இடைத்தங்கல் முகாம்களிலிருந்து 13,100 பேரை காணவில்லை! - இன்னர் சிட்டி பிரஸ்
மனிதபிமான விவகாரங்களுக்கான ஐ.நாவின் ஒருங்கிணைப்பு குழுவினால் (OCHA), கடந்த மே 27 ஆம் திகதியில் இருந்து 30 ஆம் திகதிவரை, பெறப்பட்ட அறிக்கைகளின் படி, இடைத்தங்கள் முகாம்களில் இருந்து சுமார் 13,000 பேர் காணாமற்போயுள்ளதாக 'இன்னர் சிட்டி பிரஸ்' தெரிவித்துள்ளது.
யுத்த வலயத்தில் இருந்து இடம்பெயர்ந்த 276,785 பொது மக்கள், இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக உத்தியோக பூர்வமாக தெரிவித்திருந்த OCHA, கடந்த மே 27 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், இத் தொகையில் 13,130 பேர் காணாமல்
போயுள்ளதாக தெரிவித்துள்ளது. இரு முறை எண்ணப்பட்ட போதும், மொத்த எண்ணிக்கையில் இவ்வித்தியாசம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகிறது.பெரும்பாலான இளவயது ஆண்கள் தனியாக பிரித்து கொண்டு செல்லப்படுவதாகவும், இளம்பெண்கள் வேறு நோக்கங்களுக்காக பிரித்து கொண்டு செல்லப்படுவதாகவும், 'channel 4' தனக்கு கிடைத்த நேரடி செவ்விகளின் ஏற்கனவே மூலம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது காணமல் போயுள்ளவர்கள் பற்றியும் திட்டமிட்டு தகவல்கள் மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக 'இன்னர் சிட்டி பிரஸ்' தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com