குடும்பத்தை கெடுக்கும் மாதர் சங்கங்கள்
பெண்கள் மீதான வன்கொடுமை:
நேற்று 25 நவம்பர் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு தினமாம். பெண்களுக்கு வன்கொடுமை அதிகபட்சமாக சொல்லப்படுவது பாலியல் வல்லுறவு. ஆனால் இன்றைய வளர்ந்த நாகரீக சூழ்நிலையில் வல்லுறவுகள் அனைத்தும் நல்லுறவுகளாக மாறிவிட்டதால் கற்பழிப்பு வழக்குகள் முன்போல வருவதில்லை. இந்த பாலியல் வல்லுறவுக்கு அடுத்ததாக இடம்பெறுவது மாமியார் கொடுமை. ஆனால் நவீன மருமகள்கள் ஆதிக்கத்தால் இன்றைக்கு எல்லா மாமியார்களும் அடக்கி ஒடுக்கப்பட்டு விட்டனர். சிலிண்டர் வெடித்துச் சாவுகள் இப்போதெல்லாம் முன்போல நடப்பதில்லை.
மகுடி ஊதிய பாம்பாக:
இப்போதெல்லாம் வரதட்சனை கொடுமைகள் குறித்து அதிகமாக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. கணவனுக்கு மனைவி பயந்த காலம் மாறி இன்றைக்கு மனைவி சொல்லே மந்திரம் என மகுடி ஊதிய பாம்பாக கணவன்மார்கள் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். பூரிக்கட்டை அடிகளும், தோசைக்கரண்டி வீச்சுகலும் வெளியே மறைக்கப்பட்டு அப்பாவியாய் சின்னப்புள்ளத் தனமாக வெளியே நடமாடும் கணவன்மார்களுக்கு பாதுகாப்பாக என்ன சட்டம் இருக்கிறது?
வாழ்க்கைச் சூழல்:
முன்னர் ஆட்டுக்கல்லில் மாவு அரைக்கும் போது குழவி மட்டும் சுற்றிவரும், கல் அப்படியே இருக்கும். ஆனால் இன்றைக்கு கிரைண்டரில் கல்லும் குழவியும் சேர்ந்து சுற்றுகிறது. அதாவது இன்றைய பொருளாதாரத்தைச் சமாளிக்க கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவிட்டனர். வேலைக்கு அனுப்ப விருப்பமில்லாமல் ஆனால் குடும்பச் சூழ்நிலையால் அரை மனதோடு மனைவியை வேலைக்கு அனுப்பி வைப்பவர்கள் எத்தனை பேர்? அலுவலகத்தில் வேலைக்குச் செல்லும் மனைவியில் கைத்தொலைபேசியை தினசரி சோதனை செய்யும் கணவன்மார்கள் எத்தனை பேர்? இப்படி மனைவி மீது எழும் சந்தேகத்தின் காரணமாக ஒரு சிறந்த குடும்பத்திற்குள் விரிசல் ஆரம்பமாகிறது. கணவனுக்கு சமமாக தாங்களும் வேலைக்குச் செல்வதால் தங்களும் ஒரு குடும்பத்தலைவர் தான் என்ற எண்ணம் பெண்களுக்கும் எழுந்து விடுகிறது. சமஉரிமை வேண்டும் என்ற பெயரில் நீயும் துணி துவை, நீயும் சமயல் செய், நீயும் வீட்டை சுத்தம் செய் என்ற ஈகோ பெண்களுக்கு உருவாகி இருவருக்குள்ளும் எழும் பிரச்சனை தினசரி சண்டைகளாக மாறுகிறது.
கவுன்சிலிங்:
இப்படித்தான் பிரச்சனைகள் ஆரம்பமாகி ஒரு கட்டத்தில் கணவன் கையை ஓங்கினால் போதும் இவர்களுக்கென சந்துக்கு சந்து மாதர் சங்கங்கள் இயங்கிவருகின்றன. அந்த சங்கத்தில் பொருப்பில் இருக்கும் சீனியர் பெண்கள் அனைவரும் கணவனோடு சண்டையிட்டுப் பிரிந்து அல்லது சில மோசமான ஆண்களால் வஞ்சிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். அவர்களிடத்திலே இந்தக் குடும்பப்பெண் கவுன்சிலிங் போகும் போது அவர்கள் கொடுக்கும் முதல் அட்வைஸ் என்ன தெரியுமா? அவன் பேசினால் நீயும் பேசு அவன் அடித்தால் நீயும் திருப்பி அடி என அவர்களுக்கு சாவியை போட்டுவிடுவார்கள். அதற்கு மேல் போனால் எங்கள் சங்கமே தலையிட்டு இலவசமாக விவாகரத்து வாங்கித் தந்துவிடும் என பெருமையாகச் சொல்லி பல குடும்பங்களுக்கு குண்டு வைத்து வருகிறார்கள் இந்த மாதர் சங்கத்தினர். அவர்கள் சிலர் ஆண்களால் வஞ்சிக்கப்பட்டார்க என்பதற்காக மற்றவர்களின் சாதாரண பிரச்சனையையும் இவர்கள் தலையிட்டு ஊதி பெருசாக்கிவிடுகிறார்கள். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என நீள்கிறது இவர்களின் சேவை.
அடிதடி பேச்சுவார்த்தை மேட்டர் சரி வரவில்லை எனில் இவர்கள் கொடுக்கும் அடுத்த யோசனை மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று வரதட்சனை புகார் கொடுக்கச் சொல்வதாகும்.
மகளிர் காவல் நிலையம்:
சினிமாக்களில் எமலோகத்தைப் பார்த்திருப்போம். அங்கே கொம்பு வைத்து பெரிய கோரைப்பற்கள் வெளியே தெரிய பெண் கிங்கரர்கள் இருப்பார்களே அவர்களுக்கும் தமிழக மகளிர் காவல் நிலையத்தில் உள்ள பெண் காவலர்களுக்கும் அதிகபட்சம் பெரிய வித்தியாசமில்லை. இந்த வழக்கு அவர்களில் பார்வைக்கு வந்ததும் அந்தக் கணவன் டாக்டராக இருந்தாலும் அவனை நடுரோட்டில் நிற்க வைத்து அவமானப்படுத்தி அந்த வீட்டில் இருக்கும் பெரிசு சின்னது என எல்லாரையும் ஜீப்பில் அள்ளிப் போட்டுக்கொண்டு ஸ்டேசனுக்கு கொண்டு வந்து காதுகளால் கேட்க முடியாத அர்ச்சனையை ஆரம்பிக்கும் மகளிர் காவல்துறை. ங்கோ..., என ஆரம்பித்து அவனின் அம்மா, அக்கா மூனு தலைமுறைக்கு முன்னாடி செத்துப்போன கிளவி முதற்கொண்டு அனைவரையும் நாறடித்து பின்னர் அவனிடம் மீட்டர் கறக்கும் வேலையில் இறங்குவார்கள் இந்தக் கட்டப்பஞ்சாயத்து கம்பெனியினர்..
மீட்டர் கறப்பதற்கென சிறப்பாக பயிற்சி பெற்ற பெண் போலீஸ் அவனிடம் நைசாக பேச்சுக்கொடுக்கும். சார், "அம்மா கொஞ்சம் கோவக்காரங்க தான், ஆனா மற்றபடி நல்லவங்க", என ஆரம்பித்து அவனிடம் பெரிய தொகையை அழுத்திவிடுவார்கள். அதுமட்டுமின்றி அன்றைக்கு அனைவருக்கும் பிரியாணியும் அவன் செலவிலே வாங்கிக்கொள்வார்கள். தமிழக மகளிர் காவல் நிலையங்களில் தினசரி பிரியாணி வாசனை தான். எப்படியும் தினமும் ஒரு கேஸ் கிடைத்துவிடும். ஆனால் காசு கொடுக்க மறுக்கும் அல்லது ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு வரதட்சனை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுவிடும். அத்தோடு அவன் வாழ்க்கை காலி. தமிழக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வரதட்சனை கொடுமை வழக்குகளில் 70% இவ்வாறு புணையப்பட்ட வழக்குகள் என வஞ்சிக்கப்பட்ட ஆண்கள் சங்கம் என்ற ஒரு அமைப்பு தெரிவித்துள்ளது.
இது போல அவமானப்பட்டு அவர்களின் வற்புறுத்தலால் அவளை வேண்டாவெறுப்பாக சேர்த்துவாழும் கணவன்கள் பல நேரங்களில் அவர்களின் தொந்தரவு தாங்காமல் அவளை கொலை செய்துவிடுவதும் செய்திகளாக நாம் பார்க்கிறோம். காவல்துறையில் இருக்கும் இதுபோன்ற சில காவலர்களால் வாழ்க்கையை இழந்தவர்கள் எத்தனை பேர். வன்கொடுமை சட்டம் பெண்களுக்கு மட்டும் தானா? ஆண்களுக்கு இல்லையா என விடைதெரியாத பலகேள்விகள் இன்றுவரை கேள்விகளாகவே இருக்கின்றன.
மாரியம்மாள் கொலை வழக்கு:
சில வருடங்களுக்கு முன்பு மதுரை மாவட்டத்தை உலுக்கிய மாரியம்மாள் வழக்கு மிக சுவாரஸ்யமானது. அதாவது கணவனிடம் கோபித்துக்கொண்டு சென்றுவிட்டாள் மாரியம்மாள் என்ற மனைவி . சில நாட்களில் மாரியம்மாளை அவளது கணவன் கொலை செய்துவிட்டான் என அவனை கைது செய்து பல நாட்கள் அந்த வழக்கு நடந்தது. ஒரு கட்டத்தில் அவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி. இந்த தீர்ப்பைக் கேள்விப்பட்ட மாரியம்மாள் மனம் மாறி வந்து தான் உயிரோடு இருப்பதாகவும், தன் கணவரை விடுதலை செய்யுமாறு அதே நீதிமன்றத்தில் முறையிட வழக்கிலே பரபரப்பு தொற்றிக்கொண்டது. தண்டனை விதிக்கப்பட்ட மாரியம்மாளின் கணவன் அதே நிதிபதியின் முன் நேர் நிறுத்தப்பட்டான். நீதிபதி அவனிடம் கேட்டார்
"அப்பறம் ஏன்யா நீ உன் மனைவிய கொல பண்ணுனதா ஒப்புக்கிட்ட?"
http://etiroli.blogspot.com/2009/11/blog-post_26.html
தினமலர் – மலிவு விலையில் மனு தர்மம் !!
தினமலருக்கு ஆகாதவர்களின் பட்டியல் மிக நீளமானது. பெரியார் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபிறகும் அவரை மட்டம்தட்டி இன்றளவும் செய்திகளை வெளியிடுகிறார்கள். இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து அந்த சமூகத்தையே தமிழ் நாட்டில் அச்சுறுத்தியதில் ஆ.எஸ்.எஸுக்கு அடுத்த இடம் நிச்சயம் தினமலருக்குத்தான். ஈழ ஆதரவாளர்களை புலி ஆதரவாளரென அரசுக்கு ஆள்காட்டி வேலை பார்த்ததில் தொடங்கி விவசாயிகள் உரிமைக்கு போராடுவோரை நக்சலைட்டுக்கள் என பரப்புரை செய்வது வரை தினமலரது திருப்பணிகளின் கணக்கிலடங்காதவை. தங்களின் வாசகர்களின் பெரும் சதவீதமானவர்களாக உள்ள அரசு ஊழியர்களின் போராட்டத்தை அவதூறு செய்து நன்றியுணர்ச்சிக்கு புது இலக்கணம் வகுத்தவர்கள் இவர்கள், முன்னாள் இலங்கை துணைத்தூதர் அம்சாவை பெருந்தன்மையானவர் என சொன்ன ஒரே தமிழ் ஊடகம் தினமலர்தான்.
மேற்கூறிய பிரிவினருக்கு எல்லாம் தினமலர் தங்களுக்கு எதிரானது என்பது தெரியும். ஆனால் பெரும்பாலான தாழ்த்தப்பாட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு தினமலர் தங்களுக்கும் எதிரி என்பது தெரிவதில்லை. அதன் இந்துத்துவா முகம் எல்லா இந்துக்களுக்கும் ஆதரவான பத்திரிக்கையைப்போல ஒரு மாயத்தோற்றத்தை தோற்றுவிக்கிறது. மதமாற்றம் பற்றி ஓலமிடும் செய்திகள், இந்து அமைப்புக்களின் செயல்பாடுகளுக்கு தரப்படும் அதீத முக்கியத்துவம், நிறைந்து வழியும் கோயில் குளம் பற்றிய செய்திகள் என்பன போன்ற செயல்களால் இது இந்துக்களுக்கான பத்திரிக்கையாக பலருக்கும் தோண்றுகிறது.
உண்மையில் அதன் பார்ப்பன சிந்தனை வாரமலர் கதைகளில்கூட பிரதிபலிக்கிறது. டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டி ஒன்று வாரமலரில் நடத்தப்படுகிறது. அதில் சாதிக்கொடுமை, இடஒதுக்கீடு பற்றி வந்த மூன்று கதைகளின் சுருக்கத்தை மட்டும் பாருங்கள்.
1. இடஒதுக்கீட்டில் பலனடைந்த ஒரு குடும்பத்தின் வாரிசுகள் இடஒதுக்கீடு பற்றி தங்கள் குடும்ப நண்பர் ஒருவருடன் விவாதிக்கிறார்கள் (மதிப்பெண் எதிர்பார்த்த அளவு வராவிட்டாலும் தனக்கு இட ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துவிடும் என ஒரு வாரிசு சொல்வதில் இருந்து விவாதம் துவங்குகிறது ) .குடும்ப நண்பரோ தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்றுவதற்காக அரசு இடஒதுக்கீட்டை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழங்கி வருவதாகவும், இடஒதுக்கீட்டில் பலனடைந்த ஒரு தலைமுறை தங்கள் வாரிசுகளையும் அந்த ஒதுக்கீட்டில் பலனடைய வைப்பதால் பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போவதாகவும் கவலைப்படுகிறார். உடனே மனம் திருந்துகிறார்கள் அந்த இளைஞர்கள். அந்த குடும்பத்தில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர் தான் இடஒதுக்கீட்டை நாடாமல் பொதுப்பிரிவில் என்ன படிப்பு கிடைக்குமோ அதை படிக்கப்போவதாக சொல்வதுடன் கதை சுபமாக முடிகிறது. ( சென்ற ஆண்டில் முதல் பரிசு பெற்ற கதை )
2. ஒரு கிராமப்பள்ளியில் ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களை தொடர்ந்து கழிவறையை சுத்தம் செய்ய சொல்கிறார்கள் ஆசிரியர்கள். மாணவர்கள் தங்கள் வீட்டில் இது பற்றி முறையிடுகிறார்கள். பெற்றோர்கள் திரண்டு சென்று ஆசிரியர்களுடன் வாக்குவாதம் செய்கிறார்கள். மாணவர்கள் படிப்பு பாழாகிவிடுமோ என அஞ்சி பதில் நடவடிக்கையை ஊருக்கு போய் முடிவு செய்யலாமென பெற்றோர்கள் திரும்புகிறார்கள். மறுநாள் தலைமை ஆசிரியர் தங்கள் அலுவலகத்தை திறக்கும்போது சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது. எல்லா வகுப்பறைகளும் இதே மாதிரி அசிங்கம் செய்யப்பட்டிருப்பதாக மற்ற ஆசிரியர்களும் குற்றம் சாட்டுகிறார்கள். இதை யார் செய்து இருப்பார்கள் என யூகித்த தலைமை ஆசிரியர் காவல்துறைக்கு தகவல் சொல்ல கிளம்புகிறார். முந்தைய நாட்களில் கழிவறையை சுத்தம் செய்யும்படி நிர்பந்திக்கப்பட்ட மாணவர்கள் தானாகவே முன்வந்து தாங்களே பள்ளியை சுத்தம் செய்வதாக சொல்கிறார்கள். பிறகு ( இளகிய மனம் படைத்தவர்கள் கண்களை துடத்துக்கொள்ளத்தயாராய் இருக்கவும் ) இந்த செயலால் மனம் திருந்திய தலைமையாசிரியர் அவர்களை இனி இந்த வேலையை செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டு, பள்ளியை சுத்தம் செய்ய ஆட்களை அழைத்துவருமாறு தமது ஊழியரை பணிக்கிறார். ( இந்த ஆண்டு இரண்டாம் பரிசு )
3. ஒரு கிராமத்தின் சலவைத்தொழிலாளியின் குடும்பம் ஒன்றில் தன் மகளை சலவைத்துணி வாங்கி வருமாறு பணிக்கிறாள் தாய். சலித்தபடியே துணி வாங்கச்செல்லும் மகள் ( பள்ளியிறுதி மாணவி ) வழியில் தங்கள் மீதான ஒடுக்குமுறையை பற்றி சிந்தித்தபடி செல்கிறார். துணி வாங்கும் வீட்டிலும் அவள் சுயமரியாதையை பாதிக்கும் செயல்கள் நடக்கின்றன. ( சலவைகாரப்பெண்னை வெறும் கையோடு அனுப்பாமல் ஏதாவது பட்சணம் கொடுத்தனுப்பு என்று ஒரு பெண் சொல்வதையும் மீதமான உணவை தங்கள் தலையில் கட்டும் தந்திரம் என சரியாக கணிக்கிறாள் அப்பெண் ). வீட்டிற்கு திரும்பியவளிடம் அவள் அம்மா, இன்று உன் அத்தை உன்னை பெண் பார்க்க வருவதாக சொல்கிறார். மனவளர்ச்சியில்லாத அத்தை மகனை மணக்க விரும்பாமல் தான் விரும்பிய இளைஞனை ( அவ்வூரில் பிணம் எரிக்கிறார் அவர் ) மணந்து அந்த ஊரிலேயே வசிக்கிறார் அப்பெண். கதையின் துவக்கத்தில் குறிப்பிட்ட அவளது வாழ்வியல் சிரமங்களைப்பற்றி மேலதிக தகவல்கள் இல்லாமல் முடிகிறது கதை. ( இவ்வாண்டு பிரசுரத்திற்கு தேர்வான ஆறுதல் பரிசுக்கதை
பரிசுக்கதைகளை கவனியுங்கள். ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட கதை நாயகர்கள் யாரும் தங்களுக்கான நியாயத்தை உரத்துக்கூட கேட்கவில்லை. ஒரு முறைக்கு மேல் இட ஒதுக்கீடு எதற்கு ? என்று தினமலரின் கருத்தை சொல்வதால்தான் இந்த கதை பரிசுக்குரியதாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. மற்ற கதைகளும் விதித்ததை ஏற்றுக்கொள் என நமக்கு பாடம் நடத்துகிறது. கதையை கதையாக மட்டும் பார் என அறிவுரை சொல்லும் ஆட்களை செருப்பால் அடிப்பதுபோல ஒரு கருத்தை சொல்லி தான் யார் என்பதை காட்டியது தினமலர். நவம்பர் எட்டாம் தேதி வாரமலரின் ஞானாந்தம் பகுதியில் ” எந்த ஒரு மனிதனும் தான் பிறந்த குலத்திற்கு தகுந்த குணங்களையே கொண்டிருப்பான். அவரை போட்டால் துவரை முளைக்குமா ? ” என நேரடியாக மனுதர்ம விஷத்தை கக்குகிறது தினமலர். அதை விளக்க வைரம் ராஜகோபால் சொன்ன ஒரு கதையின் சுருக்கம் கீழே,
ஒரு ஞானியை கைது செய்கிறான் ஒரு அரசன் ( அவர் பிச்சையெடுத்த குற்றத்திற்காக ) . அவர் ஒரு பெரிய ஞானி என அறிந்து அவரிடம் பல விசயங்களைக்கேட்டு தெளிவு பெறுகிறான். அவர் தன் அறிவை நிரூபிக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கு பிறகும் கூடுதலாக ஒரு பட்டை சாதம் தினமும் தர உத்தரவிடுகிறான் அரசன். ஒருநாள் அரசன் தான் எப்படிப்பட்டவன் என சொல்லும்படி ஞானியிடம் கேட்கிறான். ஞானியோ தயங்கியபடி நீங்கள் ஒரு சமயல்காரனுக்கு பிறந்தவர்.. ராஜாவுக்கு பிறந்தவரல்ல என்கிறார். இதை தன் தாயிடம் கேட்கிறான் அரசன், தாயும் நீ சமையல்காரனுக்குப் பிறந்தவன்தான் என ஒப்புக்கொள்கிறார். அந்த ஞானியிடம் இதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என கேட்கிறான் அரசன். நீ ராஜகுலத்தில் பிறந்தவனெனில் எனக்கு பொன்னையும் பொருளையும் தரச்சொல்லியிருப்பாய், சமையல்காரனுக்கு பிறந்தவன் என்பதால் பட்டை சாதம் தர சொன்னாய் என்கிறார் ஞானி. ( சில விதிவிலக்குகள் இருக்கலாம் எனவும் சொல்கிறார் வைரம்- ஜெயேந்திரனை பார்த்துவிட்டு எல்லா பிராமணனும் ஸ்த்ரீ லோலனோ என நாம் நினைத்துவிடக்கூடாதில்லையா?? )
இந்து ஆதரவு எனும் போர்வையில் தனது பார்பன சிந்தனையை வாசகர்களுக்குள் திணிக்கிறது தினமலர். இதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறது. தினமலரின் நீண்டகால வாசகர்கள் பலர் ‘ இனியும் இடஒதுக்கீடு எதற்கு, திறமைக்கு முன்னுரிமை தரவேண்டும் சாதிக்கு அல்ல, சாதீய வேறுபாடுகள் மறைந்துவிட்டதால் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருப்பவருக்கு இடஒதுக்கீடு கொடு’ எனபன போன்ற சிந்தனையோட்டத்தில் இருப்பதைக்காண முடிகிறது.
தான் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண் என புதியவர்களுடன் அறிமுகமாகும்போதே சொல்லிவிடுவேன் என்கிறார் என் தோழி ஒருவர் ( பிற்பாடு தெரிந்துகொண்டால் பழகுவதில் வேறுபாடு காட்டுவார்களோ என அஞ்சி ). தாழ்த்தப்பட்டவர் என சுலபமாக அடையாளம் காட்டும் தன் பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறார் நான் அறிந்த ஒரு பொறியியல் பட்டதாரி. இவை எல்லாம் எங்கோ ஒரு மூலையில் நடப்பவை அல்ல, தொழில் நகரமான கோவையில் நடந்தவை. தனிக்குவளை போய் டிஸ்போசபிள் கப் வந்ததுதான் சாதிவேறுபாட்டை களைவதில் நாம் கண்ட முன்னேற்றம். கிராமப்பகுதிகளில் முரட்டுத்தனமாக வெளிப்படும் ஜாதீயம் நகர் பகுதிகளில் நாசூக்கான வழிகளில் வெளிப்படுகிறது அவ்வளவுதான்.
இந்த வெளிப்பூச்சு சமத்துவத்தை இடஒதுக்கீட்டிற்கு எதிரான ஆயுதமாக்கும் தினமலர்தான் பக்தியின் பின்னால் நின்று வர்ண வேறுபாட்டை நியாயப்படுத்துகிறது. பாம்பையும் பார்பானையும் கண்டால் பார்பானை முதலில் அடி என்றார் பெரியார், அப்போது எத்தனை பிராமணர்கள் தாக்கப்பட்டார்கள் ?? ஆனால் பசு ஒரு தெய்வம் என செய்யப்பட்ட பிரச்சாரத்தால் செத்த மாட்டை அறுத்த தலித்துகள் எரித்துக்கொல்லப்பட்டார்கள் வடக்கே. வார்த்தைகளின் பின்னால் இருப்பவனின் நோக்கம்தான் பின்பற்றுபவனின் செயல்பாட்டைத் தீர்மானிக்கிறது. ராஜராஜனுக்கு பிறகு வந்த சோழ அரசர்கள் பிராமணரல்லாத மக்களை படிப்படியாக தஞ்சை நகரை விட்டு வெளியேற்றினார்கள், இது வரலாறு. இதற்காக யாரும் சமகால பிராமணரிடம் வாக்குவாதம் செய்தால் அது நியாயமில்லை என்று சொல்லலாம். ஆனால் இன்றைக்கும் எம் மக்களையும் எங்கள் மொழியையும் வழிபாட்டில் தொடங்கி இசை வரை ஒதுக்கிவைக்கும் வழக்கத்தை என்ன செய்வது ? போராடு என்றனர் பெரியாரும் அம்பேத்கரும், அடுத்த ஜென்மம் வரை காத்திரு என்கிறது தினமலர்.
I.I.T. இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் ” இரண்டாயிரம் ஆண்டு காத்திருந்தவர்களால் ஒரு வருடம் காத்திருக்கமுடியாதா” என ஒரு நீதிபதியை கேட்க வைத்தது எது ?. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆலய நுழைவுப்போராட்டம் நடந்தபோது மீனாட்சி செத்துவிட்டாள் எனக்கூறி அர்ச்சகர்களை வெளிநடப்பு செய்யவைத்தது எது?. சிறீரங்கம் உஷாவைத்தவிர மற்ற எல்லா சௌபாக்கியங்களும் சிறையில் ஜெயேந்திரனுக்கு தரப்பட்டது. தன்னை எதிர்த்தவனை கொல்ல சூத்திரனை நியமித்த ஜெயேந்திரன் சிறையில் தனக்கு சமைக்க மட்டும் பிராமணனை நியமிக்க சொன்னது ஏன் ? எல்லோரும் சமமென்றாகிவிட்டபிறகு ( தினமலர் கணிப்பின்படி) அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை தடுப்பது எது ? கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவரானபொழுது திருப்பதி தேவஸ்தானம் இனி தாங்கள் விரும்புபவர்களுக்கு மட்டும்தான் முதல் மரியாதை தருவோம் என முடிவெடுத்த திமிரின் அடித்தளம் எங்கிருக்கிறது ?
தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தினமலர் வாசகர்கள் அல்லது தினமலரது கருத்துடன் உடன்படுபவர்கள் மேலே உள்ள கேள்விகளுக்கு விடைகாண முற்படுங்கள். அதுதான் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான முதல் படி. அதைவிட்டுவிட்டு வாரமரலரின் கதை நாயகர்களைப்போல கையைக்கட்டிக்கொண்டு நானே கக்கூசை கழுவுறேன் சாமி என்றால் நம் பிள்ளைகளுக்கும் துடைப்பம்தான் மிஞ்சும்.
-நன்றி வில்லவன்
http://www.vinavu.com/2009/11/25/dinamalar/பேசாமல் பேச வைத்த கலைஞன்!
பேசாமல் பேச வைத்த கலைஞன்!
ஒரு காட்சி…
பொருளாதார பெருமந்தம் சர்வதேசத்தையே முடக்கிப் போட்டிருந்த 1930கள்… பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தொழிற்சாலைகளில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பு. அப்படியே கிடைத்தாலும் சம்பளம் வாங்குவதற்குள் உன்னைப் பிடி என்னைப்பிடி என்றாகிவிடும். ரொட்டி என்பது மிகக் காஸ்ட்லியான உணவு ஏழை மக்களுக்கு.
அந்த சூழலில், எவ்வளவு வேலைச்சுமையாக இருந்தாலும் அதை செய்தே தீர வேண்டிய கட்டாயம் தொழிலாளர்களுக்கு.
இன்னொரு பக்கம் வேலைப்பகுப்பு முறையின் கொடுமை. வேலைப் பகுப்பு முறை என்பது, “ஒருவருக்கு எந்த வேலை சரியாகச் செய்ய வருகிறதோ அதை மட்டுமே தொடர்ந்து செய்வது..” உதாரணம், திருகாணியின் மரையைத் திருகுவதுதான் ஒருவருக்கு சரியாக வரும் என்றால், தொடர்ந்து அதே வேலையைச் செய்வது..
இந்த சமூக அவலங்களை, அவை நடக்கும் காலகட்டத்திலேயே ஒரு சினிமா மூலம் நச்சென்று சொல்ல வேண்டும். ஆனால் டாக்குமெண்டரி மாதிரி சொல்லிக் கொண்டிருந்தால் யார் பார்ப்பார்கள்…
ஆனால பார்க்க வைத்தார் ஒருவர்… அவர்தான் சார்லி சாப்ளின்..
படம்: மாடர்ன் டைம்ஸ்!
உலகின் மிகச் சிறந்த புரட்சிகரமான படம் என்று கூட இதைச் சொல்லலாம்.
வசனங்கள் இல்லை, அதிரடி சண்டை, கிராபிக்ஸ், அட குறைந்த பட்சம் ரொமான்ஸ் கூட கிடையாது. ஆனால் பார்ப்போரின் இதயங்களை வசப்படுத்தும் நையாண்டி, உணர்வுகள், அரசியல் எள்ளல் என புதிய கலவையாக இருந்தது அந்தப்படம்.
குறிப்பாக, நேரத்தை மிச்சப்படுத்த சாப்பாடு ஊட்டிவிடும் ஒரு கருவியைக் கண்டுபிடிப்பதாக வரும் காட்சி… எள்ளலின் உச்சம்!
மாநிலக் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் திரையில் நான் பார்த்த முதல் சாப்ளின் படம் இதுதான். அதன் பிறகு இந்தப் படத்தை எத்தனையோ முறைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக அந்த முதல் 20 நிமிட தொழிற்சாலை காட்சிகளைப் பார்க்க வேண்டும் என டிவிடியில் ஓடவிட்டால், என்னையும் அறியாமல், படம் முடியும் வரை அதிலேயே லயித்துவிடுவது, இந்தப் பதிவை எழுதும் வரை தொடர்கிறது!
சாப்ளின் – சில குறிப்புகள்
சார்லி சாப்ளின் என்ற திரைக்கலை மேதை மீது விவரம் தெரிந்த நாள் முதல் நேசம் கலந்த மரியாதை உண்டு. கலைவாணர், புரட்சித் தலைவர் படங்களை விரும்பிப் பார்ப்பது போலவே, சார்லி சாப்ளினின் படங்கள் எங்கே ஓடினாலும் தேடிப் போய் பார்த்துவிடுவேன்.
அந்த அற்புத கலைஞனைப் பற்றி சில வரிகளுக்குள் சொல்வது சாத்தியமான விஷயமே அல்ல…
எல்லோரும் சினிமாவை எப்படி தங்களை முன்னிலைப்படுத்த மட்டுமே கையாளலாம் என யோசித்துக் கொண்டிருந்த அன்றைய காலகட்டத்தில், சாப்ளின் மட்டுமே சினிமாவை சமூக விழிப்புணர்வுக்கான கருவியாக மாற்றினார்.
பிரிட்டன் தலைநகர் லண்டனின் தெற்குப் பகுதியில் ஒரு ஏழை மேடைப் பாடகனின் மகனாக 1889-ல் பிறந்தவர் சாப்ளின். 5 வயதிலேயே நாடக மேடைகளுக்கு அவர் நன்கு அறிமுகமாகிவிட்டார். தான் பெற்ற அனுபவங்களைத்தான் பின்னாளில் திரைப்படங்களில் வெகு யதார்த்தமாகக் காட்டினார்.
பெரிதாக படிப்பறிவில்லை. 21 வயது வரை வறுமையுடன் போராடிய அந்த கலைஞன், பின்னர் அமெரிக்காவுக்குப் பயணப்பட்டார். 1913-ல் ஊமைப் படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தார். அவர் ஆரம்பத்தில் போட்டது வில்லன் வேஷம். வில்லனாக இருந்து சூப்பர் ஸ்டாராக உயர்வது சாப்ளின் காலத்திலிருந்தே தொடர்கிறது போலும்!
இரண்டாவது படத்திலேயே காமெடியை தனது பிரதான அஸ்கிரமாக்கிக் கொண்டார். ‘கிட் ஆட்டோ ரேசஸ் அட் வெனிஸ்’ என்ற அந்தப் படத்தில்தான் தொள தொள கால் சட்டை, சிறிய கோட்டு, ஹிட்லர் மீசை, சின்னத்தொப்பி, கையில் சிறு தடி என தனது ட்ரேட் மார்க் வேடத்துக்கு மாறினார்.
அதன்பிறகு ஒரே ஆண்டில் 35 படங்களில் நடிக்கும் சூப்பர் நடிகராக மாறிவிட்டார் சாப்ளின். இவை அனைத்துமே கிட்டத்தட்ட வெற்றிப் படங்கள்தான். 1916 ம் ஆண்டில் சாப்ளின் வாங்கிய சம்பளம் வாரம் 10000 டாலர்கள்!
இன்னொன்று அன்றைக்கே, குறும்படம், இரண்டு ரீல் சினிமா என பெரிய திரைப் புரட்சியே நடத்திக் காட்டியவர் சாப்ளின்.
நடிகராக இருந்தவர் பின்னர் இயக்குநராகவும் உயர்ந்தார்.
1919-ல் யுனைட்ட் ஆர்ட்டிஸ்ட்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார், நண்பர்களுடன் இணைந்து. இந்த பேனரில் வெளிவந்த படம்தான் சிட்டி லைட்ஸ் (1931).
மௌனப் படங்களுக்கு மவுசு குறைந்து, பேசும் படங்கள் வரத் தொடங்கியிருந்த காலகட்டத்தில்தான் (1936) இந்த மாடர்ன் டைம்ஸ் வெளியானது. இப்படத்தில் மற்றவர்கள் பேசினாலும், சாப்ளின் பேசவே மாட்டார். ஆனால் சரித்திரத்தில் பேச வைத்தார் அந்தப் படத்தை.
சாப்ளின் சாதனைகளுக்கு சிகரம் என்றால், சர்வாதிகாரி ஹிட்லரைக் கிண்டலடித்து அவர் தயாரித்து இயக்கி 1940 ம் ஆண்டு வெளியான ‘தி கிரேட் டிக்டேட்டர்’. இந்தப் படத்தில்தான் முதல்முதலில் அவர் வசனம் பேசினார்.
ஹிட்லர் சர்வ பலம் மிக்க சர்வாதிகாரியாக கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் வெளியான படம் இது என்பதிலிருந்தே, சாப்ளின் என்ற கலைஞனின் ஆளுமை என்ன என்பது புரிந்திருக்கும்.
உலகம் முழுவதும் இப்படம் திரையிடப்பட்டு, பெரும் பரபரப்பை உண்டாக்கியது. 1952 ல் அவர் “லைம் லைட்” என்ற படத்தில், சீரியசான வேடத்தில் நடித்தார்.
அவரது கடைசி படம் A Countess from Honk Kong (1967). நடித்தவர்கள் மார்லன் பிராண்டோ – சோபியா லாரன். இந்தப் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றுவார் சாப்ளின். அதுதான் அவரது கடைசி திரைத் தோற்றமும் கூட.
பின்னர் தனது பழைய படங்களுக்கு புத்தம் புதிதாய் இசைச் சேர்த்து மறுவெளியீடாகக் கொண்டுவந்தார். அப்போதும் அவை பெரும் வெற்றி பெற்றன.
சாப்ளின் மிகச் சிறந்த இசையமைப்பாளர். லைம்லைட் (1952) படத்தின் ஒரிஜினல் ஸ்கோருக்காக சார்லி சாப்ளினுக்கு ஆஸ்கர் தரப்பட்டது.
இது தவிர 1929 மற்றும் 1972 ம் ஆண்டுகளில் அவருக்கு கவரவ ஆஸ்கர் விருது தரப்பட்டது.
ஆனாலும் உள்ளுக்குள் அவரது ஏக்கம், தனது படங்கள் மூலம், தனது நடிப்புக்காக அந்த ஆஸ்கர் கிடைக்கவில்லையே என்று. அதுவே பல தருணங்களில் ஆஸ்கர் கமிட்டி மீதான கிண்டலான விமர்சனமாகவும் அவரிடமிருந்து வெளிப்பட்டுள்ளது.
‘கம்யூனிஸ்ட்’ சாப்ளின்…
உலகம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்ற சிட்டி லைட்ஸ், கிரேட் டிக்ட்டர் போன்றவை ஒரு ஆஸ்கர் விருதுக்குக் கூடப் பரிந்துரைக்கப்படவில்லை. காரணம், அவரது அரசியல் நிலைப்பாடுகள் என்கிறது சரித்திரம். இருந்தாலும் பிரிட்டிஷ் அரசு அவருக்கு சர் பட்டம் வழங்கி கவுரவித்தது.
சாப்ளின் முழுக்க முழுக்க கம்யூனிஸ சித்தாந்தத்தின் ஆதரவாளர். மேற்கத்திய நாடுகள் அவரை ஒரு கம்யூனிஸ்டாரகவே பார்த்தனர். தனது படங்கள் பெரும்பாலானவற்றில் கம்யூனிஸக் கருத்துக்களை போகிறபோக்கில் நச்சென்று சொல்லிவிட்டுப் போயிருப்பார் சாப்ளின்.
சொந்த வாழ்க்கையில் அவருக்கு நிறைய சோகங்கள் இருந்தாலும், 1977-ல் ஒரு கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது இறுதி மூச்சு அடங்கும் வரையிலும் மக்களைச் சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும் பெரும் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருந்த ஒப்பற்ற கலைஞன் அவர்.
ஒரு கலைஞன் எப்படிப்பட்ட படைப்புகளை மக்களுக்குத் தரவேண்டும் என்று பாடம் எடுத்த ஆசானும் கூட!
-என்வழி ஸ்பெஷல்
மாடர்ன் டைம்ஸ் படம் (ஒரு பகுதிக்கான காட்சி மட்டும் இங்கே தரப்பட்டுள்ளது. அடுத்தடுத்த 9 பகுதிகளும் யூட்யுபில் உள்ளன!)
http://www.envazhi.com/?p=13850
Exclusive video: இந்தியாவில் மாவோயிஸ்ட் அரசு நிர்வாகம்
இந்தியாவில் மாவோயிஸ்ட்களின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் அன்றாட அரசியல் வாழ்க்கையை காட்டும் ஆவணப்படம். மக்களுக்கான இலவச மருத்துவமனை, நூலக வசதிகள் கொண்ட "கம்யூன்" விடுதலைப் பிரதேசங்கள். முகாம்களில் போராளிகளின் அணிவகுப்பு, அரசியல்மயப்படுத்தப்படும் மக்கள், இன்ன பிற. இதுவரை வெளிவராத தகவல்கள்.
Rising Maoists Insurgency in India
Part 1
Part 2
Part 3
Part 4
Part 5
Part 6
http://kalaiy.blogspot.com/2009/11/exclusive-video_23.html
விடுதலைப் புலிகள் ஓயவில்லை-பிபிசி
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் எஞ்சிய அங்கத்தினர்கள் தங்கள்
அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க அண்மையில் வெளிநாட்டில் செய்த முயற்சிகள் இதுவரை வெற்றி அடையவில்லை.
இப்போது புலிகள் அமைப்பின் அனைத்துலகக் கட்டமைப்பு, பல்வேறு கண்டங்களில் இருக்கும் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகள் ஆகியவற்றின் வருங்காலம் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
ஒருகாலத்தில் உலகின் ஆக வலிமையான கொரில்லா படைகளில் ஒன்றாகத் திகழ்ந்து, வட்டாரக் கட்டுப்பாடு, சொந்த கடற்படை, விமானப்படை ஆகியவற்றை வைத்திருந்த புலிகள் அமைப்பு, இப்போது முற்றிலும் மாறுபட்ட நிலையில் உள்ளது.
ராணுவத்தினரின் தாக்குதலுக்குப் பிறகு சந்தேகத்தின் பேரில் கைதான 10,000க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள், அவர்களது ஆதரவாளர்கள் ஆகியோர் இலங்கையின் வடக்கே அமைந்துள்ள ராணுவக் கட்டுப்பாட்டிலான முகாம்களில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது காவலில் இருக்கும் விடுதலைப் புலிப் படையினருக்கும், குறிப்பாக அவர்களது தலைவர்களுக்கும் சிறப்பு விசாரணைகளை நடத்த விரும்புவதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது.
தமிழர்களின் நம்பிக்கை
இலங்கையில் ஈடுபாடுமிக்கப் புலிப்படை இல்லாததால், வெளிநாட்டில் வாழும் தலைவர்கள், புலிகள் அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்கப் பங்காற்றமுடியும் என்று தமிழர்கள் பலரும் நம்புகிறார்கள்.
ஆனால் அவர்களது நம்பிக்கை மெல்ல மெல்ல மங்கி வருவதாகத் தோன்றுகிறது.
“தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்பு உறுதியற்ற நிலையில் உள்ளது.
“கட்டமைப்பின் அமைப்புமுறைகள் தொடர்ந்தாலும், பிணைப்புமிக்க அல்லது மத்திய கட்டுப்பாட்டில் அது இயங்குவதாகத் தெரியவில்லை,” என்கிறார் கனடாவில் இருக்கும் இலங்கை ஆய்வாளர் டிபிஎஸ் ஜெயராஜ்.
தற்போதைய சூழ்நிலையில், கூடிய விரைவில் இலங்கையிலேயே புலிகள் அமைப்பு மீண்டும் ராணுவ ரீதியில் உயிர்ப்பித்தெழ முடியும் என்று நம்புவோர் மிகச் சிலரே.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தாலும், அவர்களது அனைத்துலகக் கட்டமைப்பில் பெரும்பகுதி இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
இவ்வாண்டு மே மாதம் வரை, இலங்கையின் வடக்கே தளம் அமைத்திருந்த மூத்த தலைவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் அனைத்துலகக் கட்டமைப்பு செயல்பட்டு வந்தது.
வெளிநாட்டில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் அமைப்பை உயிர்ப்பித்து, குறைந்தபட்சம் வெளிநாட்டிலாவது தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்வார்கள் என்று புலிகளின் ஆதரவாளர்கள் நம்பினர்.
ஆனால் அவர்களது புதிய தலைவரான செல்வராசா பத்மநாதன் ஆகஸ்ட் மாதம் தென்கிழக்காசிய நாடு ஒன்றில் கைதானது, அவர்களது நம்பிக்கையைக் குலைக்கும் பேரிடியாக அமைந்தது.
அவர் கைது செய்யப்பட்டபிறகு, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முக்கியமான சிலரைப் பற்பல நாடுகளின் வேவுத் துறைகள் தேடி வருவதாக இலங்கையின் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
திரு பத்மநாதன் தங்கள் பெயர்களை வெளியிட்டு விடுவார் என்ற அச்சத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்கள் பலரும் தலைமறைவாகிவிட்டனர் அல்லது கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டு செல்லப்படுவதைத் தவிர்க்க நடவடிக்கைகளை முடக்கிவிட்டனர்.
வெளிநாட்டில் அரசாங்கம்
அதே வேளையில், வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா ஆகிய நாடுகளில் தளம் அமைத்திருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர்களும் ஆதரவாளர்களும், தங்களது அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்றிட, வெளிநாட்டில் அரசாங்கம் அமைக்க முயன்று வருகின்றனர்.
இதுபோன்ற முயற்சி வெற்றியடைய, விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்பின் ஆதரவு மிகவும் முக்கியம். இந்தக் கட்டமைப்பு, பல ஆண்டுகாலமாக, நிதி வளங்களை வழங்கியதோடு, தகவல் சாதனங்களின்வழி தங்கள் கொள்கைகளையும் பரப்பி வந்தது.
நிதி திரட்டுவது, முதலீடுகளை நிர்வகிப்பது, அதிநவீன ஆயுதங்களை வாங்குவது, அவற்றை இரகசியமான முறையில் இலங்கையின் வடகிழக்கு வட்டாரங்களில் பதுங்கியிருந்த விடுதலைப் புலிகளுக்கு அனுப்பி வைப்பது ஆகியவற்றை இந்த வெளிநாட்டுக் கட்டமைப்பே செய்து வந்தது.
விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு முதலீடுகளில் மளிகைக் கடைகள் முதல் நிலச்சொத்து நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள் முதல் இந்து ஆலயங்கள், வர்த்தகக் கப்பல் வணிகம் முதல் இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பு வரை உள்ளடங்கும். விடுதலைப் புலிகளுக்கு டொரோன்டோ, லண்டன், பாரிஸ் உட்பட பல நகரங்களில் வர்த்தக நிலையங்கள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
உட்பிளவு
இப்போது, விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் சொத்துகள் ஆகியவற்றின் கட்டுப்பாட்டுக்காக உட்பிளவு மோதல்கள் நடந்து வருவதாகச் செய்திகள் வெளிவருகின்றன.
இதனால் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மனவருத்தமும் குழப்பமும் அடைந்துள்ளனர்.
“விடுதலைப் புலிகள் முன்பு ஒரு நோக்கத்திற்காகப் பணம் திரட்டினர்.
“இப்போது, அந்தப் பணத்தை என்ன செய்கிறார்கள் என்று தமிழர்கள் கேட்கிறார்கள்.
“அதிகாரத்திற்காகப் போட்டியிடும் இரு பிரிவுகளும் தமிழர்களுக்காகப் போராடிட ஒன்றுசேரவேண்டும் என்று விரும்புகிறார்கள்,” என்கிறார் சுவிட்சர்லாந்தில் இருக்கும் தமிழ் செய்தியாளர் ஷான் தவராஜா.
இதுமட்டுமன்றி, புலிகளுக்காகத் தங்கள் பெயரில் தொழில்களையும் கட்டடங்களையும் பதிவு செய்திருந்த வெளிநாட்டு ஆதரவாளர்களில் சிலர், தங்கள் சொந்த நலனுக்காக இந்தத் தொழில்களின் கட்டுப்பாட்டைப் படிப்படியாக ஏற்கத் தொடங்கி வருகின்றனர்.
புலிகளின் ஒட்டுமொத்த சொத்து விவரங்கள் மிகச்சில தலைவர்களுக்கே தெரியும்.
அவர்களில் பலரும் ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டனர்.
இந்நிலையில், இந்தப் போக்கு அதிகரிக்கும் என்று வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் பலரும் கவலைப்படுகின்றனர்.
மாதந்தோறும் பணம் அளித்துவந்த சாதாரண மக்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், தீவிர ஆதரவாளர்கள் பலரும் இன்னமும் நன்கொடை அளிக்க விழைகிறார்கள்.
தற்போது நடவடிக்கைகளை முடக்கி வைத்திருக்கும் முன்னணி ஆதரவாளர்கள், சூழ்நிலை சாதகமாக அமையும் தருணத்தில் அமைப்பை உயிர்ப்பிக்கத் தயங்கமாட்டார்கள் என்று விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் சிலர் கூறுகின்றனர்.
இலங்கையின் நிலவரத்தைப் பொறுத்தே இது நடக்கும் என்று அவர்கள் சொல்கின்றனர்.
புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையில் நடந்த சண்டையின்போது, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அரசாங்க முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
ஒருமித்த உலகளாவிய நெருக்குதலால் மட்டுமே, மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச்செல்ல இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கச் செய்யமுடியும் என்று வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நம்புகிறார்கள்.
முகாம்களில் பரிதவிக்கும் தமிழ் மக்களின் நிலையை மேற்கத்திய நாடுகளில் பறைசாற்றுவதற்காவது விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
காஞ்சிபுரம்: பல ஆண்டுகளாக கோவிலில் காம லீலைகளை அரங்கேற்றி வந்த செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன், தனது சேட்டைகள் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது என்பதை போலீசிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார்.
காஞ்சிபுரம், மச்சேஸ்வரர் கோவில் [^] கருவறையில் பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட ஆபாச அர்ச்சகர் தேவநாதனை காஞ்சீபுரம் போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட தேவநாதனை போலீசார் 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. தேவநாதன் தனது வாக்குமூலத்தில் கூறி்யிருப்பதாவது:
காஞ்சிபுரம் தான் எனது பூர்வீகம். எனக்கு 35 வயதாகிறது. கங்கா என்ற மனைவி [^]யும் 2 குழந்தை [^]களும் உள்ளனர். 5ம் வகுப்பு வரை படித்துள்ளேன். சிறு வயதில் எனது தந்தைக்கு துணையாக கோவிலுக்கு வரும்போதே, அங்கு வரும் பெண்களிடம் கனிவாக பேச கற்றுக்கொண்டேன்.
எனது 15 ஆண்டு அனுபவத்தில் பெண்களின் கண்ணை பார்த்தவுடன் அவர்களின் மனதில் உள்ளது என்ன என்பதை அறிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு ஏற்பட்டுவிட்டது.
குழந்தை வரம் கேட்டு வரும் பெண்கள் [^] என்றால் எளிதில் வேறு ஆண்களிடம் சிக்க மாட்டார்கள். குழந்தைக்கு சுகமில்லை என்று வருவோரும், கணவனுக்கு உடல்நலமில்லை என்று வரும் பெண்களிடம்மும் ஒருமுறைக்கு இரண்டு முறை மனம் உருக பேசினால் தானாக வழிக்கு வந்து விடுவார்கள்.
ஆரம்பத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு சில பெண்களிடம் அவர்களது வீட்டிற்கு தோஷம் கழிப்பதாக கூறி சென்று உல்லாசம் அனுபவித்துள்ளேன். சில சமயம் என்னிடம் வலையில் விழுந்த பெண்களை லாட்ஜுகளுக்கு அழைத்துச்சென்று உல்லாசமாக இருப்பேன்.
அனைவரிடமும் சகஜமாக பேசும் பெண்களிடம் அழகை வர்ணித்து வலையில் விழ வைப்பேன். பெரும்பாலான பெண்களிடம் அம்பாள் போல லட்சணமாக இருக்கிறீர்கள். இளமை குன்றாமல் என்றும்16ஆக இருக்க வேண்டுமானால் கோவில் கருவறையில் இருந்தபடி இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைவார்த்தை கூறி எனது வழிக்கு வரவழைப்பேன்.
சிலர் கோவிலில் வேண்டாம் என்று பயந்தால் அவர்களது வீட்டுக்கும் அருகில் உள்ள லாட்ஜுக்கும் அழைத்துச்செல்வேன். திருமணத்திற்கு பிறகு இதுபோன்ற செயல்களை ஓரளவு குறைத்துக்கொண்டேன்.
2 வருடங்களுக்கு முன்பு சைனா செல்போன் ஒன்று வாங்கினேன். அதில் வீடியோ மற்றும் கேமரா வசதி இருந்தது. கோவிலுக்கு வரும் 99 சதவீத பெண்கள் சேலை அணிந்துதான் வருவார்கள். அவர்கள் குணிந்து சாமி கும்பிடும்போது யாருக்கும் தெரியாமல், ஓரமாக நின்று அவர்களை ஆபாசமாக படம் எடுப்பேன். அந்த படங்களை ஓய்வு நேரங்களில் பார்த்து ரசிப்பேன்.
எனது நண்பர்கள் சிலரிடம் இருந்து ஆபாச படங்களை செல்போன் மூலம் பெற்று பார்த்து ரசிப்பேன். என்னதான் பெண்களை அனுபவித்திருந்தாலும் செல்போனில் பார்ப்பதில் தனி சுகம் கிடைத்தது. இதனால் நாமும் பெண்களுக்கு தெரியாமல் படம் எடுக்க வேண்டும் என்று எண்ணினேன்.
அதன்படி கோவிலில் என்னுடன் உல்லாசத்தில் ஈடுபடும் பெண்களுக்கு தெரியாமல் கோவில் விளக்கு பின்புறம் செல்போனை மறைத்து வைத்தேன். பெண்களை மயக்கி கருவறைக்குள் அழைத்து வந்து காம வேலைகளில் ஈடுபட்டேன்.
இதுபோல கஷ்டப்பட்ட பெண்கள், நடுத்தர குடும்பத்து பெண்கள், பணக்கார வீட்டு பெண்கள் என்று 8 பேரை அனுபவித்து படம் எடுத்தேன். அதை தனிமையில் இருக்கும் போது பார்த்து ரசி்ப்பேன். சில பெண்களை லாட்ஜுகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவிக்கும்போதும் படம் எடுத்துள்ளேன்.
ஒரு பெண் தன்னுடைய குழந்தைக்கு தொடர்ந்து நோய் தாக்குகிறது என்று கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். குழந்தைக்கு நோய் சரியாக வேண்டுமானால் பள்ளியறையில் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறினேன். அவளை உள்ளே அழைத்து செல்வதற்கு முன்பாக செல்போனை மறைத்து வைத்தேன்.
அப்போது திடீரென செல்போன் தவறி தீர்த்த குடத்திற்குள் விழுந்து விட்டது. அந்தப்பெண்ணிடம் சில்மிஷம் செய்ய மனமில்லாமல் விட்டு விட்டேன். தண்ணீருக்குள் விழுந்த செல்போனை எடுத்து வெயிலில் காய வைத்தேன். அது சரியாகவில்லை.
எனவே அதை பழுது பார்ப்பதற்காக நண்பர் செந்தில்குமாரின் செல்போன் சர்வீஸ் கடையில் கொடுத்தேன். அதில் உள்ள மெமரி கார்டை எடுக்க மறந்து விட்டேன். அதை சரி செய்து விட்டு பார்த்தபோது நான் கோவிலில் வைத்து எடுத்த ஆபாச படங்கள், வெளிச்சத்துக்கு வந்து விட்டிருந்தது.
இதுபற்றி செந்தில்குமார் ஒன்றும் சொல்லவில்லை. செல்போனை சரி செய்து கொடுக்கும்போது சிரித்துக் கொண்டே தந்தார். அப்போது அர்த்தம் புரியவில்லை. அதன் பிறகு தான் எனது செல்போனில் இருந்த ஆபாச படத்தை அவர் காப்பி செய்து இணைய தளங்களில் பரவவிட்டது தெரிந்தது.
நான் கருவறையில் பெண்களுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட விவகாரம் பத்திரிகைகளில் வெளி வந்ததால் தலைமறைவானேன். கோவிலில் நான் செய்த கெட்ட காரியத்துக்கு பகவான் என்னை கடுமையாக தண்டித்து விட்டார். என்னால் எனது மனைவி குழந்தைகளும் உறவினர்களும் அவதிப்பட்டதால் கோர்ட்டில் சரண் அடைந்தேன்.
என் கணவர் அப்பாவி ...
இதற்கிடையே, எனது கணவர் அப்பாவி, அவர் மீது பொய் வழக்குப் போட்டுள்ளனர் என்று தேவநாதனின் மனைவி கங்கா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது...
எனக்கும், தேவநாதனுக்கும் 10 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் ஆனது முதல் இன்று வரை என் கணவர் என்னை அன்பாகத் தான் பார்த்துக் கொண்டார்.
அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. வெகுளியாக எல்லாருடனும் சகஜமாக பழகுவார். அதே போலதான் கோவிலுக்கு வரும் பெண்களிடமும் சகஜமாக பழகி உள்ளார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடவுளிடம் தங்கள் குறைகளை கூறுவார்கள். அவரும் ஆறுதலாக பதில் அளிப்பார்.
எங்களுக்கு நேரம் சரி இல்லை. பகவான் சோதித்தாலும் எங்களை கைவிடமாட்டார். போலீசார் என் கணவர் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.
என் கணவர் அப்பாவி, நிரபராதி, அவருக்கு ஒன்றும் தெரியாது. போலீசார் என் கணவரை மிரட்டுகிறார்கள். பகவானின் செயலால் என் கணவர் விரைவில் விடுதலையாவார் என்றார் கங்கா.
http://thatstamil.oneindia.in/news/2009/11/22/kanchipuram-archagar-reveals.html
பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com