கான நிவாரண உதவிகளில் கவனம் செலுத்துவதே முக்கியமானது என அறிவுரையும் வழங்கியுள்ளார். இவற்றை நோக்கும் போது வாழும் கலை அமைப்பின் நிறுவனர் சுவாமி குருஜி ரவி சங்கரின் வருகையானது ஜெயாவில் புது மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது தெரிகிறது.
இன்று ஈழத் தமிழர் பற்றிய இவரது நிலைப்பாடு சீரும் சிறப்பும் சிந்தனைத் தெளிவும் கொண்டு விளங்கி வருவது தெரிகிறது. குருஜி ரவி சங்கரின் ஆன்மீக வாழ்க்கையும் அவரது உலகளாவிய செயற்பாடுகளும் கடந்த பல மாதங்களாக ஈழத் தமிழர் பற்றிய கரிசனை அவரது கவனத்தை ஈர்த்துள்ளமை அவரது பல ஊடக நேர்காணல்கள் மூலம் உலகம் அறிந்த ஒன்றாக உள்ளது. இலங்கையில் அமைதிக்காக அவர் மேற்கொண்ட முயற்சி அவருக்கு ஏமாற்றம் தந்ததோடு ஈழத் தமிழர் அழிவில் இந்தியாவின் வகிபாகம் நன்கு தெரிந்தவராக அவரது கருத்துக்கள் வெளிச்சம் போட்டுப் பிரதிபலிப்பதைக் காணலாம்.
மிகச் சரியாக அவர் அறிந்து வைத்துள்ள ஈழத் தமிழர் தொடர்பான உண்மைகள், அவர் நேரடியாகவே கண்டு அறிந்து கொண்ட தமிழ் மக்கள் படும் அவதி, அல்லல் துன்பம் என்பனவும் அவற்றுக்கு அவர் தீர்வு நாடிச் சென்ற இடமும் அவரின் மதி நுட்பத்தைக் காட்டுகிறது. இந்திய இலங்கை அரசுகளோ அல்லது இந்திய மத்திய அரசுக் கூட்டணிக் கட்சிகளோ எதுவித நல்ல பயனும் தரப் போவதில்லை என்பதை உணர்ந்தே குருஜி செல்வி ஜெயலலிதாவிடம் விசயத்தை ஒப்படைத்துள்ளார் என்பது உணரமுடிகிறது.
வெறும் ஒளிப் படப் பதிவுகளை மட்டும் அவர் செல்வி ஜெயலலிதாவிடம் கொடுத்து விட்டுப் போனார் எனக் கருதிவிட முடியாது. மாறாக அவர் இதுவிடயத்தில் பெற்ற நெடுநாள் பட்டறிவும் படிப்பறிவும் சேர்த்தே ஒரு தீர்க்கமான முடிவுக்கான வழி முறைக்கு எடுத்துச் செல்லப் பணித்துள்ளார் எனக் கருத வேண்டியுள்ளது. குருஜியை வெறும் ஏமாற்றுக்காரச் சாமியாராக கருதிவிட முடியாது. உலக அளவில் அறியப்பட்ட சிந்தனைவாதி ஆன்மீகவாதி வாழும் கலை என்ற வாழ்வியலின் பிதாமகர்.
மக்கள் மத்தியில் சாந்தியும் சமாதானமும் பரப்பி அதன் மூலம் வாழும் கலை என்ற தத்துவத்தின் மூலம் மனித குலம் மகிழ்வுடன் வாழப் போதித்துவரும் பணியில் தம்மை ஈடு படுத்திக் கொண்டவர். எவரும் நினைத்தும் பார்த்திராத விதத்தில் ஈழத் தமிழர் அவலத்தை நேரில் கண்டும் கேட்டும் காட்சிப் பதிவு எடுத்தும் அநுமன் சஞ்சீவி மலையைப் பேர்த்து எடுத்து வந்தது போல் எடுத்து ஜெயலலிதாவிடம் கொடுத்துள்ளார்.
குருஜி பற்ற வைத்த பொறி ஜெயலலிதாவை ஆழப் பற்றிக் கொழுந்து விட்டு எரிவதாகவே தெரிகிறது. தொடரும் சம்பவங்கள் ஜெயலலிதா தமது நிலைப் பாட்டில் மிக உறுதியாக உள்ளவராகக் காணப் படுகிறார். இதனை அவர் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் சிபாலின் அறிக்கைக்கு விடுத்த பதிலடியில் இலங்கைத் தமிழர்களது உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிள் தான் முன்வைத்துள்ள தனித் தமிழீழக் கொள்கை எவ்வாறு தேசக் குற்றமாகும் கேட்டடிருப்பதும் தமது பதிலிலும் தனித் தமிழீழக் கொள்கையை அழுத்திக் கூறி இருப்பதும் கவனிக்கத் தக்கது.
இவற்றைப் பார்க்கும் போது குருஜி வள்ளுவரின் குறள் வரிக்கு ஏற்ப ," இதனை இதனால் இவன் முடிப்பன் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்" எனத் nதிரிவு செய்து இதனை முடிக்கும் ஆற்றலும் திறனும் செல்வி ஜெயலலிதாவிடம் உள்ளது எனக் கண்டு அவரிடம் ஒப்படைத்து இருப்பது போன்றே தெரிகிறது. இதற்கு முன்னோடியாக சிபாலுக்கும் காங்கிரஸ{க்கும் கொடுக்ப் பட்ட பதில் உள்ளது.
இனி கோத்தபாயா ராஜபக்ஷ இலங்கையில் தனி ஈழம் ஒருபோதும் அமைக்க முடியாது வேண்டுமானால் ஜெயலலிதா வேறு ஒரு நாட்டைத் தெரிவு செய்வதே புத்திசாலித்தனமானது எனக் கிண்டல் அடித்துள்ளார். அதற்கான பதில் அறிக்கை இதுவரை விடாது அமைதி காப்பது அவர் தமது நிதானத்தைக் கடைப்பிடிப்பது போல் தெரிகிறது. செல்வி ஜெயலலிதா விடுக்கின்ற தமது அறிக்கைகளில் கலைஞர் போன்று மழுப்பலோ, தளம்பலோ தாமதமோ இல்லாது தடாலடியாக நெத்தியடி கொடுப்பதே தமது தனிப் பாணியாக வைத்துள்ளார்.
மீண்டும் சோ ராமசாமியோ , சுப்பிரமணிய சுவாமியோ ஒட்டிக் கொள்ளாது விட்டால், தமிழர் வரலாற்றிலும் ஈழத் தமிழர் வரலாற்றிலும் புரட்சித் தலைவர் எம்.ஜீ.ஆர் போன்ற ஒரு முக்கிய வகிபாகம் செல்வி ஜெயலலிதாவுக்குக் காலம் வழங்கி இருப்பது போல் தெரிகிறது. அதற்குப் பலமாக தமிழகத் தமிழ் உணர்வாளர்களும் வாக்காளர்களும் உதவும் பட்சத்தில் தமிழரின் இருண்ட வரலாற்றில் மீண்டும் ஒளி தரும் நட்சத்திரமாக ஜெயலலிதா ஒளிவிடும் சாத்தியப்பாடு தெரிகிறது.
தேர்தலில் 40 தொகுதிகளும் வெற்றி பெற்று மத்திய அரசில் முக்கிய வகிபாகம் இவருக்கு கிடைக்கும் பட்சத்தில் தளராத உறுதியுடன் செயற்படும் ஆற்றல் கொண்ட இவரால் இந்திய மத்திய அரசுக் கொள்கையை எமக்குச் சார்பாக செயற்படவைத்து தனித் தமிழ் ஈழ அரசை அங்கீகரிக்க வைத்து எமது வரலாற்றில் அழியாத இடம் பிடிப்பார் என உலகத் தமிழினம் பார்த்திருக்கிறது.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com