'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...!
தூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்!!'
-பாவேந்தர் பாரதிதாசன்
நன்றி:கோவிகண்ணன் சில பாத்திரங்கள் நீண்ட நாள் பேசப்படும், அதை வைத்து நிறைய காமடிகளை உருவாக்குவார்கள், என்னோட முயற்சியில்...
********
அந்யாயத்தைக் கண்டா அப்படியே பொங்கனும்.....ரஜினி பாணியில் கொள்கை வைத்திருக்கும் அகோரியும், அந்நியனும்....
அகோரி தலைகீழ் யோகா பண்ணும் இடத்திற்கு வந்த அந்நியன்
இருவரும் கரகரத்தகுரலில்
அந்நியன் : அந்த போலிஸ்காரனும் தானே பிச்சைக்காரர்களை கொடுமை படுத்தினான் அவனையேன் கொல்லலை ?
அகோரி : கஞ்சா இருக்கா...
அந்நியன் : கஞ்சா.... குடிக்கிறது சட்ட விரோதம்
அகோரி : எனக்கு சட்டம் கிடையாது....தொண்டை ரொம்ப கெட்டுப் போய் இருக்கு போய் இருமல் மருந்து வாங்கி சாப்பிட்டுவா
அந்நியன் : உனக்கும் தான் இருமல் மருந்து தேவைப்படுதே ... அதனால அதை நீ சொல்லாதே...நீயும் இந்த நாட்டுல ஒருத்தன் தான், ஏன் சட்டம் உன்னை கட்டுப்படுத்தாது...?
அகோரி : கஞ்சா இருக்கா... இருந்த கொடு ......சும்மா தொன தொனக்காதே...தலைக்கீழே யோகா பண்ணிக்கிட்டு இருக்கேங்கிற தைரியத்துல பேசுற......எறங்கினேன்......அம்பி ஆகிடுவே
அந்நியன் : கஞ்சா குடிக்கிறது சட்டப்படி குற்றம், அதையும் மெரட்டி கேட்கிறது அதவிட குற்றம்
அகோரி : ஓம் ரீம் க்லீம்........என்று சொல்லிக் கொண்டே அந்நியன் மீது ஏறி அவரை சாத்துகிறார்
...அந்நியன் அம்பி ஆகிறார்
அம்பி : யார் நீங்க...எதுக்காக என்னை பின்னுறேள்
அகோரி : உன்னைய மாதிரி சட்டத்தை கையில எடுக்கிறவனுக்கு மரணம் கொடுப்பவன் நான்......கடவுள் அகம்.....ப்ரம்மாஸ்மி' ......அதிர அதிர கத்துகிறார்
அம்பி : என்னது ஐயராத்து மாமியா ?
அகோரி பளாரென்று அம்பியின் கன்னத்தில் அறைவிட
அம்பி மீண்டும் அந்நியனாக மாறுகிறார்
அந்நியன் : உன்னைய மாதிரி சட்டத்தை மதிக்காமல் கஞ்சா குடிச்சிட்டு தூங்கும் சோம்பேறிகளுக்கு மரண தண்டனை கொடுக்கும் அந்நியன் நான்
இருவரும் பலமாக மோதிக் கொள்கிறார்கள்....இருவரின் தலைமுடிகள் சிக்கிக் கொள்கிறது, சிக்கிய முடியுடன் ஒருவருக்கு ஒருவர் முட்டிக் விருமாண்டி பாணியில்
'உர்ர்ர்ர்ர்ர். உர்ர்ர்ர்ர்ர்ர்ர்' இருபக்கமும் ஒரே உறுமல் சத்தம்
பொதுஜனம் கூடிவிட்டார்கள்
ஒருவர் : நிறுத்துங்கப்பா உங்க சண்டையை.......'எங்களையெல்லாம் பார்த்தால் இளிச்சவாயனாக தெரியுதா ?' எதோ பொழுது போக்குன்னு ரசித்தால் ஆள் ஆளுக்கு நாட்டுக்கு அட்வைஸ் மழை....தலை முடியை வளர்த்து இன்னும் என்ன கேரக்டர்கள் வரப்போகுதோ.... இந்த ஷங்கரையும்...பாலாவையும் புடிச்சு மரத்துல கட்டிவச்சி உறிக்கனும். அப்பதான் ஒருத்தரும் இப்படி பட்ட கேரக்டர்களை உலாவிட மாட்டாங்க.
மற்றொருவர் ஒருவர் : சரி சரி வேடிக்கைப் பார்க்கமல் எல்லோரும் காசைப் போடுங்க, அந்நியனுக்கும் அகோரிக்கும் முடிவெட்டிவிட்டு ஏர்வாடிக்கு அனுப்பனும். |
Add more friends to your messenger and enjoy!
Invite them now.
முந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....!
No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com