நானும் தமிழன் தானே...!
நக்கீரன்: பொதுவுடைமை,மார்க்சியம்,மூலதனம் இதையெல்லாம் கல்லூரியில் வகுப்பெடுப்பது போல காட்சி அமைத்திருக்கிறீர்களே,ரசிகர்கள் மீது அத்தனை நம்பிக்கையா?
சனநாதன்:படங்களில் வகுப்பறையைக் காட்டினால் காமெடியாகத்தான் காட்டுகிறார்கள். ஒரு வகுப்பறையை சரியாகக் காட்டவேண்டும் என்று நினைத்தேன்.
வகுப்பறையை கட் அடித்துவிட்டு சினிமாவுக்கு வரும் மாணவர்களுக்கு தியேட்டரையே வகுப்பறையாக்கும் முயற்சி தான் இது.
நக்கீரன்:காட்டுப் பகுதியில் நவீன ஆயுதங்களுடன் நடக்கும் சண்டையும் தாய் மண்ணை காக்கும் போராட்டத்தில் பெண்கள் முன்னணியில் நிற்பதும் ஈழத்தை பிரதிபலிக்கிறதே?
இயக்குநர் சனநாதன்:
நானும் தமிழன் தானே... படம் எடுக்கப்பட்ட நேரத்தில் ஈழத்தில் உச்சகட்ட போர் நடந்து கொண்டிருந்தது. என் உள் மனதில் அதன் தாக்கம் இருந்ததால், அது பிரதிபலித்திருக்கும்.
தேயிலைத் தோட்டத்துக்கு ஆள் எடுக்கிறதுக்காக அந்தக் காலத்துல வித்தியாசமான,வேடிக்கையான சில வேலைகளை எஸ்டேட் முதலாளிகளும் அந்த கங்காணிகளும் செஞ்சிருக்காங்க.மலைக்கு கீழ சமவெளிப் பகுதியில வசிக்கிறவங்க குடியிருப்புகள்ல குடுகுடுப்பைக்காரர்களைவிட்டு,
நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குது!மகாராசனுக்கு மலை மேல வேலை காத்திருக்குன்னு குறி சொல்லச் சொல்வாங்க.வேலை தேடி மலையேறி வரும் அப்பாவி மக்களுக்குச் சாப்பாடு,பணம் கொடுத்து கூலித் தொழிலாளியாக்கி வேலைக்குச் சேர்த்துடுவாங்க.அடுத்த வருஷத்துக்குள்ள பெரிய தொகையைக் கடனாகக் கொடுத்து, கூலித் தொழிலாளிங்க வாழ்க்கை முழுக்கவே கடனாளி ஆக்கிருவாங்க.தகப்பனோட
கடனைக் கட்ட மகனும்,மகனின் கடனைக் கட்ட பேரனும் கூலித் தொழிலாளியாகவே காலந்தள்ளுவாங்க.
குடு குடுப்பைக்காரனை கூலிக்கு வைத்து ஒரு சமூகமே தலைமுறை தலைமுறையாய் கூலிகளான அவலம் மூடநம்பிக்கையால் தானே?
இயக்குநர் சனநாதன்.
இரண்டாவதாகஅவர்கள் அறிய விரும்பியது: ""இந்தியாவில் -தமிழ்நாட்டில் ஆறு கோடி தமிழர்கள் இருப்பதாகச் சொல்கிறார் களே, அப்படியென்றால் இப்படியோர் இன அழித்தல் நடந்தபின்னரும் ஏன் இங்கு எழுச்சியோ ஒருங்கிணைந்த செயற்பாடுகளோ நிகழவில்லை? காரணம் என்ன? குறிப்பாக ஏன் இந்தியப் பாராளுமன்றத்தில் இவற்றை முக்கிய பிரச்சனையாக விவாதிக்கவில்லை? போர்க் குற்றங்களும், தொடரும் மனித உரிமை மீறல்களும், இன்னும் லட்சக்கணக்கான மக்கள் வதை முகாம்களில் தொடர்வதும் எங்கள் நாடுகளது பாராளுமன்றங்களில் முக்கிய பிரச்சனைகளாய் விவாதிக்கப்படுகையில் உங்கள் நாட்டு பாராளுமன்றத்தில் இவை குறித்த வெற்றிடம் மிகவும் வியப்பாக இருக்கிறது'' என்றார்கள். நாண்டு கொண்டு சாகலாம் போலிருந்தது.
இதில் மிக முக்கியமானதோர் உண்மை என்னவென்றால் இந்த அதிகாரிகளில் இருவர் மட்டும் முதலில் சென்னைக்கு வந்து சந்தித்தது ஒரு குறிப்பிட்ட அமைப்பினரை. மொத்தமே ஆறேழு பேர்தான் இந்த அமைப்பில் இருப்பார் கள். ஆனால் ஆறு கோடித் தமிழர்களின் கருத்து இதுதான் என உலகின் அதிகார மையங்களுக்கு கருத்து உள்ளீடு வழங்கும் வலைப்பின்னல்களை உருவாக்கி வைத்திருப்பார்கள். இவர்கள்தான் நஞ்சூறிய தமிழின எதிரிகள். இவர்களை அம்பலப்படுத்தி அகற்றும் பணியை ""மே-17'' என்ற இயக்கம் நடத்தி வரும் திருமுருகன் போன்ற கூர்த்த மதியும், ஒருமித்த கவனமும், தளரா உழைப்பும் கொண்ட புதிய தமிழ் இளைஞர் கூட்டத்தால் மட்டுமே முடியும். ஆங்காங்கு அக்னிக் குஞ்சுகளாய் பலர் இருக்கிறார்கள். அறப்போராளி களாய் அனைவரும் களமிறங்கியே ஆக வேண்டிய காலக்கட்டம் இது. அந்த "நஞ்சூறிய' கருத்துக்களத் தினர் ஐரோப்பிய அதிகாரிகளுக்கு என்ன சொல்லியிருந்தார்கள் தெரியுமா?
அவர்கள் ஐரோப்பிய நாடுகளது மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற அதிகாரிகளுக்குக் கூறி யிருந்தது: ""தமிழகத்தில் பெருவாரியானவர்களிடத்தே ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவு இல்லை. விடுதலைப் புலிகள் ராஜீவ்காந்தி படுகொலையை செய்தது மட்டுமல்லாமல் தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல், ஆயுத விற்பனை, திருட்டு, கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டிருந்ததால் பொதுவாகவே இங்கு ஈழத்தமிழ் மக்கள் மீது வெறுப்பு நிலவுகிறது. விடுதலைப்புலிகளின் அழிவு இங்குள்ள மக்களுக்கு மனநிறைவையே தந்துள்ளது'' என்பதாக கதையளந்துள்ளார்கள். நான் அவர்களுக்கு தந்தை பெரியார், சமூக நீதி அரசிய லின் வரலாறு, சமகால தமிழக அரசியலின் களைப் பூட்டும் முரண்பாடுகளால் ஈழப்பிரச்சனை குறித்து வலுவான பொதுக்கருத்து எழ முடியாத துயர நிலை- இவை குறித்தெல்லாம் விரிவாக எடுத்துரைத்தேன். வியந்து கேட்டார்கள். ""காலையில் நாங்கள் சந்தித்த வர்கள் முற்றிலும் மாறுபட்ட காட்சியையல்லவா எங்களுக்கு விரித்தார்கள்?'' என ஓர் அதிகாரி கூறினார். நான் சொன்னேன், ""தயவு செய்து தமிழகத்தின் இந்தியாவின் சமூக வரலாற்றைத் தெரிந்துகொள்ளா மல் சமகால அரசியலை அறிய முற்படாதீர்கள். அப் படிச் செய்தால் பெரும்பான்மை மக்களுக்கு அநீதி செய்தே நீங்கள் முடிவுகள் எடுப்பீர்கள்'' என்றேன்.
உணர்வும், இணையளவு அறிவுத் தெளிவும் ஒருங்கே பெற்ற இளையர்கள் சேர்ந்து செயற்படும் ""நாம்'' என்ற அமைப்புக் களத்தினை அந்த அதி காரிகளுக்கு அறிமுகம் செய்தேன். வரும் டிசம்பர் மாதம் முக்கிய மனித உரிமை நிபுணர்களோடு உள் அரங்க விவாதமொன்று புதுடில்லியில் நடை பெறப்போவதாகவும் அதில் "நாம்' அமைப்பு பங்கேற்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்.
உரையாடல் நிறைவில் அவர்களைக் கேட் டேன். ""இத்துணை அழிவுகள், கொடுமைகள் நடக்குமென்பது உங்களுக்குத் தெரியாதிருந்தது என்பதை ஏற்றுக் கொள்வது கடினமாக இருக் கிறது. தமிழினத்தை ஒட்டுமொத்தமாக எல்லோ ரும் கைவிட்டு விட்டீர்களே...'' என்று. அதற்கு ஒரு அதிகாரி சொன்னார்: ""இலங்கைத் தமிழர்களை உலகம் கைவிட்டு விட்டதாக நீங்கள் நினைக்க வேண்டாம். நிச்சயம் உலகம்அவர்களைக் கை விடாது. எங்களது நாடுகளில் வாழும் படித்த தமிழர்கள் அமைதியாக நல்ல பணி செய்து வருகிறார்கள். எங்களது தேசிய அரசுகளை பாராளுமன்றத்திற்குள் உறுப்பினர்கள் இப் பிரச்சனை பற்றி தொடர் கேள்விகள் எழுப்புகின்ற னர். ஆதலால் எமது அரசுகள் இப்பிரச்சனையிலிருந்து விலகி நிற்க முடியாது, இயங்கித்தான் ஆக வேண்டும். ராஜபக்சே அரசின் செயற்பாடுகள் மிக உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன. அடுத்த ஓராண்டு காலத்தில் ராஜபக்சே தமிழ் மக்கள் தொடர்பான செயற்பாடுகள் உண்மையில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு இலங்கையின் முழு தலை விதியையே தீர்மானிப்பதாக இருக்கும்'' என்றார்.
""ஆறு கோடி தமிழ் மக்கள் இங்கு இருப்பதாகக் கூறுகிறீர்கள். அரசியற் கட்சிகளுக் கிடையான முரண்பாடுகளை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஏன் கல்வியாளர்கள், அறிவுஜீவி கள், கலைத் துறையினர் மற்றும் பொதுவெளிகள் (Civil Society) ஈழ மக்களின் இன்றைய அவலங்களை பொது மானுடத்தின் மாண்பு மற்றும் உரிமைகள் தொடாபான பிரச்சனையாக அணுகவில்லை?'' என்ற கேள்வி மற்றும் விவாதத்தோடு பயனுள்ள அச்சந்திப்பு நிறைவுற்றது.
அமெரிக்காவில் வாழ்ந்து வரும் தமிழ் உணர்வாளர் ஒருவர் இரு நாட்களுக்கு முன் தொலைபேசி உரையாடலூடே கேட்டார், ""ஈழப் பிரச்சனை தொடர்பான குறைந்தபட்ச கொள்கைத் திட்டம் மற்றும் கோரிக்கைகளாக தமிழகத்தில் பொதுக்கருத்தொன்று உருவாக்கி கலைஞர், ஜெயலலிதா, ராமதாஸ், வைகோ உள்ளிட்ட எல்லா கட்சிகளது தலைவர்களும் இணைந்து புதுடில்லி சென்று முக்கியமானவர்களை சந்திக்கக் கூடாதா? தமிழகத் தின் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கோரிக்கைகளை- குளிர்கால பாராளுமன்றக் கூட்டத்தில் விவாதிக்கக்கூடாதா...?'' இப்படி பல கேள்விகள் கேட்டார். இயேசு பெருமான் பல அதிசயங்கள் செய்ததாக பைபிளில் சொல்லப்பட்டுள் ளது. அவ்வாறே எல்லா மதங்களது அவதார புருஷர்களும் அற்புதங்கள் நிகழ்த்தியதாக அந்தந்த மத புத்தகங்கள் பதிவு செய்துள்ளன. அதிசயங்கள், அற்புதங்கள், அருங்குறிகளில் எனக்கு நம்பிக்கையுண்டு. ஈழமக்களின் பிரச் சனையில் தமிழக அரசியற் கட்சிகள் இணைந்து வந்தால் அதை விடப் பெரிய அதிசயம் இப்போதைக்கு வேறெதுவும் இருக்க முடியாது. பக்தர்கள் பரம்பொருளை இறைஞ்சுவோம்.
தமிழகத்தின் தகுதியுடைத்த பத்திரிகை யாளர்கள் ""போருக்கெதிரான பத்திரிகையாளர் கள் என்ற அமைப்பாக இணைந்து புத்தக மொன்றை ஆக்கியுள்ளார்கள். ""ஈழம் நமது மௌனம். தாய்ப்பாலில் நஞ்சு'' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்புத்தகத்தை "நல்லேர்' பதிப்பகம் வெளி யிடுகிறது. வெளியீட்டு விழா நவம்பர் 14 குழந்தைகள் தினமாகிய சனிக் கிழமை சென்னையில் நடை பெறுகிறது. சென்னை மாநகரின் உணர்வுடைய வாசகர்கள் இப்புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்வது சிறப்பு. மிக முக்கியமாக ஒவ்வொருவரும் ஈழப் பிரச்சனை பற்றின அக்கறையோ, பிரக்ஞையோ இல்லாத இருரையேனும் உடன் அழைத்து வந்தால் அது பொது வெளி (Civil Society) நோக்கி அம்மக்களின் துயர்களை நகர்த் தும் முயற்சிக்கும், எதிர்காலத்தில் பொதுவெளியின் ஜனநாயக அழுத்தத்தால் அரசியற் கருத் தொற்றுமை உருவாகிற வாய்ப்புக்கும் நாம் செய்கிற காத்திரமான பங்களிப்பாக இருக்கும். என்னளவில் ஈழப்பிரச்சனையில் தினையளவு தானும் இதுவரை அக்கறை காட்டாத 500 பேரை வரவைத்திட புத்தகம் ஆக்கியவர்களுக்கு வாக்குறுதி தந்திருக்கிறேன்.
""ஈழம். நமது மௌனம். தாய்ப்பாலில் நஞ்சு.'' இப்புத்தகத்தை ஆக்கிய பத்திரிகை யாளர்கள் உண்மையில் தங்கள் எண்ணங்கள் எதையும் எழுதவில்லை. மாறாக முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் அவலங்கள், வலிகளின் நூறு புகைப்படங்களை தெரிவு செய்து நூறு பிரபலங் களிடம் கொடுத்து அக்காட்சியைப் பார்க்கையில் தங்கள் நெஞ்சில் எழுகிற உணர்வுகளை பத்து வரிகளுக்குள் பதிவு செய்யச் சொல்லியிருக்கிறார்கள். சத்குரு ஜக்கி வாசுதேவ், திரைக்கலைஞர்கள் கமல்ஹாசன், சூர்யா, சத்யராஜ், பிரகாஷ்ராஜ், நந்திதாதாஸ், கவிஞர்கள் வைரமுத்து, அப்துல் ரஹ்மான், மு.மேத்தா, அறிவுமதி, கனிமொழி, கபிலன், முத்துக்குமார், பா.விஜய், தபூசங்கர், யுகபாரதி, இன்குலாப், தமிழச்சி, தாமரை, சல்மா, பத்திரிகையாளர்கள் நக்கீரன்கோபால், அனிதா பிரதாப், அருந்ததிராய், இயக்குநர்கள் ஏ.ஆர். முருகதாஸ், சேரன், பாலா, சீமான், அமீர், மிஷ்கின், பாலாஜி சக்திவேல் இவர்களோடு இன்னும் பல முக்கியமானவர்கள் தம் நெஞ்சில் துன்புறும் மானுடத் தின் வலிகளை உள்வாங்கி குளிர்நெருப்பாய் பதிவு செய்துள்ளார்கள்.
தனித்துவமான இப் பணியினை காலத்தின் பதிவாக வும் வரலாற்றுக் கடமையாகவும் நிறைவு செய்துள்ள ""போருக் கெதிரான பத்திரிகையாளர்'' அணியினர் போற்றுதற் குரியவர்கள்.
இப்புத்தகத்தினை ஆங்கிலம், இந்தி மொழிகளில் ஆக்கும் கடமையினை ""நாம்'' அமைப்பு ஏற்றுக்கொள்கிறது.
மனித குலத்தின் இன்று வரையிலான அரசியல் வரலாற்றின் மொத்தத்தையும் கணக்கீடு செய்தோ மென்றால் பத்துசத வரலாறுதான் தெருக்களில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
எஞ்சிய 90 சத வரலாறென்பது மூடிய அறைகளுக்குள்ளும், முக்கிய மனிதர் களுக்கிடையான உரையாடல்களிலும், அரசு- பாராளுமன்ற-பிரபுக்கள்-சட்டமன்ற அவைகளிலும் நீதி மன்றங்களிலும், அறிஞர் பேரவைகள்- பல்கலைக்கழகங்களிலும் இடை விடாதியங்குகின்ற விழிப்படைந்த "பொது வெளி'யினாலுமே (Enlightened Civil Society நிகழ்த்தப்பட்டிருக்கிறது- நிகழ்ந் திருக்கிறது.
ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனை முக்கியமான இக்காலங்களில் மிகவும் பலவீனமாக இருக்கிறது. ""போருக்கெதிரான பத்திரிகையாளர்''களின் இந்த ஆக்கம் அத்தகு களங்களை காத்திரப்படுத்தும். குறிப்பாக, பொது வெளியை ""நாம்'' அமைப்பும் அத்திசையிலேயே இயங்க விழைகிறது.
(நினைவுகள் சுழலும்)
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=20321
மே17. முள்ளிவாய்க்கால் கடற்கரை. பின் பகல். எங்கு பார்க்கினும் பிணங்களும் உயிர் ஏங்கும் காயமுற்றவர்களும். வெயிலின் வெம்மை ஒருபுறம், இடைவிடாது பொழியப்பட்ட வெடிகுண்டுகள்- எறிகணைகளின் தீ மறுபுற மென கடற்கரை மணல்வெளி கந்தகப் பரப்பாய் கிடக்கிறது. நிறைமாத கர்ப்பிணித்தாய், குனிய முடியாமல் குனிந்தும், ஊர்ந்துமாய் கொலைக் களத்தை கடக்க முயல்கிறார். வேகமாய் நகரவும் முடியாமல் அம்மணல்வெளியின் நெருப் புத் தணலை தாங்கவும் முடியாத வலியின் தவிப்பு. சற்று தூரத்தில் தன்னைப்போலொரு இளம்தாய் எறிகணை குண்டுக்கு இரையாகி இறந்து கிடக்கிறார். அவரது கால்களில் காலணி அப்படியே இருக்கிறது. ஊர்ந்து நகர்கையில் எறிகணை தாக்கியிருக்க வேண் டும். உயிரோடு தவிக்கும் இந்தத்தாய் மெல்ல மாய் பிணமாகக் கிடந்தவ ரின் காலணிகளை அகற்றி, தான் அணிந்து கொள்கிறார். மரண நிழல் கவிந்த மண்ணில் பயணம் தொடர்கிறது. உயிர்தப்பி வவுனியா வந்து, வதை முகாமில் பதிவாகி, ஆண்பிள்ளையொன்றை பெற்றெடுத்து தாயாகி, இப்போது உறவினர்களின் உதவியில் கொழும்பு வந்துவிட்டார். ஆனால் கந்தக நிலத்தில் தனக்கு காலணி தந்த உயிரற்ற அந்தத் தாயின் காட்சியும் நினைவும் சதா அவரைப் பிழிகிறது. ஆறுதலின்றித் தவிக்கிறார். ஆற்றுப்படுத்தல் (Counselling) அருட்பணி செய்துவரும் அருட் தந்தையொருவர் பகிர்ந்துகொண்ட அனுபவம் இது. போர்க்கொடுமைகளை அனுபவித்தும் பார்த்தும் வந்த அப்பாவி மனித ஜீவன்களின் கதைகளையும் அவர்களை ஆற்றுப்படுத்துவதிலுள்ள சவால்களையும் அவர் விவரிக்க மனது தாங்கவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல... அவலத்தின் நெடுங்கதையாய்...
பதினாறு வயதில் விடுதலைப்போரில் இணைந்த அந்த மாணவன் இரு வாரங்களுக்கு முன்புவரை உயிரோடிருந்த இளைஞன். வயது 26. கடைசி சண்டையில் வீரமரணம் தழுவாது உயிரோடிருந்தவர்களில் ஒருவர். காடு கடலென அலைந்து பிறந்த ஊர் வந்திருக்கிறார். உறவுகள் உயிரோடிருக் கிறார்களா, இருந்தால் எங்கே என்ற விபரங் களெல்லாம் தெரியவில்லை. காட்டிக்கொடுக் கும் பலர் ஊருக்குள் ஊடுருவியிருப்பது மட்டும் அவனுக்குத் தெரிகிறது. சரணடைய முடிவெடுத்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடுகிறான். ""சண் டைக் களத்தில் மட்டுமே சரணடையும் ஒழுங்குகளை செஞ்சிலுவைச் சங்கம் செய்ய முடியும். போர் முடிந்ததாய் அறிவிக்கப்பட்ட பின் தங்களால் அதைச் செய்யமுடியாது'' என்பதை எடுத்துச் சொல்லும் அவர்கள் வேறொரு தொண்டு நிறுவனத்தோடு அவனை தொடர்புபடுத்திவிட்டார்கள். அந்நிறுவனம் அத்தமிழ் இளைஞனை காவல்நிலையத்தில் ஒப்படைத்து தயவு செய்து சித்ரவதை எதுவும் செய்யாதீர்கள், போர்க் கைதியாய் நடத்துங் கள் என மன்றாடி விடைபெறுகிறது. நான்கு நாட்களுக்குப்பின் அந்த இளைஞனின் பிணத்தை பெற்றுக்கொள்ளும்படி காவல்நிலை யத்திலிருந்து செய்தி வருகிறது. ""முல்லைத் தீவில் புலிகள் ஆயுதங்களை புதைத்து வைத் திருக்கும் இடங்களை அடையாளம் காட்டக் கூட்டிச் சென்றோம். தப்பியோடி நந்திக் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண் டார்'' என்று மிகச் சாதாரணமானதோர் செய்தியாகச் சொல்லி விடை கொடுத்திருக் கிறார்கள்.
ஊரறியாமல் உலகறியாமல் இன்னும் எத்தனை தமிழ் உயிர்கள் அறுக்கப்படுகின் றன... எத்தனைபேரது தாய்மை மலடாக்கப் படுகிறதென்பதெல்லாம் நமக்குத் தெரியாது. உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் ""மனித உரிமைகள் கண்காணி (HRW) என்ற அமைப்பின் ஆசிய இயக்குநர் பிராட் ஆடம்ஸ் சமீபத்தில் இலங்கையின் இன்றைய மனித உரிமைகள் நிலை பற்றி குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார். ""மனித உரிமை களைப் பொறுத்தவரை உலகில் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்றாக ஸ்ரீலங்கா இன்று திகழ்கிறது. ஒரு தேசத்தின் உள்நாட்டுச் சட்டங் களுக்கு உள்ள அனைத்து தன்மை களும் மனித குலத்திற்குப் பொது வாகவென வார்க்கப்பட்டுள்ள அனைத்துலக மனிதாபிமானச் சட் டங்களுக்கும் உண்டு. அச்சட்டங் களை ஒருபொருட்டாக ஸ்ரீலங்கா மதிக்கவில்லை. மிகக்குறைந்தபட்சம் போர்க்கைதிகளையும், அகதி மக்களையும் முறைப்படி பதிவு செய்யும் கடமையைக்கூட ஸ்ரீலங்கா செய்ய வில்லை.''
பின் நவீனத்துவ (Post Modernism) கருத்தியல் விரிந்து வேரூன்றிய இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தையதான காலத்தில் மனிதகுலத் திற்குப் பொதுவான மனிதாபிமானச் சட்டங்களை அரசியற் களத்திற்கு நகர்த்துகின்ற ஆற்றலாக விழிப்புணர்வு பெற்ற குடிமக்களாலான "பொதுவெளிகள்'' (Civil Society) முன்னின்று முக்கிய பங்காற்றியுள்ளன. ஈழத்தமிழ் மக்களுக்கான அத்தகு பொதுவெளிகள் தமிழர் செறிவுடன் வாழும் ஐரோப்பிய - வடஅமெரிக்க நாடுகளில் இன்று வலுவாக உருவாகி வருவதை அவதானிக்க முடிகிறது. அப்படியான பொதுவெளி தமிழகம்-இந்தியாவில் வேண்டுமென்பதும், ஈழ மக்களுக்காய் இந்திய மக்களாட்சி அமைப்புகள், அலகுகள், அரசியற்கட்சி களுடன் உரையாடுகின்ற, வாதாடுகின்ற, மன்றாடுகின்ற பணியில் அத்தனை அரசியற் சக்திகளோடும் அப்பொதுவெளி ஈடுபட வேண்டுமென்பதுமே நம் அவா.
நக்கீரன் படிக்கிறவர்களில் சிலர் என்னைக் கேட்பது ""நீங்கள் ஏன் கலைஞரை விமர்சிப்பதில்லை?'' இக் கேள்விக்கான பதில் இதுதான் : நாற்பதாண்டு கால விடுதலைப் போராட்டம் கொடூரமாகச் சிதையுண்டு, சகல நம்பிக்கைகளும் தகர்ந்து போய் எதிர்காலம் சூன்யமாகி நிற்கும் அம்மக்களுக்கு நாம் ஏதேனும் உண்மையில் செய்யக்கூடுமானால் அது "அம்மக்களுக் கானதோர் பொது அரசியல், மனிதாபிமானக்' கருத்தினை இங்கு உருவாக்குவது, அதை நம் நாட்டின் அரசாங்கக் கொள்கையாக மாற்றிட அரசியற் கட்சிகள், ஊடக வெளி, பாராளுமன்றம் என பன்முகக் களங்களூடே உழைப்பது. அதை விடுத்து ஈழமக்களின் பேரழிவை கலைஞருக்கும் தி.மு.க.விற்கும் எதிரான அரசியலாக இங்கு கட்டமைக்க முயல்வது அம் மக்களுக்கு எப்பயனையும் தந்துவிடப் போவதுமில்லை, இன்றைய சூழலில் அத்தகு அணுகுமுறை ஏற்புடையதுமல்ல. கட்சி அரசியல், தேர்தல் அரசியல் என்ற முரண்பாடுகளுக்குள் சிக்கி கந்தலாகிக் கிடக்கும் ஈழப்பிரச்சனையில் மிச்சமிருக்கிற சன்னமான சிறு நம்பிக்கைகளையும் பட்டுப்போகச் செய்கிற அணுகுமுறையாகவே அது அமையும். இன் னொன்று கலைஞருக்கோ, தி.மு.க.விற்கோ துரோகி என்று பட்டம் சுமத்துகிற பவித்திர நிலையில் இங்கு எந்த அரசியற் கட்சி களும், தலைவர்களும் இல்லை.
ராஜபக்சே கும்பலின் இனவெறி உச்சம் தொட்டு பேரழிவின், தமிழின அழித்தலென்ற ஊழிக்கூத்து முள்ளிவாய்க்காலை நெருங்கிக் கொண்டிருந்த தருணத்தில், யாருடைய பாதங்களில் விழுந்து அப்பேரழிவைத் தடுக்கலா மென கட்சி பலமெல்லாம் இல்லாத சாதாரண உணர்வாளர்கள் இரவு பகலென அங்குமிங்கும் அலைந்து திரிந்த காலை ""இந்தக் கூட்டணிக்கு ஆதரவாய் அறிக்கையொன்று விடுங்கள்'' என விடுதலைப்புலிகள் இயக்க அரசியற்பிரிவு பொறுப் பாளர் நடேசன் அவர்களுக்கு உரைத்தவர்களுக் கெல்லாம் நிச்சயமாய் அந்த ஒழுக்க தார்மீகம் இல்லை.
மிக முக்கியமாக ஈழ விடுதலைப் போராட் டத்தின் வேதனையான பின்னடைவுக்குக் காரணம் ஏதோ தமிழகமும் தமிழகத் தலைவர் களும்தான் என்பது போன்ற விவாதம் பிரச் சனையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திடத் தேவையான புரிதல்களையும் சுருக்குகிறது. விடு தலைப் போராட்ட பின்னடைவுக்கும் அம்மக்களின் அவலங்களுக்கும் முக்கிய காரணங்கள் பல. வெறிபிடித்தாடும் பௌத்த சிங்களப் பேரினவாதம் முதற் காரணம். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என உலகம் ஏற்றுக்கொள்ள வைத்ததில் சிங்களப் பேரினவாதம் பெற்ற வெற்றியும் அக்களத்தில் ஒன்றிணைந்து திறம்பட இயங்கி தமிழரின் அரசியல் சுயநிர்ணய உரிமையை உலகம் அங்கீகரிக்கச் செய்வதில் உலகத்தமிழ்ச் சமுதாயம் தவறியமையும் இரண்டா வது காரணம். இந்தியப் பெருங்கடல் அரசியலில் அமெரிக்க மேலாதிக்கத்தை இடைமறிக்கவேண்டி சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் ஸ்ரீலங்கா வுக்கு அள்ளித்தந்த பேராயுதங்களும், பெருநிதியும் உலக ராஜதந்திர உதவிகளும் மூன்றாவது கார ணம். ஈழம் மலர்ந்தால் தமிழகத்தில் பிரிவினை வாதம் தலைதூக்குமென்ற கருதுகோளினடிப்படை யில் தமிழினம் அழிந்தாலும் பரவாயில்லை விடு தலைப்புலிகள் இயக்கம் நசுக்கப்படவேண்டுமென நிலையெடுத்து ஸ்ரீலங்காவுடன் போரில் இணைந்து நின்ற இந்தியாவின் கொள்கை நிலைப்பாடு நான்காவது காரணம்.
உலகில் சிங்களவர் எண்ணிக்கை ஒரு கோடி. தமிழர்களோ எட்டு கோடிக்கும் மேல். எனினும் இனத்தைக் காக்கும் அக்கறையில் இணைந்து நிற்க முடியாத இந்த தமிழினத்தின் குறிப்பாக இந்தியத் தமிழகத்தின் சாபக்கேடு இறுதி காரணம். இன்னும் சிறு சிறு, சில பல காரணங்களையும் சேர்க்கலாம். ஆக, பெரியதோர் வரைபடத்தில், ஈழ விடுதலைப் போராட்ட பின்னடைவுக்கான காரணங்கள் மிகப்பல. தொடர்ந்த பயணத்திற்கு இந்தப் புரிதல் மிக முக்கியமானதென்பதால்தான் நமக்குள்ளேயே ஒருவருக்கொருவர் துரோகப் பட்டங்கள் சுமத்துவதைத் தவிர்த்தல் நலமென்றும், இணைந்து குறைந்தபட்ச பொதுக்கருத்தும் திட்டமும் வகுத்தல் சிறப்பென்றும் நம்பி, வலியுறுத்தி அதற்காக வாதிடுகிறோம்.
எனவேதான் அரசியல்மாச்சரியங்களுக்கு அப்பால் பொதுவெளிகள் (Civil Society) உருவாவதை முக்கியமானதாய் அடிக்கோடிடுகிறோம். அத்திசையில் ""போருக்கெதிரான பத்திரிகையாளர்'' என்ற அமைப்பின் சுமார் இருபது பத்திரிகையாளர்கள் இணைந்து ஆக்கியுள்ள ""ஈழம் : நமது மௌனம்'' என்ற புத்தகத்தை பற்றி கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தோம். அப்புத்தகத் தில் நடிகர் கமல்ஹாசன் அவர்களின் பதிவு செறி வுடைத்ததாயிருந்தது.
காக்க ஒரு கனக (AK) 47
நோக்கவும் தாக்கவும் ஒரு நொடி நேரம்
தோற்கவும் அதே கண நேரம்தான்
ஈயம் துளைத்துக் கசிந்து சிவந்த
காயம் தொட்டுக் கையை நனைத்து
விண்ணே தெரிய மண்ணில் சாய்ந்தேன்
முன் காக்க மறந்த அமைதியைக் காத்து.
மாட்டுத் தோலில் தாய்மண் அறைபட
பூட்ஸுக் கால்களால் கடந்தனர் பகைவர்.
விட்ட இடத்தில் கதையைத் துவங்கச்
சட்டென இன்னொரு குழந்தை பிறக்கும்
அதுவரை பொறுத்திரு தாயே, தமிழே
உதிரம் வடியும் கவிதை படித்து...
சத்குரு ஜக்கி வாசுதேவ்-
""வாழ்க்கையை இழந்தவர்களுக்காகவும்
இனி வாழ இருப்பவர்களுக்காகவும்
அநீதியை சுட்டிக்காட்டும் துணிவை நாம் பெறுவோம்''
-என தனது பதிவில் நம் அனைவரையும் அழைத்திருந்தார்.
...இப்படி புகழ்பெற்ற நூறுபேர் ஈழத்து மானுடத்திற்காய் அணிவகுக்கிறார்கள்.
புத்தக வெளியீடு வரும் நவம்பர் 14 சனி மாலை 4.30 மணிக்கு, 13 காசா மேஜர் சாலை, எழும்பூரிலுள்ள டான்போஸ்கோ பள்ளி அரங்கில் நடைபெறும். அனைவரும் வாருங்கள். உடன் பலரை அழைத்தும் வாருங்கள்.
(நினைவுகள் சுழலும்)
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=20593
ஓட்டுப் பொறுக்கியாகிறார் சீமான்!
தம்பி´ படத்தை சீமான் இயக்கிய போது அதில் ஒரு காட்சி. கதாநாயகன் வீட்டின் சுவற்றில் தேவர் படம். புரட்சி பேசும் சீமான் தேவர் படத்தை வைத்திருக்கிறாரே என்றொரு விவாதம் அப்போது எழுந்தது. பார்ப்பவர்களுக்கு இதில் என்ன இருக்கிறது என்றொரு கேள்வி எழக்கூடும். ஆனால், பெரியாரின் பேரன் என சொல்லிக் கொள்ளும் சீமான் தேவரை படத்தில் காட்டியதுதான் முக்கியத்துவமாகிறது. இவை குறித்து கீற்று இணையதளத்தின் பேட்டியின் போது சீமானிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.
"முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தாத்தான் தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை ஒழியும்னு முதுகுளத்தூர் கலவர நேரத்தில் பெரியார் சொல்லியிருக்கார். ஆனால் உங்களோட படங்களில் முத்துராமலிங்கத் தேவரோட புகைப்படம் தொடர்ந்து இடம்பெறுகிறது..?"
அதற்கு சீமான் சொல்கிறார்:
"கொஞ்சநாள் முன்பு வரைக்கும் எனக்கு முத்துராமலிங்கத் தேவர் பத்தின உண்மைகள் எதுவும் தெரியாது. ´தம்பி´ படம் வந்தபிறகு அண்ணன்களெல்லாம் சொன்னபிறகு தான் என்னோட பிழை தெரிஞ்சது. அவரை முன்னிறுத்தணுங்கிற உள்நோக்கம் எல்லாம் எதுவும் கிடையாது. படம் வந்த பிறகு தான் தேவரும், பெரியாரும் கொள்கை ரீதியா வேறானவங்கன்னு எனக்குத் தெரிய வந்தது. பெரியார் இறந்தபோது அரைக் கம்பத்தில் பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட ´பார்வார்ட் பிளாக்´ கொடிதான் என்பதையும் தெரிஞ்சிக்கிட்டேன். நான் முழுக்க முழுக்க பெரியாரைப் பின்பற்றுகிறவன். முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த பிழைதான்."
இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த சீமான் கியூபாவில் இருந்த சேகுவாராவையும், இலண்டனில் இருந்த கார்ல் மார்க்சையும் அவர்களின் தத்துவங்களையும் கரைத்து குடித்த ´தம்பி´க்கு தன் மாவட்டத்தில் தன் கிராமத்தில் இருக்கும் தேவர்களின் ஆதிக்க வெறியையும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றிய உண்மைகள் எதுவும் தெரியாமல் போனதைக் குறித்து சீமான் கூடிய போது...
ஓகோ! சீமான் ´தொலைநோக்கு பார்வை´ உடையவர் போலும்! என்று சமாதானம் கொண்டோம்.
சரி, அண்ணன்களெல்லாம் தேவர் பெருமையை பற்றி சொல்லி உண்மையை புரிய வைத்து விட்டார்கள். ´தம்பி´க்கு மீண்டும் வந்தது ஆவேசம். தமிழ் நாடு முழுவதும் ஓடி ஓடி ஆவேசப்பட்டார். நான் ´பெரியாரின் பேரன்´, ´நான் பெரியாரையும் பிரபாகரனையும் மட்டுமே தலைவர்களாக ஏற்றுக் கொண்டவன்´ என ஏகவசனம் பேச ஆரம்பித்தார்.
பெரியாரை தேசியப் போராட்டத் தியாகி என்றார்.
அண்ணன்மார்கள் ´தம்பி சொல்வதை தெளிந்து சொல்!´ என்று விளக்கம் கொடுத்தார்களா? என்று தெரியவில்லை. பெரியார் தவறாக அடையாளப்படுத்தப்படுகிறார் என பதறிப்போய் நாம் விளக்கம் கொடுத்தோம்....
´தம்பி´ தலித்தியம் பேசி குழப்பிய போது அண்ணன்கள் உண்மையை எடுத்து சொன்னார்கள்....
´திராவிடம்´ என்பது வெத்துவாதம் என்ற போது மீண்டும் அண்ணன்மார்கள் பதறிப்போய் விளக்கம் கொடுத்தார்கள். ´தம்பி´ இப்போதைக்கு பெரியாரின் திராவிடம் பற்றி வாயை திறப்பதில்லை.
கவனியுங்கள் இப்போதைக்கு மட்டுமே!
சமீபத்தில் மும்பையில் 04.10.2009-இல் ´விழித்தெழு இளைஞர் இயக்கம்´ முப்பெரும் விழா ஏற்பாடு செய்திருந்தது. பெரியார், அம்பேத்கர், காமராசர் என்ற முப்பெரும் தலைவர்களை வாழ்த்தியும், தீண்டாமைக்கு எதிராகவும் வீர வசனம் பேசினார் தம்பி.
நமக்குத் தெரிந்தது தானே ´தம்பியின் தலித்தியப் பார்வை´ எப்படிப்பட்டது என்று.
´புதிய தலைமுறை´ பத்திரிக்கையில் சீமானோடு கலந்துரையாடல் செய்த கல்லூரி மாணவர்களின் பேட்டி ஒன்று வெளியாகி இருந்தது.
"தமிழ்த் தேசியம் பேசும் நீங்கள் [சீமான்] ஏன் தலித்தியம் பேசுவதில்லை? அந்த மக்கள் உங்க கண்களுக்கு தெரியலையா? என்றார்கள் கல்லூரி மாணவர்கள்
சீமான் சொல்கிறார்:
"நீங்கள் ஏன் சேரியிலேயே கொண்டு போய் பிரச்சனையை நிறுத்துகிறீங்க? நாங்க ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் பேசுகிறோம். சாதியை மறந்து தமிழன் என்று ஒரு சாதியாய் இணைவது பற்றி பேசினால் நீங்க திரும்பத் திரும்ப கொண்டு போய் சேரியில் நிறுத்துறீங்க. சாதியை மறந்து வாங்க! பிறகு பாருங்க!"
சாதியை மறந்து வாங்க என்றவர், மும்பை முப்பெரும் விழாவில் சாதி குறித்து பேசுகிறார்.. பேசுகிறார்... பேசிக் கொண்டே இருக்கிறார்...!
சரி பேசியவர் பிறகு என்னவானார்?
சாதியை மறந்து வாங்க என்றவர் ´தேவர் ஜெயந்தி´யில் அரசியல் ஓட்டுப் பொறுக்கிகளுக்கு போட்டியாக கறுப்புச் சட்டையும் நெற்றியில் பட்டையுமாக தேவருக்கு மாலை போட்டு இளித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கு அண்ணன்மார்கள் என்ன விளக்கம் கொடுக்கப்போகிறார்கள்? தம்பி எப்படி சமாளிக்கப் போகிறார்? நாம் எப்படி மீண்டும் கேணயன்களாக்கப்படப் போகிறோமோ! அது ஓட்டுக்பொறுக்கி சீமானின் சாமர்த்தியமான வார்த்தைகளில் கிடக்கிறது.
தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, காமராசர் போன்ற தலைவர்களின் பிறந்த தினமும், நினைவு தினமும் தமிழ்சொற்களால் வழங்கப்பட்டுக் கொண்டிருக்க, தேவர் பிறந்த தினமும், நினைவு தினமும் ´ஜெயந்தி´ என்ற சமஸ்கிருத வார்த்தையால் சொல்லப்படுவதன் அரசியல் என்ன?
´ஜெயந்தி´ என்பது சமஸ்கிருத மொழியில் பிறந்தநாள் எனப் பொருள்படும். சாதாரண மனிதர்களின் பிறந்தநாட்களை போல் வழக்கு இருக்கக் கூடாது என்பதற்காக கடவுள் பிறந்த நாள்களும், மகான்களின் பிறந்த நாள்களும், ´ஜெயந்தி´ என்ற சமஸ்கிருத வார்ததையால் சொல்லும் போது மேன்மை நிலையில் இருப்பதால் கிருஷ்ண ஜெயந்தி, காந்தி ஜெயந்தி என கடவுள்களும், மகாத்மாக்களும் நினைவு கூறப்பட்டன. அதன்போக்கிலே தேவர் கடவுளும், மகானுமாக தேவர் சமூகத்தால் வாழும் போதே கடவுளாக்கப்பட்டார் முத்து இராமலிங்கத் தேவர்.
இன்றைய அரசியல்வாதிகள் கட்சி பேதமின்றி தேவரை தூக்கி பிடித்து ஆடுகிறார்களே என்னவென்று சொல்லி. அவர்களுக்கு தேவரின் உண்மை நிலை தெரியாதா என்ன? இருப்பினும் இந்திய தேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகியாகவும், தேவர் இன மக்களின் கடவுள்களாகவும் கருதப்படும் பசும்பொன் முத்து இராமலிங்கத் தேவரின் இந்திய தேசிய சுதந்திரப் போராட்டத்தின் பங்களிப்புதான் என்ன?
அகிம்சை வழியில் போராடிய காந்தியின் சுதந்திரப்போராட்டத்தை விட ஆயுதம் தாங்கி போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போசின் சுதந்திரப் போராட்டத்தில் ஈர்ப்பு கொண்டு நேதாஜி தலைமையில் ஆங்கிலேயர்களை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து தன் இனத்தைச் சேர்ந்த தேவர்களை பெரும் படையாக திரட்டி அனுப்பிய செயலை தவீர்த்து வேறென்ன செய்தார் சுதந்திரப் போராட்டத்திற்கு?
அதுதான் போகட்டும்?
ஆங்கிலேயர் இந்தியாவில் தனது கட்டளைக்கும், உயர்நிர்வாகம் என்ற பெயரால் அடக்கி ஆள்வதற்கும் அடியபணியாத இனக்குழுக்கள், நாடோடிகள், பாடித்திரியும் இனங்கள் போன்ற மக்களை அடக்குவதற்கு
1871-ஆம் ஆண்டு "குற்றப் பரம்பரைச் சட்டம்“ [Crimainal Tribes Act] என்ற அடக்குமுறைச் சட்டமொன்றைப் பிறப்பித்தது. 160-இனக் குழுக்கள் இந்தச் சட்டத்தின் கீழ் பிறப்பிலேயே குற்றவாளிகள் ஆக்கப்பட்டனர். முதலில் வடக்கிலும், 1876-ஆம் ஆண்டு வங்காளத்திலும் அமுல்படுத்தப்பட்டது.
1911-ஆம் ஆண்டு தமிழ்ப்பிரதேசத்தில் முதன்முதலாக "கீழக்குயில்குடி" என்ற ஊரில் நடைமுறைப்படுத்தப்பட்ட போது ´குற்றப் பரம்பரைச் சட்டம்´ நீக்கப்பட வேண்டும் என்றும், அம்மக்களுக்குச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளையும் முன்வைத்து தேவர் போராடினார். அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் நல்ல நோக்கத்திற்காக வென்றெடுத்த ´சமஉரிமைகள்´ சுயநலம் சார்ந்ததாக மாறிவிட்டது.
ஐனநாயக நோக்கத்தோடு செயல்பட வேண்டிய தேவர் தன் சாதிக்கு முக்கியத்துவம் கொடுத்தார். நேதாஜியின் கட்சியான ´பார்வர்டு பிளாக்´ மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் இடதுசாரி கட்சிக்களாக இருக்க தேவர் தமிழகத்தில் ஜாதி கட்சியாக நடத்திக் கொண்டிருந்தார். ஹரிஜனங்கள் ஓட்டுப் போடக்கூடாது, மேல் சட்டை போடக்கூடாது, கோவிலுக்குள் நுழைக்கூடாது என்று அதிகாரம் பேசும் யோக்கியதையை மட்டும் வளர்த்துக் கொண்டு சாதி வெறி உணர்வோடு இருந்த தேவர் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கடுமையான வன்முறைகளை கையாண்டார்.
அவர் வாழ்ந்த காலங்களில் அவர் மீது எத்தனையெத்தனை கொலை வழக்கு இருந்தன என்பதை கவனிக்க வேண்டும்.
உதாரணத்திற்கு முதுகுளத்தூர் கலவரம். பெரியார் கேட்கிறார்:
"முதுகுளத்தூரில் நூறுபேரைக் கொன்று இரண்டாயிரம் வீட்டைக் கொளுத்தினானே என்ன செய்தாய்? என்ன செய்ய முடிந்தது? யாரோ நாலு
பேர் மீது வழக்குப்போட்டால் தீர்ந்துவிடுமா? எரிந்த வீடும் செத்தவனும்
வந்து விடுவானா? தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை குறித்து நான் சொல்வதைவிட மந்திரி பக்தவத்சலம் அவர்களே நல்லபடி சொல்லியிருக்கிறார்."
[03.11.1957-அன்று தஞ்சை தனி மாநாட்டில் தலைமை வகித்து பெரியார் அவர்கள் பேசிய முன்னுரையில் இருந்து சில வாக்கியங்கள். திரு.எம்.பக்தவச்சலம் அறிக்கை குறித்து பெரியார் பாராட்டி பேசியதை சுட்டிக்காட்டுவதற்காக இங்கே குறிப்பிடுகிறோம்.]
1957-அக்டோபர் 26-ந் தேதி தமிழ்நாட்டு சட்டசபையில் உள்துறை அமைச்சர் திரு.எம்.பக்தவச்சலம் அறிக்கை சட்டசபையில் வாசிக்கப்படுகிறது. அதில் முதுகுளத்தூர் கலவரம் பற்றிய செய்தியும், பசும்பொன் முத்து இராமலிங்கத் தேவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் பாருங்கள்.
தேவரின் பிறந்தநாளும், நினைவுநாளும் மகாத்மாவுக்கு நிகரான ஒரு பிம்பத்தை தோற்றுவித்த அரசியலாக மாறியது எப்படி? அல்லது மாற்றப்பட்டது எப்படி?
பெரியாரின் கொள்கைகளை செயல்படுத்துவதாக வீராப்பு பேசும் கருணாநீதி ´தேவர் ஜெயந்தி´ அன்று குடும்பத்தோடு மாலை போட ஓடுகிறார். ஜெயலலிதா தேவர் சமுகத்தை சேர்ந்த சசிகலாவை இழுத்துக் கொண்டு ஒடுகிறார். வை.கோ தன் பங்குக்கு ஜால்ரா அடிக்கிறார்.
இவர்களுக்கு தெரியாதா தேவரின் யோக்கியதை? தேவரின் மறுபக்கம் இருண்ட பக்கமல்ல. தேவரின் ஒவ்வொரு வன்முறையும் அப்பட்டமான வெளிச்சத்தில் இருக்கின்றன. இருப்பினும் தேவர் குறித்து தமிழ்சமூகம் கருத்துச் சொல்ல அஞ்சுகிறது.
தமிழ்நாட்டின் பெரும்பான்மையான ஓட்டுக்கள் தேவர் சமுகத்திடம் இருப்பதால் குழைந்து கூத்தாடி தேவர் சமுகத்தினரின் காலை நக்கும் அரசியல் செய்கிறார்கள்.
1995,1996-இல் தென்மாவட்டப் பகுதியில் பேருந்து நிலையத்திற்கு தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த ´தலித் தளபதி சுந்தரலிங்க´த்தின் பெயரை வைத்ததற்காக பேருந்துக்களில் ஏறமாட்டோம் என்றும், பள்ளரின் பெயரை நீக்கு என்றும் கலவரங்களில் ஈடுபட்ட போது முக்குலத்து சாதி வெறியர்களுக்கு பயந்து தமிழக அரசு தலித் தளபதி சுந்தரலிங்கத்தின் பெயரையே தூக்கிவிட்டு முக்குலத்தாருக்கு ஆதரவாக செயல்பட்டதும், அதே தமிழக அரசு மதுரை விமானநிலையத்திற்கு பசும்பொன் முத்து இராமலிங்க தேவரின் பெயரை வைத்து விசுவாசத்தை காட்டிக் கொண்டதும், தேவர் நூற்றாண்டு விழாவின் போது பசும்பொன் தேவரின் தபால்தலையை வெளியிட்டு தமிழக அரசு தன் ஒருபக்க சாதி ஆதரவை காட்டிக் கொண்டதும், எல்லாவற்றிற்கும் மேலாக தலித்திய தலைவன் திருமா தேவர் ஜெயந்தி நூற்றாண்டை முன்னிட்டு 3-நாட்கள் விடுமுறை விட வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொண்டதும்,
2008-இல் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களுக்குள் ஏற்பட்ட கலவரத்தில்தலித் மாணவர்கள் பாதிக்கப்பட்ட போதும் எந்த விசாரணையும் தீவிரப்படுத்தாமல் கலவரத்தில் ஈடுபட்ட ஆதிக்க சாதியான தேவர் சமுகத்தின் பக்கம் தமிழக அரசு ஆதரவாக இருந்ததும்,
கடைசியாக காமெடியன் விவேக், நடிகை புவனேஸ்வரி பிரச்சனையில் ஊடகத்துறையைச் சார்ந்த குடும்பத்தினரைக் குறித்து கேவலமாக பேசியதால் மீது அவதூறு வழக்கு தொடுத்த ஊடகத்துறையினருக்கு பயந்துபோய் தனது சாதி [தேவர்] சங்கத்தில் இணைந்து கொண்டு பாதுகாப்பு கோரியதையும், இன்னமும் நீதிமன்றத்தில் விவேக் அவதூறாக பேசியதற்கான ஆதாரங்கள் இல்லை என்று வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்ததும் ஆதிக்க சாதியின் அட்டூழியங்கள் எந்தளவுக்கு ஒடுக்குமுறைகளுக்கு முன்னெடுக்கிறது என்பதையும், அதற்கு அரசாங்கம் அனுசரித்து போவதையும் நாம் அவதானித்துக் கொண்டுதானே இருக்கின்றோம்.
வெறும் ஓட்டுக்களுக்காக ´குலத்துக்கொரு நீதி´ கற்பித்த முக்குலத்தான் தேவரை தூக்கிப்பிடித்து ஆடுகிறார்கள்; அவர்கள் அரசியல்வாதிகள் போய்த் தொலையட்டும்.
´பெரியாரின் பேரன்´ என்று தன்னையே வர்ணித்துக் கொள்ளும் சீமானுக்கு என்ன கேடு வந்தது?
சீமான் நியாயமான உணர்வாளனாக பெரியாரின் பேரனாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்?
தேவர் சிலையை உடைத்துப் போட்டுவிட்டு வந்திருக்க வேண்டும்...!
செய்தாரா?
தேவர் சிலைக்கு மட்டுமா சீமான் மாலை போட்டார்? போராளி இமானுவேல் சேகரன் நினைவு இடத்திலும் சீமான் மலர் வளையம் வைத்தார் என்றொரு கேள்வி எழக்கூடும்.
"தமிழ்ச்செல்வன் வீரமரணத்திற்கு இரங்கல் கவிதை- அவரைக் கொலை செய்த ராஜபக்சேவுக்கும் பொன்னாடை என இரட்டை வேடம் போடும் கருணாநிதிக்கும், சீமானுக்கும் என்ன வேறுபாடு?"
"இமானுவேல் கேசரனுக்கும் மாலை; அவரைக் கொலை செய்த தேவருக்கும் மாலை"
அந்தோ பாவம்!
தம்பி சீமானை ஓட்டு அரசியல் எப்படியெல்லாம் ஆட்டம் போட வைக்கிறது?
வாசகர்களே! திரும்பவும் கீற்று கட்டுரைக்கு வருவோம்!
"கொஞ்சநாள் முன்பு வரைக்கும் எனக்கு முத்துராமலிங்கத் தேவர் பத்தின உண்மைகள் எதுவும் தெரியாது. தம்பி படம் வந்தபிறகு அண்ணன்களெல்லாம் சொன்னபிறகு தான் என்னோட பிழை தெரிஞ்சது. அவரை முன்னிறுத்தணுங்கிற உள்நோக்கம் எல்லாம் எதுவும் கிடையாது. படம் வந்த பிறகு தான் தேவரும், பெரியாரும் கொள்கை ரீதியா வேறானவங்கன்னு எனக்குத் தெரிய வந்தது. பெரியார் இறந்தபோது அரைக் கம்பத்தில் பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட பார்வார்ட் பிளாக் கொடிதான் என்பதையும் தெரிஞ்சிக்கிட்டேன். நான் முழுக்க முழுக்க பெரியாரைப் பின்பற்றுகிறவன். முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த பிழைதான்" என்கிறார் சீமான்.
சரி, ´தம்பி´ படத்தில் தேவர் படத்தை தெரியாமல் தொங்கவிட்டு விட்டார். தேவர் ஜெயந்தியில் பெரியார் இறந்தபோது அரைக்கம்பத்தில் பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட ´பார்வார்ட் பிளாக்´ கொடிதான் என்பதும் பெரியாரை கேவலப்படுத்தியவர் சாதிவெறி பிடித்த தேவர் என்பதும் தெரிந்து தானே மாலை போட்டார்.
பெரியார் மரணமடைந்தபோது - அதற்கு தமிழ்நாட்டில் இரங்கல் தெரிவிக்காத அமைப்புகள் இரண்டு. ஒன்று சங்கரமடம், மற்றொன்று ´அகில இந்திய பார்வர்டு பிளாக்´. பார்ப்பன அமைப்பு இரங்கள் தெரிவிக்காததன் காரணம் நமக்கு தெரிந்ததுதான். ´பார்வர்டு பிளாக்´ அமைப்பைச் சேர்ந்த கள்ளர், தேவர், மறவர் சமூகத்தினர் ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை என்பதற்கு காரணம் 1957-இல் முதுகளத்தூரில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான சேரிகள் நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் எரிக்கப்பட்டனர். சாதிப் போர் நடந்தது என்னும் அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்திய சம்பவம்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நடந்த கொடுமைகளைக் கண்டு காந்தியார் அறிக்கை விட்டதோடு சரி. பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எந்த உதவியும் செய்யவில்லை. பெரியாரோ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்தார். "நூற்றுக்கணக்கான தலித் மக்கள் எரித்து கொல்லப்பட்டதற்கும், 19-தாழ்த்தப்பட்ட மக்களை தேவர் இனத்தை சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதற்கும் காரணமாக பசும்பொன் முத்து இராமலிங்கத் தேவரை கைது செய்ய வேண்டும்" என அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு பெரியார் அழுத்தம் கொடுத்தார். அப்போதைய முதல்வராக இருந்த காமராசர் தேவரை கைது செய்ய ஆணை பிறப்பித்தார்.
இச்சம்பவம் தமிழக்ததில் பெரிய கலவரத்தை உருவாக்கிய போதும் பெரியாரின் உதவியோடு துணிந்து நின்று போராடினார் கமாராசர். அதனால் தான் காமராசர் இறந்த அன்று, ´கெடா வெட்டி தீபாவளி கொண்டாடுங்கள்´ என்று தேவர் சமுகம் அறிவித்தது. பெரியார் இறந்த போது அஞ்சலி செலுத்தாமல் அவமரியாதை செய்யும் பாவணையாக பார்வார்ட் பிளாக் கொடியை பறக்கவிட்டது.
இத்தனையும் மிகத் தெளிவாக சொல்கிறார் சீமான்.
இதே சீமான் பெ.தி.க தோழர்களிடம் அடிக்கடி சொல்வார்:
"பெரியார் சொல்லை காமராசர் செயல்படுத்தியதைப் போல, நான் காமராசர் போல் பெரியாரின் கொள்கைகளை செயல்படுத்துவேன்" என்று.
தம்பி ´புரட்சி செய்´, ´ரௌத்ரம் பழகு´, ´நையப்புடை´ என்று சொல்லிக் கொண்டிருப்பாரே பெரியாரின் தொண்டர்களுக்கு...
தம்பி மாலையும் கையுமாக காரியத்தை முடித்துவிட்டு வந்திருக்கிறார். இருக்கட்டும்...
ஆனால், இனி எந்தக் கூட்டத்திலாவது ´பெரியாரின் பேரன்´ என்று தம்பி சீமான் கூறுவாரேயானால், எங்கள் தோழர்கள் நையப்புடைக்கத் தயங்கமாட்டார்கள்.
"எந்த கூட்டத்திலாவது பெரியாரின் பேரனாகிய நான் என வீரவசனம் பேச ஆரம்பித்தால் நாம் மீண்டும் மீண்டும் எழுத்துக்களால் நையப்புடைப்போம்..."
இவ்வாக்கியங்களை நினைவில் நிறுத்திக் கொண்டு சீமான் ´வீர வசனம்´ பேசட்டும்!
துரோகிகளே,
´பெரியாரை பெரியாராக இருக்க விடுங்கள்´ என்றுதான் கோருகிறோம். இன்னும் எத்தனை காலத்திற்கு அரசியல் செய்ய உங்களுக்கு பெரியார் வேண்டும்?
சொல்லுங்கள் துரோகிகளே!
சொல்லுங்கள் புரட்டு கதை பேசும் புரட்டர்களே!!!
தமிழச்சி
http://www.tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1611
http://tamizachi.com/
http://tamizachiyin-periyar.
http://twitter.com/tamizachi
இலங்கை மீனவர்களை காப்பாற்றிய தமிழக மீனவர்கள்
"தங்கள் படகில் வைத்திருந்த உணவையும் கொடுத்து, ராமேசுவரத்துக்கு படகுடன் கொண்டு வந்தனர்...."
ராமேசுவரம் அருகே உள்ள பிசாசு முனை கடல் பகுதியில், பிளாஸ்டிக் படகில் இலங்கை மீனவர்கள் 2 பேர், கடல் கொந்தளிப்பால் தத்தளித்தனர். அவர்களை அந்த பகுதியில் மீன் பிடிக்க சென்ற ராமேசுவரத்தை சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் காப்பாற்றினார்கள். அவர்களுக்கு தங்கள் படகில் வைத்திருந்த உணவையும் கொடுத்து, ராமேசுவரத்துக்கு படகுடன் கொண்டு வந்தனர்.
பின்னர் இலங்கை மீனவர்கள், இந்திய கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில் அவர்களது பெயர்கள் மரியன் பிரதீப் (வயது29), ஆல்பர்ட் சலீமா (31) என்று தெரிய வந்தது. அவர்கள் இலங்கையில் உள்ள பேசாலை என்ற இடத்தை சேர்ந்தவர்கள். கடலில் எரிபொருள் தீர்ந்து விட்டதால், கடல் கொந்தளிப்பில் சிக்கி 3 நாட்களாக நடுக்கடலில் தவித்ததாக, இலங்கை மீனவர்கள் தெரிவித்தனர். பின்னர் இலங்கை மீனவர்கள் 2 பேரும், ராமேசுவரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=20514
மாவீரர் தினத்தில் தோன்றப்போவது ‘தலைவரா’… பொட்டம்மானா?
வீரர் தினம் நெருங்க நெருங்க உலகமே தமிழீழப் போராட்டத்தை உற்று நோக்க ஆரம்பித்துள்ளது. பிரபாகரன் இருப்பு பற்றிய சர்ச்சைகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் மறு எழுச்சி போன்றவை குறித்த பேச்சுக்கள்தான் உள்ளூர் – சர்வதேச மீடியாவில் இன்றும் பிரதான இடம் வகிக்கின்றன.
இந்த நிலையில் தமிழர் வரலாற்றில் முக்கிய நிகழ்வான மாவீரர் தினம் நெருங்குகிறது. அந்த நாளில் மீண்டும் பிரபாகரன் தோன்றுவார் என்று பெரும்பான்மைத் தமிழர்கள் நம்பியுள்ள நிலையில், “தலைவர் பிரபாகரன் தோன்றுவதற்கான தருணம் வரவில்லை… அவருக்கு பதில் இயக்கத்தின் முதல் நிலைத் தளபதியான பொட்டு அம்மான்தான் தோன்றி, மாவீரர் நாள் உரை வாசிப்பார்” என்று கூறப்படுகிறது. இன்னொரு தரப்பு, இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான யோகிதான் இந்த உரையை வாசிப்பார் என்றும் கூறுகிறார்கள்.
அதேநேரம் இந்த மாவீரர் தினத்தை தமிழீழத்தில் வெளிப்படையாக அனுஷ்டிக்க வழியில்லாமல் செய்துவிடவேண்டும் என்ற முனைப்போடு சிங்கள ராணுவம் அடக்குமுறைக் கரங்களை அவிழ்த்து விட்டுள்ளது. ஆனால் முன்பு தமிழீழத்தில் மட்டும், தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்த இந்த மாவீரர் தின அனுஷ்டிப்பு, இப்போது முன்னிலும் எழுச்சியுடன் உலக நிகழ்வாக நடைபெறப் போகிறது என்ற உண்மை தாமதமாக உறைத்து அதைத் தடுக்க என்னென்ன சூழ்ச்சி வலைப் பின்னல்களை உருவாக்கலாம் என யோசித்து வருகிறது இலங்கை அரசு தரப்பு.
எப்படியிருந்தாலும் தமிழர் சரித்திரத்தில் முன்னெப்போதும் இல்லாத முக்கியத்துவம் கொண்ட, புதிய அர்த்தம் பொதிந்த ஒரு நிகழ்வாக இந்த ஆண்டு மாவீரர் நாள் அமையப் போவது மட்டும் உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில் தலைவரின் இடத்தில் நின்று இந்த ஆண்டு பொட்டம்மான்தான் மாவீரர் தின உரை வாசிப்பார் என்று ஆனந்த விகடன் தன் பாணியில் சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது. பெரும்பகுதி அனுமானங்களின் அடிப்படையில் அமைந்த கட்டுரைதான் இது. ஆனாலும் தமிழருக்கு புதிய நம்பிக்கை தரும் என்பதால் இங்கே தருகிறோம்:
-என்வழி
வருகிறார் பொட்டு… – விகடன்
போர்க் காலமோ, கார் காலமோ ஈழத் தமிழர்களுக்கு நவம்பர் மாதம் எப்போதும் கொண்டாட்டமான மாதம். காரணம், மாவீரர் தினம். நவம்பர் மாதம் 22-ம் தேதி தொடங்கும் அந்த விழா 27-ம் தேதி மாலையுடன் முடிவடையும். ‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே!’ என்ற பாடலின் பின்னணியில் பிரபாகரன் தோன்றிப் பேசுவார்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் அந்த நேரத்துக்காகத் தவம் இருப்பார்கள். அதற்கு முந்தைய 26-ம் தேதிதான் பிரபாகரனின் பிறந்த நாள். கடந்த ஆண்டு போர்க் கால நெருக்கடி சூழ்ந்த நேரத்திலும், பிரபாகரன் தோன்றினார். ‘சமாதானத்துக்கான வாசல்களைத் திறந்து வைத்திருக்கிறோம். ஆனாலும், எம் எதிரி போரை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இந்தியாவை நட்பு சக்தியாகத்தான் நினைத்தோம். நினைக்கிறோம். இந்தியா எங்களுக்கு தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும். இந்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களுக்குத்தான் நான் மிகுந்த நன்றியைச் சொல்ல வேண்டும். அவர்கள் ஆதரவுதான் அனைத் துக்கும் மேலாக முக்கியமானது!’ என்றார் பிரபாகரன்.
ஆனால், புலிகள் இயக்கம் மீண்டு எழ முடியாமல் முடக்கப்பட்டது. பிரபாகரன் இறந்ததாக அறிவிக்கப்பட்டார். புலம்பெயர்ந்த தமிழர்கள் இதை நம்பவில்லை என்றாலும், நவம்பர் 27 அன்று பிரபாகரன் திரையில் தோன்றுவாரா என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் ஆரம்பித்திருக்கிறது.
‘பிரபாகரன் வர மாட்டார். ஆனால், பொட்டு அம்மான்தான் இந்த வருட மாவீரர் தின உரையை நிகழ்த்தவிருக்கிறார்!’ என்ற தகவல் பரவி வருகிறது. அந்தத் தகவலுக்கு வலு சேர்க்கும் ஆதாரங்களுள் ஒன்றாக பிரபாகரனும் பொட்டு அம்மானும் இருக்கும் புதிய படம் ஒன்றைப் புலிகள் ஆதரவு இணையதளங்கள் வெளியிட்டு உள்ளன. இதுவரை வெளிவராத அந்தப் படத்துக்கு மேலே, ‘இந்தப் படம் சொல்லும் தகவல் என்ன?’ என்ற புதிரான கேள்வியும் தொக்கி நிற்கிறது.
இதுபற்றி விசாரித்தபோது, ‘மே 18-ம் தேதி சிங்கள ராணுவத்துக்கும் புலிகள் அமைப்புக்கும் நடந்த இறுதி யுத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. புலிகள் அமைப்பின் முக்கியத் தளபதிகள் அழிக்கப்பட்டதாகவும் நந்திக் கடல் வழியாக பிரபாகரன் தப்பிக்க முயற்சித்த போது சுட்டுக் கொன்றதாகவும் அறிவித்தார்கள்.
இவை எல்லாம் நிகழ் வதற்கு ஒரு வாரத்துக்கு முன், புலிகள் அமைப்பின் முக்கியப் பொறுப்பாளர்களை மட்டும் அழைத்தாராம் பிரபாகரன். ‘இன்று முதல் மூன்று பிரிவுகளாக நாம் பிரிந்து செயல்பட வேண்டும். ஒரு அணியினர் இங்கிருந்து சிங்கள ராணுவத்துடன் போராடட்டும். இன்னொரு பிரிவினர் அரசிடம் சரணடைந்து தங்களது அரசியல் கோரிக்கையை உலகத்துக்குச் சொல்லட்டும். மூன்றாவது பிரிவினர் இங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டும். இதில் யார் யார் எந்தப் பிரிவில் சேர்க்கப்படுவார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. நான் எனது நிலையைத் தீர்மானித்துக்கொள்கிறேன். இனி, உங்களை வழிநடத்தும் பொறுப்பை பொட்டு அம்மானிடம் ஒப்படைக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த இயக்கத்தின் துணைத் தலைவராக அவர் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்!’ என்று அறிவித்தாராம் அப்போது.
இயக்கத்தின் தளபதிகளும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனராம். அப்போது எடுக்கப்பட்ட படத்தில்தான் பிரபாகரனுக்குச் சரிசமமாக பொட்டு உட்காரவைக்கப்பட்டார். இதில் பல ஆச்சர்ய மான விஷயங்கள் உண்டு!’ என்ற பீடிகை கொடுத்து நிறுத்தியவர்கள் மேலும் தொடர்ந்தார்கள்…
‘பொதுவாக பொட்டு அம்மான், புலிகளின் சீருடையைத்தான் எப்போதும் அணிவார். சாதாரண உடைகள் அணிந்து அவரைப் பார்க்கவே முடியாது. அரிதாக டி-ஷர்ட் அணிவார். இந்தப் படத்தில் பிரபாகரன் அணிந்துள்ள அதே நிறத்தில் சட்டை அணிந்துள்ளார். மேலும், பொட்டு அம்மான் எப்போதும் கறுப்பு நிற வார் வைத்த சாதாரண வாட்ச்தான் அணிவார். சில்வர் செயின் வாட்ச் அணிந்தால் தனிப்பட்ட அடையாளமாகிவிடும் என்பதால், அதை அணியவே மாட்டார். ஆனால், இப்படத்தில் அதிலும் மாற்றம். சிரித்த முகத்துடன் இருக்கும் அவர் சீரியஸான முகத்துடன் காணப்படுகிறார். இப்படி எத்தனையோ மாற்றங்களை அடுக்கலாம். மிக நெருக்கடியான தருணத்தில் எடுக்கப்பட்ட இப்படம், ஆறு மாதங்கள் கழித்து வெளியானதற்கான பின்னணி ‘நவம்பர் 27′-ம் தேதியாக இருக்கலாம்!’ என்று முடித்தார்கள்.
இலங்கையில் தேர்தல் நடந்து முடியும் வரை அரசியல் நிலவரங்களைக் கவனித்துவிட்டு அதன் பிறகு வெளிப்படையாகச் சில அறிவிப்புகளைச் செய்ய புலிகள் அமைப்பினர் முடிவெடுத்திருந்தனராம். ஆனால், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
குமரன் பத்மநாபன் எனப்படும் கே.பி.அணியினர், காஸ்ட்ரோ அணியினர் என இரண்டு தரப்பாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் யாராவது ஒருவர் வெளிப்படையாக வந்து அறிவித்தால்தான் குழப்பங்களைத் தவிர்க்க முடியும் என்று முடிவெடுத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் பொட்டு வெளியில் வர இருப்பதாக நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
அதே சமயம், ‘பொட்டு அம்மான் இறந்தது உண்மை. ஆனால், அவரது உடலைத்தான் எங்களால் அடையாளம் காண முடியவில்லை!’ என்று இலங்கையின் பாதுகாப்பு ஆலோசகர் கோத்தபய ராஜபக்ஷே சொல்லி வருகிறார். தமிழக எம்.பி-க்கள் குழு அங்கு சென்றபோதும், ‘பிரபாகரனது உடலை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டோம். ஆனால், பொட்டு பற்றித்தான் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை!’ என்று அரசியல் ஆலோசகர் பசில் ராஜபக்ஷே சொல்லியிருக்கிறார். எனவே, பொட்டு அம்மான் குறித்த சந்தேகங்கள் இன்னமும் முழுக்க களையப்படவில்லை என்பது உண்மை.
புலிகள் அமைப்பின் ஆரம்பக் கட்டத்தில் பிரபாகரன் தலைமையிலான மத்தியக் கமிட்டியில் 32 உறுப்பினர்கள் இருந்தார்கள். அதில் சண்முகலிங்கம் சிவசங்கரன் என்ற இளைஞன்தான் பின்னாட்களில் பொட்டு அம்மானாக உருவெடுத்தார். புலிகள் அமைப்பு மீது சிங்கள ராணுவத்தின் கவனத்தை அதிர்ச்சியுடன் திருப்பிய திருநெல்வேலி தாக்குதலில் இவர் இருந்தார்.
பிரபாகரனிடம் ஆயுதப் பயிற்சி பெற்று, பின்னர் அவருக்கே மெய்க்காப்பாளராக இருந்தவர். வேதாரண்யம் பகுதியைக் கவனித்து வந்தவர். பின்னர் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மாவட்டத் தளபதியாக ஆனார். வேவு பார்ப்பதில் தேர்ந்தவராக இருந்ததால், புலிகளின் புலனாய்வுப் பிரிவை பொட்டுவிடம் ஒப்படைத்தார் பிரபாகரன். 1988-ம் ஆண்டு இப் பொறுப்புக்கு வந்த பொட்டு 16 பிரிவுகளை உருவாக்கி, புலிகளின் திரைமறைவு வெற்றிகளுக்குப் பெரிதும் உதவி னார். இந்திய அமைதிப் படைக்கும் புலிகளுக்கும் சண்டை தொடங் கியபோது, முதல் தாக்குதலில் பலத்த காயம்பட்டு முடக்கப்பட்டார் பொட்டு. வயிறு, கால், கை ஆகியவற்றில் பலத்த காயம் பட்டது. மரணத் தறுவாயை நெருங்கியவரை மிகுந்த சிரமத்துக்குப் பிறகு மீட்டெடுத்து வந்தார்கள். அந்தச் சமயத்தில், அவரை அருகிலிருந்து கவனித்துக்கொண்டவர் பாலசிங்கத்தின் மனைவிஅடேல்.
ராஜீவ் காந்தி கொலையில் பொட்டு அம்மானைத் தொடர்புபடுத்தி சி.பி.ஐ. குற்றச்சாட்டு பதிவு செய்தபோதுதான், இப்படியரு ஆள் இருப்பதே வெளியில் தெரிந்தது.
மூன்று ஆண் பிள்ளைகள் பொட்டு அம்மானுக்கு. அதில் இருவர் அமைப்பில் இணைந்து போராடி இறந்துவிட்டார்களாம். ஒரு மகன் மட்டும் இருக்கிறார். ‘குடும்பத்துக்கு ஒருவரை இயக்கத்துக்குத் தந்தால் போதுமே. இன்னொரு மகனை எங்காவது படிக்க வைக்கலாமே!’ என்று பொட்டு அம்மானிடம் சொன்னதற்கு, ‘அதெல்லாம் மற்றவர்களின் குடும்பத்துக்கு. எனது குடும்பத்தினர் அனைவருமே இயக்கத்துக்குத்தான்!’ என்றாராம் பொட்டு. 10 ஆண்டுகளுக்கு முன் பொட்டு அம்மானைப்பற்றி தனது புத்தகத்தில் இப்படிக் குறிப்பிட்டு இருக்கிறார் அடேல் பாலசிங்கம், ‘சுற்றி வளைப்புகளில் இருந்து எதிரிகளைத் திணறடித்து வெளியேறுவதில் அவருக்குப் பல ஆண்டு அனுபவம் உண்டு!’
அடேல் சொன்னது இப்போதும் நடந்திருக்குமா? நவம்பர் 27-ம் தேதி முடிவு தெரியும்!
நன்றி: ஆனந்த விகடன்
http://www.envazhi.com/?p=13324"இலங்கையில் பிரபாகரன் இந்தியாவில் மாவோயிஸ்டுகள்!" – குமுதம்
திடீரென மாவோயிஸ்ட் இயக்கங்கள் விஸ்வரூபம் எடுக்க என்ன காரணம்? – குமுதம்
இந்திய அரசை மட்டுமல்ல; உலகையே தங்கள் பக்கம் திருப்பியிருக்கிறார்கள், மாவோயிஸ்டுகள். மேற்குவங்க மாநிலம் லால்கர் பகுதியில் வெடித்துக் கிளம்பிய மாவோயிஸ்டுகள், இப்போது ஜார்கண்ட், ஒரிஸா, சத்தீஸ்கர் மாநில எல்லைகளிலும் பழங்குடி மக்களுக்காக ஆயுதங்களுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். பழங்குடி மக்கள் மீதான மேற்குவங்க மாநில அரசின் வன்முறைகளை `ஆபரேஷன் கிரீன் ஹண்ட்’ (Operation Green Hunt) என்று ஆவணப் படமாக்கும் முயற்சியில் மேற்குவங்க எல்லைப் பகுதியில் கேமராவோடு திரிந்து கொண்டிருக்கிறார், இயக்குநரும், மனித உரிமை ஆர்வலருமான கோபால் மேனன்.
`இந்திய அரசையே அதிர வைக்கும் மாவோயிஸ்டுகளின் கை ஓங்க என்ன காரணம்? அரசின் எதிர்ப்புகளுக்கு இடையே பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகளை ஏன் ஆதரிக்கிறார்கள்? மேற்கு வங்க மார்க்சிஸ்ட் அரசை மாவோயிஸ்டுகள் ஏன் எதிர்க்கிறார்கள்?’ என்பது போன்ற கேள்விகளுக்கு நம்மிடம் தொலைபேசியில் பதில் அளித்துக் கொண்டிருந்த போதே (நவ.7) சத்தீஸ்கர் மாநில போலீஸாரால் கோபால் மேனன் கைது செய்யப்பட்டார்.
சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட அவர், கடும் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, அன்றிரவே விடுவிக்கப்பட்டார். அதன்பின்பு தொடர்ந்து அவர் நமக்களித்த சிறப்புப் பேட்டியிலிருந்து…
திடீரென மாவோயிஸ்ட் இயக்கங்கள் விஸ்வரூபம் எடுக்க என்ன காரணம்?
“மேற்குவங்க மாநிலம் மிதுனாப்பூர் மாவட்டம் லால்கர் அருகே பழங்குடியின மக்கள் பயன்படுத்தி வந்த 4,500 ஏக்கர் விவசாய நிலத்தை பன்னாட்டு ஜிண்டால் நிறுவனத்துக்கு முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மார்க்சிஸ்ட் அரசு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டது. `நிலச்சீர்திருத்தச் சட்டத்தின்படி எங்களுக்குச் சேர வேண்டியதை பன்னாட்டு நிறுவனத்துக்கு எப்படித் தூக்கிக் கொடுக்கலாம்?’ என்று பழங்குடியின மக்கள் எதிர்த்தனர். மக்களின் எதிர்ப்பையும் மீறி, ஜிண்டால் திறப்புவிழாவில் புத்ததேவ் கலந்துகொண்டார். அப்போது வெடித்த கண்ணிவெடியில் முதல்வரின் பாதுகாப்பு வாகனம் சிக்கிக் கொண்டது.
உடனே மாவோயிஸ்டுகளைத் தேடுகிறோம் என்று லால்கருக்குள் புகுந்து பழங்குடி மக்களை அடித்துத் துவம்சம் செய்தது, போலீஸ். அப்போது போலீஸாரால் பழங்குடிப் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். இந்த வெறியாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக் குண்டர்களும் சேர்ந்து கொண்டனர். போலீஸாரின் வன்முறையால் பாதிக்கப்பட்ட அவர்கள், `போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி (Peoples Committee Against Police Atrocities – PCAPA) உருவாக்கி, அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இருபது ஆண்டுகளுக்கு மேலாக பழங்குடி மக்களுக்குக் களப்பணி ஆற்றிவரும் மாவோயிஸ்டுகள் அவர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கினார்கள்.”
அதற்காக பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து முதல்வரைக் கொலை செய்ய முயன்றது சரியா?
“சிங்கூர் நந்திகிராமத்தில் அப்பாவி விவசாயிகள் மீது முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா அரசு வன்முறையை ஏவியது. அதற்குப் பழி வாங்குவதற்காக ஜிண்டால் விழாவுக்கு வந்த பட்டாச்சார்யாவைக் கொல்ல சில இளைஞர்கள் முயன்றனர். குண்டுகளுடன் இணைக்கப்பட்டிருந்த வயர்களை எலிகள் கடித்துச் சேதப்படுத்தியதால் முதல்வர் தப்பினார். ஆக, லால்கர் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்துக்கும், புத்ததேவ் கொலை முயற்சிக்கும் தொடர்பு இல்லை.”
சரி, நீங்கள் அங்கே போயிருந்தபோது நடந்தது என்ன?
“போலீஸாரின் வன்முறையால் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். அதை அம்பலப்படுத்த, எட்டுப் பேர் அடங்கிய உண்மையறியும் குழுவினர் மேற்குவங்கம் சென்றோம். மிதுனாப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கியதும், `தடை உத்தரவு அமலில் உள்ள லால்கருக்குள் நுழையக் கூடாது’ என்று போலீஸார் எங்களைக் கைது செய்தனர். `நடந்த உண்மைகளை அறிய பழங்குடி மக்களிடம் பேச எங்களை அனுமதியுங்கள்; முடியாது என்றால் கைது செய்து சிறையில் தள்ளுங்கள்’ என்று பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினோம். உடனே எங்களை ஒரு வாகனத்தில் ஏற்றி, கொல்கத்தாவில் விட்டுவிட்டுச் சென்றார்கள்.”
அதையும் மீறி நீங்கள் மட்டும் தனி ஆளாக லால்கருக்குள் நுழைந்தீர்களாமே?
“ஆமாம். உண்மையறியும் குழுவில் இருந்த மற்றவர்கள் எல்லாரும் ஊருக்குத் திரும்பிவிட, நான் மட்டும் ரகசியமாக பல கிலோ மீட்டர் நடந்து எல்லைப் பகுதிக்குள் சென்று மாவோயிஸ்டுகளையும், பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களையும் சந்தித்து என் ஆவணப்படத்துக்காக அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தேன்.
அப்போது மாவோயிஸ்டுகள் பழங்குடி மக்களுக்காக நடத்தி வந்த மருத்துவமனையைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன். அந்த மருத்துவமனையால் 20 பழங்குடி கிராம மக்கள் பயன்பெறுகிறார்கள். பழங்குடி மக்களுக்கு அரசு செய்யத் தவறியதை மாவோயிஸ்டுகள் செய்திருக்கிறார்கள்! இப்போது அந்த மருத்துவமனைக்குச் செல்லும் மருந்துகளைக் கூட போலீஸும், துணை ராணுவமும் தடுத்து வருவதை எங்கே போய்ச் சொல்வது?
மறுபடியும் சமூக ஆர்வலர் மேதா பட்கர் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவுடன் லால்கர் பகுதிக்குள் நுழைய முயன்றோம். அப்போது அங்கிருந்த போலீஸ் அதிகாரி, என்னைக் கடுமையாகத் தாக்கினார். கீழே விழுந்த எனக்கு வாந்தியும், சிறுநீரும் வந்துவிட்டது. அங்கிருந்து என்னைக் காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றனர். நிலைமை மோசமானதால் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இப்போது போலீஸ் அதிகாரியைத் தாக்கினேன் என்று என் மீது பொய் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். `சரணடைந்தால் உன்னையும் மாவோயிஸ்டாக சித்திரித்து விடுவார்கள்’ என்று மேதாபட்கர் உள்ளிட்டோர் எச்சரித்ததால் தலைமறைவாக இருக்கிறேன். நடந்த உண்மைகளை வெளிக் கொணர முயலும் எனக்கே இந்நிலை என்றால், பழங்குடி மக்களின் நிலை பற்றி கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.”
மாவோயிஸ்டுகள் தங்கள் வாக்குமூலத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள்?
“அவர்கள் என்னிடம், `முதலாளித்துவத்துக்கு ஆதரவான ஜனநாயகத்தை மாற்றி, மக்களுக்கான புதிய ஜனநாயகப் புரட்சியை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். மிகவும் பின்தங்கிய ஏழைமை நிலையில் உள்ள மக்கள் மீது அமெரிக்கா போன்ற மிகப் பெரிய சக்திகளுடன் சேர்ந்து அடக்குமுறையை இந்தியா ஏவுகிறது. டாடா, அம்பானி போன்ற பெரு முதலாளிகளின் வாரிசுகள் ராணுவத்தில், காவல் துறையில் பணியாற்றியிருக்கிறார்களா? சொற்ப சம்பளத்துக்கு ராணுவம், காவல்துறை வேலைக்குச் சேரும் ஏழைகளைக்கொண்டே ஏழை மக்களைத் தாக்கும் இந்தப் போலி ஜனநாயகத்தையே மாற்றி அமைக்க விரும்புகிறோம்’ என்று சொன்னார்கள்.”
அப்பாவி பழங்குடி மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று மாவோயிஸ்டுகள் மீது புகார் எழுந்துள்ளதே?
“மாவோயிஸ்டுகள் யார்? பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களா? பங்களாதேசத்தைச் சேர்ந்தவர்களா? மாவோயிஸ்டுகள் தாலிபான்களோ, லஷ்கர் இ தொய்பாவோ இல்லை. அவர்கள், வறுமையில் வாடும் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள். லால்கரில் இதுவரை ஒருவரைக் கூட மாவோயிஸ்டுகள் கொன்றதில்லை. `அப்பாவி மக்களுக்கு எதிராக அரசு ஏவும் அடக்குமுறைகளைச் செயல்படுத்தும் போலீஸாரை கொல்ல வேண்டியிருக்கிறது’ என்றே மாவோயிஸ்டுகள் வருத்தம் தெரிவித்தனர்.
மாவோயிஸ்டுகளைத் தேடுகிறோம் என்று 65 வயதான மூதாட்டியின் இரண்டு மார்புகளை அறுத்தும், 80 வயதான ஒரு முதியவரைச் சுட்டும் போலீஸ் கொன்றிருக்கிறது. அதோடு, ஐந்து இளைஞர்களையும் கொன்றிருக்கிறார்கள். ஓர் இளைஞனின் நான்கு விரல்களை வெட்டி விட்டார்கள். அந்த இளைஞனை நாளை சந்திக்க இருக்கிறேன். போலீஸார் தாக்கும்போது தங்களைக் காத்துக்கொள்ள பழங்குடி மக்கள் தங்களது பாரம்பரிய ஆயுதங்களான வில், அம்புகளை ஏந்திப் போராடுகிறார்கள். மாவோயிஸ்டுகள் மக்களுக்காகப் போராடுகிறார்கள். அதனால் மாவோயிஸ்டுகள் சொல்வதை மக்கள் கேட்கிறார்கள். போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டித் தலைவர் சத்ரதார் மகோதாவை விடுவிக்கக் கோரி, ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலை பழங்குடி மக்கள் சிறைப் பிடித்தனர். அறவழியில் போராடி வரும் அவர்களும் இப்போது ஆயுதம் ஏந்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இந்தளவுக்கு அவர்களைத் தூண்டியிருக்கிறது, அரசின் அடக்குமுறை!
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்குப் பின்னால் மனித வெடிகுண்டாக நின்றவர்கள் எல்லாம் சுதந்திரப் போராட்ட வீரர்கள்தானே! பகத்சிங், மங்கள் பாண்டே போன்றவர்கள் தீவிரவாதிகள் என்றால், பிரபாகரனும், மாவோயிஸ்டுகளும் தீவிரவாதிகளே!”
அப்படியென்றால் மாவோயிஸ்டுகள் செய்வதை எல்லாம் சரியென்று ஆதரிக்கிறீர்களா?
“சொந்த மக்கள் மீதே விமானப் படைத் தாக்குதல் நடத்தி அவர்களின் போராட்டத்தை முடக்கி விடும் வெற்றி ஃபார்முலாவை உலகிற்கு இலங்கை கற்றுத் தந்திருக்கிறது. இலங்கையின் வெற்றி ஃபார்முலாவை இந்தியா பின்பற்றுகிறது. அதன்படி, அமெரிக்கா உளவு செயற்கைக் கோள்கள் படம் பிடித்துக்காட்டும் மக்கள் நடமாடும் பகுதிகளில் துணை ராணுவத்தினர் குண்டு வீசித் தாக்குகின்றனர். நாகாலாந்து ரிசர்வ் பட்டாலியன், கூர்கா பட்டாலியன் ஆகியோரை வரவழைத்திருக்கிறது. ஆனாலும், இந்தியா நினைப்பதைப் போல், மாவோயிஸ்டுகள் பலவீனமானவர்கள் இல்லை. அவர்களிடம் கொரில்லா படை, நன்கு பயிற்சி பெற்ற ராணுவம், நவீன ரக ஆயுதங்கள் உள்ளன. இருபதாயிரம் பேர் வரை பயிற்சி பெற்ற வீரர்கள் மாவோயிஸ்ட் இயக்கத்தில் உள்ளனர். இதுதவிர, பயிற்சி பெற்ற சாதாரண மக்களும் அவர்களுடன் இருக்கிறார்கள். பழங்குடி மக்கள், தலித்துகளின் ஆதரவும் மாவோயிஸ்டுகளுக்கு இருக்கிறது! `நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாவோயிஸ்டுகள் மாறிவிட்டனர்’ என்று பிரதமரே கூறியிருக்கிறார்!”
மாவோயிஸ்ட் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?
“உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும் வழக்கறிஞருமான நளினி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராக இருக்கிறார். தன் மனைவியின் ஆலோசனையின் பேரில் சிதம்பரம் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி நம் விவசாய நிலங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்குகிறார். இப்படி உருவாகும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களால் நிலங்களை இழந்த மக்கள் மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறார்கள்.
சொந்த மக்களுக்கு எதிராக விமானப்படையை பிரயோகிப்பதை நிறுத்த வேண்டும். மாவோயிஸ்டுகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தங்களைத் தாக்குபவர்களை எதிர்த்துத் தாக்கும் உரிமை உள்ளதால் மாவோயிஸ்டுகளை ஆயுதங்களைக் கீழே போடச் சொல்லக் கூடாது. பழங்குடி மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மாவோயிஸ்டுகளுடன் ஜனநாயகரீதியிலான தீர்வுக்கு முயல்வதே ஆக்கபூர்வமான தீர்வுக்கு வழிவகுக்கும்” என்றார் கோபால் மேனன்.
கேரளத்தைச் சேர்ந்த கோபால் மேனன் சமூக நல ஆர்வலர். எங்கெல்லாம் அரசின் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகிறதோ, அங்கெல்லாம் நேரடியாகச் சென்று அந்த நிகழ்வுகளின் பின்னணியை ஆய்வு செய்து நடுநிலையோடு ஆவணப் படமாக்குபவர்.
இவரது ஆவணப் படங்கள் அடக்குமுறைகளின் சாட்சிகளாக முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. குஷராத் கலவரம் குறித்து, `ஹேராம்!-காந்தி பிறந்த மண்ணில் இனப்படுகொலை’, நாகாலாந்து மக்களின் போராட்டப் பின்னணியை வைத்து, `நாகா ஸ்டோரி-அமைதியின் மறுபக்கம்’, இந்துத் தீவிரவாதிகளுக்குக் குவியும் வெளிநாட்டு நிதியுதவிகளை தோலுரித்துக் காட்டும், ‘இங்கிலாந்தில் இந்துத் தேசியவாதம்’ உள்பட ஏராளமான ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். இவரது `இங்கிலாந்தில் இந்து தேசியவாதம்’ என்ற ஆவணப் படம் சேனல் 4 தொலைக்காட்சியில் குஷராத் தேர்தல் நாளன்று ஒளிபரப்பாகிப் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. மலம் அள்ளும் தலித் மக்களின் அவலநிலை, நெல் விவசாயிகளின் ரசாயன உரத்துக்கு எதிரான போராட்டம் ஆகிய பிரச்னைகள் பற்றிய இவரது ஆவணப் படங்களும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.
—
நன்றி: குமுதம்
http://www.meenagam.org/?p=15977
ரத்தவெறி யுத்தத்தில் கிச்சன் கேபினெட்… – விகடன்
உயிர்களை இரக்கமின்றி அழித்துமுடித்த இலங்கை மண்ணில், அதிகாரத்தில் இருந்தவர்களே மோதிக்கொள்ளும் காட்சிகளில்கூட நெஞ்சதிர வைக்கும் திருப்பங்கள்..! நெருங்கிய நண்பர்களாக இருந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவும், ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவும் பகைவர்களாக முறுக்கிக்கொண்ட விவகாரம்… இப்போது ராஜபக்ஷே குடும்பத்துக்குள்ளேயே எதிர்பாராத சச்சரவைக் கிளப்பிவிட்டிருக்கிறது. எல்லாமே பதவி மற்றும் உயிர் பயத்தில் அரங்கேறும் திருப்பங்கள்தான்!raththaveri
அமெரிக்க அரசின் ‘போர்க்குற்ற விசாரணை’க்குப் போகாமல் இலங்கைக்கே திரும்பிவிட்ட ஃபொன்சேகா… ஏர்போர்ட்டில் குழுமியிருந்த மீடியாக்களிடம்,
‘நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எந்த விதமான மோசமான நிகழ்வுகளையும் நான் செய்ய மாட்டேன்!’ என வீரா வேசமாகப் பேசியிருந்தார். ”இதுவே ஒருவகை அரசியல் அறைகூவல்தான்!” என்று விளக்கம் கொடுக்கிறார்கள், இலங்கைப் பத்திரிகையாளர்கள். அவர்களிடத்தில் பேசினோம்.
”ஃபொன்சேகா, அமெரிக்கா விசாரணைகளில் கலந்து கொள்ளாமல் நாடு திரும்பிட்டார்னு தெரிஞ்சதும், இலங்கை அதிபர் தரப்பு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆனால், அந்தத் தரப்புக்கேதெரியாமல் அமெரிக்காவிடம் சில வாக்குமூலங்களைக் கொடுத்து விட்டுத்தான் திரும்பியிருக்கிறார் ஃபொன்சேகா. அவர் அமெரிக்காவிலிருந்து கிளம்புவதற்கு முதல் நாள்… நவம்பர் 3-ம் தேதி, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் அவரை சந்திச்சிருக்காங்க. அப்போது ஒரு டேப்பை அவருக்குப் போட்டுக் காட்டி னார்கள். இலங்கையின் அம்பலாங்கொடையில் நடந்த ஒரு விழாவில் ஃபொன்சேகா பேசிய உரை அதில் இருந்தது. புலிகளுடனான இறுதி யுத்தத்தின்போது உலக ராணுவச் சட்டங்களை மீறி செயல்பட வேண்டியிருந் ததாகவும், வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த ஆயிரத்துக்கும் அதிகமான புலி உறுப்பினர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றதாகவும் ஃபொன்சேகா அதில் கூறியிருந்தார்.
‘ஐ.நா-வின் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றங்கள் தொடர்பான வழக்கைப் பதிய இந்த டேப் ஆதாரம் ஒன்றே போதும்…’ என அமெரிக்க அதிகாரிகள் ஃபொன் சேகாவுக்கு கிடுக்கிப்பிடி போட்டிருக்கிறார்கள். உடனே, ‘முப்படைகளின் தளபதி என்ற முறையில் அதிபர் இடும் உத்தரவுகளை நான் நிறைவேற்றித்தான் ஆகவேண்டும். அந்த வகையில் அதிபரின் உத்தரவுப்படிதான் எல்லாமே நடந்தது!’ என்ற ரீதியில் ஒரு வாக்குமூலத்தைக் கொடுத்த ஃபொன்சேகா, சில ஆதாரங்களையும் அளித்திருக்கிறார். அதோடு, இலங்கையின் அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராய் தான் களமிறங்க நினைப்பதையும் கூறியிருக்கிறார். ‘உங்களின் அதிகாரபூர்வமான விசா ரணையில் நான் கலந்துகொண்டால், என் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டை இலங்கையில் பாய்ச்சுவார்கள். அதன்பிறகு நான் தேர்தலில் போட்டியிட முடியாமல் போகும்!’ என்று தன் நிலையை விளக்கியிருக்கிறார்.
தேவைப்படும்போது வேறு வழிகளில் ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் அவர்திரும்பிப் போக, அமெரிக்காவும் சம்மதித்தது. தற்போது, வாக்குமூலத்தோடு அவர் அளித் திருக்கும் சில ஆதாரங்களை வைத்து வருகிற 24-ம் தேதிக்குள் சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றங்கள் தொடர்பாக வழக்குப் பதிய அமெரிக்கா முயற்சி செய்தது. இதெல்லாம் தாமதமாகத்தான் அதிபர் தரப்புக்குத் தெரிந்திருக்கிறது. உடனே அலரி மாளிகைக்கு வந்து அதிபரையும், பாதுகாப்புச் செயலர் கோத்தபயவையும் சந்தித்து விளக்கங்களை அளிக்கும்படி ஃபொன்சேகாவுக்கு உத்தரவு அனுப்பியிருக்கிறார், அதிபரின் முதன்மைச் செயலர் லலித் வீரதுங்க. கிட்டத்தட்ட ஐந்து முறை உத்தரவு அனுப்பியும் அலரி மாளிகைக்கு செல் வதையே தவிர்த்திருக்கிறார் ஃபொன்சேகா. அதிபர் ராஜபக்ஷேவே ஒரு முறை தொடர்புகொண்டும், பேசுவதைத் தவிர்த்திருந்திருக் கிறார்.
இதில் கோபத்தோடு பதற்றமும் அடைந்துவிட்டது அதிபர் தரப்பு. ஃபொன்சேகாவை எந்த வகையிலும் நம்பமுடியாது என்று முடிவெடுத்து, அதிரடியாகச் சில காரியங்களைச் செய்துள்ளது. இலங்கையில் அதிபர் மற்றும் அரசு பாதுகாப்பு விஷயங்களை, ஃபொன்சேகா கட்டுப்பாட்டிலுள்ள சிங்கள ரெஜிமென்ட்தான் இவ்வளவு காலமாகச் செய்து வந்தது. தற்போது, அந்த ரெஜிமென்ட்டை அந்தப் பணியிலிருந்து விலக்கி, கஜபா ரெஜிமென்ட்டிடம் அந்தப் பணியைக் கொடுத்திருக்கிறார்கள். அதோடு, கொழும்பில் முக்கியப் பணிகளில் இருந்த ஃபொன்சேகாவின் நம்பிக்கைக்குரிய ராணுவ அதிகாரிகளையும் தலைநகரிலிருந்து உஷாராக பணியிட மாற்றம் செய்து, வடக்குப் பிரதேசத்துக்கு அனுப்பிவிட்டனர். கூடவே, ஃபொன்சேகாவின் பாது காப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த ராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த எட்டு அதிகாரிகள் உட்பட 28 பேரை வேறு பணியிடங்களுக்கு கோத்தபயவின் உத்தரவுப்படி மாற்றியிருக்கிறார், அந்தப் பிரிவின் பொறுப்பாளரான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர. ஒருவேளை, நாட்டில் ராணுவப் புரட்சியை ஏற்படுத்தவும், அதிபர் குடும்பத்தைச் சிறைப்பிடிக்கவும் ஃபொன் சேகா திட்டமிட்டால்… அதை சமாளிக்கவே இந்த நடவடிக்கைகள் என்று அதிபரின் அலரி மாளிகையிலிருந்தே தகவல் கசிகிறது.” என்று கூறுகிறார்கள் இந்தப் பத்திரிகையாளர்கள்.
இதற்கிடையே, தற்போதைய ராணுவத் தளபதியான ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய, ‘ஃபொன்சேகாவுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்பது தவறு. வன்னி வெற்றிக்காகவே கூட்டுப்படைகளின் ராணுவத் தளபதியாக அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதுவு மில்லாமல் அதிபர் மகிந்தாவின் அரசியல் தலைமையே இந்த ராணுவ வெற்றிக்குக் காரணமேயன்றி, வேறு யாரும் இந்த ராணுவ வெற்றிக்கு சொந்தம் கொண்டாட முடியாது’ என மீடியாக்களிடம் ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இதில், ஃபொன்சேகா தரப்பும் ரொம்ப சூடாகி, ‘இலங்கையில் அரசியலில் ஈடுபடும் உரிமை அனைவருக்கும் உண்டு. இது தொடர்பாக கேள்வி எழுப்பும் உரிமை யாருக்கும் இல்லை’ என பதிலடி கொடுத்திருக்கிறது. இதனிடையே, ‘இப்படியே இந்த விவகாரங்களை நீடிக்க விடமுடியாது… கூட்டுப்படைகளின் தலைமைத் தளபதி பதவி உள்ளிட்ட எல்லாப் பதவிகளையும் ஃபொன்சேகா ராஜினாமா செய்துவிட்டு, தன் பலத்தை உடனடி யாக அதிபர் குடும்பத்துக்குக் காட்டவேண்டும்’ என்று அவருடைய ஆதரவாளர்களும் உசுப்பத் தொடங்கியிருக்கிறார்களாம். ஃபொன்சேகாவோ, ‘என் பதவி முடியும் டிசம்பர் 18-ம் தேதிக்குப் பிறகு அதிரடியைப் பாருங்கள்’ என்று அவர்களை சமாதானப்படுத்தி வருகிறாராம். இந்தக் கூத்துகளுக்கு நடுவில்தான் ராஜபக்ஷே குடும்பத்துக்குள்ளேயே புதிய புயல் வீசத் தொடங்கியிருக்கிறது! ராஜபக்ஷேவின் மனைவி சிராந்தியும், ஃபொன்சேகாவின் மனைவி அனோமாவும் ரொம்ப நெருக்கமானவர்கள். அதிபருக்கும் ஃபொன்சேகாவுக்கும் மோதல்கள் உச்சத்தை அடைந்தாலும்… இவர்களுக்குள் நட்பு இழை இன்னும் அறுபடவில்லையாம். அண்மையில் அதிபர் மனைவி சிராந்தியை தொடர்புகொண்ட அனோமா, ‘நடக்கும் அத்தனை குழப்பங்களுக்கும் பாதுகாப்புச் செயலரான கோத்தபயவின் அவசர முடிவுகள்தான் காரணம்’ என குற்றம்சாட்டி இருக்கிறாராம். இதனால் பிரச்னையை சுமுகமாக்க நினைக்கும் சிராந்தி, ‘கோத்தபயவை பதவியிலிருந்து நீக்கி விட்டால் ஃபொன்சேகாவை சமாதானப்படுத்தி அரசியல் களத்தில் இறங்கவிடாமல் தடுக்கலாம்’ என ராஜபக்ஷேவிடம் கூறியதோடு, ‘உங்கள் பதவியைக் காப்பாற்றிக்கொண்டு, ஃபொன்சேகாவையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அதுவே வழி’ என்றும் கூறத் தொடங்கியிருக்கிறாராம். கோத்தபயவை நீக்கிவிட்டு முன்னாள் ராணுவத் தளபதி ஜயலத் வீரக்கொடியை பாதுகாப்பு செயலராக நியமிக்கவேண்டும் என அதிபர் ராஜபக்ஷேவை நெருக்குகிறாராம் அவர் மனைவி.
ஆனால், மற்றொரு சகோதரான பசில் ராஜபக்ஷே உள்ளிட்டோர், ‘எக்காரணம் கொண்டும் கோத்தபயவுக்கு வீழ்ச்சி ஏற்படுத்துவதை ஏற்க முடியாது’ என்று அதிபரின் குடும்பத்துக்கு எதிராகத் திரும்பும் முடிவில் இருக்கிறார்களாம். நாட்டுப் பிரச்னை இப்படி வீட்டுக்குள்ளும் புயல் கிளப்புவதால் திண்டாடுகிறாராம் அதிபர். ஆனால் சிராந்தியோ, கோத்தபய பாதுகாப்பு செயலர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்ற உறுதிமொழியுடன் முதல் கட்டமாக சமாதானத் தூதராக அனோமாவை நேரில் அழைத்து சந்திக்கப் போவதாக பலமான ஒரு பேச்சு உலவுகிறது.
கொலைவெறி அரசியலோடு இப்போது குடும்ப அரசியலும் சேர்ந்துகொள்ள… இலங் கையில் பரபரப்புக்குப் பஞ்சமேயில்லை!
இதற்கிடையில், ‘ஃபொன்சேகா அதிபர் தேர்தலில் நிற்கும் பட்சத்தில் தமிழர் கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும். நாங்கள் கூறும் நான்கு விஷயங்களை ஏற்றுக்கொண்டால் அவரை ஆதரிக்கத் தயார்!’ என வெளிப்படையாக அறிவித்திருக்கிறார், தமிழ் கட்சிகளில் ஒன்றான ‘ஜனநாயக மக்கள் முன்னணி’யின் தலைவரும் எம்.பி-யுமான மனோ கணேசன்.
அவரிடம் பேசினோம். ”வவுனியாவில் முள்வேலிக்குள் அடைபட்டுக்கிடக்கும் மக்களை அவர்களது சொந்த இடத்தில் மீள் குடியமர்த்துவது, தமிழர்களின் பாரம்பரிய இடங்களில் சிங்கள ஆக்கிரமிப்பைத் தடுத்துக் குடியேற்றத்தைச் சிதைக்காமல் செய்வது, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்வது, இலங்கையில் நிகழும் தேசிய இனப்படுகொலையைத் தடுக்க முயல்வது போன்ற விஷயங்களில் சரத் ஃபொன்சேகா சாதகமாக பதிலளித்தால்… அவரைப் பொது வேட்பாளராக ஆதரிக்க நாங்கள் தயார்!” என்றார்.
இலங்கை அரசியல் நோக்கர்களோ, ”வரப்போகும் அதிபர் தேர்தலில் ராஜ பக்ஷேவை தோற்கடிப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, சிஹகய உறும, தமிழ்க் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி உள்ளிட்ட 20 கட்சிகள் ஒன்றிணைந்துதான் இந்தக் கூட்டணியை உருவாக்கியிருக்கின்றன. இலங்கையில் தமிழர்களிடம் பெரும்பான்மை பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்தக் கூட்டணியில் இணையும் வாய்ப்புகள் சாத்தியம். அதோடு ஃபொன்சேகா பொது வேட்பாளராக நிறுத்தப்படும் பட்சத்தில் தாங்களும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவளிக்கத் தயார் என ஜே.வி.பி-யும் கூறியுள்ளது. இந்தக் கூட்டணியின் சார்பாகத்தான் பொது வேட்பாளராக ஃபொன்சேகா அதிபர் தேர்தலில் முன்னிறுத்தப்படவிருக்கிறார். மிக வலுவான இந்தக் கூட்டணியின் பலத்தோடு சிங்கள மக்களிடம் தற்போது ஃபொன்சேகாவுக்கு இருக்கும் ஆதரவும் வெளிப்படும் பட்சத்தில், ராஜபக்ஷேவை மிக எளிதில் ஃபொன்சேகா தோற்கடித்து விடுவார். அதிபர் தேர்தலில் அவர் வெற்றியடைந்ததும் அமையப் போகும் தற்காலிக அரசின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்படுவதாகத்தான் அவர்களுக்குள் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது…” என்கிறார்கள்.
இந்நிலையில் கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கேயை சந்தித்த பத்திரிகையாளர்கள், ஃபொன்சேகா பொதுவேட்பாளராக நிறுத்தப்படுவது குறித்துக் கேட்டனர். ”பொதுவேட்பாளரை களத்தில் நிறுத்துவதில் எனக்கு சம்மதம்தான். ஃபொன்சேகா பொதுவேட்பாளராக வேண்டுமென்றால், அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி-பியும் ஒத்துழைக்க வேண்டும். அதுவுமில்லாமல் ஃபொன்சேகா தமிழ் மக்கள் தொடர்பான தனது நிலைப்பாட்டை விளக்குவதோடு, அவர்களுக்குத் திருப்தி அளிக்கக்கூடிய வாக்குறுதிகளையும் அளிக்க வேண்டும்!” என்று சொல்லியிருக்கிறார்.
- மு.தாமரைக்கண்ணன்
நன்றி: விகடன்
http://www.meenagam.org/?p=15970
தமிழ்க்கைதிகளை தாக்கிய சிங்கள கைதிகள்
கொழும்பு மகசின் சிறையில் தமிழ் மற்றும் சிங்கள கைதிகளுக்கு இடையே நடந்த மோதலில் பலர் காயமடைந்திருப்பதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதலில் மூவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் இருக்கும் அறைக்கு வந்த அதிகாரி தகாத வார்த்தைகளில் பேசியதால், மோதல் தொடங்கியதாகவும், தமிழ்க் கைதிகளை சுற்றி வளைத்து சிங்கள கைதிகள் தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=20609
ராணுவ ஆட்சி ஏற்பட்டுவிடும் என்று பயப்படுகிறார் ராஜபக்சே: பொன்சேகா
இலங்கை இறுதிப்போரில் ராணுவ தளபதியாக இருந்தவர் சரத் பொன்சேகா. அவர் இப்போது இலங்கை முப்படைகளின் தலைவர் பதவியில் இந்துவந்தார்.
இந்நிலையில் அவர் இலங்கையில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளார். அதனால் அவர் முப்படைகளின் தலைவர் பதவியில் இருந்து நேற்று ராஜினாமா செய்துவிட்டார்.
ராஜினாமா கடிதத்தில் அவர், ‘’இலங்கையில் ராணுவ ஆட்சி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார் ராஜபக்சே. புரட்சியை தடுக்கும் பொறுட்டு அவர் கடந்த அக்டோபர் 15ல் இந்தியாவின் உதவியை நாடினார்’’என்று தெரிவித்தார்
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=20609
எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல மாவோயிஸ்டுகள்: ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ’’மழை காலங்களில் சென்னையில் சேதம் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. மழைநீர் வடியும் கால்வாய்களை முறையாக அமைக்காததே இதற்கு காரணம்’சென்னையில் எந்தெந்த சாலைகளில் எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது என்பதை மாநகராட்சி அதிகாரிகளும்,
பொது பணித்துறை அதிகாரிகளும் நகரமைப்பு அதிகாரிகளும் நேரில் பார்த்து அதற்கான திட்டங்களை அங்கேயே உருவாக்கி செயல்படுத்த வேண்டும். இதனால் நிவாரண பணம் அரசுக்கு மிச்சப்படும்.
தமிழ்நாட்டில் பணியாற்றும் 500 நகரமைப்பு அதிகாரிகளில் சுமார் 50பேர்தான் முறையாக கல்வி தகுதி பெற்றவர்கள் என்று ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பல நகரங்களில் ஏற்படும் மழை சேதத்திற்கு இதுவும் ஒரு காரணம்.
மாவோயிஸ்டு இயக்கத்தின் போராட்டத்தால் சில இடங்களில் தாக்குதல்கள், வன்முறைகள் நடக்கின்றது. மாவோயிஸ்டுகள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்ல. அவர்களின் போராட்ட வழிமுறைகள் தவறாகி இருக்கலாம்.
ஆனால் நோக்கமும் போராட்டத்தின் காரணமும் நியாயமானவை. ஆட்சியாளர்களாலும், அரசியல்வாதிகளாலும் மறக்கப்பட்ட அப்பாவி ஏழை மக்களுக்காகவும், அதிவாசிகளுக்காகவும் நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்காகவும் வேறுபடுகிறார்கள். மக்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து போராடுகிறார்கள்.
சில மாநிலங்களில் நடக்கும் போராட்டத்தை பார்க்கும்போது மத்திய- மாநில அரசுகளின் தவறான நிலக்கொள்கையே மூலகாரணமாக உள்ளது. பல ஆண்டுகளாக அனுபவித்த நிலங்களில் இருந்து தொழில் வளர்ச்சி என்ற பெயரில் ஆதிவாசிகள் வெளியேற்றப்படுகிறார்கள்.
பெருமுதலாளிகளுக்கு நிலங்களை தாரை வார்த்து அதில் புதைந்து கிடக்கும் தாது வளத்தை கொள்ளையடிக்க அரசு துணை போகிறது. ராணுவத்தை கொண்டும், விமானத்தை கொண்டும் மாவோயிஸ்டுகளை அடக்கப் போவதாக கூறுகிறார்கள். ராணுவத்தை கொண்டு அடக்க முடியாது.
மத்திய- மாநில அரசுகள் நிலக்கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும். குடியிருப்பவர்களுக்கு நிலத்தை சொந்தமாக்க வேண்டும். ஆதிவாசிகளின் குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் பிளஸ்-2 வரை கட்டாய இலவச கல்வி வழங்க வேண்டும்.
இதுபோன்ற பல சீர்திருத்தங்கள் செய்வதுதான் மாவோயிஸ்டுகளின் போராட்டத்திற்கு உண்மையான தீர்வு கிடைக்கும். தமிழ்நாட்டில் புதுவகையான மோசடி நடக்கிறது.
நில உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே நிலப்பதிவு நடைபெறுகிறது. இந்த வகையில்தான் ஓட்டப்பிடாரத்தில் நிலப்பதிவு நடந்துள்ளது. இதுபற்றி முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும்.
டாஸ்மாக் ஊழியர்கள் அரசு ஊழியர்களாக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் மது கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இலவச சமையல் கியாஸ் வழங்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு மாதம் ஒரு சிலிண்டர் வழங்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=20616
தமிழ் உசத்திதான்...
தமிழ் மாநாடுகள்
எங்கும் பிரமாண்டமாய்...!
தமிழுக்கு காட்டும் இரக்கம் கூட
தமிழனுக்கு இல்லையே?
ஆம்..,
தமிழ் வாழ
தமிழர்கள் இருக்கிறார்கள்..
ஆனால்
தமிழன் வாழ...?
உண்மையிலேயே தமிழ் உசத்திதான் போலும்...
http://vizhiyilvizhunthavan.blogspot.com/2009/11/blog-post_12.html
பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com