

துணை முதல்வர் ஸ்டாலின் சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவேன் என்றார்.
புதிதாக சென்னையில் கட்டி முடிக்கப்பட்ட பாலங்களில் வாகனங்கள் ஓட்ட. நீங்கள் சர்க்கஸ் வித்தைக்காரர்களாக இருக்க வேண்டும்..!. சென்னையில் கால் மணிநேரம் மழை பெய்தால் முழங்கால் அளவுக்கு சாலையில் நீர் ஓடும்...!
பைக் ஆசாமிகள் இந்த தண்ணீரைக் கண்டால் மகிழ்ச்சி சாக்கடை நீர் போல் பொங்கி வரும்,எருமைப் பாய்ச்சல் தான், போங்க! திருவாளர் பொது சனம் மழையில் நடக்கவென்று ஒரு நடையே வைத்திருக்கிறார். கிழிந்த குடையை கையில் பிடித்து, பார்த்துத் பார்த்து கால் வைக்கும் அழகே அழகு தான்! இந்த இலட்சணத்தில் சமீபத்தில் டாக்டர் பட்டம் வேறு நம்ம ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி கவுரவித்திருக்கிறது. இப்படி டாக்டர் பட்டம் கொடுக்கிற ஆள தர தரன்னு இழுத்து வந்து நடுரோட்டில் ஓட ஓட விட்டு.... வேற ஓன்னும், தப்பான ஆசை எல்லாம் கெடையாதுங்க...!
முகத்தில சேற வாரி அடிக்க (ஆசை)ணும்...!
_ஆதிசிவம். சென்னை



No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com