இலங்கை அகதி முகாமில் 12 ஆயிரம் தமிழர்களுக்கு சின்னம்மை நோய்
கொழும்பு, ஜூன். 21-
இலங்கையில் வன்னி பகுதியில் நடந்த போரின் போது வெளியேறிய 3 லட்சம் தமிழர்கள் பல்வேறு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
அங்கு அடிப்படை சுகாதார வசதிகள் எதுவும் செய்து கொடுக்கவில்லை. இதனால் அவர்களை பல்வேறு நோய்கள் தாக்குகிறது. தினமும் வயதானவர்களில் 30 பேரில் இருந்து 40 பேர் வரை உயிர் இழக்கிறார்கள்.
இந்த நிலையில் முகாம்களில் இருப்பவர்களை சின்னம்மை நோய் தாக்கி வருகிறது. இதுவரை 12 ஆயிரம் பேரை நோய் தொற்றியுள்ளது. தினமும் 40-ல் இருந்து 50 பேர் வரை புதிதாக நோய் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள்.
சின்னம்மை நோய் வேகமாக தொற்றும் தன்மை கொண்டது என்பதால் இன்னும் ஏராளமானோருக்கு நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே முகாம்களில் உள்ளவர்கள் 48 ஆயிரம் பேர் பல்வேறு நோய்களுக்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
http://www.maalaimalar.com/2009/06/21104947/CNI0110210609.html
http://www.maalaimalar.com/2009/06/21104947/CNI0110210609.html





No comments:
Post a Comment
வணக்கம்!
"ஓடும் நதி.....!"
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.odumnathi.blogspot.com