'அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்ஸன் கூப்டாக… ஜப்பான்ல ஜாக்கி சான் கூப்டாக…!'
முன்குறிப்பு: இந்தச் செய்தி முழுக்க முழுக்க 100 சதவிகிதம் உண்மை. சும்மா தாமாஷாக இங்கே போட்டிருப்பதாக நினைக்க வேண்டாம். நற்பணிகள் செய்வதில் ஒரு தலைவராகத் திகழ்கிறார் விஜய் என்ற மிகப்பெரிய விஷயத்தை அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் நேற்று மும்பையில் வைத்து அறிவித்துள்ளார்.
உள்ளூரில் சொல்லியிருந்தால், 'ஏய் சைலன்ஸ்… பேசிக்கிட்டிருக்கோம்ல' என்று மற்ற தலைவர்கள் சவுண்டு விடக் கூடும் என்பது புரிந்து மும்பையில் இதைப் பேசியிருப்பார் போலிருக்கிறது.
இந்தத் தேர்தலில் தன் மகனது ஆதரவு யாருக்கும் கிடையாது என்றும் அவர் அறிவித்துள்ளார். யாரெல்லாம் அவரது ஆதரவை இந்தத் தேர்தலில் கேட்டார்கள் என்ற உண்மை நமது சிற்றறிவுக்கு எட்டவில்லை. அதேபோல புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ரசிகர்களுக்குப் பிறகு விஜய் ரசிகர்கள் மட்டுமே நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள் என்ற உலக மகா உண்மையையும் அங்கே வெளிப்படுத்தியிருக்கிறார்.
சென்னைக்கு வந்தபிறகு யாராவது கேட்டால், 'அதுவா… இந்தப் பத்திரிகைக்காரனுங்க தப்புத் தப்பா எழுதிட்டாங்க!' என்றும் கூட மறுத்துவிட வாய்ப்புள்ளது. எல்லாவற்றையும் ரகசிய வீடியோ எடுத்து யு ட்யூபில் ஏற்றிக் கொண்டே இருக்கவா முடியும்!
சரி.. சந்திரசேகரனின் முழுப் பேச்சையும் படியுங்கள்.
மும்பையில் விஜய் நற்பணி மன்றம் சார்பில் ஏழை மாணவர்கள் 2 பேருக்கு கம்ப்யூட்டரும், ஏழைகள் 10 பேருக்கு தையல் மிஷின்களை இலவசமாக வழங்கிய பின்னர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியது:
"எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்குப் பிறகு நடிகர் விஜய்யின் ரசிகர்கள்தான் பொது நோக்கோடு ஏழை மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், தையல் மிஷின் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் கர்நாடகா, கேரளா மற்றும் மும்பை என பல்வேறு இடங்களிலும் ஏராளமான ரசிகர்கள் இருப்பது பெருமையாக உள்ளது. விஜய்யை நான் மகனாக பெற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைக்கு நற்பணிகள் செய்வதில் ஒரு தலைவராக செயல்பட்டு வருகிறார் விஜய். இப்போது எங்கு போனாலும் என்னை விஜய்யின் தந்தை என்றே சொல்கிறார்கள். அது எனக்குப் பெருமையாக உள்ளது.
ராவணனைக் காதலிக்கும் மணிரத்னத்தின் சீதை!
சர்ச்சை உருவாக வேண்டும் என்ற நோக்கத்திலேயே மணிரத்னம் தனது படக் கதைகளை தேர்வு செய்கிறாரா அல்லது யாராவது திட்டமிட்டு அவர் படத்துக்கு எதிராக பிரச்சினை கிளப்புகிறார்களா தெரியவில்லை.
இதோ, அவரது அடுத்த படமான 'ராவண்' (தமிழில் அசோகவனம்) படமும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளது.
ராமாயணத்தை அடிப்படையாக வைத்து இக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் ராமாயணத்தை உல்டா செய்தது போல கதையை உருவாக்கியிருக்கிறாராம் மணிரத்னம்.
படத்தின் கதையும், பாத்திரப் படைப்பும் வெளியே தெரியக் கூடாது என்பதற்காக படப்பிடிப்பை ரகசியமாக நடத்தி வருகிறார் மணிரத்னம். ஆனாலும் அதையும் மீறி ராவண் கதை வெளியே கசிந்து விட்டது.
படத்தில் ராவணன் பாத்திரத்தில் விக்ரம் வருகிறாராம். சீதையாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாராம். ராமனாக பிருதிவிராஜும், ராவணன் தங்கை சூர்ப்பனகையாக பிரியாமணியும் தோன்றுவதாகக் கூறுகிறார்கள். இதனை பிரியாமணியும் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
நவீன காலத்துக்கு தக்கபடி ராமாயணத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது.
விக்ரம் தங்கை பிரியாமணியை இம்சைப்படுத்தி அவர் சாவுக்கு காரணமாகிறார் போலீஸ் அதிகாரி பிருதிவிராஜ், அவரை பழி வாங்க அண்ணன் விக்ரம் சபதம் எடுக்கிறார். பிருதிவி ராஜுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் திருமணம் நடக்கிறது.
விக்ரம் உள்ளே புகுந்து ஐஸ்வர்யா ராயை முதலிரவுக்கு முன்பே கடத்திச் செல்கிறார். காட்டுக்குள் கொண்டு போய் ரகசிய இடத்தில் அடைத்து வைக்கிறார். ஆனாலும் ஐஸ்வர்யாராயிடம் அவர் தப்பாக நடக்கவில்லை. முதலில் விக்ரமை வெறுத்து அவரிடம் இருந்து தப்பிக்கப் போராடும் ஐஸ்வர்யா பிறகு அவர் தங்கை தனது கணவனால் பாதிக்கப்பட்ட விவரம் அறிந்து அமைதியாகிறார்.
அடர்ந்த காட்டுக்குள் தன் மேல் சிறு துரும்பு கூட படாமல் கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கும் அவரது பண்பும் பிடிக்கிறது. கிளைமாக்சில் விக்ரம் மனம் திருந்தி ஐஸ்வர்யா ராயை கணவனிடம் ஒப்படைக்கிறார். ஆனால் பிருத்விராஜ் மனைவியை சந்தேகப்படுகிறார். இத்தனை நாள் காட்டுக்குள் ஒன்றாக இருந்திருக்கிறீர்களே? என்று சந்தேக வார்த்தைகளை கக்குகிறார். இதனால் கணவன் மேல் வெறுப்பாகும் ஐஸ்வர்யாராய்க்கு விக்ரம் மீது காதல் வருவது போல் முடிகிறதாம் கதை!
இந்த விவரங்கள் தெரிய வந்ததும், கொதித்துப் போய் உள்ளனவாம் இந்து அமைப்புகள். தேர்தல் முடிந்த கையோடு, அடுத்த டார்கெட் மணிரத்னத்தின் ராவணன்தான் என தோள்தட்ட ஆரம்பித்துள்ளதாம் பாஜக. 'அது ஏன் தேர்தல் முடியும் வரை… இப்போதே கிளம்பிட்டோம்ல!' என்று மணிரத்னத்துக்கு பிபியை எகிற வைத்துள்ளது ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகள்.
http://www.envazhi.com/?p=6505
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com