சீமான் உரை வீடியோ படங்களின் தொகுப்பு : இருப்பாய் தமிழா நெருப்பாய்....!
தமிழகத்தில் இன்னொரு பிரபாகரன் பிறக்கும்வரை தமிழினத்துக்குவிடிவில்லை: - திரைப்பட இயக்குநர் சீமான் உரை இந்த மண்ணில் (தமிழகத்தில்) இன்னொரு பிரபாகரன் பிறக்கும் வரை இந்த இனம் மீளாது. ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தையே அழிப்பதற்காக அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு இரண்டு இலட்சம் பேரை அனுப்பினாரே ராஜீவ், இது சர்வதேச தீவிரவாதம் இல்லையா? என இயக்குநர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சர்ச்சைக்குரிய பேச்சுக்காக சமீபத்தில் கைதான சினிமா இயக்குனர் சீமான், ஈரோட்டில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தேசப் பொதுவுடைமை கட்சி சார்பில், "தமிழர் எழுச்சி உரைவீச்சு' என்ற பொதுக் கூட்டத்தில் சினிமா இயக்குநர் சீமான் பேசியதாவது: இராமேஸ்வரத்தில் பேசியதற்காக என்னை கைது செய்தனர். என்ன பேசினேன் என்று எவனுக்கும் தெரியவில்லை. என்னை எதற்காக கைது செய்கிறீர்கள் என பொலிஸ் அதிகாரியிடம் கேட்ட போது, "நல்லா பேசுனீங்க சார்“ எல்லாம் எங்க தலையெழுத்து' என்று அழைத்துச் சென்றார். கைது செய்து உள்ளே வைத்தனர் இதோ இப்போது வெளியே வந்து விட்டேன். ஈழ விடுதலை தீபம் அணைக்க முடியாமல் எரிகிறது. தடை செய்யப்பட்ட இயக்கம் எனக் கூறப்படும் விடுதலைப்புலிகள் பற்றி பேசக் கூடாது என்கின்றனர். யாரைக் கேட்டு தடை செய்தீர்கள்? அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த அந்த நான்கு ஆண்டுகளில், அவசர அவசரமாக விடுதலைப் புலிகள் மீது தடை போட வேண்டிய அவசியம் என்ன? நான் பேச வேண்டும் சொந்த அண்ணனான பிரபாகரனைப் பற்றி பேசுவதை தடுக்க என்ன சட்டம் போடுவாய்? என் கனவு, சிந்தனை, உணர்வு அனைத்தும் பிரபாகரனுடன் ஒன்றிவிட்டது அதை ஒன்றும் பண்ண முடியாது. உள்ளே போட்டால் இன்னும் அதிகமாகப் பேசுவேன். சீமான் பேசுவதை நிறுத்தினான் என்றால், தனி ஈழம் அடைந்திருக்க வேண்டும் அல்லது அவன் இறந்திருக்க வேண்டும். உலகிலேயே பிரபாகரனைப் போன்ற வீரன் இல்லை. அவனை விட்டால் உலகத்தில் வலிமைமிக்க இராணுவத்தை ஏற்படுத்தி விடுவான் என பயப்படுகின்றனர். "ராஜிவை விடுதலைப்புலி கொன்னுட்டாங்க'ன்னு காங்கிரஸ்காரர்கள் பல்லவி பாடுகின்றனர். அவர்கள் தீவிரவாதிகள் என்கின்றனர். ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே அழிப்பதற்காக அமைதிப்படை என்ற பெயரில், இலங்கைக்கு இரண்டு இலட்சம் பேரை அனுப்பினாரே ராஜிவ் இது சர்வதேச தீவிரவாதம் இல்லையா? இலங்கையில் போரை நிறுத்தும் வரை யாருக்கும் ஓட்டு போடாதீர்கள் ஓட்டு கேட்டு வருபவர்களை துரத்தியடியுங்கள். காந்தி, இந்திரா ஆகியோர் கொல்லப்பட்டனர். கொலைகாரர்களை என்ன செய்தாய்? பெரியாரின் குச்சிதான் இன்று நிமிர்ந்து துப்பாக்கியாக பிரபாகரன் கையில் உள்ளது. அவன் நமது குலதெய்வம். தவித்த வாய்க்குத் தண்ணீர் தராத ஒரு தேசம் மீது எப்படி நேசம் வரும்? தமிழகத்துக்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா, கேரளாவை யாராவது கண்டித்தார்களா? 406 தமிழக மீனவர்களை, இலங்கை இராணுவம் கொன்றது. இதை இந்திய தேசம் கண்டித்ததா? இல்லை. நவீன துப்பாக்கி, தொலைநோக்குக் கருவி, தோட்டாக்களை இலங்கை இராணுவத்துக்குத் தரும் இந்தியா தான் தமிழினத் துரோகி. இந்தியா கண்டுகொள்ளாமல் இருந்தால், இலங்கையை ஒரு கை பார்த்து விடுவான் எங்கள் அண்ணன். இவ்வாறு அவர் கூறினார் http://seithy.com/breifSpeach.php?newsID=10182&category=Speach சீமான் பேச்சு வீடியோ படங்கள்.... |
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com