தமிழீழத் தாகம் தணியாது...! எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....!!

online

'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'

-பாவேந்தர் பாரதிதாசன்
There was an error in this gadget

ஏதோ ஒரு பாட்டு mp3

ஏதோ ஒரு பாட்டு mp3
Found at bee mp3 search engine

Pages

Monday, April 13, 2009

வழக்கு தொடர்ந்துள்ளது உண்மை....

வன்னிப் பகுதியில் இந்திய ராணுவத்தினர்
 
வழக்கு தொடர்ந்துள்ளது உண்மை....
 
 
இலங்கையில் சிறிலங்கப் படையுடன் இணைந்து போர் புரிந்துவரும் இந்திய ராணுவத்தினரை திரும்ப அழைக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசிற்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கருப்பன் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆமுகியோரும், தமிழக அரசும் இவ்வழக்கில் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹேமந்த் லட்சுமண் கோகலே தலைமையிலான நீதிமன்றக் குழு முன் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் கருப்பன் தாக்கல் செய்துள்ள மனுவில், இலங்கையில் சிங்களப் படையினர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்திய அரசு ஒரு காலத்தில் உதவி செய்து வந்தது. ஆனால் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறி இலங்கையில் வாழும் தமிழர்களையும், தமிழர்களின் உரிமைக்காகப் போராடிவரும் விடுதலைப் புலிகளையும் அழிக்கும் நோக்குடன் சிங்களப் படையினருக்கு இந்தியா ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. சிங்கள அரசும், விடுதலைப் புலிகளை அழிப்பதாகக் கூறிக்கொண்டு அங்குள்ள அப்பாவித் தமிழ் மக்கள் மீது நாள்தோறும் தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்திருக்கின்றனர்.

இலங்கைப் படையினருக்கு இந்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுத உதவிகளை வழங்கியுள்ளது. மேலும் ராடார்களை இயக்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 265 போர்ப்படை வல்லுநர்களையும் இந்திய அனுப்பி வைத்திருக்கிறது. இந்தியாவும், சீனாவும் சேர்ந்து 80,000 கோடி ரூபாயைக் கடனாக வழங்கியுள்ளது.

இலங்கைப் படைக்கு ஆதரவாகப் போரிடுவதற்காக அனுப்பப்பட்ட இந்திய வீரர்களில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து அவர்களின் உடல்கள் புனே நகருக்கு அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போரில் காயமடைந்த 125க்கும் மேற்பட்ட இந்திய படையினருக்க சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள போர்ப்படை மருத்துவமனையில் மருத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய அரசமைப்புச் சட்டப்படி அண்டை நாடுகளுக்கு மறைமுகமாக உதவிகளை வழங்குவது குற்றம் ஆகும். எந்த நாட்டிற்கு உதவி செய்வதாக இருந்தாலும் அதை வெளிப்படையாக குடியரசுத் தலைவரின் இசைவுடன்தான் செய்ய வேண்டும். எனவே அந்த உதவிகள் அனைத்தையும் திரும்பப் பெறும்படியும், இலங்கையில் போரிட்டு வரும் இந்தியப் படையினரை உடனடியாக திரும்பப் பெறும்படியும் இந்திய அரசுக்கு ஆணையிட வேண்டும். இலங்கைத் தமிழ் மக்களைக் கொடிய முறையில் கொன்று குவித்ததற்கு இழப்பீடாக ஒரு லட்சம் கோடி ரூபாய் ஈழத் தமிழ் மக்களுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வணக்கம்!

"ஓடும் நதி.....!"பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.odumnathi.blogspot.com

நன்றி....!

நன்றி....!

Locate IP Address on Map

Blog Widget by LinkWithin

இலவச மின் சந்தா

Enter your email address:

Delivered by FeedBurner

ஏதாவது சொல்லணும் தோனுதா....?

Guestbook

http://www.google.co.in/transliterate/indic/Tamil

தமிழில் எழுத....
ammaa=அம்மா appaa=அப்பா
குறிப்பு:
ஆங்கில தட்டச்சுக்கு மாற  Ctrl+g பட்டணை அழுத்தவும்
தமிழ் தட்டச்சுக்கு     மாற Ctrl+g  பட்டணை அழுத்தவும்

சற்று முன்...!

இந்த வலைப்பதிவில் தேடு

லேபிள்கள்

முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!