வானிலிருந்து பார்க்கும் சவக்காலை--ரைம்ஸ் ஒன் லைன் காணொளி விளக்கம்
போர்க்குற்றங்களுக்குரிய விசாரணைக்கான அழைப்புகளைப் புறக்கணித்து விடுதலைப் புலிகள் மேலான வெற்றிக்காக சிறிலங்காவைப் பாராட்டவைத்த மனித உரிமைகள் மன்றத்தின் வாக்கானது அவமானத்துக்குரியது என பிரித்தானியா
ரைம்ஸ் ஒன் லைன் பத்திரிகையின் மைக்கேல் பைனியன் தெரிவித்துள்ளார்.
இதுவானது, எங்கே தமது நடத்தைகளுக்கும் பலத்த விசாரணை வந்துவிடுமோ என்று பயப்படும் உள்நாட்டு கிளர்ச்சிக்காரர்களை முகம்காணும் அனைத்து நாடுகளுக்கும் கிடைத்த
வெற்றயென்றும், ஒரு வெற்றியை அடைவதற்கு கிடைக்கக்கூடிய எல்லாவிதமான உபாயங்களையும் பாவிப்பதற்கு முழு ஆதரவையும் கொடுக்கிறது என்றும், மற்றும் சிறிலங்காவின் விடுதலைப் புலிகள் மீதான யுத்தத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்களுக்குச் செய்யபட்ட பயங்கரமான நம்பிக்கைத் துரோகம் என்றும் மேலும் ரைம்ஸ் இன்று தெரிவித்துள்ளது.சிறிலங்காவில் பலத்த போர்க்குற்றங்கள் நடந்திருக்கக்கூடும் என்று கருதி அவற்றை விசாரிக்க ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் 47 அங்கத்துவ நாடுகளில் உள்ள ஐரோப்பிய அங்கத்துவர்கள் ஒரு அவசர கூட்டம் ஒன்றைக் கோரியிருந்தார்கள். ஆனால், இதற்கு பதிலாக மனித உரிமைகள் மன்றமோ சிறிலங்காவால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தை விவாதித்துள்ளார்கள்.
இத்தீர்மானம், மக்கள்மீது நடாத்திய தாக்குதல்களைப் பற்றியோ, செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் மனிதாபிமான அமைப்புகள் 200,000க்கும் மேற்பட்ட மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குச் செல்ல வேண்டிய அவசர தேவைகளைப் பற்றியோ சிறிதும் குறிப்பிடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
முதலாவதாகவும் முக்கியமானதாகவும் வைக்கப்பட்ட ஒரு தேர்வில் ஐ.நா. மனித உரிமைகள் மன்றம் தோல்வியடைந்துள்ளது என்றே பல மேற்குலக விமர்சகர்கள் கருதிகிறார்கள். கடினமாக விமர்சிக்கப்பட்ட மனித உரிமைகளுக்கான ஐ.நா. உரிமைக் குழுவுக்கு பிரதியூடாக 3 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டதே
இப்போதுள்ள மனித உரிமைகள் மன்றம் என ரைம்ஸ் செய்தி மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழைய குழுவானது ஒரு பலம்குன்றிய அமைப்பாகவே பார்க்கப்பட்டது. தமது மனித உரிமைகள் பதிவுகள் தொடர்பாக வெளியுலகத்தின் விசாரணைகளுக்கு ஆர்வப்படாத பெரும்பான்மையான அங்கத்துவரின் வாக்குகளை வைத்தே எப்போதும் அந்தக்குழு முன்னெடுத்துச் செல்லப்பட்டது.
புதிய மன்றமானது, ஒரு புதிய நுட்பத்தை கொண்டு வந்தது. அதன்படி சகல 192 அங்கத்துவ நாடுகளினது மனித உரிமைகள் தொடர்பான நிலைமைகளும் கணிக்கப்படும்.
ஆனால், சிறிலங்கா மீதான வாக்கானது, மனித உரிமைகள் மன்றத்துக்கு எதிரான விமர்சனத்தை மீண்டும் பலப்படுத்தியுள்ளது, என ரைம்ஸ் பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com